Showing posts with label அதிசய வேதாகமம். Show all posts
Showing posts with label அதிசய வேதாகமம். Show all posts

Saturday, December 20, 2014

உயிருள்ள ஜீவ வேதாகம வசனங்கள்



பரிசுத்த வேதாகமம் முற்றிலும் உண்மை என்பதை நிருபிக்கும் பதிவு

பரிசுத்த வேதாகமத்தின் மகத்துவம். பல ஆயிர வருடங்களாக மாறாமல் இருக்கும் பரிசுத்த வேதாகம வசனங்கள். உயிருள்ள ஜீவ வேதாகம வசனங்கள்.

எபிரேய மொழியில் உள்ள தேவ வசனம்
כד יְבָרֶכְךָ יְהוָה וְיִשְׁמְרֶךָ׃
כה יָאֵר יְהוָה פָּנָיו אֵלֶיךָ וִיחֻנֶּךָּ׃
כו יִשָּׂא יְהוָה פָּנָיו אֵלֶיךָ וְיָשֵׂם לְךָ שָׁלוֹם׃

ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட போது

(6:24) May YHVH bless you and protect you!
(6:25) May YHVH shine his face upon you and be gracious towards you!
(6:26) May YHVH lift his face up to you, and give you peace!

இப்பொழுது நமது கைகளில் உள்ள வேதாகம வசனங்கள் - சாதாரண மனிதனும் புரிந்து கொள்ள கூடிய வகையில் மொழிபெயர்க்கப்பட்ட வசனங்கள் ஆங்கிலத்திலும் - தமிழிலும்
எண்ணாகமம் 6:24-26
கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர்.
The LORD bless thee, and keep thee:
கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர்.
The LORD make his face shine upon thee, and be gracious unto thee:
கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர் என்பதே.
The LORD lift up his countenance upon thee, and give thee peace.

இந்த படத்தில் உள்ள வேதாகம வசனங்களின் நேரடி மொழிபெயர்ப்பு.

நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்
கர்த்தர் (யாவெஹ்) நிமித்தமாக
காப்பவர்/உதவி செய்பவர் மற்றும்
உடைப்பவர்/கண்டிப்பவர்
தீயதை; கர்த்தர் (யாவெஹ்) ஆசீர்வதிப்பார்
உன் மேல்
பிரகாசிப்பிக்கக்கடவர்; யாவெஹ்
முகத்தை உன் மீது
கட்டளையிடகடவர்
சாமாதானம்
பின் வரும் பகுதிகள் தெளிவாய் இல்லை
இந்த வார்த்தைகளை எண்ணாகமம் 6:24-26 வரை காணலாம்

இந்த வசனங்கள் 1979 ம் ஆண்டு இஸ்ரேல் நாட்டில் உள்ள St. Andrew’s Church, பகுதியில் இருக்கும் Menachem Begin Heritage Center நிலத்தில் இரண்டு துண்டுகளாக எடுக்கப்பட்டது. இது இயேசு கிறிஸ்து இந்த பூமியில் அவதரிக்கும் முன் சுமார் 600 நூற்றாண்டுகள் பழமையானது ஆகும்.

இந்த silver scrolls ஏந்தியுள்ள வசனங்கள் இன்றைக்கும் பாரம்பரியம் மிக்க ஆங்கிலிக்கன் திருச்சபை, கத்தோலிக்க திருச்சபை, ஒர்தொடக்ஸ் திருச்சபைகளில் ஆசீர்வாதமாக கூறுவார். இது இன்று நேற்று அல்லது இயேசு பிறந்தபின் தோன்றியது அல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன், அதாவது நமக்கு கிடைத்திருக்கும் ஆதாரத்திபடி 3000 ஆண்டுகளுக்கு முன் பழக்கத்தில் இருந்துள்ளது.

சிலர் வேதாகமத்தை இயேசு பிறந்ததற்கு பின் மாற்றி தவறாக எழுதிவிட்டதாக எழுதுவதை பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு இப்படிப்பட்ட ஆதாரங்கள் பதிலாக இருக்கும் என நம்புகிறேன்.

மிக முக்கியமாக நம் தேவனின் நாமத்தை இந்த படிவமும் ஏந்தியுள்ளதை காணலாம். "யாவெஹ்" "YHWH" என்பது நம் தேவனின் நாமம் ஆகும். புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவாக நாம் காண்கிறோம்.

ஏசாயா 42:8 நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்.

இந்த வசனத்தில் வரும் கர்த்தர் என்பது எபிரேய வார்த்தையில் யாவெஹ் என்று வரும். இதை குறித்து நான் ஏற்க்கனவே ஓர் பதிவை கொடுத்திருக்கிறேன். https://www.facebook.com/TamilNaduChristianMinistries/photos/pb.329941190443905.-2207520000.1412836254./470342299737126/?type=3&theater

நாம் பல நாமங்களில் இயேசுவை அழைக்கிறோம். ஆனால் இயேசு கிறிஸ்து பழைய ஏற்பாட்டின் காலத்தில் தன்னை மனிதனுக்கு அறிமுகப்படுத்தினது "யாவெஹ்" என்ற நாமத்தில் தான். நீங்கள் தயவு செய்து இந்த வார்த்தையை விளையாட்டாய் பரிகாச சிந்தனையோடு பயன்படுத்தி விடாதீர்கள். உங்கள் பாவம் சாபமாய் மாறும்.

