Saturday, July 20, 2013

புத்தியுள்ள ஸ்திரீ

ஒரு வீட்டில் இரண்டு சகோதரிகள் இருந்தார்கள். அவர்களில் ஒரு சகோதரி கர்த்தருக்கு பயந்தவள். மற்றவள் பெயரளவில் கிறிஸ்தவளாக வாழ்ந்தவள். கர்த்தருக்கு பயந்த சகோதரி எந்த காரியத்தை செய்தாலும் கர்த்தரிடம் ஜெபித்து, அவருடைய சித்தத்திற்காக காத்திருந்து அதன்படி செய்கிறவளாக இருந்தாள். ஆனால் மற்றவளோ, தன் மனதிற்கு ஏற்றபடி செய்து வந்தாள்.
.
இரண்டு பேருக்கும் திருமணம் நடந்தது. கர்த்தருக்கு பயந்த சகோதரி, ஆரம்பத்திலிருந்தே தன் கணவனோடு பேசி, நம் குடும்பம் இப்படித்தான் இருக்க வேண்டும், கர்த்தருக்கு பயப்படுகிறவர்களாக, ஒழுங்காக சபைக்கு செல்பவர்களாக, தசம பாகத்தை என்ன சம்பாத்தியம் வந்தாலும் ஒழுங்காக கொடுப்பவர்களாக, உலக காரியத்திற்கு அந்நியர்களாக வாழ வேண்டும் என்று சொல்லி, தன் கணவனையும் கர்த்தருக்குள் நடத்தினவளாக தன் வாழ்க்கையை ஆரம்பித்தாள்.
.
மற்றவள் தன் கணவனோடு உலக உல்லாசங்களிலும், உலக காரியங்களிலும் ஈடுபட்டு, உலக இன்பங்களை அனுபவித்தாள். ஒரு நாள் வந்தது. அவளோடு கர்த்தர் இடைபட்டார். கர்த்தரை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டாள். தன் கணவனையும் அவள் கர்த்தரிடம் கொண்டு வரும்படி அவரிடம் பேச ஆரம்பித்தாள். ஆனால் கணவரோ, 'ஓ, நீ எப்படி வாழ்ந்தாய் என்று எனக்கு தெரியும். இப்போது திடீரென்று என்ன பெரிய பக்தி வாழ்கிறது?' என்று சொல்லி உலகப்பிரகாரமாகவே வாழ்ந்து வந்தார். எத்தனையோ நாள் கண்ணீரோடு அவள் ஜெபித்தும் அந்த மனிதர் மாறவில்லை. கடைசியில் ஒரு நாள் கர்த்தர் அவரை சந்தித்தார். அதுவரை அவள் வாழ்வு அவளுக்கு நரகமாகவே இருந்தது.

No comments:

Post a Comment