Showing posts with label Missionary. Show all posts
Showing posts with label Missionary. Show all posts

Tuesday, February 18, 2014

பின்னிட்டு பார்க்க வேண்டாம்

அமெரிக்க தேசத்திலே ஆத்தும பாரமுள்ள சபையொன்றிலிருந்து ஆப்பிரிக்காவிற்கு ஒருவர் மிஷனெரியாக அனுப்பப்பட்டார். அநேக நாட்கள் பயணத்திற்குப் பின் ஆப்பிரிக்க எல்லைப்பகுதியை அடைந்தார். அங்கிருந்து ஒரு துடுப்பு படகு மூலம் மக்கள் வாழும் பகுதியை நோக்கிச் சென்றார். மாலை மயங்கும் அந்நேரத்திலே மக்கள் இடும் ஆரவாரங்களை கேட்ட அவர், காரணமறிய துடுப்பை ஆர்வமாகப் போட்டு காதை கூர்மையாக்கினார். அவர் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தபடி, அம்மக்கள் மனிதர்களை சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அவருடைய உள்ளத்தில் பயம் ஏற்பட ஆரம்பித்தது.
.
இருப்பினும் தான் அனுப்பப்பட்டதன் நோக்கத்தை கண் முன் நிறுத்தி முன்னேறினார். பின் ஒரு இடத்தில் இறங்கி, படகை கரையில் கட்டிவிட்டு சென்றார். ஊழியம் செய்ய ஆரம்பித்தார். வருடங்கள் உருண்டோடின. ஊழியத்தின் பலனை காண முடியவில்லை. மக்களிடமுள்ள நிர்விசாரமும் மாறவில்லை.
.
ஒரு நாள் மிகவும் சோர்வுற்றவராக, அடர்ந்த காட்டிற்குள் சென்று கதறி அழுதார். 'ஆண்டவரே, நான் தியாகத்தோடுதானே இங்கு வந்தேன். ஜெபத்தில் போராடித்தானே ஆத்துமாக்களை சந்திக்கிறேன். ஏன் கனியை காண முடிவில்லை?' என கதறினார். கதறலுக்கு நடுவே ஒரு மெல்லிய சத்தத்தை உள்ளத்தில் உணர்ந்தார். 'மகனே, நீ தியாகத்தோடும், ஜெபத்தோடும்தான் ஊழியம் செய்கிறாய். ஆனால் உன் நம்பிக்கையை எங்கு வைத்திருக்கிறாய், உயிருக்கு ஆபத்து வந்தால் தப்பித்து விடலாம் என கரையில் கட்டியுள்ள படகின் மீதா, அல்லது என் மீதா?' என ஆண்டவர் கேட்டதை உணர்ந்தார் அந்த ஊழியர்.
.
உடன்தானே உள்ளத்தில் உணர்த்தப்பட்டவராக நேராக சென்று படகு கட்டப்பட்டிருந்த கயிற்றை அறுத்தெடுத்தார். அது தண்ணீரில் மிதந்து எங்கே சென்றது. அன்று முதல் ஆவியில் அனலடைந்தவராய் உற்சாகமாய் மக்களை சந்தித்தார். தேவன் ஆத்துமாக்களை கொள்ளைப் பொருளாய் அவருக்கு கொடுத்தார்.
.
எலியா தீர்க்கதரிசியின் மூலம் ஊழிய அழைப்பை பெற்ற எலிசா அதுவரை தன் வாழ்வின் ஆதாரத்திற்கு நம்பிக்கையாக இருந்த ஏர் மாடுகளை அடித்து, மாடுகளின் மேல் வைக்கப்படும் மரத்தினாலே ஜனஙக்ளுக்கு அதை சமைத்து கொடுத்து விட்டு, எலியாவின் பின் சென்றார். 'என்றோ ஒரு நாள் ஊழியத்தில் சோர்வு ஏற்படுமாயின் திரும்பி வந்து ஏர்மாடுகளை வைத்துப் பிழைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் ஒருபோதும் தனக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே அப்படி செய்தார்.

Tuesday, June 25, 2013

இயேசுவை அறிவிக்க போகிறேன்


அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து சீனா நோக்கி சென்று கொண்டிருந்தது அந்த கப்பல். மாலை வேளையில் கப்பலின் மேல் தட்டில் ஒரு கிறிஸ்தவ குருவானவரும், ஒரு வியாபாரியும் உரையாடி கொண்டிருந்தனர்.

வியாபாரி கேட்டார், 'சீனாவிற்கு என்ன விஷயமாக போகிறீர்கள்?' என்று. 'இயேசுவை அறிவிக்க போகிறேன்' என்றார் குருவானவர்.

ஒரு நிமிடம் அதிர்ந்து போன வியாபாரி, 'சீனாவுக்கு மிஷனெரிகள் செல்வது வீண். ஒரு முறை மர்பி என்ற குரு சென்றிருந்தார். ஒரு நாள் அவரை தூக்கிக் கொண்டு போய் அவரது கையின் மூன்று விரல்களை துண்டித்து விட்டனர். அவர் இப்போது அமெரிக்காவிலிருக்கிறார். இந்த விஷயமெல்லாம் உங்களுக்கு தெரிந்திருந்தால் சீனாவிற்கு போக துணிந்திருக்க மாட்டீர்கள்'எனறார்.

குரு அமைதியாக சிரித்துக் கொண்டார். பின்பு பல காரியங்களை பகிர்ந்து கொண்டனர். சற்று நேரத்தில் அவர்களுக்கு தேநீர் பரிமாறப்பட்டது.

தேநீரை வாங்கிய குருவின் கையை கண்ட வியாபாரி திகைத்துப் போனார், ஏனென்றால் அவரது கையில் மூன்று விரல்கள் இல்லை. ஆம், அன்று சீனாவுக்கு சென்ற மர்பி இவரே!

யாரை நான் அனுப்புவேன், யார் என் காரியமாய் போவான் என்ற கேள்வியை தேவன் தன்னிடம் கேட்பதாக உணரும் யாராலும் அமைதியாய் இருக்க முடியாது.

ஆகவே தான் பவுலின் வாழ்விலே காவல்களும், அடியும், உதையும், கல்லெறிதலும், சேதமும், மோசங்களும், சொந்த ஜனங்களால் வந்த உபத்திரவங்களும் பசியும், தாகமும் வந்த போதிலும் அவைகள் ஒன்றுமே அவரை ஊழியம் செய்வதிலிருந்து சோர்ந்த போக செய்யவே இல்லை.

'நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காக கட்டப்படுவதற்கு மாத்திரமல்ல, மரிக்கவும் ஆயத்தமாயிருக்கிறேன்' என்று சவாலிட்டார்.

விரல் போனால் என்ன? என்று மீண்டும் அம்மக்களை தேடிச் சென்ற மர்பி போதகரைப் போல, அப்போஸ்தலனாகிய பரிசுத்த பவுலைப் போல கிறிஸ்துவுக்காக ஆவியில் வைராக்கியம் கொண்டு ஊழியம் செய்யும் ஊழியர்கள் இந்நாட்களில் தேவனுக்கு தேவை

Thursday, June 20, 2013

மரணமே உன் கூர் எங்கே? வீர வாலிபனின் கடைசி வரிகள்

நேசம் மரணத்தைப்போல் வலிது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது; அதின் தழல் அக்கினித் தழலும் அதின் ஜுவாலை கடும் ஜுவாலையுமாயிருக்கிறது - (உன்னதப்பாட்டு 8:6).
.
புஷ்யோக் என்னும் ரஷ்ய வாலிபன் எப்போதும் புன்சிரிப்புடன் இருப்பான். அவனை காண்பவர்களை கவர்ந்திழுக்கும் உள்ளத்தை உடையவனாய் இருந்தான். மட்டுமல்ல, இனிமையாக பாடி வாத்திய கருவிகளை இசைப்பதில் அவனுக்கு இணை அவன்தான்.
.
அவனது பெற்றோர் அவனை இசைக்கல்லூரியில் சேர்த்தனர். சங்கீதத்தை முறைப்படி கற்றது மட்டுமல்ல, எல்லா இசைக் கருவிகளையும் திறமையாக மீட்டுவதிலும் பிரசித்திப் பெற்றவனாக இருந்தான். தன்னோடு சுட படிக்கும் மாணவன் மூலமாக கிறிஸ்து தம் ஜீவனை கல்வாரியில் எபபடி கொடுத்தார் என்பதை அறிந்தான். அவன் உள்ளம் கிறிஸ்துவுக்காக பொங்கியது. கிறிஸ்து தம் ஒரே ஜீவனை எனக்காக அர்ப்பணித்தாரென்றால் ஏன் என் திறமை தாலந்துகள் எல்லாவற்றையும் அவருக்காக அர்பணிக்கக்கூடாது என தீர்மானித்தான்.
.

அவன் பட்டம் பெறும் நாள் வந்தது. அவனது அருமையான பெற்றோர்கள் மகிழ்ச்சியோடு, ஒழுங்கு செய்யப்பட்ட பெரிய மண்டபத்தில் காத்துக் கொண்டிருந்தனர். அவனுடைய ஆசிரியர்கள் பெருமையோடு தம்தம் ஆசனங்களில் வந்து அமர்ந்தனர்.
..
ரஷ்யாவில் நாடோடிப்பாடலான 'பொன் வாத்தின் மதுரக்கீதம்' என்ற பாடலையே தன் பட்டம் பெறும் பாடலாக தெரிந்தெடுத்தான். தன் முழு

உள்ளத்தையும் அந்த பாடலில் இணைத்து, உருக்கமாக பாடிக் கொண்டே வந்தான். அந்தப் பாடலோடு கூட அப்படியே கல்வாரியின் கீதத்தையும் இணைத்து இயேசுவின் அன்பு, அவரது தியாகத்தையும், உருக்கமான குரலில் பாடி முடித்தான். கல்லைப் போலுள்ள உள்ளங்கள் மெழுகைப்போல உருகின. அவனது ஆசிரியர்கள் திகைத்தார்கள். அரசாங்க அதிகாரிகள் உறுமினார்கள். அவன் மெதுவாய் மேடையில் எழுந்து நின்று, உறுதியான குரலில், 'பாரமான சிலுவையை தம் தோள்களிலே தூக்கிக் கொண்டு எருசலேம் வீதி வழியாக இரத்த வியர்வையோடு நடந்து, எனக்காக ஜீவனைக் கொடுதுது, தன் ஜீவனைப் பார்க்கிலும் என்னை அதிகமாக நேசித்தவரை நான் எப்படி நேசியாமல் இருக்க முடியும்?' என்று கூறினான்.
. 
அப்பொழுதே அவன் கைகளில் விலங்குகள் மாட்டப்பட்டன. அவன் பெற்றோர் கலங்கி தவித்தனர். அவன் அவர்கள் பக்கமாக திரும்பினான், 'அம்மா,கல்வாரி கீதத்தோடு என் வாழ்க்கையின் கீதத்தையும் இணைத்துக் கொண்டதில் நான் பெருமைப்படுகிறேன்' என்றான். மரண தண்டனைக்காகஅவன் நடந்து சென்றான். அவன் நடையில் ஒரு கெம்பீரம் இருந்தது.

Thursday, May 2, 2013

டேவிட் பிரனாய்ட் (1718 -1747)

ஒருதங்கள் கிராமத்தின் மத்தியில் ஒரு வெள்ளை மனிதர் வந்து தங்கி, கூடாரம் போட்டிருக்கிறார் என்று அந்த கிராமத்தில் வாழும் செவ்விந்தியர்களுக்கு தெரிய வந்தது. அவரை எப்படியாவது கொன்று விட வேண்டும் என்ற எண்ணத்தோடு, ஒரு கூட்ட மக்கள் அவர் இருந்த கூடாரத்திற்கு வந்தார்கள். அந்த மனிதர் ஒருவேளை துப்பாக்கியோ மற்ற ஆயுதங்களோ வைத்திருக்கலாம் என்று எண்ணி, சத்தமில்லாமல் மெதுவாக அவர் இருந்த கூடாரத்தை சுற்றி வளைத்தார்கள்.
அவர்கள் எட்டிப்பார்த்தபோது, அந்த வெள்ளை மனிதர் முழங்கால் படியிட்டு,
கண்கள் மூடியிருப்பதையும், தலை உயர்த்தப்பட்டு, ஏதோ முணுமுணுத்துக்
கொண்டிருப்பதையும் கண்டார்கள். என்ன செய்கிறார் என்று நினைத்துக்
கொண்டிருந்தபோதே, அவருக்கு முன்னால், ஒரு நல்ல பாம்பு படமெடுத்து
ஆடிக்கொண்டிருப்பதை கண்டார்கள். அந்த பாம்பு அவரை கொத்தி,
இப்பொழுது அவர் மரித்து விழுவார் என்று அவர்கள் பார்த்துக்
கொண்டிருந்தபோதே, அந்த பாம்பு கொஞ்ச நோரம் அப்படியே
இருந்துவிட்டு, பின் தான் வந்தவழியே போய் விட்டது. நடந்த ஒன்றும் அந்த
மனிதருக்கு தெரியாது. ஆனால் அதை கவனித்து கொண்டிருந்த
செவ்விந்தியர்கள் ஒன்றும் பேசாமல் தங்கள் இருப்பிடத்திற்கு திரும்பி போய்
விட்டார்கள்.
அடுத்த நாள் வெள்ளை மனிதராகிய டேவிட் பிரனாய்ட் செவ்விந்தியர்களை

பேசும்படி அணுகியபோது, அவர் மேல் அவர்களுக்கு இருந்த கோபம்
தணிந்திருந்தது. முற்றும், பாம்பு சம்பவத்தை அவர்கள் தங்கள் கிராமத்தில்
அனைவருக்கும் அதற்குள் தெரிவித்திருந்தனர். அவர்கள் இந்த வெள்ளை
மனிதனுக்குள் இருக்கும் ஆவி மிகவும் வல்லமையுள்ளது என்றும் பேசிக்
கொண்டார்கள்.
.