இந்த சுருள்கள் அக்கால கட்டத்தில் யாரோ ஒருவர் கழுத்தில் அணிந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. சில்வர் சுருள்களாக உள்ளதால் பொருளாதார பலம் படைத்த பணக்கார குடும்பத்தில் யாராவது ஒருவர் பயன்படுத்தினதாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. The word yhwh (the name of the Lord in Hebrew) appears in writing for the first time ever. The benediction quoted from the Book of Numbers was recited by the Temple priests when blessing the congregation; here it is found in writing and for individual use. The tiny silver scrolls were probably worn as amulets around the neck.

இன்றைக்கும் நமது ஆலய பாதிரியார்கள் கழுத்தில் சிலுவை அணிவதை பார்த்திருப்பீர்கள். கத்தோலிக்க போப் ஆண்டவர் முதற்கொண்டு எல்லா கிறிஸ்தவ போதகர்கள், ஆயர்கள் கழுத்தில் சிலுவை, ஆடையில் சிலுவை அணிவதை பார்த்திருப்பீர்கள். இது இன்று நேற்று உள்ள பழக்கம் அல்ல. இது பல ஆயிர வருகங்கலாக தொடரும் பழக்கம். ஆனால் அக்காலத்தில் சிலுவைக்கு பதிலாக வேத வசனங்களை கழுத்தில் அணிந்து கொள்வர். இதை அவர்களே எழுதியும் அணியலாம். இது பல ஆயிர வருடங்களாக நடைமுறையில் இருந்து வந்துள்ளது. இதை பற்றியும் நான் ஓர் பதிவை கொடுத்திருக்கிறேன். (https://www.facebook.com/TamilNaduChristianMinistries/photos/pb.329941190443905.-2207520000.1412836208./574057619365593/?type=3&theater)

கிறிஸ்து நமக்காக சிலுவை அடையாளத்தை தந்த பிறகு வசனங்களுக்கு பதிலாக சிலுவையை அணிந்துகொண்டிருக்கிறோம். ஆனால் காலபோக்கில் கழுத்தில் சிலுவை அணிய வெட்கப்பட்டு இன்று கத்தியையும், நடிகர்களின் படங்களையும், ஆசைப்படும் பெண்கள், ஆண்கள் படங்களையும், சிலர் செல்போன்களையும், அணிந்துள்ளனர். பாரம்பரியம் மறக்கடிக்கப்பட்டு மரணபடுக்கைக்கு சென்று விட்டதோ?

எது எப்படியோ, இப்படிப்பட்ட வேத வசனங்கள் நமக்கு தேவன் பாதுகாத்து கொடுத்திருக்கிறார். இந்த வசனங்கள் கிறிஸ்து பிறந்ததற்கு பின்போ, ப்ரொடெஸ்டண்ட் திருச்சபை உருவான பின்னரோ, கத்தோலிக்க சபையோ எழுதவில்லை. இது மனிதனால் மாற்றப்படவும் இல்லை. நம் கைகளில் இருக்கும் வேதாகம வசனங்கள் உண்மையானது. இதை போன்று பல ஆதாரங்கள் நம்மிடம் உள்ளது. முன் நான் பதிந்த சில பதிவுகளை இங்கே தருகிறேன்.. இன்னமும் பல நூற்றுக்கணக்கான பதிவுகள் தேவ நாம மகிமைக்காக வரும்.

1) இயேசு பிறந்து, மரித்து பின் உயிர்த்தெழுந்தாரா? (மூல ஆதாரம்: BBC செய்தி நிறுவனம்)
https://www.facebook.com/TamilNaduChristianMinistries/photos/pb.329941190443905.-2207520000.1412836225./499598573478165/?type=3&theater
2) வேதாகமத்தில் குறிபிடப்பட்டுள்ள 50 பெயர்களின் உண்மை சரித்திரத்தை பற்றியது
https://www.facebook.com/TamilNaduChristianMinistries/photos/pb.329941190443905.-2207520000.1412836225./531306100307412/?type=3&theater
3) 2500 வருடங்களுக்கு முன் வாழ்ந்த எல்பா சாம்ராஜ்யத்தின் சரித்திர பதிவுகள்.
https://www.facebook.com/TamilNaduChristianMinistries/photos/pb.329941190443905.-2207520000.1412836208./550419178396104/?type=3&theater
4) சமீபத்தில் எகிப்த்தில் கண்டெடுக்கப்பட்ட (கிறிஸ்துவுக்கு முன் 574 மற்றும் 660 ஆண்டு) முக்கியமான பண்டைய கால ஆதாரம் ஒன்று இன்று உலகையே கலக்கி வருகிறது.
https://www.facebook.com/TamilNaduChristianMinistries/photos/pb.329941190443905.-2207520000.1412836208./574057619365593/?type=3&theater
இன்னமும் நூற்றுக்கணக்கான ஆதாரங்கள் உள்ளது. வரும் காலங்களில் உங்களுக்கு தருகிறேன். இந்த ஊழியத்தில் தேவனின் நாமம் மட்டும் மகிமைப்பட ஜெபியுங்கள்.

