Wednesday, December 18, 2013

சல்மா அலி - சாட்சி

Salma Ali, 33
Advertising and Public Relations consultant

'என்னுடைய தாய் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவர் ஆனால் என் தந்தையை மணந்தபோது அவர் இஸ்லாமுக்கு மதம் மாறிவிட்டார். நாங்கள் தவறாமல் நமாஸ் செய்து வந்தோம். நான் தொடர்ந்து குரானைப் படித்து வந்தேன். ஆனால், கடினமான பெண்களுக்கு அளிக்கப்படும் கூட்டுத் தண்டனைகளைப் பற்றி படித்தபோது என் விசுவாசம் சிதறியது. நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன், இது பெரியவர்களுடைய வார்த்தையை கேட்காத குழந்தையை திட்டுவது போலத்தான் என்று யார் என்னிடம் கூறினார்கள் என்று என் தகப்பனாரிடம் கேட்டேன்.

'என் பெற்றோர்கள் பிரிந்தவுடன் நான் என் தாயாருடன் சென்று விட்டேன். அவர்கள் பிறகு வெகு சீக்கிரம் கோபப்படும் முன்கோபியைப் போல் ஆனார்கள். ஆனால் மீண்டும் சர்ச்சுக்கு போக ஆரம்பித்தார்கள். அவர்கள் போன கூடுகைகளுக்கு நானும் போக ஆரம்பித்தேன். அங்கு நான் இஸ்லாத்தில் கேள்விப்பட்டிராதபடி மக்கள் பாடி நடனம் ஆடினார்கள். அப்போதிலிருந்து நான் பைபிளை படிக்க ஆரம்பித்தேன். கிறிஸ்தவம் என்னை அதிக விடுதலையாக்கும் மதமாக இருந்தது. என்னுடைய வாழ்க்கை ஒரு நிலைத்தன்மையை அடைய ஆரம்பித்தது. என்னுடைய படிப்பில் சிறப்பாக செயல்பட முடிந்தது. அன்றிலிருந்து நான் தொடர்ந்து சர்ச்சுக்கு சென்று வருகிறேன்.

No comments:

Post a Comment