.
1743 ஆம் ஆண்டு, டேவிட் பிரெனாய்ட் அவர்கள் தனது 25ஆவது வயதில்

ஸ்காட்லாந்து மிஷனெரி சங்கத்தால் அமெரிக்காவிற்கு மிஷனெரியாக
அனுப்பப்பட்டார். அவர் டிபி வியாதியால் தாக்கப்பட்டிருந்ததால், அடிக்கடி
இரத்த வாந்தி எடுத்து, மிகவும் பெலவீனமாயிருந்த போதிலும், அவர்
தனக்குள்ளிருந்த வல்லமையான பரிசுத்த ஆவியானவரால், அநேக
செவ்விந்தியர்களை கர்த்தருடைய அன்பிற்குள் கொண்டு வந்த பாத்திரமாக
செயல்பட்டார்./
அவருடைய ஊழியம் நான்கு வருடங்களே ஆனபோதிலும், அவருடைய
ஜெப வாழ்க்கையினாலும், தன்னுடைய தியாகமான வாழ்வினாலும்,
கர்த்தருடைய ஆவியானவர் அவருக்குள் இருந்து செயல்பட்டதினாலும்,
அநேகரை கர்த்தருடைய இரட்சிப்புக்குள் வழிநடத்த முடிந்தது. அவர் தனது
29ஆவது வயதில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தாலும், அவருடைய
ஊழியத்தைக் குறித்து இன்றும் அநேகர் சொல்லும்படியாக அவருடைய
வாழ்க்கை அமைந்திருந்தது.

Thursday, April 11, 2013

இராபர்ட் மோரிசன் - மிஷனெரி வரலாறு

இராபர்ட் மோரிசன் 1782-1834

பத்தொன்பதாவது நூற்றாண்டில் முதல் பாதியிலே சீனா தேசத்திற்கு மிஷனெரியாகச் சென்றவர் இராபர்ட் மோரிசன். கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றின வேதத்தின் காலேப் இந்த மலைநாட்டை எனக்குத் தாரும் என்று ஜெபித்ததுபோல உலகிலே அதிக கடினமான பணித்தளத்தை எனக்குத் தாரும். அங்கு உமக்கென்று ஊழியம் செய்வேன் என்ற மோரிசனின் ஜெபத்திற்கேற்ப, சுவிசேஷம் வெளிப்படையாகச் சொல்ல அதிகத் தடை இருந்த சீனா தேசத்தில், 25 வருடம் பணிபுரிந்து, பல கடின பாதைகளைக் கடந்து, சீன மொழியில் வேதத்தை முதலாவது மொழி பெயர்த்து அழியாத கிறிஸ்துவின் வார்த்தையை சீன மக்களின் கரத்தில் தந்தவர் மோரிசன்.

பிறப்பும் வளர்ப்பும்

1782-ம் ஆண்டு, இங்கிலாந்து தேசத்தில் பிறந்த மோரிசன் எட்டுப் பிள்ளைகளில் கடைசி மகனாவார். தனது தந்தையின் காலணிகள் செய்வதற்கான மர அச்சுகளை உற்பத்தி செய்யும் கம்பெனியில், சிறு வயதிலிருந்தே உதவி வந்தார் மோரிசன். தேவ பக்தியுள்ள அவரது தந்தையின் மூலம் தனது ஓய்வு நேரத்தை வேதத்தைக் கற்பதில் செலவிட்டார். விளையாடுவதற்கு சிறிது நேரமே ஒதுக்கிவிட்டு, தனது சபைப் போதகரிடம் கிறிஸ்துவைக் குறித்தும் வேதப்பாடங்களை ஆராய்ந்து அறியவும் நேரம் செலவழித்தார்.

அழைப்பு

தனது 15-ம் வயதில், உண்மையான மனமாற்றம் அடைந்து கிறிஸ்துவுக்குள் அனுதினமும் வளர ஆரம்பித்தார். சில மிஷனெரி ஸ்தாபனங்களின் மாத பத்திரிக்கைகளை வாங்கி வாசிக்கும்போது, இயேசுவைப் பற்றி அறியப்படாத வெளிநாட்டவர்களுக்கு சுவிசேஷம் சொல்ல வேண்டும் என்ற வாஞ்சை அவருக்கு ஏற்பட்டது. தானும் ஒரு மிஷனெரியாகச் செல்லவேண்டும் என்ற பாரம் அனுதினமும் அவரை உந்தித்தள்ள, தனது தரிசனத்தை குடும்பத்தினரிடம் பகிர்ந்து கொண்டார். ஆனால் அவரது தாயாரோ தான் உயிருடன் இருக்கும் வரை வெளிநாட்டிற்கு எங்கும் மோரிசன் போகக்கூடாது என்பதில் அதிக உறுதியுடன் இருந்தார். தேவனின் வேளைக்காக காத்துக்கொண்டு, ஜெபித்துக் கொண்டே இருந்தார் மோரிசன். அவரது 20-வது வயதில் அவரது தாய் அதிக சுகவீனப்பட்டு மரிக்கும் தருவாயில் இருந்ததால், தாயை அன்புடன் கவனித்து, அவரது கடைசி நாட்களில் கூட இருக்க கிடைத்த வாய்ப்பை நினைத்து தேவனைத் துதித்தார். 1802-ம் ஆண்டு அவரது தாயார் மரித்துப் போனார்.

தாயின் மரணத்திற்குப் பிறகு, இங்கிலாந்து சென்று, 2 வருடம் மிஷனெரிப் பயிற்சி பெற்றார். லண்டன் மிஷனெரி சங்கத்திற்கு விண்ணப்பித்தபோது, இவரை தங்களது மிஷனெரியாக ஏற்றுக்கொண்டனர். அதிக சந்தோஷமடைந்த மோரிசன், தனது குடும்பத்தினருக்கு இதை அறிவித்தபோது, ங்கிலாந்து தேசத்திலே ஊழியத்திற்கான அதிக வாய்ப்புகள் இருக்கும்போது, அந்நிய தேசத்தில்போய் உன் வாலிப வாழ்வை ஏன் வீணாக்கவேண்டும்? என்று சோர்வடையச் செய்தனர். எனினும், தனது ஊழிய அழைப்பில் மோரிசன் உறுதியாய் நின்றார். சீன தேசத்தைக் குறித்து பாரத்தைப் பெற்ற மோரிசன் அதற்காக ஜெபித்துக் கொண்டிருந்தபோது, லண்டன் பட்டணத்திலே சீன மொழியைக் கற்க ஒரு வாய்ப்பை ஆண்டவர் தந்தார். லண்டன் மிஷனெரி ஸ்தாபனமும் இவருடன் சீனா செல்ல, ஏற்ற சக ஊழியர் கிடைக்கும் வரை காத்திருக்க சொன்னது. 1807-ம் ஆண்டு வரை சரியான சக ஊழியர் கிடைக்காது போனதால் இவரைத் தனியாகவே சீன தேசத்திற்கு அனுப்ப தீர்மானம் எடுக்கப்பட்டது.

கிழக்கிந்தியக் கம்பெனி இவரை கப்பலில் பயணம் செய்யவும், சீன தேசத்தில் குடியேறவும் அனுமதி தர மறுத்தது. எனவே முதலில் அமெரிக்க தேசம் சென்று அங்குள்ள மாநிலச் செயலாளரான ஜேம்ஸ் மாடிசனிடம் ஒரு அறிமுகக் கடிதம் பெற்றுக்கொண்டு, அமெரிக்கக் கப்பலில் சீன தேசத்திற்கு புறப்பட்டார்.

ஏழு மாதப் பிரயாணத்திற்குப் பிறகு 1807-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சீனாவிலுள்ள கேன்டன் என்ற பகுதிக்கு வந்து சேர்ந்தார். கேன்டனில் இருந்த அமெரிக்கக் கவுன்சில் இவரை ஏற்றுக்கொண்டது. ஆனால் கிழக்கிந்தியக் கம்பெனியர் இவரை சந்தேகக்கொண்டு கண்காணிக்க ஆரம்பித்தனர். ஏனெனில் அந்நாட்களில் கிழக்கிந்தியக் கம்பெனியர் சுவிசேஷம் சொல்வதற்கு முற்றிலும் தடைசெய்து, வியாபாரத்தில் மட்டும் கவனத்தை செலுத்தினர். எனவே மோரிசனுக்கு சீனா மொழியைக் கற்பது கூட அதிக ரகசியமாகக் செய்யப்பட வேண்டியதாயிற்று. சக ஊழியர் கூட இல்லாதது, அதிக தனிமையை உணரவைத்தது. வீட்டிலிருந்தும் கடிதத் தொடர்பே இல்லாதது, அவரை அதிகம் சோர்வுறச் செய்தது. தனது நண்பனுக்கு அவர் எழுதிய கடிதத்தில் நேற்று உன்னிடமிருந்து நான் பெற்ற இரண்டாவது கடிதம். ஆனால் இதுவரை நான் 200 கடிதங்கள் எழுதியுள்ளேன். என் கடிதங்களைப் பெற்ற அனைவரும் அதிக வேலைப் பளுவினால் எனக்குக் கடிதம் எழுத இயலவில்லை போலும் என்கிறார்.

சுவிசேஷத்தை வெளிப்படையாகப் பிரசங்கிக்கக்கூடாது என்ற தடை கேன்டனில் இருந்த போதும், மோரிசன் தனது நேரத்தை வீணடிக்கவில்லை. இரண்டு ரோமன் கத்தோலிக்க நண்பர்களைக் கண்டுபிடித்து அவர்களிடம் சீன மொழியைக் கற்றுக்கொள்ளச் சென்றபோது. அவர்கள் ஒப்புதல் தெரிவித்தபோதும், உமக்கு எங்கள் மொழியைச் சொல்லி தருவதால் எங்கள் உயிருக்கு ஆபத்து உண்டு. அதிகாரிகள் எங்களைக் கைதுசெய்து கொடுமைக்கு ஆளாக்குவதற்கு முன், நாங்களே எங்களை மாய்த்துக்கொள்ள எப்போதும் விஷம் வைத்து உள்ளோம் என்றனர். இவர்களிடம் ஜெபத்துடன் மொழியை நன்கு கற்றுக் கொண்டு முதலில் சீன அகராதியை உண்டு பண்ணி ரகசியமாக வேதத்தையும் மொழி பெயர்க்கலானார்.

கேன்டன் வந்து 18 மாதத்திலே சீன மொழியில் அகராதியை ஆயத்தம்பண்ணி, தந்த மோரிசனை கிழக்கிந்திய கம்பெனியார் பாராட்டி அவருக்கு மொழிபெயர்ப்பாளர் என்ற பதவியைத் தந்து மாத வருமானமும் தர முன்வந்தனர்.

குடும்ப வாழ்வு

சீன தேசத்தில் வாழ்ந்து வந்த இங்கிலாந்து மருத்துவரின் மகளான மேரி மார்டேனை திருமணம் புரிந்தார். சீனா தட்பவெப்ப சூழ்நிலையில் மேரி அதிக சுகவீனமடைந்து, 1815-ம் ஆண்டு, தனது இரண்டு சிறு குழந்தைகளுடன் இங்கிலாந்து போக நேர்ந்தது. அதிகமான வேதனையுடன் அவர்களுக்கு பிரியா விடை கொடுத்தனுப்பிய மோரிசன், தன்னுடைய முழு நேரத்தையும் ஊழியத்தில் செலவிட்டார். ஆறு வருடப் பிரிவுக்குப் பிறகு மேரியும் பிள்ளைகளும் 1821-ம் ஆண்டு சீனா வந்தபோதிலும் சிறிது நாட்களிலே மேரி சுகவீனமடைந்து மரித்துப்போனார். 9 வயது மகள் ரெபேக்காவும், ஏழு வயது மகன் ஜாணும் மறுபடியும் இங்கிலாந்து தேசத்திற்குக் கல்விக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். குடும்ப வாழ்வில் பல கஷ்டங்களையும், மனவேதனையையும் அனுபவித்த மோரிசன், பிள்ளைகள் போனபிறகு, தனிமையில் வேதத்தை மொழிபெயர்ப்பதில் முழு கவனத்தையும் செலுத்தினார்.

சீன மொழியில் அவரது அறிவுத்திறன் வெகுவாக விருத்தியடைந்தது. சுவிசேஷத்திற்கு சீனாவில் முதல் மிஷனெரியாக இவர் கருதப்பட்டாலும் பகிரங்கமாக சுவிசேஷம் சொல்ல முடியவில்லை. ஊழியத்தின் முதல் விசுவாசி பட்டம், ஊழியம் ஆரம்பிக்கப்பட்டு, ஏழாவது வருடமே கிடைத்தது. மனித நடமாட்டம் இல்லாத இடத்தில், சீன அதிகாரிகள், பிரிட்டிஷ் அதிகாரிகளின் கவனத்தில் இல்லாத பகுதியில் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது. சீனாவில் வாழ இடம் கிடைத்ததே கிழ்க்கிந்தியக் கம்பெனியரின் ஆதரவால்தான். கிழக்கிந்தியக் கம்பெனியர் இவரது சுவிசேஷப்பணிக்கு அதிகத் தடையாக இருந்தனர்.

