Friday, October 5, 2012

நீங்கள் விசேஷித்தவர்கள்

சாலையோரத்தில் இருந்து மரமொன்றில் இரண்டு அடைக்கலான் குருவிகள் உட்கார்ந்து பேசி கொண்டிருந்தன. ஒன்று கேட்டது ஏன் இந்த மக்கள் கூட்டம் எப்போதும் கவலையோடே அங்கும் இங்கும் அலைகிறார்கள்? எனக்கொன்றும் புரியவில்லை’  என்றது. மற்றொன்று கூறியது உன்னையும்  என்னையும் மறக்காமல் அனுதினமும் பிழைப்பூட்ட ஒரு பரமபிதா இருப்பது போல இவர்களுக்கு இல்லை என்று நினைக்கிறேன். அதனால்தான் அவர்கள் இப்படி கவலையோடு இருக்கிறார்கள்’  என்றது. இவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த மரத்தாலும் அமைதியாய் இருக்க முடியவில்லை. அதுவும உரையாடலின் இடையில் இணைந்து கொண்டது குருவி நண்பர்களே! நானும் பல வருஷமா இதே இடத்தில் நின்று பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். மக்கள் தேவையில்லாததற்கெல்லாம் கவலைப்படுகிற மாதிரி இருக்கிறது. என்னையும்கீழே இருக்கிற குட்டி புல்பூண்டுகளையுமே அழகா உடுத்துவிக்கிறவர் இவர்கள் தேவையை சந்திக்க மாட்டாரா என்ன?  இவர்கள் நம்மைப் போல கடவுளை நம்ப மாட்டார்களோ என்னவோ’  என்றது. பார்த்தா அப்படித்தான் தெரியுது’  என்று சொல்லி எல்லாம் சிரித்தன. குருவிகள் மரத்திடம் விடைபெற்றுக் கொண்டு தேவனால் தங்களுக்கு ஆயத்தமாக்கப்பட்ட உணவை உண்ண பறந்து சென்றன.

No comments:

Post a Comment