Thursday, October 9, 2014

பூமியின் வயது எவ்வளவு? AGE OF THE EARTH- ( வேதாகம அறிவியல் -07 )

 பூமி உண்டாகி 450 கோடி ஆண்டுகட்கு மேல் ஆயிற்று என்று சில அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இதைக் குறித்த கருத்துக்களை பார்ப்போம்.

தேவன் ஆதாமைப் படைத்த போது குழந்தையாகப் படைக்கவில்லை. அறிவும் சரீர வளர்ச்சியும் கொண்ட மனிதனாகப் படைத்தார்.
ஆதாம் படைக்கப்பட்டதற்கு அடுத்தநாள் ஆதாமின் வயது ஒரு நாள். ஆனால் அவரது உடல் வளர்ச்சியைக் கொண்டு வயதைக் கணித்ததால் குறைந்தது 20 ஆண்டுகள் எனலாம். இவ்வாறே தேவன் பூமியைப் படைக்கும்பொழுது சற்று தேறிய நிலையில் படைத்திருக்கக்கூடும். எனவே பூமியின் உண்மையான வயதும், அதன் இன்றைய நிலையின் அடிப்படையில் நாம் கணிக்கும் வயதும் ஒன்றாக இருக்காது. இதே வகையில் சூரியனும் பேரண்டமும் படைக்கப்பட்ட உண்மையான காலத்தை நாம் அதின் இன்றைய நிலையைப் பார்த்து கணிப்பதும் பொருந்தாது.

மண்ணியல் (Geology)
மண்ணியல் ஆயிவில் உலகின் பல இடங்களில் காணப்படும் படுகைகள் (பாளங்களாகக் காணப்படும் அடுக்குகளான பாறைககள்) பல இலட்சம் ஆண்டுகளாக ஒன்றன் மீது ஒன்றாகப் படிந்தன என்று கூறி, ஒவ்வொரு வகைப் படுகைக்கும் ஆண்டு கணக்குகள் கூறுகின்றனர். இவ்வித படிமப்பகுதிகளைப் பார்வைக்காக வைக்கும் பொழுது தாங்கள் கருதும் பழைமை வரிசையில், வைத்துக் காண்பிக்கின்றனர். இவ்வாறு வைக்கப்பட்ட வரிசைகள் உண்மையன்று. ஏனெனில்

1) உலகின் பல பாகங்களின் இயற்கையாகத் தோண்டிப் பார்க்கும் பொழுது பல இடங்களில் வெவ்வேறு வரிசைகளில் இவை பூமியில் காணப்படுகின்றன.

2) சில எரிமலைப் பகுதிகளில் நமது கண் முன்பாகவே சில நாட்களில் (சிலமணி நேரத்தில்) பல படுகைகள் (பாளங்கள்) ஒன்றன் மீது ஒன்றாக அமைகின்றன. பல ஆண்டுகள் தேவையின்றி அவை துரிதமாக (சில நாட்களிலும்) நடைபெறுகின்றன. எனவே படிமங்களை வைத்து காலத்தை கணிப்பது சரியான முறையன்று
.
காலத்தைக் கணிக்கும் கருவிகள்
ஒரு செயலின் ஒரு பகுதி நடக்கும் கால இடைவெளியைப் போன்று, அச்செயலின் பத்து மடங்கு நடப்பதற்குப் பத்து மடங்கு கால இடைவெளி இருக்கும். என்று கருதுவது தவறு.

எடுத்தக்காட்டாக, கடல்நீரில் ஆயிரம் ஆண்டுகளில் ஒரு குறிப்பிட்ட அளவு உப்புத்தன்மை கூடுகிறது. என்று எடுத்துக்கொண்டால் பத்தாயிரம் ஆண்டுகளில் பத்து மடங்கு கூடியிருக்காது. ஏனெனில் நிலத்திலிருந்து மழைநீரால் கரைந்து வரும் உப்புக்களின் அளவு காலப்போக்கில் குறையும் என்பது யாவரும் அறிந்த உண்மை.

