Wednesday, May 30, 2012

இயன்றதை செய்

பீத்தோவன் ( Beethoven ) என்னும் புகழ்பெற்ற இசை நிபுணர் தன்னுடைய
செவிட்டு குறையினால் மற்றவர்களோடு அதிகமாக பேச மாட்டார். காது
கேளாதததினால் அவருக்கு பேசுவதும் கடினம். ஓரு முறை தன் நண்பனின்
மகன் இறந்த செய்தியை கேட்டு அவர் மிகவும் வருத்தப்பட்டவராய்,
நண்பனின் வீட்டிற்கு சென்றார். அவருக்கு எந்த வார்த்தைகள் சொல்லி
ஆறுதல் படுத்துவது என்று தெரியவில்லை. ஏனெனில் அவருக்கு பேசுவது
கடினமானதினால். அப்போது அவர் அங்கு மூலையில் இருந்த ஒரு
பியானோவை பார்த்தார். உடனே அங்கு சென்று அமர்ந்து, ஒரு அரை
மணிநேரம் தன் இருதயத்தின் வியாகுலங்களையெல்லாம்,
துயரத்தையெல்லாம் அதில் கொட்டி வாசித்து முடித்தார். அதை வாசித்து
முடித்து. அவர் அந்த இடத்தை விட்டு சென்றார். பின் அவரது நண்பர், மற்ற
யாரை பார்க்கிலும் பீத்தோவனின் வருகை தனக்கு மிகுந்த ஆறுதலாக
இருந்தது என்று கூறினார்.

பீத்தோவன் தன்னால் இயன்றதை தன் நண்பனுக்கு செய்து, அவருக்கு
ஆறுதலை கொடுத்ததை போல நாமும் நம்மால் இயன்றதை செய்து,
தேவனுடைய ராஜ்யத்தை கட்ட வேண்டும். அதற்கென்றே தேவன் நம்
ஒவ்வொருவருக்கும் கிருபாவரங்களை கொடுத்திருக்கிறார்.

No comments:

Post a Comment