1815-ம் ஆண்டு, சீன மொழியில் புதிய ஏற்பாட்டை, மொழிபெயர்த்து, வெளியிட்டபோது, கம்பெனியர் மோரிசனை வேலை நீக்கம் செய்தனர். அதிகக் கவலையுற்ற மோரிசன் தேவனைப்பற்றிக் கொண்டு ஜெபித்தபோது, அவரது வேலை நீக்க உத்தரவு அமலாக்கப்படாமல், ரத்து செய்யப்பட்டது. மோரிசனின் சீனமொழி ஞானம் கம்பெனியருக்கு அவசியமாக இருந்தது.

கிழக்கிந்தியக் கம்பெனியரின் அச்சுறுத்தலும், சீனாவிலிருந்த ஒருசில கிறிஸ்தவர்களின் எதிர்ப்பும், இவரது ஊழியத்திற்கு அதிகத் தடையாக இருந்தது. எனினும் 1824-ம் ஆண்டு வேதத்தை முழுவதும் சீன மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இங்கிலாந்து தேசத்திற்கு விடுமுறைக்குச் சென்று, இரண்டு வருடம் அங்குள்ள பல பகுதிகளில் சீன தேசத்தின் தேவையை பகிர்ந்துகொண்டு, அதன் மூலம் மிஷனரியாக வர முன் வந்தவர்களுக்கு சீன மொழியை கற்றுக்கொடுத்தார். சீனப் பெண்கள் மத்தியில் கிறிஸ்து அறிவிக்கப்படவேண்டிய அவசியத்தை எடுத்துக் கூறி தனது வீட்டிலே ஊழிய வாஞ்சையுள்ள பெண்களுக்குச் சிறப்பு வகுப்புகளை நடத்தினார். அந்த வகுப்பில் பயின்ற அநேகர் பின் சீனாவிற்கு மிஷனெரியாகச் சென்றனர். அவர்களில் ஒருவர்தான் சீனா சென்ற மிஷனெரி மேரி அலடர்சே.

1826-ம் ஆண்டு மறுபடியும் சீனா வந்து, கேன்டன் பகுதியில் தனது பணியைச் செய்தார். சில கிறிஸ்தவ இலக்கியங்களையும் சீன மொழியில் மொழி பெயர்த்தார். இங்கிலாந்து, சீனா தேசத்திற்கு இடையேயுள்ள வியாபாரத் தொடர்புகளுக்கு மத்தியஸ்தராகப் பணி புரிந்தார். கம்பெனி வேலை, ஊழியம் என்று அதிக வேலைப் பளுவினால், பெலன் இழந்து, சுகவீனப்பட்டு 1834-ம் ஆண்டு மரித்துப்போனார். இவரது மரணத்திற்குப்பிறகு சில நாட்களிலே கிழக்கிந்திய கம்பெனியாரும், சின்ன அரசியல் நிலைமையினால் சீனாவைவிட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. சீனாவில் 25 வருடம் கடினமாகப் பணி செய்தும், சிலரை மட்டுமே கிறிஸ்துவுக்குள் வழிநடத்த முடிந்தபோதிலும், வேதத்தைச் சீன மொழியில் மொழிபெயர்த்து அழியாப்பணி செய்தார்.

கடினமான பணித்தளத்திலும் ஆண்டவருக்காகச் சாதனை புரிய நம்மில் எத்தனை பேர் ஆயத்தம்.

எலிசபெத் ஃப்ரை - மிஷனெரி வரலாறு

எலிசபெத் ஃப்ரை (1780-1845)
சிறைக் கைதிகளின் மிஷனெரி (1789-1845)
குற்றம் செய்த‌தால் பிடிக்கப்ப‌ட்டு, தண்டனை கிடைத்ததால் அடைக்கப்ப‌ட்டு, சிறைச் சாலையில் காலங்களைக் கழிப்பவர்களை சமூகம் பொருட் படுத்துவதில்லை. ஆனால் சர்வவல்ல தேவனாகிய கர்த்தர் அவர்களை மறப்பதில்லை. இன்று சிறை ஊழியம் பல நாடுகளிலும், பல சபைகளிலும் தொடர்ந்து நடத்தப்ப்ட்டு வரும் உன்னத ஊழியம். அவைகள் எல்லாவற்றுக்கும் முன்னோடியாய்த் திகழ்வது எலிசபெத் ஃப்ரை ஆரம்பித்த ஊழியமே.

இங்கிலாந்து நாட்டில் மிகவும் செல்வாக்குள்ள குடும்பத்தில் பிறந்த எலிசபெத் வாலிபப் பருவத்தில் இயேசுவை ஏற்றுக் கொண்டார். நார்விக் பட்டணத்தில் தன்னுடைய ஊழியத்தைத் துவக்கினார். ஆரம்பத்தில் நார்விக் நகரின் ஏழை எளியவர்களைச் சந்தித்து அவர்களுக்கு வேதாகமத்தைக் கற்றுக் கொடுப்பதும், ஏழைக் குழந்தைகளுக்கு ஞாயிறு பாட சாலை நடத்துவதும் அவருடைய ஊழியமாக இருந்தது. “குவேக்கர்ஸ்” என்னும் சபைப்பிரிவைச் சேர்ந்தவர் இவர்.

திருமணமான பின்பு எலிசபெத் ஃப்ரை எஸ்ஸெக்ஸ் என்னும் நகரில் ஊழியத்தைத் தொடர்ந்தார். சுகவீனர்களைப் பராமரிக்கவும். சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவும் துவங்கினார். ஆனால் அந்த ஊழியத்தில் திடீரென ஒரு திருப்பம் ஏற்பட்டது.

19-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் நியூகேட் என்று அழைக்கப்ப்டும் சிறைச்சாலையில் சீர்கெட்ட நிலைமைகள் இருப்பதாக அறிந்த எலிசபெத் உடனே செயல்பட ஆரம்பித்தார். நூற்றுக்கும் மேற்பட்ட பெண் கைதிகள் மிகச்சிறிய அறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். எவ்வித சுகாதாரமும் இல்லாமல் அழுக்கிலும், பயங்கரக் குளிரிலும் அவர்கள் வாடிக் கொண்டிருப்பதைக் கண்டவுடன், எலிசபெத் நகரத்தின் மேலதிகாரிகளைத் தொடர்பு கொண்டார். அதுவரை கைதிகளைப் பற்றிய அக்கறை யாருக்குமே இல்லை. நாளடைவில் எலிசபெத்தின் கோரிக்கைகள் கேட்கப்பட்டது. சிறைச்சாலையின் நிலைமையில் மாறுதல்கள் ஏற்படத் தொடங்கின.

ஒவ்வொரு நாள் காலையிலும், மாலையிலும் குறித்த நேரத்தில் ஜெபமும், வேத வாசிப்பும் நடத்தப்பட்டது. தையற் கல்வியும் கற்றுக் கொடுக்கப்பட்ட‌து. இதுவரை வாழ்வை விரக்தியுடன் கழித்த கைதிகள் தையற் தொழிலில் ஆர்வமுடன் ஈடுபட்டனர். அதில் கிடைத்த வருமானம் அவர்களை நேர்மையுடனும், சுய மரியாதையுடனும் நடக்க உதவியது.

எலிசபெத் ஃப்ரை செய்த மற்றுமொரு முக்கிய சீர்திருத்தம் உண்டு. அந்த நாட்களில் லண்டன் நகரிலிருந்து கைதிகளைக் கப்பலில் ஏற்றி வெகு தூரத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா நாட்டிலுள்ள சிறைகளுக்குக் கொண்டு போய் விடுவது வழக்கம். அப்படிக் கொண்டு போகும் போது பெண் கைதிகளை அதிகாரிகள் மிகவும் ஈனமாக நடத்தினார்கள். நீண்ட கடல் யாத்திரையின்போது கூட கைதிகளின் விலங்குகளைக் கழற்றவில்லை. நோயுள்ளோருக்கு எந்தவித மருத்துவ சிகிட்சைகளையும் அளிக்கவில்லை. ஆஸ்திரேலியாவை அடைந்த பின்பும் கைதிகள் அடிமைகளாகவே வாழ்ந்தனர்.

இவைகளை அறிந்த எலிசபெத் ஃப்ரை அரசாங்க அதிகாரிகளிடம் முறையிட ஆரம்பித்தார். அவருடைய விடாமுயற்சியினால், மேலே கூறப்பட்ட கொடுமைகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தடுத்து நிறுத்தப்பட்டன.

நியூகேட்டில் ஆரம்பித்த சிறை சீர்திருத்தங்கள் விரைவில் நாட்டிலுள்ள மற்ற சிறைச்சாலைகளிலும் வலியுறுத்தப்பட்டது.

எலிசபெத் ஃப்ரையின் கனிந்த இதயத்தைக் கைதிகள் கண்கூடாகக் கண்டனர். ஒவ்வொரு தடவையும் கைதிக் கப்பல்கள் இங்கிலாந்திலிருந்து புறப்படும்போது, எலிசபெத் அங்கு சென்று எல்லாருக்கும் ஆளுக்கு ஒரு வேதாகமமும், கம்பளி உடைகள் பின்னுவதற்கு வேண்டிய நூல்களையும், ஊசிகளையும் கொடுத்து அன்புடன் வழியனுப்பிவிட்டு வருவார். இப்படி ஒன்றிரண்டு தடவைகள் அல்ல, 25 வருடங்களாக ஊழியம் செய்தார்.

பெண்கள் அதிகமாக வெளியே செல்வதை சமுதாயம் விரும்பாத காலக் கட்டத்தில் எலிசபெத் ஃப்ரையைத் துணிச்சலுடன் செயல்பட வைத்தது, கர்த்தர் மீது அவர் வைத்த அளவற்ற அன்பும், பயனுள்ள சேவையைச் செய்ய வேண்டும் என்ற உறுதியும் தான். அவரை அவ்வாறான ஊழியத்திற்கு அழைப்பித்தது.

கட்டுண்டவர்களை விடுதலையாக்க வந்த கர்த்தராகிய இயேசுவை காவலில் அடைக்கப்பட்டவர்களுக்கு நாம் அறிவிக்கும்போது, ‘காவலில் இருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள்’ என்று சொல்லி மகிழுவார்.
சிறை ஊழியங்களுக்காக ஜெபிப்போம்!
அகில உலகுக்கு எலிசபெத் ஃப்ரை ஒரு சிறை சீர்திருத்தக்காரர் என்று மட்டுமே தோன்றினாலும் கிறிஸ்தவ வட்டாரத்தில் அவர் சிறைக் கைதிகளின் மிஷனெரி என்றே கருதப்படுகிறார்

தமிழ் மறுமலர்ச்சியில் ராபர்ட் கால்டுவெல்

உலக வரலாற்றை மாற்றியமைத்ததில் நூல்கள் பெரும்பங்கு வகிக்கின்றன। காரல்மார்க்சின் மூலதனம் எனும் நூல் அவ்வகையில் அனைவராலும் போற்றப்படும் நூலாக உள்ளது. அதுபோலத் தமிழக வரலாற்றில் - தமிழ் வரலாற்றில் மிகப்பெரும் மறுமலர்ச்சியை உண்டாக்கிய நூல் எனில் அது இராபர்ட் கால்டுவெலின் 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' எனும் நூலாகும். அந்த நூலையும் அதன் ஆசிரியரான கால்டுவெல்லையும் மதிப்பதற்குக் காரணம் தமிழர்களின் உள்ளத்திலும், உலக அளவில் தமிழ்பற்றி ஆராய்ந்த அறிஞர்களின் உள்ளத்திலும் புதிய வெளிச்சத்தை அந்நூல் பாய்ச்சியமையே ஆகும்.


வடமொழியைத் 'தேவ பாஷை' என உயர்த்தியும் தமிழை 'நீச்சபாஷை' எனத் தாழ்த்தியும், தமிழ் இலக்கியங்கள் யாவும் வடமொழி வழிவந்தவை என நேராகவும் உரைகளின் வழியாகவும் வடமொழிச் சார்பாளர்கள் பதிவு செய்தனர். இக்காலகட்டத்தில் தமிழர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டி மொழித்துறையிலும், அரசியல் துறையிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய நூல் கால்டுவெலின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (1856, 1875 ) எனும் நூல் ஆகும்.

தமிழ்மொழி மிகச்சிறந்த செவ்வியல்மொழி எனவும் தமிழ்ச்சொற்கள் செம்மொழிகளான கிரேக்கம், இலத்தீனில் இடம்பெற்றுள்ளன எனவும் தமிழ் மொழியிலிருந்து பிறந்தவையே தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு மொழிகள் எனவும் இவையாவும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவை எனவும் திராவிட மொழிகளைத் திருந்திய மொழிகள் திருந்தாத மொழிகள் என இருவகைப்படுத்தியும் தம் ஆய்வு முடிவுகளைக் கால்டுவெல் வெளிப்படுத்தியவர். தமிழ் வடமொழியின் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல் உடையது என அழுத்தம் திருத்தமாகச் சான்று காட்டி நிறுவியவர். இதுநாள் வரை தமிழ்ப்பகைவரால் தமிழ் மீது பூசி மெழுகியிருந்த அழுக்குகளைத் துடைத்துப் பளிச்செனத் தமிழின் பெருமையை ஒளி பெறச்செய்ததால் கால்டுவெல் பெருமகனாரைத் தமிழ்உலகம் என்றும் போற்றக் கடமைப்பட்டுள்ளது. கால்டுவெல்லின் வருகை கிறித்தவ மதப்பரப்புப் பணியை அடிப்படையாகக் கொண்டது. எனினும் கால்டுவெல் தமிழகத்தில் ஏறத்தாழ 53 ஆண்டுகள் வாழ்ந்து தமிழ்மொழி, வரலாறு, சமூக முன்னேற்றம், சமய வளர்ச்சிக்குப் பாடுபட்டதால் அவரின் வரலாறு அனைவராலும் அறியத்தகுந்த வரலாறாக அமைந்துள்ளது.