நான் ஆதாரத்தை வைத்து கொண்டு இயேசுவை தெய்வமாக ஏற்று கொண்டவன் அல்ல. இயேசு எனக்குள் இருக்கிறார் என்பதை தெள்ள தெளிவாக உணர்ந்து உண்மையான தெய்வத்தை அணிந்திருக்கிறோம் என்ற விசுவாசத்தில் பிள்ளையாக வாழ பேராசைப்படுகிறேன்.

இப்படிப்பட்ட ஆதாரங்கள் வேதாகம வசனங்களை நம்ப மறுக்கும் நண்பர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும் என நம்புகிறேன். தேவன் உண்மையுள்ளவர். அவரை நம்பும் ஜனங்கள் பாக்கியம் பெற்றது.

தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

வலைத்தள ஆதாரங்கள்
http://www.ancient-hebrew.org/6_40.html
http://en.wikipedia.org/wiki/Ketef_Hinnom
http://historicconnections.webs.com/archaeologythebible.htm
http://www.tamil-bible.com/
http://shoebat.com/2014/09/05/new-archaeological-discovery-proves-catholic-church/
http://opensiddur.org/tefillot/blessings-tefillot/adventures-in-ancient-jewish-liturgy-the-birkhat-kohanim/
http://www.arcvertuel.org/?q=node%2F386
http://crossconnection.hopetv.org/the-most-ancient-fragment-of-the-biblical-text
http://www.youtube.com/watch?v=XTqMpgz9D4I
http://www.fowlerbiblecollection.com/ketef-hinnom-silver-scrolls.html

Monday, November 24, 2014

பரிசுத்த வேதாகமத்தை கற்று தரும் தேவன்

வேதாகம ஆசிரியர் ஒருவர், தன்னுடைய கிழிந்துப்போன வேதாகமத்தை தூக்கிப்பிடித்துக் கொண்டு, 'ஒவ்வொரு விசுவாசியும் வேதாகமத்தை பயன்படுத்தி, ஒவ்வொரு பத்து வருடங்களில் ஒவ்வொரு வேதாகமத்தையும் சேதப்படுத்த வேண்டும்' என்றார். நம்முடைய வேதாகமங்கள் படிப்படியாக தாமாகவே கிழிந்துப் போகும் அளவு நாம் அவற்றை பயன்படுத்த வேண்டும் என்பதே அவருடைய கருத்தாகும்.
.
பாவத்தினால் தன் மனதை சேதப்படுத்தியவன் சேதமடையாத புத்தம் புதிய வேதாகமத்தை வைத்திருப்பான். சேதமடைந்த கிழிந்த வேதாகமத்தை வைத்திருப்பவனது மனதோ, கர்த்தருக்குள் களிகூர்ந்து பாதுகாப்பாய் இருக்கும்.
.
ஆம், நாம் ஆர்வமாய் வேதத்தை வாசிக்கிறவர்களாக இருப்பவர்களானால் நாம் சேதமடைவதற்கு பதிலாக நமது வேதாகமம் சேதமடையும். நமது பாவத்தை உணர்த்தி, மனசாட்சியை கூர்மையாக்கி, நம்மை உணர்வுள்ளவர்களாக மாற்றும் உயிருள்ள வார்த்தைகளடங்கிய புத்தகம் நம் வேதாகமம் மட்டுமே!

Tuesday, October 14, 2014

விஞ்ஞான ஆய்வின் மூலமாய் நிரூபிக்கப்பட்ட வேத வசனம் - எறும்பு பற்றி வேதம் கூறும் உண்மை - (வேதாகம அறிவியல்-12)



எறும்பினிடத்தில் போய் கற்றுக்கொள் : ஆய்வின் மூலமாய் நிருபிக்கப்பட்ட  வேத  வசனம். உலகில் ஒவ்வொரு மார்கத்திற்கும் ஒவ்வொரு வேதங்கள் உள்ளன, ஆனா இதில் எந்த வேதம் குறைவில்லாதது என்றால், எது எல்லாவிதமான ஆய்வுகளுக்கும்,சோதனைகளுக்கும் உட்படுத்தி தன் உண்மை தன்மையை நிலைநாட்டுகிதோ அதுவே,
அந்த வகையில் பார்த்தால் கர்த்தருடைய வேதமே பரிசுத்தமானது என்பதற்கு இதுவரையிலும் ஏராளமான ஆதாரங்கள் நம்மை சுற்றிலும்  இருக்கின்ற நிலையில், வேதத்தை பொய் என்று தங்களுக்கு தோன்றிய  ஞானத்தின்படி வாதிடுபவர்கள் ஏராளம், அந்த வகையில் இஸ்லாமிய அறிஞர் ஜாகிர் நாயக் மற்றும் அவரை சார்ந்தவர்கள் பின் வரும் விமர்சனத்தை  வேதாகமத்தின் மீது சுமத்தி அதை குற்றப்படுத்தி வருகின்றனர்,  அதென்னவென்றால்,

வேதத்தில் நீதிமொழிகள் 6:6-8  வசனங்களில் எறும்பின் சுறுசுறுப்பை குறிப்பிடும் விதமாக வசனங்கள்   வருகின்றன, அதில் அந்த எறும்பிற்கு பிரபுவோ, தலைவனோ, அதிகாரியோ இல்லாதிருந்தும் அதின் சுறுசுறுப்பையும் அதின் வழிகளையும் பார்த்து  ஞானத்தை கற்றுக்கொள் என்பதாக  குறிப்பிடுகிறது.

