Monday, December 10, 2012

சிங்கங்களின் வாயை கட்டிப்போட்டதேவன்

புகழ்பெற்ற ஸ்காபீல்ட் வேதாகமத்தின் பதிப்பாசிரியரான சி.ஐ. ஸ்காபீல்ட் என்பவர், தான் மனந்திரும்புவதற்கு முன்னர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாயிருந்தார். அவர் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை ஏற்றுகொண்டு மனந்திரும்பிய ஆரம்ப நாட்களில் தான் விட்டு வந்த பழைய பாவ பழக்கங்களுக்கு மீண்டும் அடிமையாகி விடுவேனோ என்ற ஒரு பயம் அவருடைய உள்ளத்தில் அடிக்கடி எழும்பி கொண்டிருந்தது. இதனிமித்தம் ஸ்காபீல்ட் மனதளவில் அதிகமாய் சோர்வுற்று அதைரியமடைந்தவராய் காணப்பட்டார்.
.
ஒரு நாள் தற்செயலாக செயிண்ட்லூயிஸ் என்ற இடத்திலிருந்து கலையரங்கத்தின் வழியாக சென்று கொண்டிருந்தார். திறக்கப்பட்டிருந்த அதன் ஜன்னல் வழியாக அங்கு தொங்கவிடப்படடிருந்த ஓவியம் ஒன்றினை கண்டார். அந்த சித்திரத்தில் தானியேல், சிங்கங்கள் அடைக்கப்பட்டிருக்கும் ஒரு கூண்டில் நின்று கொண்டு தன் கைகளை கட்டியவாறு ராஜாவுக்கு எதிரே ராஜாவை நோக்கி பார்த்தவனாக அவருடைய கேள்விக்கு பதில் அறித்து கொண்டிருந்தார். தானியேலை சுற்றியிருந்த சிங்கங்கள் அவரை ஒன்றும் செய்யாமல் அமைதியாக நின்று கொண்டிருந்த காட்சி சித்தரிக்கப்பட்டிருந்தது. ஸ்காபீல்ட் அந்த சித்திரத்திரன் முன்பாக நின்று அதை உற்று பார்த்து கொண்டிருக்கையில் யாரோ ஒருவர் அவரிடம் பேசுவதை போலிருந்தது. அதற்கு முன் தேவனுடைய பாதுகாக்கும் வல்லமையை குறித்து அவரிடம் ஒருவரும் பேசியதில்லை. அச்சித்திரத்திற்கு முன் அவர் நின்று கொண்டு இருக்கையில் 'தன்னை சூழ நின்று கொண்டிருந்த சிங்கங்களுக்கு இரையாகாமல் தானியேலை பாதுகாத்தவராகிய நான், உன்னை சூழ சிங்கங்களை போல நின்று கொண்டு உன்னை விழுங்கி விடுவது போல் பயமுறுத்தி கொண்டிருக்கும் உன்னுடைய பாவ பழக்க வழக்கங்கள் உன்னை மேற்கொள்ளாதவாறு உன்னை பாதுகாக்க மாட்டேனோ?' என்று தேவன் தன்னோடு பேசுவதை உணர்ந்தார். அப்போது தான் அந்த தேவ மனிதன், தேவனுக்குள் பெலனடைந்தார். தேவனுடைய பாதுகாக்கும் வல்லமையின் மேல் அவருக்கு ஒரு பெரிய விசுவாசம் உண்டாயிற்று. அவர் மிகுந்த ஆனந்த பரவசமடைந்து தன்னை அறியாமலேயே 'இந்த சிங்கங்கள் (என் பழைய பாவங்களும், பழக்க வழக்கங்களும்) என்னை சூழ்ந்திருந்தாலும் அன்று சிங்கங்களின் வாயை கட்டிப்போட்டதேவன் என் ஜீவியத்திலும் அதையே செய்வார்' என்று முழங்கினார்.

No comments:

Post a Comment