கால்டுவெல் அவர்கள் அயர்லாந்து நாட்டில் உள்ள 'கிளாடி' எனும் ஆற்றின்கரையில் அமைந்த சிற்றூரில் பிறந்தவர்(1814). இளமையில் அறிவார்வம் கொண்ட தம் மகனை அழைத்துக் கொண்டு பெற்றோர் தம் தாய்நாடான ஸ்காட்லாந்துக்குச் சென்று 'கிளாஸ்கோ' நகரில் வாழ்ந்தனர். 16 ஆண்டுக்குள் ஆங்கில மொழியில் அமைந்த பல இலக்கியங்களைக் கால்டுவெல் கற்றுத் தேர்ந்தார். தம் மகனைக் கவின்கலைக் கல்லூரியில் பெற்றோர் சேர்த்தனர். ஓவியக்கலையைக் கால்டுவெல் கற்றுத்தேர்ந்தாலும் அதனை வாழ்க்கைத் தொழிலாக்கிக் கொள்ளவில்லை. கால்டுவெல் தம் இருபதாம் அகவையில் இறைப்பணி செய்வதற்காக இலண்டன் நகரில் அமைந்த சமயத்தொண்டர் சங்கத்தில் சேர்ந்தார். அச்சங்கத்தின் சார்பாகக் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் மாணவராகச் சேர்ந்து ஐரோப்பிய மொழிகளில் அமைந்த நூல்களையும் சமய நூல்களையும் கற்றார். இதன் பயனாக இரண்டு ஆண்டுகளில் இளங்கலைப்பட்டம் பெற்றார். அவ்வாறு படிக்கும்போது கிரேக்கமொழியைப் பயிற்றுவித்த பேராசிரியர் டேனியல் ஸ்டான்போர்ட் அச்செம்மொழியின் பெருமையை மாணவர்களுக்கு நிறைவடையும்படி பயிற்றுவித்தார். கால்டுவெல் பெருமகனாருக்கு மொழியியலில் ஆர்வம் உண்டாக்கியது அப்பேராசிரியரின் வகுப்புரைகளே ஆகும்.

இலண்டன் சமயப்பரப்புக் கழகத்தின் சார்பாகச் சமயப் பணிக்கு என 1838ல் 'அன்னமேரி' என்னும் கப்பலில் ஏறி இந்தியாவுக்குப் பயணம் செய்தார். கடலில் பயணம் செய்தபோது இவர் ஏறிவந்த கப்பல் மீது பிரெஞ்சு கப்பல் ஒன்று மோதிச் சிதைந்தது. பலர் மடிந்தனர். சிலர் உயிர் பிழைத்தனர். பழுதுற்ற கலத்தைப் 'பிளிமத்' என்னும் துறைமுகத்தில் செப்பனிட்டனர். தென்னாப்பிரிக்கா வழியாகக் கப்பல் வரவேண்டி யிருந்ததால் நான்கு மாதம் பயணம் செய்து சென்னைக்கு வந்தார். அவ்வாறு வரும்போது சி.பி. பிரெளன் என்னும் குடிமைப்பணி அதிகாரியுடன் நட்புக்கொண்டார். அவர் முன்பே ஆந்திராவில் பணி புரிந்ததால் தெலுங்கு, வடமொழி அறிந்து இருந்தார். அவர் வழியாகக் கால்டுவெல் அம்மொழிகளைக் கற்றார். கடலில் பயணம் செய்தபோது கால்டுவெல்லுக்கு முன்பு இருந்த இருமல் நோய் நீங்கியது.

சென்னைக்கு வந்ததும் 'துருவர்' (Mr. Drew) எனும் தமிழ்கற்ற அறிஞரைக் கண்டு மகிழ்ந்தார். வின்சுலோ, போப், பவர், ஆண்டர்சன் முதலானவர்கள் பின்னாளில் நண்பர்களாயினர்.சென்னை மாநகரில் மூன்று ஆண்டுகள் தங்கிய கால்டுவெல் ஏறத்தாழ நானூறு கல்தொலைவில் உள்ள திருநெல்வேலிக்கு நடந்து செல்லத் தீர்மானித்தார். நடந்து செல்லும்போது மக்களின் வாழ்க்கைமுறை, பழக்கவழக்கம், மொழி முதலான வற்றை அறியலாம் என நினைத்தார். சிதம்பரத்தில் இருந்த நடராசர் கோயிலைக் கண்டு மகிழ்ந்தார். மயிலாடுதுறை வழியாகச் சென்று தரங்கம்பாடியில் சில நாள் தங்கினார். டேனிஷ் மி­சன் செய்யும் பணிகளை அறிந்தார். பின்பு குடந்தை வழியாகத் தஞ்சாவூர் சென்றார். பெரியகோயிலையும் மாராட்டிய மன்னர் அரண்மனையையும் கண்டு மகிழ்ந்தார். அங்கு வாழ்ந்த வேதநாயகரைக் கண்டு உரையாடினார்.

திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை அழகையும் திருவரங்கச் சிறப்பையும் கண்டு மகிழ்ந்தார். பின்பு நீலமலை சென்றார். அங்கு ஸ்பென்சர் எனும் தந்தையாரைக் கண்டு அவரின் விருந்தினராக ஒரு மாதம் தங்கி இளைப்பாறினார். நீலமலையிலிருந்து இறங்கி, கோவை வழியாக மதுரை வந்தார். வரும் வழியில் மக்கள் அவரைப் பலவாறு இழித்தும், பழித்தும் பேசினர். ஒருநாள் நடந்து செல்லும்போது மழைவரத் தொடங்கியது. இரவுப் பொழுதில் தங்கிச்செல்ல நினைத்தார். சத்திரம், சாவடி உண்டா என வினவிய போது அரசின் சத்திரம் உள்ளது எனவும் அது ஆங்கிலேயர்க்கு இல்லை எனவும் கூறினர். மழையில் நனைந்து துன்பப்பட்ட கால்டுவெல்லைக் கண்டு மாட்டுத் தொழுவத்தில் தங்கும்படி சொன்னார்கள். சத்திரத்தில் இடம் கிடைக்காததாலும் மாட்டுத் தொழுவத்தில் தங்க மனம் விரும்பாததாலும் ஒரு வீட்டின் திண்ணையில் தங்கி இரவுப் பொழுதைக் கழித்தார்.

மதுரை வந்தடைந்த பின்பு திருமங்கலத்தில் சமயத்தொண்டு புரிந்த திரேசியர் (Tracy) அவர்களைக் கண்டு உரையாடினார். பின்பு நெல்லை வழியே பாளையங்கோட்டை சென்றடைந்தார் (நவம்பர் 1841). பின்பு நாசரேத்தில் (நவம்பர் 2 தங்கி இறைவழிபாடு நிகழ்த்தி ஒரு விரிவுரையும் செய்தார். பின்பு முதலூரில் ஞாயிற்றுக்கிழமை விரிவுரையை அன்று நிகழ்த்தினார். அருகில் இருந்த இடையன்குடியைப் பாதை தெரியாமல் நெடுந்தூரம் சுற்றி அடைந்தார். அந்த ஊரே அவர் பணிபுரியும் இடமாகவும், கடைசிக் காலத்தில் நிலைகொள்ளும் இடமாகவும் அமைந்தது...
இடையன்குடி என்பது பெரும்பாலும் பனைமரங்கள் நிறைந்த பகுதியாகும். கூரைவீடுகளே மிகுதி. கள்ளியும் முள்ளியும் நிறைந்த பகுதி. அங்குக் கால்டுவெல் குடியிருப்புகளையும் கோயிலையும் உருவாக்கினார். எழுதவும் படிக்கவும் மக்களுக்குக் கற்றுத் தந்தார். அப்பகுதியில் வாழ்ந்த நாடார் இன மக்களைக் கல்வியறிவு பெற்றவராக மாற்றினார். 1847ல் அங்கு ஆலயப்பணியைத் தொடங்கி 32 ஆண்டுகளுக்குப் பிறகு 1880-இல் அப்பணி நிறைவுற்றது. சென்னை மாநில ஆளுநராக இருந்த நேப்பியார் அவர்கள் கால்டுவெல்லின் திருப்பணிகளைக் காண விரும்பி இடையன்குடியில் ஒருவாரம் தங்கினார். 500 ரூபாய் அன்பளிப்பாக வழங்கியதையும் அறியமுடிகிறது.

இடையன்குடியில் மூன்று மாதம் இளவேனில் காலமாகவும் 9 மாதம் கடும் வெப்பம் நிறைந்த காலமாகவும் விளங்கும். இடையன்குடியில் வாழ்ந்தபோது வெப்பம் தாளாமல் கால்டுவெல் துன்பப்பட்டுள்ளார். அக்காலங்களில் தமிழ் இலக்கியங்களின் பக்கம் கால்டுவெல்லின் கவனம் திரும்பியது. திருக்குறள், சீவகசிந்தாமணி, நன்னூல் முதலிய நூல்களைக் கற்றார். உடல் வெப்பம் தணிக்க அருகே உள்ள கடற்கரையில் உவரி என்னும் காயல்பகுதிக்குச் சென்றார். உவரித்துறை பழம்பெருமை வாய்ந்ததை உணர்ந்தார். அங்கிருந்த இளஞ்சுனையில் வெயிற்காலத்தில் தங்கி வாழ்ந்தார். கோடைக் காலங்களில் திருக்குற்றாலம், அசம்புமலை, கொடைக்கானல் மலைகளில் தங்கியிருந்துள்ளார்.

கால்டுவெல் 'தமிழில் கிறித்தவ வழிபாட்டு நூல்' உருவாக்கும் குழுக்களில் இடம்பெற்று அப்பணியைச் சிறப்புடன் செய்துள்ளார். மேலும் கிறித்தவ மறைநூலை மொழிபெயர்க்கும் பன்னிருவர் குழுவில் இடம்பெற்றுத் திறம்படப் பணியாற்றியுள்ளார். கால்டுவெல் தமிழகத்தின் திருநெல்வேலி பற்றி, அயல்நாட்டவரின் குறிப்புகளைக் கொண்டு வரலாற்று நூல் எழுதியுள்ளார். பழைய ஈபுரு மொழியில் வழங்கும் துகி என்னும் சொல் தமிழின் தோகை என்னும் சொல்லின் திரிபு எனவும், அரிசி என்பது கிரேக்க மொழியில் அருசா என வழங்குவதையும் கால்டுவெல் குறிப்பிட்டுள்ளார்.

கொற்கைத் துறைமுகம் பற்றிய ஆய்வுகளையும் கால்டுவெல் செய்துள்ளார். கொற்கையின் அருகே இருந்த அக்கசாலை (பொற்காசு செய்யும் இடம்) என்ற ஊரின் சிறப்பு அறிந்து மகிழ்ந்தார். மேலும் கொற்கையின் அகழாய்வுப் பணியைத் தம் சொந்த முயற்சியில் செய்துள்ளார். ஆறடிக்குகீழ் மணற்பாறையும், அதன் பிறகு கடற்கரைக் குறுமணலும் கடல்சங்கும் சிப்பிகளும் மூழ்கிக் கிடந்ததை உலகிற்கு வெளிப்படுத்தினார். இன்றுள்ள கொற்கைக்கு அப்பால் 5 கல்லில் கடல் உள்வாங்கி உள்ளது என்று குறிப்பிட்டார். பழங்காயல் என்னும் ஊரையும் ஆய்வு செய்தார். இவ்வூரும் பண்டைய கடற்கரைத் துறைமுகமாக இருந்திருக்க வேண்டும் என உணர்ந்தார். மேலும் மகாவம்சம் முதலான நூல்களின் துணைகொண்டு ஈழத்தமிழக உறவுகளையும் கால்டுவெல் எழுதியுள்ளார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்திய மொழிகள் பற்றிய பலகட்டுரைகளை மேல்நாட்டு அறிஞர்கள் எழுதினர். அவ்வகையில் பழந்தமிழ்ச்சொற்களைப் பழங்கன்னடச் சொற்களோடும் பழைய தெலுங்குச் சொற்களோடும் கால்டுவெல் ஒப்புநோக்கிய போது அடிச்சொற்கள் ஒத்திருப்பதைக் கண்டார். ஏறத்தாழ 15 ஆண்டுகள் கடுமையாக உழைத்துத் தென்னிந்திய மொழிகளுக்கு இடையே உள்ள உறவுகளை ஒப்பிட்டுத் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் நூலைத் தந்தார். தென்னிந்திய மொழிக் குடும்பத்தில் 6 மொழிகள் திருந்திய மொழிகள் எனவும் 6 மொழிகள் திருந்தாத மொழிகள் எனவும் குறிப்பிட்டார். மேலும் வடசொற்களை அகற்றினாலும் தமிழ்மொழி வளம் குன்றாது தழைத்து இனிது வழங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.


கால்டுவெல்லின் பணிகளைக் கண்ட கிளாஸ்கோ பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. கால்டுவெல்லின் ஆய்வுகளில் மொழி ஆய்வு அனைவராலும் போற்றப்படுகிறது. அவர்தம் காலத்தில் தொல்காப்பியம் முதலான நூல்கள் பதிப்பிக்கப் படாததால் கால ஆய்வுகள் குறித்த இவர் செய்திகளில் பிழையுள்ளதை அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இராபர்ட் கால்டுவெல்லின் மொழி ஆராய்ச்சிப் பணிகளை மொழி ஞாயிறு பாவாணர் அவர்கள் தம் நூல்களில் வாய்ப்பு அமையும் இடங்களில்எல்லாம் நன்றியுடன் போற்றி மதித்துள்ளார்.


