Friday, August 10, 2012

பாவ சிந்தனைகள்

Pinatubo

1991ம் வருடம் ஜூன் மாதம் 12ம் தேதி பிலிப்பபைன்ஸ் நாட்டின் சுதந்திர நாளில் பினாடுபோ (Pinatubo) என்னும் எரிமலை வெடித்தது. அது 500 வருடத்திற்கு மேலாக அமைதியாக சலனமில்லாமல் இருந்தது. அது இனி வெடிக்கப் போவதில்லை என்று மக்கள் அதை மறந்திருந்த நேரத்தில், அது வெடித்தது. அப்போது 8 மணி நேரத்திற்கு மேல் பூமி அதிர்ந்தது. அது 50,000 அடி உயரத்திற்க்கு சாம்பல் புகையை மேலே கிளப்பியது. மாத்திரமல்ல,Typhoon Yunga என்னும் சூறாவளிக் காற்றும் சேர்ந்து வீசியதால் சாம்பலும் புகையும் சேர்ந்து, கறுப்பு மழை பெய்தது. அதனால் அந்த சனிக்கிழமை கறுப்பு சனிக்கிழமை (Black Saturday) என்று அழைக்கப்பட்டது.
.
அந்த மலையிலிருந்து சில மைல் தூரத்தில் அமைந்திருந்த அமெரிக்க விமானப்படை அந்த இடத்தை முழுவதுமாக விட்டுவிட வேண்டி வந்தது. ஆயிரக்கணக்கான மக்களும் அமெரிக்க வீரர்களும் தங்கள் உயிரைக் காப்பாற்ற, தப்பித்து ஓட வேண்டி இருந்தது. அநேக நாட்கள் அந்த எரிமலை வெடிக்காததால் மக்கள் அதை சாதாரண மலையாக நினைத்து வாழ்ந்து வந்தார்கள்.
.
இந்த எரிமலை எத்தனையோ வருடங்கள் அமைதியாக இருந்து, ஒரு நாள் வெடித்ததுப் போல நம்முடைய பாவ குணங்களும் நமக்குள் மறைந்து இருந்து, வெளியே தலைக்காட்டாமல், அமைதியாக இருக்கின்றது. அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம். அது அமைதியாக இருப்பதால், அது அப்படியே இருந்துவிடும் என்று நாம் நினைத்தால் அது ஒரு வேளை தவறாகி விடலாம்.

No comments:

Post a Comment