Saturday, June 30, 2012

Adoniram Judson - சத்திய வேதம் பக்தரின் கீதம்

வேதாகமத்தின் புதிய ஏற்பாட்டை பர்மிய மொழியில் (Burmese Language) மொழி பெயர்ப்பதற்கு அதோனிராம் ஜட்சன் (Adoniram Judson) என்ற அருமையான மிஷனரிக்கு 20 வருடங்கள் ஆனது. 1824, இங்கிலாந்திற்கும், பர்மாவிற்கும் இடையில் நடந்த போரில் அவர் மிஷனரியாக இருந்த காரணத்தால் ஜட்சன் சிறையிலடைக்கப்பட்டார். அவரது மனைவி புதிய ஏற்பாட்டின் மொழிபெயர்ப்பை எடுத்து, தாங்கள் இருந்த குடிசையின் தரையில் புதைத்து வைத்தார்கள். ஆனால் ஈரப்பசையின் காரணமாக, அது பூஷணம் பிடிக்க ஆரம்பித்தது. அதைக் கண்ட அவரது மனைவி, அதை எடுத்து, ஒரு பஞ்சில்உருட்டி, அதை ஒரு தலையணை போல செய்து, அதை சிறையிலிருக்கும் தன் கணவரிடம் கொண்டுப் போய் கொடுத்தார்கள். ஆனால் அடுத்த ஒன்பது மாதங்களில் ஜட்சனை இன்னும் மோசமான சிறையில், அவருடைய கால்களில் ஐந்து சங்கிலிகளால் கட்டி, அவரை மாற்றினர். அவரோடு இன்னும் நூறு பேரை அடுத்த நாள் காலையில், தூக்கிலடப்போவதாக அறிவித்தனர். அவருடைய தலையணை சிறைச்சாலையின் தலைவனுக்கு கொடுக்கப்பட்டது. அதை அறிந்த அவரது மனைவி, அதைவிட நல்ல தலையணையை கொடுப்பதாகவும், தன் கணவனது தலையணையை தனக்கு கொடுக்கும்படியாகவும் வேண்டி, அதை பெற்றுக் கொண்டார்கள்.
.
அடுத்த நாள், கர்த்தர் அவரை தூக்கிலிடாதபடி அதிசயமாயக் காத்தார். அவரை வேறோரு சிறைக்கு கொணடுச் சென்றார்கள். திரும்பவும் அவரது தலையணை அவருக்கு கிடைத்தது. ஒரு நாள், அந்த சிறையின் பாதுகாவலர் அந்த தலையணையை பிடுங்கி, அது வீணானது என்று அதை வெளியே தூக்கி எறிந்தார். அப்போது அந்தப் பக்கமாய் வந்த ஒரு கிறிஸ்தவர் அதை தற்செயலாக எடுத்துப் பார்த்தபோது, அதில் பொக்கிஷமான வேத வாக்கியங்கள் இருப்பதைக் கண்டார். அதை எடுத்து பத்திரமாக பாதுகாப்பாக வைத்தார். போர் முடிந்தபிறகு அந்த வேத வார்த்தைகள் பத்திரமாக இருப்பதுக்கண்டுபிடித்து, அதை அச்சிட்டனர். பத்து வருடங்சகள் கழித்து, 1834 ஆம் ஆண்டு, முழு வேதாகமமும் கடினமான மொழி என்றுச் சொல்லப்படுகிற பர்மிய மொழியில் அச்சிடப்பட்டு, வெளியாக்கப்பட்டது.
.
அடுத்த முறை உங்கள் கைகளில் வேதம் தவழும்போது, அது உஙகள் சொந்த மொழியில் வருவதற்கு எத்தனைப் பேர் எத்தனை தியாகம் செய்திருக்கிறார்கள், எத்தனை துன்பங்களுக்கும் இடையூறுகளுக்கும், எத்தனை இன்னல்களுக்கும் உள்ளானார்கள் என்பதை அறிந்து, அப்படி வேதனைகளை அனுபவித்தும் மற்றவர்கள் கர்த்தருடைய வேதத்தை காண, படிக்க வேண்டும் என்று பாடுபட்ட ஒவ்வொருவருக்காகவும் கர்த்தரை துதியுங்கள்.
.
வால்டர் என்னும் பிரஞ்சு மொழி நாத்திகன், கிறிஸ்து இல்லை, வேதம் பொய்யானது என்று தான் மரிக்கும் நாள் வரைக் கூறி வந்தான். ஆனால் மரிக்கும்போது, அவன் சொன்னான், ‘நான் தேவனாலும், மனிதர்களாலும் கைவிடப்பட்டு, என் நித்தியத்தை நரகத்தில் கழிக்கப் போகிறேனே’ என்று கதறியவனாக மரித்தான். எந்த வீட்டில் இருந்து, அவன், தேவன் இல்லை என்றுச் சொன்னானோ, அந்த வீட்டிலேயே வேதாகம சங்கம், அச்சு பதிப்பகம் ஒன்றை ஆரம்பித்து, இலடசக்கணக்கான வேதாகமங்களை, அச்சிட்டு வெளிவரச் செய்ய தேவன் உதவி செய்தார்.

No comments:

Post a Comment