"திராவிடம் வடமொழிச் சாற்பற்றதென்றும், உலக முதன்மொழிக்கு மிக நெருங்கியதென்றும், வடசொல்லென மயங்கும் பலசொற்கள் தென்சொற்களேயயன்றும், வடமொழியில் பல தமிழ்ச்சொற்கள் கலந்துள்ளனவென்றும், முதன்முதல் எடுத்துக்காட்டி, மொழிநூற் சான்றுகளால் நிறுவியவர் கால்டுவெல் கண்காணியரே..." இவர் தமிழ்மொழியைச் சிறப்பாய் ஆராய்ந்தது போன்றே மலையாள மொழியைச் சிறப்பாயாராய்ந்தவர் டாக்டர் குண்டட் (Dr. Gundert) ஆவர். இவ்விருவர்க்கும் திராவிடவுலகம், விதப்பாய்த் தமிழுலகம் பட்டுள்ள கடன் மாரிக்குப் பட்டுள்ளதே யெனினும் பொருந்தும் "(ஒப்பியன் மொழிநூல், ப.84), எனவும் ...." தமிழ் என்பதன் திரிபே திராவிடம் என்பது புலனாம். ஆயினும் கால்டுவெலார் இவ்வெளிய முறையில் உண்மையைக் காணாமல், இயற்கைக்கு மாறாகத் தலைகீழாய்நோக்கி, திராவிடம் என்னுஞ் சொல்லே தமிழென்று திரிந்ததாக முடிவு செய்துவிட்டார்.(தமிழ்வரலாறு, ப.33) எனவும் 'கால்டுவெல் ஐயர் கடைப்பிடித்த கொடிவழி மொழிநூலையே கையாளல் வேண்டும்' (த.இ.வ. ப. 4 எனவும் பாவாணர் குறிப்பிடுவார்.


கால்டுவெல் அவர்கள் 18 மொழிகளைக் கற்றவர். பல்வேறு வரலாற்று நூல்களையும் இலக்கியங்களையும் கற்றவர். சமய அறிவு நிரம்பப்பெற்றவர். எனவே தம் அறிவு முழுமையும் பயன்படுத்தி மொழி நூலையும் வரலாற்று நூலையும் சமய நூலையும் உருவாக்கித் தமிழர் உள்ளங்களில் நீங்காத இடம் பெற்றவர். இவர் இயற்றிய திருநெல்வேலி சரித்திரம் என்னும் நூல் அக்காலத்தில் இருந்த போர்ச்சுகீசிய, டச்சு, பிரெஞ்சு, ஆங்கிலேயர்கள் தமிழ்நாட்டில் நிலைகொண்டு வாழ்வதற்குச் செய்த முயற்சிகளை யெல்லாம் மிகச்சரியாகப் பதிவு செய்துள்ளது. அக்காலத்தில் இருந்த படைத்தளபதிகள், சமயத் தொண்டர்கள் எழுதிய மடல்கள், நூல்கள், குறிப்புகள், வாய்மொழிச் செய்திகள், அகழாய்வுச் செய்திகள் இவற்றைத் துணைக்கொண்டு வரலாற்று நூலை எழுதியுள்ளார்.

கால்டுவெல் தம் 29ஆம் அகவையில் நாகர்கோவிலில் வாழ்ந்த மால்ட் என்பவரின் மகளான எலிசா (21 அகவை) என்னும் மங்கையை மணந்தார். எலிசா ஆங்கிலமும் தமிழும் நன்கறிந்தவர். இடையன்குடியில் பெண்கள் கல்விபெற எலிசா பணிபுரிந்தவர். பிணியுற்றவர்களுக்கு மருத்துவம் பார்த்தார். எலிசா வழியாகக் கால்டுவெல் பேச்சுத் தமிழைக் கற்றார். கால்டுவெல்லுக்கு மூன்று மக்கள் எனவும் நான்கு மக்கள் எனவும் கருத்து வேறுபாடு உண்டு. அம்மக்களுள் ஆடிங்கிதன் என்பவர் மருத்துவராகப் பணிபுரிந்தவர். முதல் மகள் திருச்சியில் 'வியத்தர்' என்பவரை மணந்தாள். இளைய மகள் 'லூயிசா' ஆங்கிலப்படை வீரனை மணந்தாள். எனினும் (28-10-1872இல்) மறைந்தாள்.

கால்டுவெல் வாழ்க்கை எளிமையானது. பெரும்பாலும் நடந்து செல்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். ஊர்களில் கிடைக்கும் காய்கனிகளை உண்டு வாழ்ந்தார். வெயில் கொடுமைக்கு அஞ்சி கூரைவீடுகளில் தங்கியிருப்பார். அமர்ந்து படிப்பார். காலை மாலை உலாவுவார். மூட்டைப்பூச்சிகளுக்கு அஞ்சி இரவில் பனைநாற்கட்டிலில் வீட்டு முற்றத்தில் உறங்குவார். பெரும்பான்மையான நாள்களில் சுற்று வட்டாரத்தில் சமயப்பணி புரிந்துவிட்டு ஏழாம்நாள் இடையன்குடி வருவார். தாம் பணி செய்த பகுதிகளில் 1877ஆம் ஆண்டு ஏற்பட்ட தாதுவருடப் பஞ்சத்தில் வாடிய மக்களுக்குப் பேருதவி செய்தார்.

கால்டுவெல் தமிழகத்தில் தங்கியிருந்தபோது மூன்றுமுறை தம் நாடு சென்று வந்துள்ளார். ( 1. 1854-57, 2. 1873-75, 3. 1883-84). கால்டுவெல் திருநெல்வேலி ஆயராக (யஷ்விஜுலிஸ்ரீ) கி.பி. 1877-இல் திருநிலைப்படுத்தப் பட்டார். 1891 ஜனவரியில் 31-ஆம் ஆண்டு தம் பணியிலிருந்து ஓய்வுபெற்றுக் கொடைக்கானல் சென்று தங்கியிருந்தார். அக்காலங்களில் கொடைக்கானல் செல்ல சரியான பாதை வசதியில்லை. அம்மை நாயக்கனூரில் இருந்து கடும் பாறை வழியாகச் சென்றார். ஒருநாள் குளிரால் நடுக்கம் கொண்டார். ஏழாம்நாள் நோய் வலுவுற்று 1891 ஆகத்து மாதம் 28-ஆம் நாள் இயற்கை எய்தினார். அவர்தம் உடல் இடையன்குடிக்குக் கொண்டுவரப்பட்டு அவர் எடுப்பித்த கோயிலில் அடக்கம் செய்யப்பட்டது.

கால்டுவெல் பெருமகனார் தம்மைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார். "நான் அயர்லாந்து தேசத்தில் பிறந்தேன்; ஸ்காட்லாந்து நாட்டில் வளர்ந்தேன். ஆங்கில நூல்களில் ஆழ்ந்தேன். எனினும் என்வாழ்நாளில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இந்தியப் பெருநாடும், அந்நாட்டு மக்களுமே என் கருத்தை முழுவதுமாகக் கவர்ந்து கொண்டதால் நான் இந்தியர்களுள் ஒருவனாயினேன்." இந்தியர்களுள் ஒருவராக இருந்தாலும் தமிழர்களின் புதிய வரலாற்றுக்கு மூலநூல் தந்ததால் தமிழ் பற்றிப் பேசும்பொழுதெல்லாம் கால்டுவெல் பெயரை நம் உதடுகள் ஒலிக்கும்.

மார்ட்டின் லூத்தர் கடைசி வார்த்தைகள்

1546 பெப்ருவரி 18 காலையில் பரம வீடு ஏகினார்லூத்தர். அவரது கடைசி வார்த்தைகள் இவைகளே:

லூத்தரின் கல்லறையின் அருகில் நின்றுகொண்டுஅவர் ஈல்பன் (Eisleben) நகரில் செலவழித்த கடைசிநாட்களை நினைத்துப்பார்க்கலாம். 1546 ஜனவரி28இல் அந்நகர் வந்தடைந்தார். உடல்நலம் குன்றியிருந்தபோதும் பெப்ருவரி 17 வரையிலும் நடைபெற்றமாநாடுகளில் கலந்துகொண்டார்; நான்கு பிரசங்கங்கள் செய்தார்; மான்ஸ்பீல்ட் பகுதிக்கான சபை ஒழுங்குகளைப் பரிசீலனை செய்தார். 17ஆம் தேதி அவர்உடல்நிலை மிகவும் கெட்டுப்போனதால், அவரதுநண்பர்களான பிரபுக்கள் அவரை வீட்டைவிட்டுவெளியே போக அனுமதிக்கவில்லை. அன்றிரவு உணவுவேளையில், தம்மை நெருங்கிவரும் மரணத்தைப்பற்றிவெகுவாகப் பேசினார். அவ்வேளையில், மறு உலகில்நாம் ஒருவரையொருவர் அடையாளங்கண்டுகொள்ளமுடியுமா? என எழுப்பிய வினாவுக்கு, “முடியும் என்றேநினைக்கிறேன்” எனப் பதிலுரைத்தார். “நான் ஏன்இவ்வளவு களைப்பாய் இருக்கிறேன்?” என ஆச்சரியப்பட்ட அவர், “என் வேதனை முன்பைவிட மிகுதியாயுள்ளது. ஒரு அரைமணி நேரம் தூங்கினால்சரியாகிவிடும்” என்று சொல்லி, தூங்கப்போனார்.ஒன்றரைமணி நேரம் கழித்து பதினொரு மணிக்குஎழுந்த அவர் சுற்றியுள்ளோரைப் பார்த்து, “என்ன!இன்னுமா இங்கிருக்கிறீர்கள்? உங்களுக்கு ஓய்வுவேண்டாமா?” எனக் கேட்டார்.

அங்கேயே இருக்கப்போவதாக அவர்கள் சொன்னபோது, லூத்தர் உணர்ச்சிவசப்பட்டுச் சத்தமிட்டார்:“என்னை மீட்டெடுத்த சத்தியபரனாகிய கர்த்தாவே,உமது கரங்களில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்.அன்பு நண்பர்களே, ஆண்டவரின் நற்செய்திக்காகவும்,அதன் ஆளுகை விரிவாக்கத்திற்காகவும் ஜெபியுங்கள். ஏனெனில், சபைச் சங்கமும் (council of trent), போப்பும் அதனை அச்சுறுத்திக்கொண்டேயிருக்கின்றனர்.” அதன்பின் ஒருமணி நேரம் தூங்கினார்.

எழுந்தபோது, “நான் மிகவும் சுகவீனமாயுள்ளேன்.நான் பிறந்த இடமாகிய இங்கேயே தங்கியிருத்தல்நல்லதென நினைக்கிறேன்” என்றார். வியர்வை வரும்படியாக அறையில் நடந்து பார்த்தார்; பின், படுத்துசுற்றிலும் அநேகத் துணிகளையும் தலையணைகளையும் வைத்துப்பார்த்தார். ஒன்றும் பலனளிக்கவில்லை.பின்னர் ஜெபிக்கத் தொடங்கினார்: “என் பிதாவே,ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தேவனே, சகலஆறுதலின் ஊற்றே, நான் விசுவாசிக்கிற உமது பிரியகுமாரனை எனக்கு வெளிப்படுத்தியதற்காக நன்றிசொல்கிறேன். அவரையே அறிந்து, பிரசங்கிக்கிறேன்;அவரையே நேசித்து, அவரிலேயே மகிடிநகிறேன்; அவரையே போப்பும், பக்தியற்றோரும் நிந்திக்கின்றனர்.

எனது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, உம்மிடத்தில் என் ஆவியை ஒப்படைக்கிறேன். இம்மைக்குரிய உடலைக் களைய ஆயத்தமாகிறேன். இவ்வாடிநவிலிருந்து நீங்கும் நேரம் நெருங்குகிறது. ஆயினும்,உம்மில் என்றென்றும் நிலைத்து வாடிநவேன் என்றறிவேன். சத்தியபரனாகிய கர்த்தாவே, நீரே என்னைமீட்டுக்கொண்டீர்; உமது கரங்களில் எனது ஆவியைஒப்படைக்கிறேன்.” அவரது கண்கள் மூட, மயக்கநிலைக்குள் ஆடிநந்தார். மறுபடி விழித்த வேளையில்,ஜோனாஸ், “பரிசுத்த தந்தையே, நீங்கள் போதித்தவிசுவாசத்தில் உறுதியோடுதான் மரிக்கிறீர்களா?”என்று கேட்டார். லூத்தர் கண்களைத் திறந்து, கூர்மையாய்ப் பார்த்து “ஆம்!” என்றார். பக்கத்திலிருந்தோர்பார்த்துக்கொண்டிருக்கும்போதே வெளிறிப்போனார்;உடல் குளிர்ந்தது; அவரது மூச்சு வேகமும் குறைந்துகொண்டே வந்தது. இறுதியில், ஓர் ஆழமான பெருமூச்சுடன், மார்ட்டின் லூத்தர் உயிர் நீத்தார். மகாஉயிர்த்தெழுதலின் நாள்வரையிலும், அவரது உடல்ஜெர்மனியின் விட்டன்பர்கில் இளைப்பாறிக்கொண்டிருக்கிறது. அந்நாளிலே, அவரோடு நீயும் காணப்படுவாயா???