மேலும் உலகம் உருவாகும்பொழுது கடல்நீர் உப்பின்றி இருந்தது என்று கருதுவது சரியாயிருக்க வேண்டியதில்லை. தொடக்கத்திலே உப்பாக இருந்திருக்கக் கூடுமன்றோ? எனவே கடலின் உப்புத்தன்மையை வைத்து உலகின் வயது பல கோடி ஆண்டுகள் என்பது சரியன்று.

இயற்கை நிகழ்ச்சிகளின் கால அளவைக் கணிப்பது நேரடி முறையில் (Linear) இல்லாமல் அடுக்கு முறையில் (Exponential) அமைவதே ஏற்புடையது காலத்தை அளக்கும் பல கருவிகள் இவ்விதம் பயன்படுத்தப்படவில்லை.

கி.பி 1800-1801 ஆண்டில் ஹவாய் தீவின் ஹீவாலானலையில் எரிமலைக் குழம்பினால் உருவான பறையின் வயதை, காலத்தைக் கணிக்கும் கருவியின் மூலம் கி.பி 1968 இல் சரிபார்த்தார்கள். அந்தப் பாறைக்கு “110 கோடியிலிருந்து 300 கோடி வரை வயது இருக்கும்” என்று காலத்தை கணிக்கும் கருவி கூறியது. இதை Journal Of Geological Research இன் 1968 ஆம் ஆண்டு இதழில் Dr. ஹலாலான் குவின்ட் என்ற ஆய்வு விஞ்ஞானி எழுதியுள்ளார். 168 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை இத்தனை கோடி ஆண்டுகள் என்று சொல்லும் கருவியைப் பயன்படுத்திக் கூறப்படும் ஆண்டு கணக்குகளை நம்புவது எங்கனம்?

மற்றும் பல ஆய்வாளர்களும் காலத்தைக் கணிக்கும் கருவிகள் உண்மைக்குப் புறம்பான கருத்துக்களைக் கூறுவதைக் கண்டுபடித்துள்ளனர். எனவே காலத்தைக் கணிக்கும் கருவிகள் சரியாக கணக்கிடுவதில்லை என்பது தெளிவு. 168 ஆண்டுகளைப் பல நூறுகோடி ஆண்டுகள் என்று சொல்லும் கணக்கீடுகளை நீங்கள் நம்பப்போகிறீர்களா?

படிமங்கள்
உலகின் பல பாகங்களில் எலும்புக் கூடுகள் மட்டுமன்றி படிமங்கள் கிடைத்துள்ளன. ஒரு விலங்கு மரணமடைந்து காலப்போக்கில் தானாக படிமம் ஆவதில்லை. ஏனெனில் அது மரணமடைந்ததும் விரைவில் அழுகி கிருமிகளாலும் பூச்சிகளாலும் மற்ற விலங்குகளாலும் அழிக்கப்பட்டு விடும். திடீரென புதைக்கப்பட்டு அழுக முடியாத சூழ்நிலையில் மடடுமே படிமங்கள் உருவாகும். எனவே, படிமங்கள் காலத்தைக் கணிப்பதற்குப் பயன்படுவதை விட வேதத்தில் கூறப்பட்டுள்ள நோவாவின் காலத்தில் நடந்த பெருவெள்ளம், எரிமலைகள் போன்ற நிகழ்ச்சிகள் நடந்ததை நிறுவுவதற்கே உதவியாயிருக்கக் கூடும்.

மண்ணுக்குள்ளே சில மரங்கள் கற்களைப் போன்று மாறியுள்ளது. இவ்வாறு ஆவதற்கு பல்லாயிரம் ஆண்டுகள் ஆகும் என்று கருதப்பட்டு வந்தது. ஆனால் சமீபகாலத்தில் தலையில் அணியும் தொப்பி, இக்கால உணவுப்பொருளான இறைச்சி பண்டம் (Sausages) போன்றவை கல்லாக மாறியிருந்நது கண்டுபடிக்கப்பட்டுள்ளதால் இக்கருத்து மாறிவிட்டது. எனவே படிமங்கள் உருவாகுவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகள் தேவை என்பது உண்மையன்று.

