Monday, May 28, 2012

சோர்ந்து போகாதே

அது ஒரு தற்காலிகமாக அமைக்கப்பட்ட இராணுவ மருத்துவமனை.
யுத்தகளத்தில் காயப்பட்ட இராணுவ வீரர்களுக்கு தீவிர சிகிச்சை
அளிக்கப்பட்டு வந்தது. இங்கு மரணத்தருவாயில் இருந்த இராணுவ வீரன்
ஒருவரது அருகில் சிற்றாலய போதகர் ஜெபித்து கொண்டிருந்தார். கண்
விழித்த வீரன் போதகரிடம் தனக்கொரு உதவி செய்யும்படி கேட்டு
கொணடான். போதகரும் மிகுந்த ஆர்வத்துடன் கட்டாயம் செய்கிறேன்
என்றார். மெதுவாக தனது பேண்ட் பையிலிருந்து ஒரு சிறு விசாச
புத்தகத்தை எடுத்து அதில் ஒரு விலாசத்தை சுட்டிகாட்டி 'இது என் ஞாயிறு
பள்ளிஆசிரியருடையது இவருக்கு நீங்கள் ஒரு கடிதம் எழுத வேண்டும்.
அதில்ஞாயிறு பள்ளியில் நீங்கள் கற்று கொடுத்த வேத வசனத்தின்படி
நான் ஒருநல்ல கிறிஸ்தவனாக வாழ்ந்து மரணத்தை சந்திக்கிறேன்.
என்னை இரட்சகர் இயேசுகிறிஸ்துவிடம் வழிநடத்திய உங்கள் பணிக்காக
நன்றி கூறுகிறேன் என்ற செய்தியை அவர்களுக்கு அனுப்ப வேண்டும்'
என்றான். போதகரும் உடனே கடிதம் எழுதினார்.


ஓய்வு நாள் பள்ளி ஆசிரியரிடமிருந்து தாமதியாமல் பதிலும் வந்தது. அவரது
கடிதத்தில் 'மகனே, போனமாதம் என் ஞாயிறு பள்ளி ஆசிரியர் பணியை
விட்டு விட்டேன். ஏனெனில் நான் கற்பித்து கொடுத்ததில் எந்த
பலனுமில்லை என்பதாக உணர்ந்தேன். ஆனால் உன்னுடைய கடிதம்
என்னை உயிர்ப்பித்தது, என்னுடைய பொறுமையின்மைக்காகவும், விசுவாச
குறைவிற்காகவும் தேவனிடம் மன்னிப்பு கேட்டேன். மீண்டும்
இவ்வூழியத்தை செய்ய திட்டமிட்டுள்ளேன். எனது சோர்வை நீக்கி
உற்சாகமூட்டிய உனது கடிதத்திற்காக நன்றி செலுத்துகிறேன்' என
எழுதியிருந்தார். ஆனால் இக்கடிதத்ததை படிக்க இராணுவ வீரன் உயிருடன்
இல்லை. இதை வாசித்த போதகரின் கண்களிலிருந்து கண்ணீர்
பெருக்கெடுத்தது. தேவனுடைய கிரியை எத்தனை மகத்துவமானது!
ஆசிரியரை கொண்டு நல்ல கிறிஸ்தவர்களை உருவாக்கினார். அந்த
ஆசிரியர் சோர்ந்த நேரத்தில் பழைய மாணவர்களை கொண்டு
உயிர்ப்பிக்கிறார்.

No comments:

Post a Comment