அன்னை தெரெசா வாழ்க்கை

பல்லாயிரக்கணக்கான புகலிடமில்லாதோரைத் தாயினும் பரிவு காட்டி, அரவணைக்கும் அன்புள்ளம் ஒன்று 1910ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி, தற்போதைய மாசிடோனிய குடியரசில் ஓர் எளிய குடும்பத்தில் மூன்றாவது குழந்தையாக ஆக்னஸ் கோன்ஸா போஜாஸியு என்ற பெயரில் அவதரித்தது.

தன் 18ஆம் வயதில் லொரேட்டோ சகோதரிகளின் சபையில் இணைந்து துறவை ஏற்ற ஆக்னஸ், இந்திய மண்ணில் ஏழைகளுக்கு இறைப்பணி ஆற்ற விரும்பி பாடம் கற்பிக்க ஆங்கில மொழியைக் கற்றார். 1929ஆம் ஆண்டு டார்ஜிலிங்கில் கன்னியர் மட பயிற்சியை ஆரம்பித்து, 24மே 1931இல் மத பிரமாணம் எடுக்கும் வேளையில் தெரேசா என்னும் பெயரைப் பூண்டார். 10செப்டம்பர் 1946இல், ஒரு இரயில் பயணத்தின் போது, ‘‘சேரிகளுக்குச் செல் - சேவைகளைச் செய்’’ என்ற இறைவனின் குரல் இதயத்தைத் தட்டுவதை உணர்ந்தார்.

அவ்வேளையில், இந்தியாவுக்கு இணையற்ற இலக்கியவாதிகளையும் , அறிஞர்களையும் அளித்த வங்க நிலம் ஏழைகள், அகதிகள், ஊனமுற்றோர், தொழுநோயாளிகள் என அநாதைகளின் இருப்பிடமாக இருந்தது. நெருக்கடியால் தெருவோரங்களிலும், இரயில் நிலையங்களிலும், தரிசு நிலங்களிலும் மக்கள் அவதியுற்றனர். நோய் பரவி, ஆங்காங்கே பிணங்கள் கேட்பாரின்றிக் கிடந்தன.

17ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றிய லொரேட்டோ மடத்தை விட்டு, போப் ஆண்டவரின் பிரத்தியேக அனுமதியின் பேரில் வெளியேறி, கல்கத்தாவின் மிக ஏழ்மையான மோட்டிஜில் சேரிக்கு மனம் நிறைந்த அன்புடனும், கையில் வெறும் ஐந்து ரூபாயுடனும் சென்றார். பல தரப்பட்ட அவமதிப்புகளினூடே தன் சேவையைத் தொடங்கித் தொடர்ந்தார்.

1950ஆம் ஆண்டு மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி என்ற அமைப்பைத் தோற்றுவித்து, தோட்டியா என்ற தாழ்த்தப்பட்ட இனத்தவர் அணியும் ஆடையை, அதற்கு அங்கீகரிக்கப்பட்ட உடையாக்கினார். 45வருடங்களுக்கு மேல் தொண்டாற்றிய அவர் முதலில் இந்தியாவின் பல இடங்களிலும், பின்னர் சர்வதேச அளவிலும் இத்தூய பணியை விரிவாக்கினார். 1952இல் ‘‘நிர்மல் இருதய்’’ என்ற இல்லத்தைத் திறந்தார். உயிர் பிரியும் தருணம் வரை கனிவுடனும், அன்புடனும் பராமரிக்கும் கருணை இல்லமாக அது செயல்பட்டது. இறைவனின் சாயலான மனிதனிடம் ஏசுவைக் கண்ட அன்னை தெரேசாவால் எந்தவொரு நோயாளியையும் அனாதையாக விட்டுவிட இயலவில்லை. பின்னர் 1957இல் தொழுநோயாளிகளுக்கான இல்லத்தைத் தொடங்கினார்.

தனது பணிக்கு விளம்பரம் தேடாத அன்னை தெரேசாவுக்குக் குடியுரிமையும், பத்மஸ்ரீ விருதையும் 1962ஆம் ஆண்டில் வழங்கி இந்தியா அவரைக் கௌரவித்தது. 1972இல் ‘‘பன்னாட்டு புரிந்துணர்வுக்கான ஜவகர்லால் விருது’’, 1980இல் இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதான ‘‘பாரத ரத்னா’’ வழங்கப்பட்டன. சமாதானத்தின் அச்சுறுத்தல்களாக விளங்கும் ஏழ்மையையும், துயரத்தையும் வீழ்த்தும் போராட்டத்தில் பங்கேற்றமைக்காக, 1979ஆம் ஆண்டில், ‘‘சமாதானத்துக்கான நோபல் பரிசு’’ பெற்றார். நோபல் பரிசு பெறுபவர்களுக்கு அளிக்கப்படும் பாரம்பரிய விழா விருந்தை மறுத்த அவர், அதற்காகும் நிதியை இந்தியாவின் ஏழைகளுக்குக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் ‘‘சுதந்தரத்துக்கான அதிபரின் பதக்கத்தை’’ 1985ஆம் ஆண்டு, வெள்ளை மாளிகையில் அன்னைக்கு வழங்கி கௌரவித்தார்.

தெற்காசிய மற்றும் கிழக்காசிய சேவைகளுக்காக, 1962இல், பன்னாட்டுப் புரிந்துணர்தலுக்கான பிலிப்பைன்சின் ‘‘ரமோன் மேக்சேசே’’ விருதைப் பெற்றார்.

அவரது அதிகாரபூர்வமான வாழ்க்கை சரித்திரம், இந்திய ஆட்சிப் பணியாளரான நவீன் சாவ்லாவால் எழுதப்பட்டு, 1992இல் வெளியிடப்பட்டது.

அன்னையின் சொத்தெல்லாம் மூன்று வெள்ளைச் சேலைகளும், ஒரு சிலுவையும், ஒரு ஜெபமாலையுமே. ஆனால், விலைமதிப்பற்ற அன்பை மட்டும் அவர்  அமுத சுரபியாக அள்ளியள்ளி வழங்கினார். அன்பென்ற மழையில், இந்த அகிலத்தை நனைய வைத்த அந்த உன்னத அன்னையின் உயிர் மூச்சு 1997ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் நாள், அவரது 87வது வயதில், நின்ற போது எதற்கும் கலங்காத கண்களும் கசிந்தன.

உரோமன் கத்தோலிக்கத் திருச்சபை 19அக்டோபர் 2003இல், அன்னை தெரேசாவிற்கு ‘‘ஆசீர்வதிக்கப்பட்டவர்’’ என்ற பட்டம் அளித்து

Monday, April 8, 2013

வைராக்கியம் உள்ள ஊழியக்காரன் - மர்பி

அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து சீனா நோக்கி சென்று கொண்டிருந்தது அந்த கப்பல். மாலை வேளையில் கப்பலின் மேல் தட்டில் ஒரு கிறிஸ்தவ குருவானவரும், ஒரு வியாபாரியும் உரையாடி கொண்டிருந்தனர். வியாபாரி கேட்டார், 'சீனாவிற்கு என்ன விஷயமாக போகிறீர்கள்?' என்று. 'இயேசுவை அறிவிக்க போகிறேன்' என்றார் குருவானவர். ஒரு நிமிடம் அதிர்ந்து போன வியாபாரி, 'சீனாவுக்கு மிஷனெரிகள் செல்வது வீண். ஒரு முறை மர்பி என்ற குரு சென்றிருந்தார். ஒரு நாள் அவரை தூக்கிக் கொண்டு போய் அவரது கையின் மூன்று விரல்களை துண்டித்து விட்டனர். அவர் இப்போது அமெரிக்காவிலிருக்கிறார். இந்த விஷயமெல்லாம் உங்களுக்கு தெரிந்திருந்தால் சீனாவிற்கு போக துணிந்திருக்க மாட்டீர்கள்'எனறார். குரு அமைதியாக சிரித்துக் கொண்டார். பின்பு பல காரியங்களை பகிர்ந்து கொண்டனர். சற்று நேரத்தில் அவர்களுக்கு தேநீர் பரிமாறப்பட்டது. தேநீரை வாங்கிய குருவின் கையை கண்ட வியாபாரி திகைத்துப் போனார், ஏனென்றால் அவரது கையில் மூன்று விரல்கள் இல்லை. ஆம், அன்று சீனாவுக்கு சென்ற மர்பி இவரே!
.
யாரை நான் அனுப்புவேன், யார் என் காரியமாய் போவான் என்ற கேள்வியை தேவன் தன்னிடம் கேட்பதாக உணரும் யாராலும் அமைதியாய் இருக்க முடியாது. ஆகவே தான் பவுலின் வாழ்விலே காவல்களும், அடியும், உதையும், கல்லெறிதலும், சேதமும், மோசங்களும், சொந்த ஜனங்களால் வந்த உபத்திரவங்களும் பசியும், தாகமும் வந்த போதிலும் அவைகள் ஒன்றுமே அவரை ஊழியம் செய்வதிலிருந்து சோர்ந்த போக செய்யவே இல்லை. 'நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காக கட்டப்படுவதற்கு மாத்திரமல்ல, மரிக்கவும் ஆயத்தமாயிருக்கிறேன்' என்று சவாலிட்டார். விரல் போனால் என்ன? என்று மீண்டும் அம்மக்களை தேடிச் சென்ற மர்பி போதகரைப் போல, அப்போஸ்தலனாகிய பரிசுத்த பவுலைப் போல கிறிஸ்துவுக்காக ஆவியில் வைராக்கியம் கொண்டு ஊழியம் செய்யும் ஊழியர்கள் இந்நாட்களில் தேவனுக்கு தேவை.
.
ஊழியம் செய்ததனிமித்தம், வந்த நிந்தனையால், உபத்திரவத்தினால், சொந்த ஜனத்தாரின் அவமானப் பேச்சினால் சோர்ந்து போயுள்ள அருமை சகோதரனே, சகோதரியே, நான் சவுக்கடி பட்டால் என்ன, என் விரல் போனால் என்ன? என்று கேட்ட பக்தர்களின் வைராக்கியம் உங்களையும் பற்றி பிடிக்கட்டும். 'அவர்கள் என்னை அவமானப்படுத்தினால் என்ன? என்னை நிந்தித்தால் என்ன? நான் மீண்டும் கிறிஸ்துவின் பணியை உற்சாகமாய் செய்வேன். நான் மீண்டும் அங்கு செல்வேன். என் இலக்கு பூமிக்குரியதல்ல, அதைவிட மேலான ஜீவ கிரீடமே! அதை யாரோ ஒருவரது வார்த்தைக்காக ஒருபோதும் இழக்க மாட்டேன்' என வைராக்கியமாய் இன்றே புறப்படுவோமா? கர்த்தர் நம்மோடிருக்கிறார்! ஆமென் அல்லேலூயா!

Wednesday, March 20, 2013

உண்மையான ஊழியன்

ரோட்டின் ஓரம் ஒரு குடையின் கீழ் செருபபு தைத்துக் கொண்டு போகிறவர்கள், வருகிறவர்களின் ஷுக்களை பாலிஷ் செய்து கொண்டிருந்தான் ஒரு சிறுவன். தகப்பனது தொழிலை இளமையிலேயே கற்றுக் கொண்டது நல்லதாய் தோன்றியது. அவர் இறந்தபிறகு, அவனது தாயை கவனிக்க அது கைக்கொடுத்தது. அச்சிறுவன் காசுக்காக கடமையே என தன் வேலையை செய்யமாட்டான். யாரோ ஒருவர் பாலிஷ் போட தங்கள் காலணியை அவன் முன் நீட்டியதும் நிமிர்ந்து பார்த்து சிரித்த முகத்துடன், சிறப்பாய் நேர்த்தியாய் அதை செய்து முடிப்பான்.
.
எப்போதும் வழக்கமாய் வரும் ஒருவர் ஒரு நாள் அவனிடம், 'மிகவும் சிரத்தை

எடுத்து, கவனமாய் வேலை செய்கிறாயே, இதே வேலையை செய்யும்
மற்றவர்களிடம இல்லாத ஏதோ ஒன்று உன்னிடம் காணப்படுகிறதே அது
என்ன?' என்று கேட்டார். சிறுவன் மகிழ்ச்சியோடு, 'ஐயா நான் ஒரு
கிறிஸ்தவன். இயேசுகிறிஸ்துவின் குணநலன்களை என் வாழ்விலும்
செயல்படுத்த பிரயாசப்படுபவன், அதோடு ஒவ்வொருவருடைய
காலணிகளை நான் பழுதுபார்க்கும்போதும், இயேசுராஜா என்னிடம் வந்து
என் காலணிகளுக்கு பாலிஷ் போடு, என்று சொன்னால் நான் எப்படி செய்து
கொடுப்பேனோ அப்படித்தான் உங்கள் ஒவ்வொருவருக்கும் செய்கிறேன்'
என்று கூறினான். அந்த நபர் இவனது வார்த்தையின் மூலம் கிறிஸ்துவைக்
குறித்த அறிந்து வேதத்தை வாசித்து, கர்த்தரை தன் சொந்த இரட்சகராக
ஏற்றுக் கொண்டார்.