நிலக்கரி, எண்ணெய்
தாவரங்களிலிருந்து நிலக்கரி உண்டாவதற்கு பல்லாயிரம் ஆண்டுகள் ஆகும் என்று கூறிவந்தனர். Dr. ராபர்ட் ஹென்றி என்பவர் ஒரே ஆண்டிற்குள் தாவரம் நிலக்கரியாக முடியும் என்று நிரரூபித்துள்ளனர். இதைப் பல ஆராய்ச்சியாளர்கள் சரிபார்த்துள்ளனர். மேலும் மிகுந்த வெப்பமுள்ள நீரின் செயல்பாட்டினால் நிலத்தடி எண்ணெய் (Crude oil) வெகு சீக்கிரம் உருவாகும் என்று கண்டுபிடித்துள்ளனர்.

கதிர்வீச்சு
அணுஎண் 238 கொண்ட யுரோனியமானது ஆல்பா, பீற்றா  கதிர்வீச்சினால் சிறிது சிறிதாக அணுஎண் 206 கொண்ட ஈயமாக மாறுகின்றது. பாறைகளிலுள்ள யுரோனியம், ஈயம் ஆகியவற்றின் அளவைக்கொண்டு உலகம் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவாகியுள்ளது என்று கூறுகின்றனர்.

இது சரியென்றே அனேகர் எண்ணினார்கள். கதிர்வீச்சு ஒரே அளவு இருந்தது என்று தவறாக கற்பனை செய்து அவ்வாறு கூறகின்றனர். மேலும் பாறையில் காணப்படும் ஈயம் அனைத்தும் கதிர் வீச்சினால் மட்டுமே உருவாகியிருக்க வேண்டியதில்லை இயற்கையிலே ஈயம் உண்டு. எனவே ஆரம்பத்திலேயே அதில் பெரும்பகுதி ஈயமாக இருந்திருக்கக் கூடும் என்பதை இவர்கள் கருத்திற்கொள்ளவில்லை. எனவே உலகின் வயதைக் குறித்த காலக்கணிப்புக்கள் எதுவும் சரியன்று.

உலகின் காந்த ஆற்றல் களம் (Mognetic Field)
உலகின் காந்த ஆற்றல் களம் வலுவிழந்து வருகிறது. பல ஆண்டுகளாகக் கூர்ந்து கவனித்துக் கணிக்கப்பட்டதிலிருந்து பூமியின் வயது இருபதாயிரம் ஆண்டுகளுக்கு குறைவானது என்று தெரிய வருகிறது.

காலங்களைக் கணிப்பதற்கென்று தற்காலத்தில் பயன்படுத்தப்படும் ரேடியோ-கார்பன் முறையைப் பயன்படுத்தி ஏறத்தாழ 15,000 காலக்குறிப்புக்களை ஆராய்ந்து அவற்றிலுள்ள அடிப்படைப் பிழைகளைத் திருத்தி பேராசிரியர் ராபர்ட் டு. ஒயிட்லா என்பவர் பூமியின் வயது ஏறத்தாழ 7000 ஆண்டுகள் மட்டுமே இருக்கும் என்று கூறியுள்ளார். சரியான முறையில் காலத்தைக் கணிக்கும் கருவியினைக் கொண்டு உண்மையாகக் கணித்துக் கூறும் காலம் சீக்கிரத்தில் வரப்போகிறது.

செய்தித்தாளிலோ, தொலைக்காட்சியிலோ, நூல்களிலோ பல இலட்சம் அல்லது பல கோடி ஆண்டுகள் இருந்த பறவை, விலங்கினம், மீன் படிமம் என்று எழுதுவதைக் கண்டால் அது உண்மையென்று உடனடியாக ஏற்றுக்கொள்வது சிறந்ததல்ல.
-------------------------------------------------------வாழ்வியல் விளக்க வேதாகம கட்டுரை-------------------------------------------------------
நன்றி: HI CHRISTIANS

No comments:

Post a Comment