Saturday, August 25, 2012

நம் தேவனுக்கென்று சரித்திரம் படைப்போம் - Telemachus

 
நான்காவது நூற்றாண்டில் வாழ்ந்த டெலிமாக்கஸ் (Telemachus) என்னும் கிறிஸ்தவர் தனது கிராமத்தில் அதிகமான நேரத்தை ஜெபத்தில் கழித்துஅமைதியான வாழ்க்கையை கர்த்தருக்குள் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் தேவன் அவரிடம் நீ ரோமுக்கு போ என்று சொல்வதை கேட்டார். அந்த சத்தத்திற்கு செவிகொடுத்துரோமிற்கு நடந்தே செல்ல ஆரம்பித்தார். அநேக நாட்கள் நடந்தபிறகு அவர் அந்த நகரத்தை சென்றடைந்தார். அந்நேரத்தில் அந்த நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.  ஒரு பெரும் கூட்டம் கொலோசியம் என்னும் ரோம நாட்டின் பெரிய அரங்கத்திற்குள் சென்றது. அவர்களை தொடர்ந்துஅவரும் அவர்களுடன் உள்ளே சென்றார். அந்நாட்டின் மன்னரின் முன் கிளாடியேட்டர்ஸ் (Gladiators)  என்பவர்கள் மரிக்கபோகும் நாங்கள் உமக்கு வந்தனம் செய்கிறோம் என்று கூறுவதை பார்த்தார். அந்த கிளாடியேட்டர்ஸ் என்பவர்கள்கொலைகுற்றம் செய்தவர்கள் அடிமைகள். அவர்கள் ஒருவரோடொருவர் சண்டையிட்டு மற்றவர் மடியுமட்டும் போராடுவார்கள். சில நேரங்களில் சிங்கம் புலிகளோடும் போராட வேண்டி இருக்கும். அவர்கள் அப்படி போராட ஆரம்பிப்பதை கண்ட டெலிமாக்கஸ் 'இயேசுவின் நாமத்தில் நிறுத்துங்கள் என்று கூச்சலிட்டு சொன்னார்.
 
அவர்களோ நிறுத்தாமல்விளையாட்டை ஆரம்பிப்பதை கண்ட அவர்அந்த அரங்கத்திற்குள் குதித்தார். ஒரு சிறு உருவம் கிளாடியேட்டர்களின் முன் ஓடி இயேசுவின நாமத்தில் நிறுத்துங்கள் என்று கூறுவதை பார்த்த கூட்டத்தினர் அது ஏதோ ஜோக்  (Joke) என்று நினைத்து சிரிக்க ஆரம்பித்தனர்.
 
ஆனால் அது உண்மை என்று அறிந்த போது அவர்களுக்கு கோபம் வர ஆரம்பித்தது. டேலிமாகக்ஸ் அவர்களோடு நிறுத்துங்க்ள என்று கெஞ்சுவதை கண்ட ஒருவன்அவரை தன்னிடம் இருந்த வாளினால் குத்தினான். அவர் அப்படியே அங்கு தரையில் இரத்தம் பாய சரிந்தார். முற்றவர்கள் அவர்மேல் கல்லெறிய ஆரம்பித்தனர். அப்போதும் அவர் அவர்களிடம் இயேசுவின் நாமத்தில் தயவுசெய்து இந்த சண்டையை நிறுத்துங்கள் என்று கூறியபடியே மரித்தார்.
 
அப்போது யாரும் எதிர்பாராத ஒரு வித்தியாசமான காரியம் நடைபெற்றது. அங்கிருந்த கிளாடியேட்டர்கள் அந்த மரித்த சடலத்தை பார்த்தபடி நின்றிருந்தனர். அந்த கொலோசியம் முழுவதும் அமைதி நிலவியது. அங்கு முதலாவது இருந்த வரிசையில்ஒரு மனிதன் எழுந்து வெளியேற ஆரம்பித்தான். மற்றவர்களும் அவனை பின்தொடர்ந்து வெளியேற ஆரம்பித்தனர். மரண அமைதியில் அவர்கள் அந்த இடத்தை விட்டு அகன்றனர்.
 
கி.பி. 391 ல் நடந்த அந்த சம்பவத்திற்கு பின் அங்கு மீண்டும் அந்த கிளாடியேட்டர்கள் அந்த கொலோசியத்தில் சண்டையிட்டு ஒருவரையொருவர் கொல்வது முழுவதுமாக நிறுத்தப்பட்டது. அல்லேலூயா! இவை எல்லாம் எப்படி நடந்தது ஒரு மனிதன் தேவனின் நாமத்தில் பேசியதால்!

No comments:

Post a Comment