Sunday, February 24, 2013

FMPB - முதல் மிஷனரியான Rev.Harris Hilton

FMPB (Friends Missionary Prayer Band) என்ற மிஷனரி ஸ்தாபனத்தின் முதல் மிஷனரியான Rev.Harris Hilton (வயது 75) அவர்கள் 2012 டிசம்பர் 16ம் தேதி கர்த்தருக்குள் மரித்தார். அவர் சிமெண்ட் ஃபேக்ட்டரியில் சூப்ரவைசராக பணியாற்றி, பின்பு மிஷனிரி ஊழியத்துக்கு தன்னை ஒப்புக் கொடுத்தார். ஆசியாவிலேயே மிக அதிக மிஷனரிகளை கொண்ட ஸ்தாபனம் FMPB மிஷனரி ஸ்தாபனமாகும். டாக்டர்.சாம்கமலேசன், சகோ.P.சாமுவேல், Dr.Rev.தியோடர் வில்லியம்ஸ் இன்னும் சிலரால் ஆரம்பிக்கப்பட்டதுதான் FMPB மிஷனரி ஸ்தாபனம். சகோ.எமில் ஜெபசிங் அவர்கள் FMPB பொது செயலாரராக பல வருடங்கள் பொறுப்பேற்று, FMPB முழுநேர ஊழியராகவும் பணியாற்றினார். 

1969ம் வருடம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பெரியமலை (சந்தனமர வீரப்பன் வாழ்ந்த அடர்த்தியான வனமாகும்) என்ற மலையில் வாழும் ஆதிவாசிகள் வசிக்கும் பணிதளத்தில் சுவிசேஷம் அறிவிக்கும் முதல்மிஷனரி பணியை FMPB தொடங்கியது. அப்போது டாக்டர்.புஷ்பராஜ் ஆகிய நானும், முதல் மிஷனரியாக சகோ.ஹாரிஸ் ஹில்டன் அவர்களுடன் அந்த மலையில் வைத்து FMPB தலைவர்களால் முதல் மிஷனரிகளாக பிரதிஷ்டை செய்யப்பட்டு நாங்கள் இருவரும் அங்கு பன்றி வளர்க்கும் குட்டையான குடிசைக்குள் தங்கி ஊழியம் செய்தோம். நடுவில் மிஷனரி ஊழியம் பணம் இல்லாததால் தடைப்பட்டது. நாங்களும் டேனிஷ்பேட்டைக்கே திரும்பி வந்தோம். பணம் FMPB ஸ்தாபனத்துக்கு சேரும்வரை தற்காலிகமாக சிலமாதம் மிஷனரி ஊழியம் நிறுத்தி வைக்கப்பட்டது. சில வாரங்களில் மிஷனரி பணி மீண்டும் தொடங்கப்பட்டபோது நான் என் குடும்ப பொறுப்பு காரணமாக மிஷனரி ஊழியத்துக்கு போகாமல் பழையபடி டாக்டர் தொழில் செய்யவேண்டிய இக்கட்டான நிலை என் வீட்டில் ஏற்பட்டது. ஆனால் ஹாரிஸ் ஹில்டனும் வேறு சிலரும் அதே மலைக்கு மிஷனரிகளாக மறுபடியும் புறப்பட்டு சென்றனர். ஹாரிஸ் ஹில்டன் மிகுந்த ஆத்தும பாரம் உள்ளவர். அவருக்கு மனைவி, நான்கு பிள்ளைகள் உண்டு. பல கஷ்டங்களுக்கு மத்தியில் அற்புதமாக ஊழியம் செய்தார். மலையில் சபை உருவாயிற்று, ஆலயம் கட்டப்பட்டது, தேவ நாமம் மகிமைப்பட்டது.

சகோ.ஹாரிஸ் ஹில்டன் அவர்கள் வேதாகம கல்லூரிக்கு அனுப்பபட்டு ஆயராக ஆக்கப்பட்டு FMPBயின் எல்லா மிஷனரி பணிதளங்களை சந்தித்து செயல்படும் ஊழியராக பொறுப்பேற்றார். அதன்பின் மிஷனரி பணியிலிருந்து ஓய்வு பெற்றார். சர்க்கரை நோயினால் ஒருகால் வெட்டி எடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவர் மனைவியும் மரித்தார். இப்படி பல போராட்டங்கள் மத்தியிலும் தொடர்ந்து மிஷனரி ஊழியத்தை அவர் வெற்றிகரமாக நிறைவேற்றி முடித்தார், நல்ல ஓட்டத்தை முடித்தார்.
2012 டிசம்பர் 16ம் தேதி கிட்னி பெயிலியர் ஏற்பட்டு மரண தருவாயில் டெல்லி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு நல்ல ஆயத்தத்துடன் தன் ஆத்துமாவை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தார். 

கடந்த மாதம் நான் ராஜஸ்தான் சென்றபோது டெல்லி சென்று ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் அவரை சந்தித்து மரணத்துக்கு அவரை ஆயத்தப்படுத்தி ஜெபித்து வந்தது எனக்கு திருப்தியாக இருந்தது. அவருக்கோ அன்றைய என் ஜெபம் ஆத்ம பெலனாக இருந்தது. அவரின் நல்ல ஊழியத்துக்காக, அவரின் சாட்சியுள்ள ஜீவியத்துக்காக தேவனைத் துதிக்கிறேன்.

அவர் பெற்ற பிள்ளைகள் நான்கு பேரும் ஊழியத்தில் இருக்கிறார்கள். மருமக்களும் ஊழியத்தை செய்கிறார்கள். அவருடைய பிள்ளைகளுக்கும் குடும்பத்துக்கும் கர்த்தர் ஆறுதலை அளிப்பாராக. ஆமென்.

Friday, February 22, 2013

கால்பந்தாட்டக் களத்திலும் முழங்கால்


அமெரிக்க கால்பந்தாட்ட களத்தில் டிம் டிபோவின் (Tim Tebow) பெயர் மிக சர்ச்சைக்குரியது. இவரை பெரிதாக நேசிப்பவர்களும் இருக்கிறார்கள், கடுமையாக தூசிப்பவர்களும் இருக்கிறார்கள். இதற்கு காரணம் டிபோ வெளிப்படையாக தனது கிறிஸ்துவின் மேல் உள்ள விசுவாசத்தை தெரிவிப்பதுதான். பொதுவாக கிறிஸ்தவர்கள் தங்களை எப்போதுமே வெளியில் கிறிஸ்தவர்களாக காட்டிக்கொள்ள விருப்பப்பட மாட்டார்கள். அதிலும் விஐபியாக இருப்பவர்கள் கப்சிப்பென ஒரு இரககசிய கிறிஸ்தவரை போலவே நடந்துகொள்வார்கள். ஆனால் டிம் டீபோவோ வித்தியாசமானவர். அமெரிக்கர்கள் வெறித்தனமாக ரசிக்கும் கால்பந்தாட்டக் களத்தில் கூட தலை குனிந்து தேவனை நோக்கி விண்ணப்பம் ஏறெடுக்க தயங்காதவர்.(படம்:Tim Tebow in his trademarked prayer pose.) தைரியமாக தனக்கு கிறிஸ்துவின் மீது உள்ள நம்பிக்கையை உலகுக்கு எடுத்துக்கூற துணிந்தவர். இந்த நவநாகரீக உலகில் கிறிஸ்துவுக்கான இதுபோன்ற சாட்சியங்கள் மிகவும் அபூர்வமானவை.

டிம் டிபோ ”டென்வர் பிராங்காஸ்” (Denver Broncos) அணிக்காக விளையாடி வருகிறார். ஒரு முறை புளோரிடா யூனிவர்சிட்டி போட்டியின் போது இவர் தனது முகத்தில் யோவான் 3:16 என வர்ணம் தீட்டிக்கொண்டு விளையாட அன்றையதினம் மட்டும் கூகிள் தேடு தளத்தில் 92 மில்லியன் தடவை “John 3:16" என்றால் என்ன என மக்கள் தேடியிருக்கிறார்கள். அந்த வசனம் இப்படியாக பிரபல்யம் அடைந்தது. தனது டிவிட்டரில் அடுக்கடுக்காக வேத வசங்களை வெளியிடுபவர் இவர்.800,000 பேர் இவரின் டிவிட்டர் ஃபாலோவர்கள். இவரின் பேஸ்புக் அக்கவுண்டில் 1.3 மில்லியன் பேர் ரசிகர்கள்.
இளவயதிலேயே கிறிஸ்துவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட டிம் டிபோ கால்பந்து களத்திலிருந்து கொண்டே இப்படி பல விதங்களிலும் சுவிசேசத்தை அறிவிக்க முயன்று கொண்டு வருகிறார். இதனால் இவரை எதிர்ப்பவர்களும் பெருகியிருக்கிறார்கள்.”I hate Tim Tebow" என பேஸ்புக் பக்கங்களும் “TebowHaters.com" போன்ற தளங்களும் ஆன்லைனில் பெருகி உள்ளன.

ஜனவரி 16-ல் அமெரிக்காவில் வெளியான டைம் பத்திரிகை எழுதும் போது பொது இடத்தில் தொழகை அல்லது ஜெபம் அல்லது பிரார்த்தனை செய்வதை "Tebowing" எனலாம் என்கின்ற அளவுக்கு டிம் டிபோவின் ஆன்மீக வாழ்க்கை அமைந்துள்ளதாக கூறியுள்ளது.

Friday, February 8, 2013

சகோதரர். மோகன் சி. லாசரஸ் - சாட்சி

"இயேசு கிறிஸ்து தெய்வமே அல்ல, காந்தி, நேரு போல வரும் ஒரு மனிதர்தான். அவர் வந்தார், சில நல்ல காரியங்களை செய்தார், மரித்து விட்டார்" என்று வாக்குவாதம் பண்ணி கொண்டிருந்தான் அந்த சிறுவன். தெய்வபக்தியும், மத வைராக்கியமும் அவனுள் மிகுந்திருந்தன. பேச்சிலும், தோற்றத்திலும் அவை வெளிப்பட்டன. சென்னையின் நகர சூழலிலும் சந்தனப் பொட்டுடன் பக்திமயமாய் அவன் வகுப்பிற்கு வரும்போது அவனை "சந்தப் பொட்டு" என்றே அழைத்து வந்தனர். அவனுடைய குடும்பம் சில வருடங்களுக்கு முன்புதான் சென்னையில் குடியேறி இருந்தது வில்லிவாக்கத்தில் உள்ள சிங்காரம் பிள்ளை ஸ்கூலில் 9ம் வகுப்பு படித்து கொண்டிருந்த பொது திடீரென அவனது இருதயம் மோசமாய் பாதிக்கப்பட்டது. வலது கால் முற்றிலுமாய் செயலற்று போனது. அப்பொழுது அவனுக்கு வயது 14. மருத்துவர்கள் பலரிடம் பெற்றோர் காண்பிக்க, எவராலுமே என்ன வியாதி என்றே தீர்மானிக்க முடியாமல் போனது . எலும்பும் தோலும் ஆனான் அந்த சிறுவன். வெளியில் தெரியும் அளவிற்கு இதயம் வீங்கிவிட வலது கால் முற்றிலும் செயலற்று போனது. ஒரு கட்டத்தில் இனி மருத்துவத்தால் உங்கள் மகனை குணமாக்க முடியாது என்று மருத்துவர்கள் அனுப்பிவிட, பெற்றோர்கள் பல தெய்வங்களை நோக்கி வேண்டி பார்த்தார்கள். மரண படுகையிலிருந்த அவனுடைய வாழ்வுக்கு தெய்வங்கள் என சொல்லப்படும் எவரும் பதில் கொடுக்கவில்லை. அதனால் வருத்தத்தின் ஆழத்தில் அவனது தாய் மூழ்கி இருக்க, அவனது நிலையோ பரிதபிக்க வைத்தது. சாகப்போகிறவனை கடைசியாய் பார்ப்பது போல் பார்த்து சென்றனர் அவனது உறவினர்கள். அடுத்தவர்கள் உதவியுடனேயே தனது தினசரி வாழ்வை கழித்து வந்த அச்சிறுவனை பார்க்க வந்தார் ஒரு கிறிஸ்தவ சகோதரர் "என் மகனை கைவிட்டுவிட்டார்கள், என் மகனுக்காக இயேசுவினிடத்தில் ஜெபம் செய்வீர்களா?" என்று அவரிடம் கண்ணீரோடு கேட்டார்கள் அவனது தாய். அவர் ஜெபம் செய்ய ஆரம்பித்தார். அவன் கேலி செய்த, மிகவும் வெறுத்த இயேசுவிடம் அந்த சகோதரர் ஜெபம் பண்ணுவதை அந்த சிறுவன் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான். ஆனால் திடீரென்று அவனது உணர்வுகள் தெய்வீக வல்லமை ஒன்று அந்த அறைக்குள் இறங்குவதை உணர்ந்தது. படுகையின் அருகில் யாரோ வருவதையும், பின் , அவருடைய கரம் தன்னை தொட்டதையும் உணர முடிந்தது. மின்சாரத்தை போலிருந்த தேவ வல்லமை, செயலற்று கிடந்த அவனது வலது கால் வழியாக பாய்ந்து சென்றது. அவனுள் மெலிதாய் பயம் எழும்பிற்று . அவனை அறியாமல் கண்களில் கண்ணீர் வடிந்தது. அந்த சகோதரர் ஜெபித்து கொண்டிருக்க, அச்சிறுவன் எழுந்து உட்கார்ந்த பின் அவனது இருதயம் சரியாகி இருந்தது. தனக்கு சுகமளித்த இயேசு கிறிஸ்துதான் மெய்யான தெய்வம் என்று அவன் மனம் சொல்லிற்று. அவன் அதை நம்பி விசுவாசித்தான். இன்று அந்த சகோதரன் இயேசு கிறிஸ்துவின் மூலம் தான் பெற்ற அற்புதத்தை உலகமெங்கும் அறிவித்தும், நடப்பித்தும் வருகிறார். அற்புதங்கள் இன்றும் பலருக்கு தேவை. தேவனாலேயே அது சாத்தியம். தேவன் அதற்க்கு பயன்படுத்தும் பாத்திரமாய் விளங்குகிறவர் தான் சகோதரர். மோகன் சி. லாசரஸ். சந்தன பொட்டுவின் மணம் இன்று அவரிடம் இல்லை. இயேசு கிறிஸ்துவின் இனிய நற்காந்தம் மட்டுமே அவரிடம் எவரையும் வசீகரிப்பதாய் இருக்கிறது. நண்பர்களே! நீங்களும் உங்களுடைய வாழ்கையை இயேசுவினிடம் ஒப்புகொடுத்தால் உங்கள் வாழ்கையையும் அவர் மாற்றி, உங்களை பல கோடி மனிதர்களுக்கு ஆசிர்வாதமாக எடுத்து பயன்படுத்துவார். "குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்" யோவான் 8:36 Article by : Wilson E. Paul / Wilson E. Paul http://www.zionpuram.com/?q=node/159

