Monday, July 16, 2012

மரணத்தை பிறப்பிக்கும் பாவம்

People look at charred bodies following fuel tanker explosion in Okogbe near Port Harcourt Nigeria, Thursday, July 12, 2012.ஒரு சமீபத்தில் செய்தித்தாளில் ஒரு செய்தி வந்திருந்தது. நைஜீரியாவில் போர்ட் ஹர்கோர்ட் (Port Harcourt) என்னுமிடத்தில் பெட்ரோலை ஏற்றி கொண்டு சென்ற லாரி கவிழ்ந்து விழுந்து. அதிலிருந்த பெட்ரோல் கீழே கொட்ட ஆரம்பித்தது. அதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனே ஓடி சென்று தேங்கி கிடந்த பெட்ரோலை தாங்கள் கொண்டு வந்திருந்த பாத்திரங்களில் சேர்க்க ஆரம்பித்தனர்.
.
இந்த லாரி விழுந்து கிடக்கும் செய்தியை கேள்விப்பட்டு, உடனே பாதுகாப்பு படையினர் அந்த இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் பெட்ரோலை சேகரித்து கொண்டிருந்த மக்களிடம், 'இது அபாயம், உடனே இங்கிருந்து செல்லுங்கள், எந்நேரமும் நெருப்பு பிடிக்கலாம்' என்று அவர்களை எச்சரிக்கை விடுத்து கொண்டே இருந்தனர். ஆனால் அவர்களோ எந்த எச்சரிக்கைக்கும் செவி கொடாமலும், அவர்களை தள்ளி போக சொன்னாலும் கேட்காமலும் பெட்ரோலை சேகரித்து கொண்டே இருந்தனர்.
.
சடுதியில் நெருப்பு பற்றி பிடித்து, ஒரு நிமிடத்தில் எல்லா இடத்திலும் பற்றி எரிந்தது. பெட்ரோலை சேகரித்து கொண்டிருந்த அத்தனை பேரும் ஏறக்குறைய 100 பேர் அப்படியே நெருப்பில் எரிந்து சாம்பலாயினர். அநேகர் பலத்த தீக்காயத்துடன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது இந்த மாதம் 12ம் தேதி நடந்த நிகழ்ச்சியாகும். தங்கள் உறவினர்களை இழக்க கொடுத்தவர்கள் கதறிய காட்சி மிகவும் பரிதாபமானதாக இருந்தது.
.
'
எந்நேரமும் தீப்பிடிக்கலாம், அந்த இடத்தை விட்டு கடந்து செல்லுங்கள்' என்று அவர்களுக்கு எச்சரிப்பு கொடுக்கப்பட்டும் அவர்கள் அந்த எச்சரிப்புக்கு கீழ்ப்படியாமல், தொடர்ந்து அவர்கள் அந்த இடத்தில் பெட்ரோலை சேகரித்து கொண்டிருந்தபடியால் திடீரென்று அழிவு வந்தது. அவர்கள் தப்பிக்க வழியே இல்லாமல் போயிற்று.
.
பிரியமானவர்களே, இந்நாட்களிலும் 'கர்த்தருடைய வருகை திருடனைப் போல தீடீரென்று வரப்போகிறது, பாவத்திலிருந்து விலகி, கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தப்படுங்கள்' என்ற எச்சரிப்பின் செய்தி, முந்தின நாட்களை பார்க்கிலும் இந்நாட்களில் அதிகமாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment