Sunday, May 27, 2012

சுவிசேஷம் அறிவித்தனர்

ஒரு காவல் அதிகாரியின் கையில் 'தவறவிட்ட குழந்தை' என்ற சுவிசேஷ கைப்பிரதி ஒன்று கிடைத்தது. அதில் தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை உலகிற்கு கொடுத்த அந்த அற்புத செய்தி சொல்லப்பட்டிருந்தது. அதை ஏளனமாக பார்த்த அவர், வழக்கம்போல கசக்கி அதை குப்பை கூடையில் எறிந்து விட்டார். அன்று மாலை அவருடைய வீட்டின் இரண்டாவது மாடியில் தன்னுடைய ஒன்றரை வயது குழந்தையுடன் கொஞ்சி விளையாடி கொண்டிருந்தார். மாடியின் முகப்பில் நின்ற அவர் கையிலிருந்த குழந்தை திடீரென துள்ளியது. அவரது இறுக்கமான கையிலிருந்து எப்படியோ நழுவி, கீழே விழ ஆரம்பித்தது, உடனே அவரும் கீழே குதித்தார். காவல் துறையின் பயிற்சியினால், குழந்தையை லாவகமாக பிடித்தார். தன்னை கீழே கிடத்தி தன் குழந்தையை மார்பில் ஏந்தினார். குழந்தை எந்த காயமுமின்றி காப்பாற்றப்பட்டது. ஆனால் அவருக்கோ இடது கை, காலில் முறிவு ஏற்பட்டு, மருத்தவமனையில் சேர்க்கப்பட்டார்;. .
மறுநாள் கண்விழித்து, தன் குழந்தையை தேடினார். குழந்தை அவரை பார்த்து சிரித்தது. குழந்தையை காப்பாற்றி திருப்தியில் வலியையும் மறந்து, அவரும் புன்னகைத்தார். அன்று மாலை சில சகோதரிகள் மருத்துவமனை ஊழியம் செய்ய வந்தனர். அந்த அதிகாரியின் கையில், 'தவற விட்ட குழந்தை' என்ற அதே கைப்பிரதியை கொடுத்து, சுவிசேஷம் அறிவித்தனர். இப்பொழுது அவரால் இந்த கைப்பிரதியின் உண்மையை உணர முடிந்தது. 'பொல்லாதவனாகிய நானே என் பிள்ளைக்காக இதை செய்யும்போது, பரிசுத்தமுள்ள தேவன் பாவிகளாகிய நமக்காக மனுஷனாய் இப்புவிக்கு வந்து தன் உயிரை கொடுத்தது நிச்சயம் உண்மையே' என மனதிற்குள் எண்ணினார். அன்றே இரட்சிக்கப்பட்டார்.

No comments:

Post a Comment