Tuesday, February 18, 2014

பரிசுத்தமாய் காத்து கொள்ளுதல்

நிலக்கரி சுரங்கம் அமைந்திருந்த ஒரு நகருக்கு போதகர் ஒருவர் புதிதாய் நியமிக்கப்பட்டிருந்தார். சுரங்கத்தை பார்க்க வேண்டுமென்று விரும்பி, உரிய அனுமதி வாங்கி கொண்டு உள்ளே சென்றார். எங்கு பார்த்தாலும் கன்னங்கரேல் என்று தூசி. இருள் சூழ்ந்திருந்த அந்த சுரங்கத்தினுள் ஆச்சரியத்தோடு சென்று கொண்டிருந்த அவர் ஒரு நிமிடம் வியப்போடு நின்று விட்டார். காரணம், அந்த இடத்தில் வெள்ளை வெளேரென்று அழகிய மலரொன்று இருப்பதை கண்டுதான்! இவ்வளவு அழுக்கான இடத்தில் இவ்வளவு தூய்மையான மலரா? இது எப்படி என்று தொழிலாளி ஒருவரிடம் கேட்டார். தொழிலாளி கொஞ்சம் கரித்தூளை எடுத்து பூவின் மேல் வீசினார். கரித்தூள் மலரின் இதழில் பட்ட வேகத்தில் வழுக்கி கொண்டு கீழே விழுந்ததையும், அந்த மலர் முன் போல அழகு மாறாமல் மிளர்வதையும் கண்டு வியந்து போனார். காரணம் அம்மலரின் இதழ்கள் அவ்வளவு வழுவழுப்பாக இருந்தன

No comments:

Post a Comment