இதை பிடித்துக்கொண்ட ஜாகிர் நாயக் மற்றும் அவரை சார்ந்தவர்கள்,எறும்பு  கூட்டத்திற்கு ராணி எறும்பு உண்டு என்று ஆய்வுகள் கூறுகிற நிலையில், பைபிளில் அதற்கு பிரபுவோ, தலைவனோ, அதிகாரியோ இல்லையென்று  கூறுவதினிமித்தமாக பைபிள் பொய்யானது என்றும், ஒரு சிறு பூச்சி  விசயத்தில் தவறான கருத்தை கூறும் பைபிள் எப்படி மனிதனை குறித்து  விளக்கி கூற இயலும்?, எனவே பைபிள் உண்மையான கர்த்தருடைய வார்த்தை இல்லை என்று வாதிடுகிறார்கள்.

சரி! இதில் இவர்கள் கூறுவது உண்மையா அல்லது வேதம் கூறுவது உண்மையா என்று விளக்கமாக பார்க்கலாம்.
இவர்கள், எறும்புகளுக்கு ராணி எறும்பு உண்டு என்பதற்கு ஆதாரமாக மைர்மக்காலஜி(MYRMECOLOGY) என்கிற எறும்பை குறித்த ஆய்வு பாடத்திலிருந்து குறிப்பிடுகிறார், ஆனால் ஏதோ அவசரத்தில் அவர் கவனிக்காமல் விட்ட விஷயம் என்னவென்றால், ராணி எறும்பு மற்ற எறும்புகளை ஆள்வதில்லை, கட்டளையிடுவதில்லை, அதிகாரமும் செலுத்துவதில்லை, மாறாக, முட்டையிடுவதும் அதன் புற்றுக்கூட்டை பாதுகாப்பதும்தான் ராணி எறும்பின் வேலை, 

மற்றுமொரு உண்மை என்னவென்றால் அந்த குறிப்பிட்ட புற்று குழுவில் உள்ள எல்லா எறும்புகளுக்கும் ராணி எறும்பு என்று கூறப்படுகிற எறும்புதான்  தாயானவள்,

பணிவிடை எறும்புகளை காட்டிலும் உருவத்தில் பெரிதாகவும் இறகுகள் உள்ளதாகவும் காணப்படும், ஒரு எறும்பு குழுவில் ராணி எறும்பின் பங்கு இவ்வளவுதான், ராணி எறும்பு மாத்திரமல்ல அந்த குழுவில் உள்ள வேறு எந்த  எறும்பும் மற்ற எறும்புகளை அதிகாரம் செலுத்துவதில்லை என்பதை அதே  மைர்மெக்காலஜி பாடத்தில் ஆய்வின் மூலம் ஆதாரத்துடன் உறுதிபடுத்தப்பட்டுள்ளது, கிறிஸ்தவத்தையும் அதன் வேதத்தையும் எப்போதும் குறை கூறி வருகிற இந்த மற்ற பிற மதத்தின் சிறந்த அறிஞர்களுக்கு இந்த உண்மை எப்படி  தெரியாமல் போனது, ஆனால் என் வேதம் பொய்யுரைப்பதில்லை  ஏனென்றால் இந்த வேதாகமத்தின் தேவனே பொய்யுரையாதவர்,

ஆஹா! நம் வேதமாகிய பைபிள் எத்தனை உண்மையுள்ளது என்று சொல்லி  தேவனை துதிக்க தோன்றுகிறதல்லவா, சற்றுப்பொறுங்கள் இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள மற்றுமொரு ஆய்வு உண்மையை கூறி விடுகிறேன் அதன் பின் நாம் தேவனை மகிமை  படுத்தலாம்

வேதம் கூறும் இன்னொரு ஆச்சரிய உண்மை

1742 ம் ஆண்டில் கர்த்தரின் படைப்பின் அதிசயத்தை ஆய்வு செய்த (இயற்கை) பிரெஞ்சு ஆராய்ச்சியாளரான ரெனே அண்டாய்ன் ஃபெர்கால்ட் டி ரியுமர்(RENE ANTOINEFERCHAULTDEREAUMUR) என்ற அறிஞர் எறும்புக்கூட்டத்தில்  பெரும்பாலான எறும்புகள் பெண் எறும்புகள் என்ற முதல் ஆய்வு தகவலை   உலகிற்கு வெளியிட்டார், அதைப்போலவே, எறும்பு கூட்டத்தில் பணிவிடை எறும்புகள்(workerants) எல்லாம் பெண் எறும்புகள் என்ற உண்மையை
சமீபத்திய  ஆய்வு அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளது.

