Friday, August 10, 2012

George Mueller - கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடு


George Mueller
விசுவாசத்திற்கு நல்ல ஒரு எடுத்துக்காட்டாக விளங்கியவர் ஜார்ஜ் முல்லர்George Mueller (1805-1898) என்னும் அருமையான தேவ ஊழியர். அவர் கர்த்தருக்காக தன் வாழ்நாளில் பெரிய காரியங்களை செய்ததுமல்லாமல், விசுவாசத்தில் எப்படி எல்லாம் சாதிக்கலாம் என்பதை நடைமுறையில் செய்துக் காட்டியவர். அவர் அநேக அனாதை இல்லங்களை வைத்து நடத்தியவர். மாத சம்பளம் ஒன்றும் பெறாமல் கர்த்தர் மேல் விசுவாசத்தின் மூலமே அவைகளை நடத்திக் காட்டியவர். அவர் ஒருமுறை தன் அனாதை இல்லத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை கீழ்க்கண்டவாறு கூறினார்:
.
ஒரு நாள் காலை உணவிற்கு நேரம் வந்தபோது இங்கிலாந்தில் உள்ள எனது அனாதை இல்லத்தில் உணவு ஏதும் இல்லை. ஏதாவது வாங்க வேண்டுமென்றாலும் கையில் பணமும் இல்லை. என்னைக் காண என் நண்பனின் மகள் வந்திருந்தாள். அவளை சாப்பிடும் அறைக்குக் கூட்டிச் சென்று, 'எங்கள் தகப்பன் செய்யப் போகும் காரியத்தைப் பார்' என்றுக் கூறி, அவளை அந்த இடத்தில் அமரச் செய்தேன். அங்கு எல்லா தட்டுகளும் எல்லா டம்ளர்களும் காலியாக இருந்தன. எல்லாரையும் அமரச் செய்து, எங்கள் தலைளை தாழ்த்தி, 'எங்கள் நல்ல தகப்பனே, நீர் எங்களுக்கு கொடுக்க இருக்கும் உணவிற்காக நன்றி' என்றுச் சொல்லி ஜெபித்தோம்.
.
ஆமென் என்றுச் சொல்லி முடிப்பதற்குள் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. அங்கு ரொட்டிகளைச் செய்பவர் நின்றிருந்தார். அவர், 'எனக்கு இரவெல்லாம் தூக்கமில்லை, உங்களுக்கு சாப்பிட காலையில் ஒன்றுமில்லை என்று எனக்கு தோன்றிற்று. ஆகவே காலை 2 மணிக்கு எழுந்து உங்களுக்கென்று புதியதாக இந்த ரொட்டிகளைச் செய்தேன்' என்று தேவையான ரொட்டிகளை அவரிடம் கொடுத்தார். அது முடிந்த உடனே மற்றொரு கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. திறந்தால் பால் கொடுப்பவர், அவருடைய வண்டி இந்த அனாதை இல்லத்தின் முன்பாக உடைந்துப் போய் விட்டது. அதை சரிசெய்ய வேண்டுமென்றால், அதிலிருந்து எல்லா பாலையும் வெளியேற்றவேண்டும். ஆகவே இந்தப் பாலை வாங்கிக் கொள்கிறீர்களா என்றுக் கேட்டாராம். 'அன்று அருமையான காலை உணவு எங்களுக்கு கிடைத்தது' என்று முல்லர் கூறினாராம்.

No comments:

Post a Comment