Saturday, August 25, 2012

கவலைப்படாதிருங்கள்

மத்திய கிழக்கு நாடுகள் வனாந்தரமாக இருப்பதால், செடிகள் அந்த மண்ணில்  வளருவது கடினம். Conocarpus என்னும் ஒரு வகை செடி, அதற்கு தண்ணீரோ, குளிர்ந்த இடமோ தேவையில்லை. அந்த செடி இந்த வனாந்திரமான இடங்களில் கடுமையான வெட்பத்திலும் செழிப்பாக வளருகிறபடியால், எல்லா இடங்களிலும் அவற்றை நட்டு வைத்து, வளர்த்து,  ஒவ்வொரு விதமான மிருகங்கள் போல, பறவைகள்  போல வெட்டி, அழகுபடுத்தி, சாலைகளின் ஓரங்களில் வரிசையாக வைத்திருக்கிறார்கள். யாராவது இந்த நாடுகளுக்கு வருபவர்கள், இது வனாந்தரமா என்று நினைக்குமளவு இந்த மரங்களை எக்கச்சக்கமாக நட்டு, பசுமையாக காட்சி தருமளவு அரசாங்கம் எல்லா முயற்சிகளையும் எடுத்து தங்கள்  நாடுகளை அழகுபடுத்தியிருக்கிறார்கள்.

சில இடங்களில் இவைகள் வெட்டப்படாமல், ஒரு லெவல் இல்லாமல் வளர்ந்து, ஒரு புதரை போல காட்சியளிக்கும். வனாந்தர இடமாக இருப்பதால் வனாந்தரத்தில் காணப்படுகிற தேள்கள், மற்ற விஷ பூச்சிகள் இதற்குள் ஓடி ஒளிய வாய்ப்புண்டு. நம் நாட்டிலும், செடிகளை ஒழுங்காக கத்திரித்து  விடாதபடியால், கன்னாபின்னாவென்று வளர்ந்து பார்க்கவே அலங்கோலமாய் காணப்படுகிற இடங்கள் அநேகம் உண்டு. செடிகளோடு கூட களைகளும் வளர்ந்து, செடிகளுடைய ஆகாரத்தை உண்டு, செடிகள் சரியாக வளராதபடி இவை வேகமாய் வளர்ந்து, செடியை மூடிக்கொளகின்றன.

கவலையும் அதைப்போலத்தான், அந்த களைகளைப் போல, அதை   ஆரம்பத்திலேயே கிள்ளி  எறியாவிட்டால், அது வேர்படர்ந்து, பெரிய கிளையாகி, ஆளையே விழுங்கி விடக்கூடியதாக உள்ளது

No comments:

Post a Comment