சரி, இதிலென்ன விசேஷம் உள்ளது என்று பொத்தாம் பொதுவாக நினைக்கத்தோன்றும், ஆனால் இதிலும் ஒரு மிகப்பெரிய உண்மை அடங்கியுள்ளது, அதே நீதிமொழிகள் 6:6-8  வசனங்களில்   இந்த  பணிவிடை   எறும்புகள்,  பெண்   எறும்புகள் என்று வேதம் தெளிவுபடகுறிப்பிடுகிறது,

தமிழ் வேதாகமத்தில் நீதி 6:6-8 வசனங்களில் எறும்பை குறித்து கூறும் போது,
6. சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில்போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக்  கற்றுக்கொள்.
7. அதற்குப் பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாதிருந்தும்,
8. கோடைகாலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, அறுப்புக்காலத்தில் தனக்குத்  தானியத்தைச் சேர்த்துவைக்கும்


என்பதாக கூறுகிறது, ஆனால் ஆங்கில மூல வேதமாகிய கிங் ஜேம்ஸ் வர்சனில்,

Go to the ant, thou sluggard; consider her ways, and be wise:Which having no guide, overseer, or ruler,Provideth her meat in the summer, and gathereth her food in the harvest.  இதிலே HER என்று குறிப்பிடுவதால் அந்த பணிவிடை எறும்புகள் பெண் எறும்புகள் என்பது தெளிவாகிறது, இது மூல ஆங்கில வேதாகமத்தில் மாத்திரமல்லவேதாகமத்தின் மூல மொழியான ஹீப்ரூ மொழியிலும் அது பெண்  பாலினத்தை குறிக்கும் சொல்லான நெமெலா(NEMALAH) என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது,

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இன்றைக்கு காணப்படுகிற விஞ்ஞான  வளர்ச்சியற்ற ஒரு கால கட்டத்தில் வேலை செய்யும் எறும்பு இனம் பெண்  இனம்தான் என்பதை ஒரு சாதாரன மனித மூளையினால் எவ்வாறு  கண்டுபிடிக்க இயலும், தேவ ஆவியினாலன்றி இதை யாரால் இவ்வளவுதுல்லியமாக எழுதி வைக்க இயலும், சிந்திக்கும் ஆற்றல் உள்ளவர்களே சிந்தியுங்கள்,

பைபிள் குறையுள்ளது என்று சொல்லி உங்களை நீங்களே கெடுத்துக்கொள்ளாதீர்கள், சாதாரன எறும்பு விஷயத்தில் பைபிள் இவ்வள்வு துல்லியமானதாக இருக்குமானால் விசேஷமாய் படைக்கப்பட்ட மனிதனை குறித்து பைபிள் சொல்வது பொய்யாகுமோ,மனந்திரும்புங்கள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களை நேசிக்கிறார்

Monday, October 13, 2014

பூமியின் உருவம் பற்றி வேதம் சொல்வதென்ன? - ( வேதாகம அறிவியல்-11)


வேதாகமத்தின் சில வசனங்கள் எந்த மேலதிக விளக்கமும் தேவையில்லாமலேயே இந்த நூற்றாண்டு கண்டுபிடித்த விஞ்ஞானக் கருத்துக்களை விவரமாக கூறி நிற்கின்றது.

 
உதாரணமாக கீழே நான் தரும் வசனத்தை கவனியுங்கள்.
யோபு 26:7 அவர் உத்தரமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார்.
பூமி அந்தரத்திலே தொங்குகிறது என்னும் கண்டுபிடிப்பை கூறும் இவ்வசனத்தை இதைவிட விளக்கி கூற வேண்டுமா?

மேலும்
அவர் காற்றுக்கு அதின் நிறையை நியமித்து, ஜலத்துக்கு அதின் அளவைப் பிரமாணித்து, என்று  யோபு 28:25 இல் வேதம் கூறுகிறது.
டோர்ரி சில்லி கண்டு பிடித்த “காற்றுக்கு நிறை உண்டு” எனும் அற்புத விஞ்ஞான கூற்றை இதை விட தெளிவாக கூற வேண்டியதில்லையே?

பூமியின் உருவம்
இனி பூமியின் உருவம் பற்றி கூறும் விடயத்தில் வேதாகமம் தவறு விட்டு விட்டதாக இஸ்லாமிய நண்பர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். ஆனால் குரான் கூறுவதை விட வேதாகமம் இவ்விடயத்தில் மிக தெளிவாகவே இருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை.
அவர்களுடைய சில கேள்விகளுக்கான பதிலை நண்பர்  anbu57 என்பவர் ”நித்திய ஜீவன்” தளத்தில் பதிவிட்டார் அப்பதிலை இங்கே பார்ப்போம்.

