Showing posts with label willian carey. Show all posts
Showing posts with label willian carey. Show all posts

Thursday, April 11, 2013

வில்லியம் கேரி - வாழ்க்கைக் குறிப்பு

வில்லியம் கேரி (William Carey) (ஆகஸ்ட் 17, 1761ஜூன் 9, 1834) ஆங்கில புரட்டஸ்தாந்து, பப்திஸ்த சபையின் மிஷனரியாக (இயேசு கிறிஸ்துவை அறிவித்தல்) இந்தியாவில் ஊழியம் செய்தவர். இவர் ’தற்கால ஊழியத்தின் தந்தை’ எனப் போற்றப்படுபவர். பப்திஸ்த மிஷினெரி சங்கத்தை தோற்றுவித்தவர்களில் இவரும் ஒருவர். இந்தியாவின் டச்சுக் காலனியான செராம்பூர், கொல்கத்தாவில் மிஷனரியாக பணியாற்றி வந்தவர், இவர் விவிலியத்தை பெங்காலி, சமஸ்கிருதம் மற்றும் பல இந்திய மொழிகளில் மொழிபெயர்த்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு

வில்லியம் கேரி இங்கிலாந்து, நார்த்தாம்டன்ஷயரில் பவுலஸ்புரி என்ற கிராமத்தில் எட்மண்ட், எலிசபெத் கேரி ஆகியோரின் ஐந்து பிள்ளைகளில் மூத்தவராகப் பிறந்தார். தந்தை எட்மண்ட் நெசவுத் தொழிலைச் செய்து வந்தார். வில்லியம் ஆறு வயதாக இருக்கும் போது தந்தை அக்கிராமத்தின் பாடசாலை தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். சிறுவனாக இருந்தபோதே, வில்லியமுக்கு சுற்றுச்சூழல் மீது அதிக ஆவல் இருந்தது. செடிகள், பூச்சிகள் மற்றும் சிறு விலங்குகளை சேகரிப்பதில் ஆர்வம் காட்டினார். மிகவும் இள வயதிலேயே இலத்தீன், கிரேக்க மொழி]]களை தானே கற்றுக்கொள்ளும் ஆற்றலை பெற்றிருந்தார்.
தமது தந்தையின் விருப்பத்தின்படி, பதினான்காவது வயதில் அருகே உள்ள ஹெக்கில்டன் என்னும் கிராமத்தில் செருப்புத்தைக்கும் தொழிலாளியின் கீழ் மாணவராகச் சேர்ந்தார். இவரது எஜமானன் கிளார்க் நிக்கோலஸ் அவரைப்போலவே ஆலயம் செல்லுபவராகவே காணப்பட்டார். அவரது சக மாணவராக இருந்த ஜோன் வார் என்பவர் கடமைக்காக மாத்திரம் ஆலயம் செல்வதை வெறுப்பவர். அவரிடமிருந்து இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பைக் குறித்து அறிந்து, தன் வாழ்வைக் கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்தார். இங்கிலாந்து திருச்சபையில் இருந்து விலகிய கேரி ஹெக்கில்டன்னில் ஒரு சிறிய குழு கூடுகை(Congregational) திருச்சபையை ஆரம்பித்தார். நிக்கோலஸ் கேரிக்கு, தனது கிராமத்தில் கல்லூரி சென்று பயின்ற ஒருவர் மூலம் கிரேக்கம் கற்றுக்கொடுத்தார்.

