Friday, June 29, 2012

சாது சுந்தர் சிங் - சுயத்தை வெறுப்போம்

சாது சுந்தர் சிங் அவர்கள் திபெத்தில் ஊழியம் செய்த நாட்களில், ஒரு குளிர் நாளில் திபெத்தின் மலைகள் வழியாய் அவர் போய் கொண்டிருநதார். சாயங்கால வேளையானதால் குளிர் அதிகமாகி கொண்டே வந்தது. இவரை போல திபெத்திய வழிபோக்கனொருவனும் இவருடன் சேர்ந்து கொண்டான். பனி மூடிய அம்மலை சிகரங்களில் பயங்கர குளிர் காற்று வீசிக்கொண்டிருந்தபடியாலும், பனிபெய்து கொண்டிருந்தபடியாலும், குளிரின் கொடுமையை தாங்காமல் தாங்கள் கருதிய ஊர்போய் சேருமுன் குளிரால் விரைத்து இறந்து போவோமென்று பயந்து கொண்டே இருவரும் நடந்தார்கள்.
.
ஓரிடத்தில் அவர்கள் வந்தபோது, ஆழமான செங்குத்தான ஒரு பள்ளத்தில் செத்தவன் போல கிடந்த ஒரு மனிதனை கண்டனர். சுந்தர் இவனையும் சுமந்து கொண்டு அவ்வூர் போவோம் என்று தன் சகபயணியிடம் கூறினார். ஆனால் அவனோ, 'நாம் உயிரோடே ஊர் போய் சேர்வதே பெரிய காரியம், அப்படி இருக்க இவனையும் தூக்கி கொண்டு செல்வதா? என்னால் முடியாது, உனக்கு இரக்கமிருந்தால் நீயே சுமந்து கொண்டு வா, நான் முன்னே போகிறேன்' என்று சுந்தரிடம் சொல்லிவிட்டு, தன் வழியே வேகமாய் நடந்தான். ஆகவே சுந்தர் தாமே அந்த மனிதனை தன் தோளின்மேல் சுமந்து கொண்டு நடக்க ஆரம்பித்தார்.  குளிரும் அதிகரித்து, இருட்டவும் ஆரம்பித்தது. தோளின் மேல் இருந்தவன் உடலும், சுந்தர் உடலும் உரசி கொண்டதால் சிறிது அனல் உண்டானது. அது வீசிக் கொண்டிருக்கும் கடுங்குளிரை தாங்கி கொள்ள  போதுமானதாயிருந்தது. அப்படி அவர் நடந்து சென்றபோது, பாதையில் ஒருவன் இறந்து கிடந்ததை பார்த்தார். அருகில் வந்தபோது, அவன், தன்னுடன் வழி நடந்து தனக்கு முன் சென்ற பயணிதான் என்று அறிந்து கொண்டார். அவன்  குளிர் தாங்காமல் இறந்து போனான். இவர்கள் இருவராய் இருந்ததினால் அனல் உண்டாகி, குளிரை தாங்க தக்க பலனை கொடுத்தது. சுமந்து வந்தவனை பக்கத்து கிராமத்தில் சேர்த்தார். 'தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை

இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்' என்ற தேவ வசனத்தோடு ஒப்பிடடு இந்த நிகழ்ச்சியை சுந்தது அடிக்கடி தன் பிரசங்கத்தில் கூறுவார்

No comments:

Post a Comment