கேள்வி - தமிழ் வேதாகமத்தில் ஏசாயா 40:22 பின்வருமாறு கூறுகிறது.தேவன் பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்; அதின் குடிகள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள்; அவர் வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார்.
இதே வசனத்தை ஆங்கில வேதாகமம் பின்வருமாறு கூறுகிறது.It is he that sitteth upon the circle of the earth, and the inhabitants thereof are as grasshoppers; that stretcheth out the heavens as a curtain, and spreadeth them out as a tent to dwell in:
தமிழ் வேதாகமத்தில் காணப்படும் “பூமி உருண்டை” எனும் வாசகங்கள், ஆங்கில வேதாகமத்தில் “circle of the earth” எனக் காணப்படுகிறது. தமிழ் மொழிபெயர்ப்பு கூறுகிறபடி பூமி உருண்டையானது என வேதாகமம் கூறுகிறதா, அல்லது ஆங்கில மொழிபெயர்ப்பு கூறுகிறபடி பூமி தட்டையானது என வேதாகமம் கூறுகிறதா?

ஏசாயா 40:22-ன் மூலபாஷை வார்த்தைகளின் அர்த்தத்தைப் பார்க்கையில், தமிழ் மொழிபெயர்ப்பு கூறுகிறபடி “பூமி உருண்டை” என்றில்லாமல் “பூமி வட்டம்” என்றே இருப்பதாக அறிகிறோம். எனவே ஏசாயா 40:22-ல் “தேவன் பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்” எனும் வாசகங்கள், “தேவன் பூமி வட்டத்தின்மேல் வீற்றிருக்கிறவர்” என்றே மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் “தேவன் பூமி வட்டத்தின்மேல் வீற்றிருக்கிறவர்” என ஏசாயா 40:22 கூறுவதை வைத்து, “பூமி தட்டையானது” என அவ்வசனம் கூறுவதாகக் கருதமுடியாது. இதை சற்று ஆராய்ந்தறிவோம்.

வட்டம் என்பது, 2 பரிமாணம் (2 dimensions) மட்டுமே உடையது. ஆனால் எந்தவொரு திடப்பொருளுக்கும் கட்டாயம் 3 பரிமாணம் (3 dimensions) உண்டு. பூமியுங்கூட முப்பரிமாணமுடையதுதான். ஆனால் முப்பரிமாணமுள்ள பூமியை நாம் பூமிக்கு வெளியேயிருந்து பார்த்தால் அதன் 2 பரிமாணத்தைத்தான் பார்க்கமுடியும். உதாரணமாக, பூமியிலிருந்து சந்திரனைப் பார்த்தால், அது முப்பரிமாணமுள்ளதாகத் தெரியாமல், 2 பரிமாணமுள்ளதாகத்தான் நமக்குத் தெரியும். ஆனால் உண்மையில், சந்திரன் முப்பரிமாணமுள்ளதுதான்.

அவ்வாறே, பூமிக்கு வெளியிலிருந்து பூமியைப் பார்த்தால் அது 2 பரிமாணமுள்ள வட்டமாகத்தான் தெரியும்.

சந்திரன் மீது சில “கரும்புள்ளிகள்” தெரிவதை நாம் அறிவோம். அக்கரும்புள்ளைகளை, “சந்திர வட்டத்தின் மீதுள்ள கரும்புள்ளிகள்” அல்லது “சந்திரன் மீதுள்ள கரும்புள்ளிகள்” என்றுதான் நாம் சொல்வோமேயன்றி, “சந்திர உருண்டையின் மீதுள்ள கரும்புள்ளைகள்” என நாம் சொல்வதில்லை.

அதேவிதமாகத்தான் “பூமி உருண்டையின் மீது” தேவன் வீற்றிருக்கிறார் என ஏசாயா கூறாமல், “பூமி வட்டத்தின் மீது” தேவன் வீற்றிருக்கிறார் எனக் கூறுகிறார். அவரது கூற்றிற்குள் பூமி உருண்டையானதுதான் எனும் கருத்தும் அடங்கியுள்ளது.
பூமிக்கு வெளியிலிருந்து பார்க்கையில் பூமியானது வட்ட வடிவமாகத் தோன்றுவதால், அது ஒரு கோளமாக (sphere) இருக்கவேண்டும், அல்லது உருளையாக (cylinder) இருக்க வேண்டும்.

“தேவன் பூமி வட்டத்தின்மேல் வீற்றிருக்கிறவர்” என ஏசாயா 40:22-ல் கூறின ஏசாயா, பூமியை ஒரு கோளமாகக் கருதி அப்படிச் சொல்லியிருப்பாரா, அல்லது ஒரு உருளையாகக் கருதி அப்படிச் சொல்லியிருப்பாரா? சற்று சிந்தித்துப் பார்ப்போம்.

ஏசாயாவின் தரிசனங்கள் யாவும் தேவனிடமிருந்தே பெறப்பட்டவை எனில், “பூமி ஒரு கோளம்” என்பதை தேவன் அறிவாரென்பதால், ஏசாயாவும் “பூமி ஒரு கோளம்” என்ற புரிந்துகொள்தலில்தான் “தேவன் பூமி வட்டத்தின்மேல் வீற்றிருக்கிறவர்” எனும் கூற்றைக் கூறியிருப்பார்.

ஒருவேளை, ஏசாயாவின் தரிசனங்கள் யாவும் தேவனிடமிருந்து பெறப்படாமல், ஏசாயா சுயமாக அவற்றைக் கூறியிருந்தால், பூமி வட்ட வடிவமானது என்பதை ஏசாயா தனது சுயஅறிவின் மூலம்தான் அறிந்திருப்பார்.