இந்தியா வருகை

1781 ஜூன் 10 இல் டொலி என்பாரைத் திருமணம் செய்தார். பப்திஸ்த சபை பாப்டிஸ்டு மிஷனெரி இயக்கத்தின் ஒரு சிறப்புக் கூட்டத்தில் ஒரு மிஷனெரி, இந்தியாவின் கிறிஸ்தவ மத தேவைகளைக் குறித்துப் பகிர்ந்து கொண்டார். அப்பொழுது வில்லியம் கேரி, அந்தப் பேச்சின் மூலம் சவாலைப் பெற்றவராய், இந்தியாவிற்கு மிஷனெரியாகச் செல்லும்படியாகத் தன்னை அர்ப்பணித்தார்.
வில்லியம் கேரி, குடும்பத்துடன் 1793 நவம்பர் 9 கல்கத்தா வந்து சேர்ந்தார். அங்கு மிகவும் கடினமான சூழ்நிலையில் ராம் பாஷூ என்னும் ஒரு பெங்காலிக் கிறிஸ்தவர் இவருக்கு தனது மொழியைக் கற்றுத்தர முன் வந்தார்.
கேரி தன் பொருளாதாரத் தேவைகளை சந்திக்கும்பொருட்டு தாவரவியல் பூங்கா ஒன்றின் மேலாளராகவும், மை தயாரிக்கும் தொழிற்சாலையின் மேலாளராகவும் மற்றும் மொழியியல் துறையின் பேராசிரியராகவும் பணியாற்றினார். அப்பொழுது வேதாகமத்தை மொழிபெயர்க்க ஆரம்பித்தார். அந்தக் காலக்கட்டத்தில் தன்னுடைய அருமைப் பிள்ளைகளையும், தன் மனைவியையும் இழந்தார்.
இந்த சமயத்தில் செராம்பூரில் ஒரு இளம் மிஷனெரிக்குழுவுடன் இணைந்து வேதாகமத்தைப் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்தனர். ஆனால் அவர்களுடைய அனைத்துக் கையெழுத்துப் பிரதிகளும் நெருப்புக்கு இரையானது. ஆனாலும் அவர்கள் ஒரு புதிய உத்வேகத்துடன் தங்கள் பணியைத் தொடர்ந்து வேத நூலை பல மொழிகளில் மொழிபெயர்த்தனர்.
வில்லியம் கேரி 1834 ஜூன் 9இல் மறைந்தார்

Saturday, December 15, 2012

வில்லியம் கேரியின் நொறுங்குண்ட இருதயம்

நவீன காலத்து மிஷனெரிகளின் தந்தை என அழைக்கப்ப்ட்ட வில்லியம் கேரியின் வாழ்வில் ஒருநாள் மதிய வேளையில் அவரது அச்சகத்திலும் சேமிப்பு அறையிலும் அக்கினி ஜீவாலை கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. அச்சு இயந்திரங்கள் அனைத்தும் எரிக்கப்பட்டன. எதிர்பாராத இந்த இழப்பினால் அவரால் தாங்கி கொள்ள இயலாத ஒரு ஏமாற்றம். அவரது இருதயம் நொறுங்கி போனது.
.
கேரி மிகச்சிறந்த மொழி பெயர்ப்பாளர். முழு வேதத்தை 20 மொழிகளிலும், புதிய ஏற்பாட்டை 40 மொழிகளிலும் மொழி பெயர்க்க காரணமாயிருந்தவர். வேதத்தின் சில பகுதிகளை 12க்கும் அதிகமான இந்திய மொழிகளில் மொழி பெயர்த்தார். இவ்வாறு தான் மொழி பெயர்த்த அநேக முக்கிய எழுத்து சுருள்களை தன் சேமிப்பு அறையில் பத்திரப்படுத்தி வைத்திருந்தார். இது ஒரு நாள் இரண்டு நாள் முயற்சியல்ல, பல ஆண்டுகள் இரவு பகலாய் கண் விழித்து செய்த கடினமான மற்றும் விடா முயற்சியின் பயன்கள். அன்று அவர் எழுதியதை சேமித்து வைக்க கம்ப்யூட்டர் வசதியோ, எழுத்துபணியை எளிதாக்க ஜெராக்ஸ் வசதியோ இல்லை. கட்டுகடடாக எழுதி வரிசைப்படி அடுக்கி வைததிருந்த எல்லா முக்கிய தாள்களும் அந்தோ இரண்டு மணி நேரத்திற்குள் சாம்பலாய் கிடந்தன. என்ன ஒரு இழப்பு!
.
இந்த பேரழிவை குறித்து தன் நண்பர் அன்ரூமுரேக்கு, ஒரு கடிதத்தை எழுதினார். அதில், 'திரும்பவும் இந்த நிலம் உழப்பட வேண்டும். ஆனால் நாங்கள் முற்றிலும் சோர்ந்து விடாதபடி காக்கப்பட்டு வருகிறோம். சகலத்தையும் ஆளுகை செய்யும் தேவனின் தெய்வீக தன்மையையும் ஞானத்தையும் நான் சிந்தித்து பார்க்கும்போது ஆறுதலை பெற்று கொள்கிறேன். போன ஞாயிற்றுக்கிழமை சங்கீதம் 46:10 ல் கூறப்பட்டுள்ள 'நீங்கள் அமர்ந்திருந்து நானே தேவனென்று அறிந்து கொள்ளுங்கள்' என்ற வசனத்தை தியானித்து என்னுடைய உபத்திரவத்தின் மத்தியில் என்னை பெலப்படுத்தி கொண்டேன். தேவன் நமக்கு செய்யக்கூடிய எல்லாவிதமான காரியங்களையும், நாம் அமைதியுடன் ஏற்று கொள்ள கூடியவர்களாக இருக்க வேண்டும். என்ற கருத்தை என் உள்ளத்தின் ஆழத்தில் வைத்து சிந்தனை செய்கிறேன்' என எழுதியிருந்தார். நஷ்டத்தின் மத்தியிலும் தேவன் மீது அவர் வைத்திருந்த அசையாத நம்பிக்கையை பாருங்கள்.
.
பிரியமானவர்களே, வில்லியம் கேரியின் இந்த மனநிலை நம்மை உற்சாகப்படுத்தட்டும். செழிப்பின் நேரத்தில் தேவனை மனதார துதிப்பது எளிது. ஆனால் தோல்வியில், நஷ்டத்தில், வியாதியில், கடனில், கண்ணீரில், அவர் மேல் நம்பிக்கை வைப்பது அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்.

