.
சிகரத்தை
எட்டுவதற்கு 100 மீட்டர் இருக்கும்போது, கால் இடறி கீழே விழ
ஆரம்பித்தான். எங்கும் காரிருள். எங்கு போய்க்
கொண்டிருக்கிறோம் என்று தெரியாத நிலை. புவி ஈர்ப்பின்
காரணமாக மிக வேகமாக கீழே போய்க் கொண்டிருந்தான். கீழே
போகும்போது தான் எப்படியும் மரிக்க போகிறோம் என்று
தெரிந்து விட்டது. அப்படி அவன் நினைத்துக்
கொணடிருக்கும்போது ஒரு இழுப்பு. மலையின்
உச்சியிலிருந்து அவன் இடுப்பில் கட்டியிருந்த கயிறு
முடிந்து அவனை அந்தரத்தில் தொங்க வைத்தது. இப்போது
அவனுக்கு என்னசெய்வது என்று தெரியவில்லை. அவனுக்கு
இருந்த ஒரே வழி கர்த்தர் மாத்திமே. வேறு வழி இல்லாமல்,
தன்னால் இயன்ற வரை சத்தமாக 'கர்த்தாவே எனக்கு உதவி
செய்யும்' என்று கதறினான். உடனே வானத்திலிருந்து ஒரு
சத்தம், 'நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்' என்று கேட்டது.
'என்னைக் காப்பாற்றும்' என்றான்.
'நான் உன்னை காப்பாற்றுவேன் என்று நீ நினைக்கிறாயா?' என்று
ஆண்டவர் கேட்டார். 'ஆம் ஆண்டவரே நான் நம்புகிறேன்' என்று
சொன்னான். அப்போது கர்த்தர், 'அப்படியானால் உன்
இடுப்பிலிருக்கும் கயிற்றை அறுத்து விடு' என்றார். அந்த
நேரத்தில் அமைதி நிலவியது. அவன் அந்த கயிற்றை இன்னும்
கெட்டியாக பிடித்துக் கொண்டான். அடுத்த நாள் காலையில்
அவனை பார்த்து காப்பாற்ற வந்தவர்கள் அவன் கயிற்றை
கெட்டியாக பிடித்தபடியே குளிரில் உறைந்துப் போய்
மரித்திருக்கக் கண்டார்கள். அவன் தரையிலிருந்து இரண்டு
அடி உயரத்தில் தொங்கிக் கொண்டிருக்கக் கண்டார்கள்.
No comments:
Post a Comment