பூமியின் எல்லைகளைத் தெளிவாக ஆராய்ந்தறியாமல், அது வட்ட வடிவமானது எனும் முடிவுக்கு ஏசாயா வந்திருக்கமுடியாது. பூமியின் எல்லைகளை ஆராய்கையில், அது ஒரு கோளமா, அல்லது உருளையா என்பதையும் ஏசாயா நிச்சயமாக அறிந்திருப்பார்.

எனவே ஏசாயா தன் சுய அறிவின்மூலம் “பூமி வட்டத்தின்மேல் தேவன் வீற்றிருக்கிறார்” எனக் கூறியிருந்தாலும், பூமி ஒரு கோளம் என்ற புரிந்துகொள்தலுடன்தான் அவர் அக்கூற்றைக் கூறியிருப்பாரேயொழிய, பூமி ஒரு உருளை என்ற புரிந்துகொள்தலுடன் அவர் கூறியிருக்கமாட்டார்.

எனவே எப்படிப் பார்த்தாலும், பூமி ஒரு கோளம் என்ற புரிந்துகொள்தலுடன்தான் ஏசாயா 40:22-ஐ ஏசாயா கூறியிருப்பாரேயொழிய, பூமி தட்டையானது என்ற புரிந்துகொள்தலுடன் அவர் அதைக் கூறியிருக்கமாட்டார். 

---------------------------------------------------------------------------------------------- 
கேள்வி - மத்தேயு 4:8 மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து:..
பூமிப்பந்தில் எவ்வளவுதான் உயரமான மலைக்கு சென்றாலும் உலகத்தின் சகல ராஜ்ஜியங்களையும் பார்க்கமுடியுமா? ஒரு தட்டையான உலகத்திலேயே அது சாத்தியம்….?
பூமிப்பந்தில் எவ்வளவுதான் உயரமான மலைக்கு சென்றாலும் உலகத்தின் சகல ராஜ்ஜியங்களையும் பார்க்கமுடியாது என்பது மெய்தான். தட்டையான பூமியில்தான் உலகத்தின் சகல ராஜ்யங்களையும் பார்க்கமுடியும் என்பதும் மெய்தான்.

ஆனால் உலகின் சகல ராஜ்யங்களையும் அவற்றின் மகிமைகளையும் நம் மாம்சக் கண்களால் துல்லியமாக/தெளிவாகப் பார்க்கமுடியுமா எனக் கேட்டால், உலகம் தட்டையாக இருந்தாலும் கோளமாக இருந்தாலும் அது சாத்தியமல்ல என்பதுதான் பதிலாக இருக்கும்.

பூமி தட்டையாக இருந்தால்கூட, பூமியின் எவ்வளவு உயர்ந்த மலைக்குச் சென்று பார்த்தாலும் நம் அருகாமையில் அதிகபட்சம் ஒரு 10 கிலோமீட்டர் ஆரமுள்ள வட்டப்பகுதியிலுள்ளவற்றை மட்டுமே ஓரளவு தெளிவாகப் பார்க்கமுடியுமேயன்றி, அதற்கும் மேலாக பல்லாயிரம் கி.மீ. தூரத்தில் உள்ளவற்றை ஒரு கடுகளவிற்குக்கூட காண இயலாது என்பதே உண்மை.

எனவே சாத்தான் இயேசுவை உயரமான மலைக்குக் கொண்டுசென்றதன் நோக்கம்: சொல்லர்த்தத்தின்படி இவ்வுலகின் சகல ராஜ்யங்களையும் அவற்றின் மகிமையையும் இயேசுவின் மாம்சக் கண்களுக்குக் காட்டுவதற்காக அல்ல. பரந்த இவ்வுலகின் மகிமைகளை முடிந்தவரை அதிகபட்சம் காட்டி, இயேசுவின் மனக்கண்களுக்குள் இவ்வுலகின் முழு மகிமையையும் கொண்டுவந்து, இயேசுவை உலக இச்சைக்குள் வீழ்த்தவேண்டும் என்பதே.

ஆதியில் தேவனோடிருந்து இவ்வுலகை சிருஷ்டித்த தேவகுமாரனான இயேசுவுக்கு, இவ்வுலகின் மகிமைகளை சாத்தான் காட்டித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை. ஆகிலும் இயேசு இவ்வுலகில் ஒரு மனுஷனாக மாம்சத்தில் இருந்ததால், அவர் கண்களின் இச்சைக்கு மசிந்துவிடுவார் எனக் கருதிய சாத்தான், அவரது மாம்சக் கண்களுக்கு முன்பாக இவ்வுலக மகிமைகளில் சிலவற்றைக் காட்டி, முழு உலகின் மகிமைகளையும் அவரது மனக்கண்களுக்குள் கொண்டுவந்திருக்கிறான்.

மற்றபடி, பூமி உருண்டையாக இருந்தாலும் தட்டையாக இருந்தாலும், இவ்வுலகின் முழு மகிமைகளையும் நேரடியாக இயேசுவின் மாம்சக்கண்களின் பார்வைக்குள் கொண்டுவருவது நிச்சயமாக சாத்தியமல்ல.

