Showing posts with label Ben-Hur. Show all posts
Showing posts with label Ben-Hur. Show all posts

Saturday, July 20, 2013

கடவுள் இல்லை என்று சொன்னவர் கிறிஸ்தவரானார்

அமெரிக்காவை சேர்ந்தவர் லூவாலஸ். இவர் இயேசுகிறிஸ்து என்று ஒருவர் வாழ்ந்ததே இல்லை என்று எழுதத் துணிந்தார். அதற்குப் போதுமான ஆதாரங்கள் திரட்ட தமது செல்வத்தின் பெரும் பகுதியைச் செலவளித்தார். புத்தகத்தை எழுதத் தொடங்கினார். ஆனால் ஒரு சில வரிகளுக்கு மேல் அவரால் எழுதவே முடியவில்லை.ஏனெனில் அவருக்குக் கிடைத்த ஆதாரங்கள் அனைத்துமே இயேசு கிறிஸ்து பிறந்தது, வாழ்ந்தது, அற்புதங்கள் புரிந்தது, சிலுவையில் மாண்டது, மூன்றாம் நாள் உயிரோடெழுந்தது ஆகிய அனைத்தும் உண்மையென்றே உரைத்தன. எனவே இவர் மனந்திரும்பி, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மனிதனை மீட்க மனிதனாய்ப் பிறந்து, பாவமற்றப் புனிதராய் வாழ்ந்தார் என்பதை உலகத்திற்கு எடுத்துக்காட்ட பென்ஹர் (Ben-Hur: A Tale of the Christ) என்னும் சிறந்த நூலை இயற்றினார்.

அந்நூல் பின்பு நான்கு முறை திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு புகழடைந்தது.
Lew Wallace - April 10, 1827 – February 15, 1905) - இவர் ராபட் இங்கர்சால் (Robert Ingersoll)என்னும் பிரபல நாத்திக அமெரிக்கரின் உற்ற நண்பர் ஆவார்.நியூமெக்ஸிகோ பகுதியின் ஆளுநராய் பணிபுரிந்து பின் ஓய்வு பெற்றவர்.