Saturday, June 30, 2012

William carey

இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு வந்த மிஷனெரி வில்லியம் கேரி அவர்கள் வங்காள மொழியில் வேதத்தை மொழி பெயர்த்ததுடன், இந்தியாவில் சுவிஷேசம் பரவ அரும் பாடுபட்டார். இந்து மதம் மேலோங்கியிருந்த பகுதியில் தானே அவர் செராம்பூர் கிறிஸ்தவ பல்கலைக்கழகத்தை நிறுவினார். இந்திய மக்களுக்கு அவர் செய்த தொண்டினை பாராட்டும் வகையில் இந்திய அரசு அவர் பெயரில் ஒரு தபால் தலையை வெளியிட்டது. ஒரு கிறிஸ்தவ மிஷனெரியின் பெயரில் ஒரு தபால் தலை வெளிவந்தது, இந்திய சரித்திரத்திலேயே முதல் முறையாகும். அவரை கௌரவிக்கும் வகையில் ஒரு விருந்தும் ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.
.
அவ்விருந்தில் கலந்து கொண்ட மற்றொரு ஆங்கிலேயர் இவர் மீது பொறாமை கொண்டவராய், 'கேரியை இங்கிலாந்திலேயே எனக்கு தெரியும், அவர் ஒரு சாதாரண காலணி தயாரிப்பாளராகத்தான் இருந்தார்' என எல்லாரும் கேட்கும்படி சொன்னார். உடனே கேரி புன்முறுவலுடன், ' ஐயா நான் காலணி தயாரிப்பாளராக அல்ல, பிய்ந்த செருப்பை தைப்பவனாகத்தான் இருந்தேன்' என பணிவுடன் கூறினார்.
.
கிறிஸ்தவரல்லாதவராயினும், இயேசுகிறிஸ்துவின் மலை பிரசங்கத்தை நேசித்து வாழ்வில் நடைமுறைப்படுத்தியவர் காந்தியடிகள். நம் நாடு சுதந்திரமடைய மறியல் நடத்திய போது, ஒரு அரசு அலுவலகத்தின் முன் தன் கூட்டத்தாரோடு படுத்திருந்தார் அவர். ஆங்கிலேயன் ஒருவன் அவருடைய வாயில் உதைக்கவே, வாய் முழுவதும் இரத்தம் கொட்டியது. அந்த நேரத்திலும், 'ஐயா உங்கள் காலில் ஏதேனும் காயம் ஏற்பட்டு விட்டதா' என்று ஆங்கிலேயனிடம் கேட்டார். அவன் தலைகுனிய வேண்டிதாயிற்று.