Wednesday, March 20, 2013

சிலுவை அன்பினால் மாத்திரமே இணையும்

கம்யூனிச தேசங்களுக்கும் அமெரிக்க தேசத்திற்குமிடையே பனிப்போர் நடந்து கொண்டிருந்த காலம் அது. அமெரிக்க தேசத்தை சேர்ந்த ஊழியர் ஒருவர் ருமேனியா தேசத்தில் வெளியரங்கமாய் சுவிசேஷம் அறிவிக்கத்தடை இருந்தும் இரகசியமாய் சில ஊழியங்கள் செய்யும்படி சென்றிருந்தார். ஒருநாள், கடும் குளிரிலே ஆள் நடமாட்டம் அதிகமில்லாத தெரு ஒன்றில் சென்று கொண்டிருந்தார். மக்கள் யாவரும் யாரையும் கண்டு கொள்ளாமல் அவரவர் தங்கள் வேலையாக சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு மனிதனின் விசில் சத்தம் அவரை ஒரு நிமிடம் ஆச்சரியத்தில் ஆழ்த்தி, திடுக்கிட செய்தது. ஏனெனில் அவர் ‘மா பரிகாரியான இயேசு’ என்ற பாமாலை பாடலை விசில் அடித்தபடி அந்த மனிதன் சென்று கொண்டிருநதார்.
.
கிறிஸ்துவை மறுதலிக்கும் தேசத்தில் இப்படி ஒரு நபரா என மகிழ்ச்சியடைந்து, அம்மனிதனுக்கு பின்பாக இவ்வூழியரும் பின் தொடர்ந்தார். யாரும் பார்த்து விட்டால் பிரச்சனை வரலாம் என்பதால் சிறுது தூரம் அமைதியாய் சென்ற அவர், பின் அந்த பாட்டை இவரும் விசில் அடிக்க ஆரம்பித்தார். அந்த பாட்டைக் கேட்டவுடன் அந்த ருமேனியர் பிரகாசமுள்ள முகத்தோடு திரும்பி வந்து, ஊழியரை கட்டிப்பிடித்து கொண்டு தனது தாய் மொழியில் ஏதோதோ சொல்ல ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் தனது மொழி அவருக்கு புரியவில்லை என்பதை அறிந்து தனது இருதயத்தின் மேல் கைகளை வைத்தார். பின் கைகளை வானத்திற்கு நேராய் உயர்த்தினார். சிலுவை அடையாளத்தை வரைந்து காண்பித்தார். கட்டுக்கடங்காத மகிழ்ச்சியோடு மொழி, கலாச்சாரம், அரசியல் பின்னணி என ஏதோதோ வித்தியாசத்தில் வாழும் ஒருவருக்கொருவர் சம்மந்தமில்லா அவ்விருவரும் ஒரு சில நிமிடத்தில் இணைக்கப்பட்டனர். காரணம் என்ன? கிறிஸ்துவின் இரட்சிப்பின் சந்தோஷமே!

No comments:

Post a Comment