Sunday, October 28, 2012

கேளுங்கள் தரப்படும்

.
நமது சர்வ வல்லமையுள்ள தேவன் கொடுக்கும் விஷயத்தில் தாராளமாகவே காணப்படுகிறார்.

கிரேக்க பேரரசன் அலெக்ஸாண்டர், தனக்கு பிரியமான ஒரு தளபதிக்கு அரசு நிதியிலிருந்து பணம் எவ்வளவு வேண்டுமானாலும் பெற்று கொள்ள உரிமை வழங்கியிருந்தார். ஒரு சமயம் அந்த தளபதிக்கு மிகவும் பெருந்தொகை தேவைப்பட்டது. அதற்கான ஒரு பண ஓலையை நிதித்துறை அதிகாரியிடம் கொடுத்தார். 'மன்னரை சந்தித்து அவர் அனுமதியை பெறும்வரை அவ்வளவு பெருந்தொகையை உமக்கு தர இயலாது' என கைவிரித்து விட்டார் நிதித்துறை அதிகாரி.
.
மன்னரை சந்தித்த நிதித்துறை அதிகாரி, 'தளபதி மிகவும் பெருந்தொகைக்கான பண ஓலையை என்னிடம் தந்துள்ளார்' என்று சொல்ல, 'நீர் அந்த ஓலைக்கு மதிப்பளித்தீரா? என்று அலெக்ஸாண்டர் கேட்டார். 'இல்லை, தொகை பெரிய அளவில் இருந்தததால் மன்னரின் அனுமதிபெறும்வரை தர இயலாது என கூறி விட்டேன்' என்றார் நிதி அதிகாரி. மன்னருக்கு கடும்கோபம் வந்து விட்டதை கண்டு அவர், 'அவ்வளவு பெரிய தொகையை கொடுப்பதால் குற்றம் வந்து விடுமோ என்று பயந்தேன்' என்றார். அதற்கு அலெக்ஸாண்டர், 'இவ்வளவு பெரிய தொகையை கேட்பதின் மூலம், தளபதி என்னையும் எனது பேரரசையும் எவ்வளவாய் கனப்படுத்தியிருக்கிறார் தெரியுமா? அப்படியிருக்க நீர் என்னை மட்டுப்படுத்தியது போல் அல்லவா இருக்கிறது' என அலெக்ஸாண்டர் அதிகாரியை கண்டித்தார்.

No comments:

Post a Comment