எனவே மத்தேயு 4:8-ல், உலகம் உருண்டையா, தட்டையா எனும் கேள்விக்கான பதிலை அறியக்கூடிய தகவல் எதுவுமில்லை என்பதே உண்மை.

எனவே உலகம் தட்டையானது என வேதாகமம் கூறுவதாகச் சொல்வதற்கு ஆதாரமாக மத்தேயு 4:8-க் காட்ட இயலாது. 
--------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி - பூமியின் தூண்கள் அதிரத்தக்கதாய் அதை அதின் ஸ்தானத்தினின்று அசையப்பண்ணுகிறார் என யோபு 9:6 கூறுகிறது.பூமிக்குத் தூண்கள் உண்டா?ஆம் எனில், பூமி அந்தரத்தில் இல்லை என்றாகிவிடுமே?

பூமியின் தூண்களைப் பற்றி சொன்ன அதே யோபு, பூமி அந்தரத்தில் தொங்குவதைப் பற்றியும் பின்வரும் வசனத்தில் கூறுகிறார்.

யோபு 26:7 அவர் உத்தரமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார்.

எனவே யோபு சொல்கிற தூண்கள் என்பது மரம், இரும்பு போன்ற திண்ணமான பொருட்களாலான தூண்கள் அல்ல.

திண்ணமில்லாத தூண்களைப் பற்றி வேதாகமத்தின் வேறொரு இடத்தில் கூறப்பட்டுள்ளது.

யாத்திராகமம் 13:21,22 அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கக்கூடும்படிக்கு, கர்த்தர் பகலில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும் (மேகத் தூண்), இரவில் அவர்களுக்கு வெளிச்சங்காட்ட அக்கினிஸ்தம்பத்திலும் (அக்கினித் தூண்) அவர்களுக்கு முன் சென்றார். பகலிலே மேகஸ்தம்பமும், இரவிலே அக்கினிஸ்தம்பமும் ஜனங்களிடத்திலிருந்து விலகிப்போகவில்லை.

மேகஸ்தம்பமும் அக்கினிஸ்தம்பமும் நம் கண்களால் காணக்கூடிய ஸ்தம்பங்களேயாயினும், அவற்றின்மேல் கனமாக பொருட்களை வைக்கமுடியாது என்பதை நாம் அறிவோம். அவ்வாறே காற்றினாலான ஸ்தம்பத்திலும் கனமான பொருட்களை வைக்கமுடியாது.

நம் கண்களுக்குத் தெரியாத காற்றினாலான தூணைப் போன்றதொரு தூணையே யோபு 9:6-ல் யோபு கூறுகிறார். அத்தூண் என்னவாக இருக்கமுடியும்?

பூமி மற்றும் அதைச் சுற்றியுள்ள கோள்களில் உள்ள ஈர்ப்புவிசையின் காரணமாகத்தான் அவை யாவும் ஒரு குறிப்பிட்ட பாதையில் அந்தரத்தில் சுற்றி வருகின்றன என்பதை நாம் அறிவோம். அவ்வாறெனில் நம்மைப்பொறுத்தவரை பூமி அசையாமல் ஒரே இடத்தில் நிலைத்து நிற்பதற்குக் காரணமென்ன? அதைச் சுற்றிலுமுள்ள பிறகோள்களின் ஈர்ப்புவிசை, மற்றும் பூமியின் சுய ஈர்ப்புவிசை ஆகியவையே.

எனவே ஈர்ப்புவிசை எனும் விசையினாலான தூண்களில்தான் பூமி நிலையாக நிற்கிறது. ஈர்ப்புவிசையினாலான இத்தூண்களைக் குறித்துதான் யோபு கூறுகிறார். இத்தூண்கள் நம் கண்களுக்குத் தெரிவதில்லை (காற்றுத்தூணைப் போல). ஆயினும் காற்றுத்தூண் எப்படி நம் அறிவுக்கு எட்டுகிறதோ அதேவிதமாக ஈர்ப்புவிசையினாலான தூண் யோபுவின் அறிவுக்கு எட்டியிருக்க வேண்டும். எனவேதான் அத்தூண்களை பூமியின் தூண்கள் என அவர் கூறுகிறார்.

மற்றபடி, நாம் நினைப்பதுபோல் சாதாரண இரும்பு அல்லது மரத்தூணைப் பற்றிதான் யோபு கூறினாரெனில், யோபு 26:7-ல் “தேவன் பூமியை அந்தரத்தில் தொங்க வைக்கிறார்” எனும் உண்மையை அவரால் எப்படிக் கூறஇயலும்?

எனவே யோபு கூறுகிற “பூமியின் தூண்கள்”: திண்ணமானதும் கண்களுக்குத் தெரிகிறதுமான தூண்கள் அல்ல, நம் கண்ணுக்குத் தெரியாமல் பூமியைத் தாங்கிக் கொண்டிருக்கிற “ஈர்ப்பு விசை” எனும் தூணே என்பதை அறிவோமாக. 
நன்றி: HI CHRISTIANS