Wednesday, February 6, 2013

பில்லி பிரே (Billy Bray) - மனம்திரும்பலின் மகிமை

தேவன் சில சமயங்களில் பலவீனமான பாண்டங்களை மிகவும் ஆச்சரியமான முறையில் உயயோகிக்கிறார். அப்படி உபயோப்படுத்தப்பட்டவர்களில் கார்னிஷ் பட்டணத்தில் சுரங்க தொழிலாளராக பணிபுரிந்த பில்லி பிரேவும் (Billy Bray) ஒருவர். இரட்சிக்கப்படும் முன் அவர் பயங்கர குடிகாரனாகவும், விபச்சாரக்காரனாகவும், இருந்தார். ஒவ்வொரு இரவும், அவரது மனைவி, சாராயக்கடைக்கு சென்று அவரை அழைத்து. வருவார்களாம். ஆனால் இயேசுவின் மெய் சீடனாக மாறிய பின் இங்கிலாந்தில் ஒரு முனை துவங்கி மறுமுனை ம்ட்டும் அவரை அறியாதவர்கள் எவருமிருக்க முடியாது. அவரது வாழ்வில் நடந்த சில நிகழ்வுகள் நம் ஆவிக்குரிய வாழ்வை நிச்சயம் உற்சாகப்படுத்தும். பில்லி பிரே, ஆண்டவரின் அன்பு தன் இருதயத்தில் நிரம்பி வழிந்தோடுவதை உணர்ந்தார். எனவே அடிக்கடி ஆனந்த கண்ணீர் வடித்து சந்தோஷத்துடன் நடனமாடுவார். 'நான் தெருவில் நடந்து செல்லும்போது, ஒரு காலை தூக்கினவுடன் ஆண்டவருக்கு மகிமை என்றும் அடுத்த காலை தூக்கும்போது ஆமென் என்றும் என்னால் சொல்லாமல் இருக்க முடிவில்லை' என்பார். 'ஒரு பீப்பாவில் அடைத்து போட்டாலும் அதின் துவாரத்தின் வழியாக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று சத்தமிடுவேன்' என்று கூறுவார். ஒரு சமயம் ஹக்னில் என்ற இடத்தில் நடந்த கூட்டத்தில் 'ஒரு அம்மையார் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என சத்தமிட்டு கொண்டே மரித்தார்கள்' என சொல்லப்பட்டது. உடனே பில்லி சந்தோஷமடைந்து, மரிக்கும் ஒருவர் அவ்விதம் துதிக்க கூடுமானால் உயிருடன் இருக்கும் நாம் தேவனை துதிக்க எவ்வளவாய் கடமைப்படடிருக்கிறோம்' என்றார். இவ்வாறு எப்போதும் தேவனை துதித்து கொண்டும் நடனமாடி கொண்டும் இருப்பதை கண்டு பைத்தியம் பிடித்தவன் என்று பலர் பரியாசம் பண்ணினார்கள். நான் பைத்தியம் பிடித்தவனில்லை என்றும் சந்தோஷத்தில் மூழ்கினவனென்றும் கூறுவார். ஒருமுறை பிளேசி என்ற இடத்திலுள்ள ஆலயத்திற்கு அவர் சென்ற போது அங்குள்ள சபையார் தங்கள் கஷ்டங்களையும், பாடுகளையும் அவரிடம் கூறினார்கள். அவர் புன்முறுவலோடு எழுந்து கைகளை தட்டிக்கொண்டு, 'நண்பர்களே நான் காடியை ருசித்திருக்கிறேன். காடியை தேவன் எனககு மிக கொஞ்சமாகவும், தேனை மிக அதிகமாகவும் கொடுத்திருக்கிறார். எப்படியென்றால் நான் துக்கப்பட முடியாத அளவிற்கு தேவன் என்னை சந்தோஷப்படுத்தி விட்டார்' என்றார். உபத்திரவங்கள் தேவன் காட்டும் தயவின் அடையாளங்கள் என்றும் அவற்றை குறித்து கிறிஸ்தவர்கள் களிகூற வேண்டுமெனறும் கூறுவார். பில்லி ஒருவரை சந்தித்த மாத்திரத்தில் அவருடைய ஆத்துமாவை குறித்து விசாரிப்பார். இரட்சிப்படைந்து விட்டதாக கேள்விப்பட்டால், உடனே குதித்தெழும்புவார், அந்நபரை பிடித்து கொண்டு நடனமாடி அப்படியே அவரை தூக்கி சுமந்து செல்வார். ஓவ்வொரு நாள் காலையிலும் சுரங்க வேலை ஆரம்பிக்குமுன் அவர் 'ஆண்டவரே இன்று யாராவது சுரங்கத்தில் மரிப்பது உமது சித்தமாயிருந்தால் அது நானாக இருக்கட்டும், அவர்களில் யாரும் மரிக்க வேண்டாம். அவர்கள் ஆயத்தமாயிருக்கவில்லை, நான் ஆயத்தமாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறேன். நான் மரித்தால் உடனே உம்மிடம் வந்து விடுவேன்' என்று ஜெபிப்பார். பில்லி அநேக முறை பணத்தேவையில் கடந்து வந்தார். இருப்பினும் அவர் சோர்ந்து போனதோ, முறுமுறுத்ததோ கிடையாது. 'எனக்கு வேலை கிடைத்தால் ஆண்டவரை துதிப்பேன். இல்லாவிட்டாலும் அவரை நோக்கி பாடுவேன். என்னை ஒருபோதும் அவர் பட்டினி போட மாட்டார். பானையின் அடிமட்டத்தில் கொஞசம் மாவை கண்டிப்பாக தேவன் வைத்திருப்பார்' என்று உறுதியளிப்பார். ஆடம்பரமாக வாழ்க்கையையும், பகட்டான ஆடைகளையும் பில்லி விரும்புவது கிடையாது. 'நல்லதொரு வண்டியில் ஏறி நரகத்திற்கு போய் சேருவைத விட நடந்து சென்று பரலோகம் அடைவது மிகவும் நல்லது' என்பார்.

Thursday, January 31, 2013

உணமையான ஊழிய அர்ப்பணிப்பு - டாமியன்

பசிபிக் மகா சமுத்திரத்தில் மொலாக்காய் (Molokai Island) என்பது சிறு தீவு. தென் பசிபிக் தீவில் குஷ்டரோகம் எனப்படும் தொழுநோய் பரவிய நாட்கள். தொழு நோயால் தாக்கப்பட்டோர் மொலாக்காய் என்னும் இத்தீவில்தான் தனிமைப்படுத்தப்பட்ட கவனிப்பாரற்று தங்கள் வாழ்வை இழந்தனர். மக்களால் மட்டுமல்ல, கடவுளாலும் கைவிப்பட்டுவிட்டோம் என்ற முடிவுக்கு வந்தனர். அவர்களுக்கு உதவி செய்யவும், நோயின் கொடுமையிலிருந்து அவர்களை காப்பற்றவும் யாரும் முன்வரவில்லை. காரணம் அத்தீவிற்கு சென்றவர்கள் மீண்டும் தங்கள் நாட்டிற்கு திரும்பி வரக்கூடாது என்பது அரசாங்கத்தின் உத்தரவு.
.
1873-ம் ஆண்டு துன்பத்தில் துவண்ட அம்மக்களுக்கு துணைவனாக அம்மக்களை தேடி புறப்பட்டான் ஒரு இளைஞன். அவர்தான் டாமியன் (Damien) ஆவார். பலர் அவரை தடுத்தனர். ஆனால் டாமியனோ தன் தீர்மானத்தில் உறுதியாய் இருந்தார். மொலாக்காய் தீவில் இறங்கிய உடன் அங்கு அவர் கண்ட காட்சிகளோ, கொடுமையாய் இருந்தன. வியாதியின் கொடுமையால் நடை பிணங்களாக, உடலெல்லாம் புண்களாக, சீழ் வடிந்த நிலையில் மக்கள் வாழ்ந்தனர். அவர்களின் வாழ்வில் நம்பிக்கை கொடுக்க ஆரம்பித்தார் டாமியன். அவர் அங்கு வந்த பிறகு அநேக மாற்றங்களை அந்த தீவில் அவர் கொண்டு வந்தார். ஏதோ குடிசையில் வாழ்ந்த மக்கள் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு, வீடுகளில் வாழ ஆரம்பித்தனர். பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டன. அநேக நன்மைகளை அந்த தீவு மக்கள் அனுபவிக்க ஆரம்பித்தனர். அவர்களின் புண்களை காயம் கட்டினார். மருந்துகளை கொடுத்து, ஜனங்களை ஆறுதல் படுத்தினார்.
.
ஒரு நாள் அவர் குளிக்க செல்லும்போது, தற்செயலாக கொதிக்கும் தண்ணீர் அவருடைய கால்களில் பட்டது. ஆனால் அவர் அதை உணரவில்லை. அதிர்ச்சியடைந்தார். ஓ, அவருக்கும் தொழுநோய் பற்றி கொண்டது. அதிர்ச்சியிலிருந்து மீண்டு வந்த டாமியன், அத்தீவு மக்களிடம், 'நான் இப்போது உங்களில் ஒருவனாகி விட்டேன்' என்று கூறினார். அவ்வார ஞாயிறு ஆராதனையில் 'தொழுநோயாளிகளாகிய நம்மேல் தேவன் அன்பாயிருக்கிறார்' என்று ஆண்டவரை புகழ்ந்தார். நோயின் கொடூரம் அவரை முற்றிலும் தாக்கவே தான் அளவு கடந்த அன்பு வைத்த மக்களை விட்டு தனது 49 ஆவது வயதில் மரித்தார். தனது அர்ப்பணிப்பில் இருந்து பின்னிட்டு பாராமல், தன் உடலையும், உயிரையும் தொழு நோயாளிகளுக்காய் கொடுத்த வாலிபன் டாமியனின் அர்ப்பணிப்பும், கர்த்தர் மேல் இருந்த அன்பை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுத்து, தேவனின் அன்பை வெளிப்படுத்திய விதமும், தங்களை கவனித்து பராமரிக்க யாருமே இல்லை என்று தவித்த மொலாக்காய் தீவின் மக்களுக்கு அவர்களையும் தேவன் நேசிக்கிறார் என்பதை எடுத்து காட்டின அந்த வாலிபனின் அர்ப்பணிப்பும் நிச்சயமாகவே மற்றவர்களுக்கு ஒரு நல்ல எடுத்துகாட்டாகும்.

Wednesday, January 23, 2013

கிரகாம் ஸ்டைய்ன்ஸ் (1941 - 2002)

நம்மில் எவ்வளவு பேர் இம் மனிதரை நினைவு வைத்திரிக்கிரோம்? இவருடைய தியாகம் நினைவு இருக்கிரதா? இவரை மட்டும் அல்ல, இவரோடு இரண்டு பிள்ளைகளும் எரித்து கொள்ளப்பட்டார்கள். இந்த மரணம் ஒரு இந்து அல்லது முகமதிய தலைவருக்கு நடந்திருந்தால்? பெரிய கலவரமோ அல்லது போராட்டமோ இந்தியா முழுவதும் வேடித்திருக்கும்.

ஆனால் நாம் அப்படி செய்ய அழைக்கபடவில்லை. வேதம் வன்முரையை தூண்டவோ போராட்டத்தை தூண்டவோ இல்லை. பல கிறிஸ்த்தவ ஆலையங்கள் சபைகள், நிருவனங்கள் ஆதியில் இவரை பற்றி பேசி பின்னர் மறந்து விட்டன.

நான் கோவையில் இந்திய நற்செய்தி மாணவ மன்றத்தில் இனைந்து ஊழியம் செய்த போது இம் மா மனிதரை நினைவு கூரும் வகையில் சில ஊழியங்கலை செய்து வந்தோம்

  • ஒவ்வொரு வருடமும் 22ம் ஜனவரி மாதம் ஊழிய திருநாள் ஆக அனுசரிக்கப் படவேண்டும்.
  • அந்நாளில் ஆலையங்கலிலும், ஊழிய நிறுவனங்களிலும் தேவ செய்தி ஊழிய தலைப்போடு பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்.
  • அந்நாளில் ஒரு முழு நேர ஊழியக்காரரை குடும்பத்தோடு அழைத்து நேரம் செலவிடலாம்.
  • உங்கள் குடும்ப ஜெபத்தில் ஊழியத்தை பற்றியும், ஊழியத்தின் முக்கியத்துவத்தையும் குழந்தைகளோடு பகிர்ந்து கொள்ளலாம்.
  •  குடும்ப ஜெபத்தில் ஊழியம் மற்றும் ஊழியகாரர்களுடைய சரித்திரங்களை பகிர்ந்து கொள்ளலாம்.
  • உங்கள் குழந்தைகளை அருகில் உள்ள ஊழிய ஸ்தாபனங்களுக்கு அழைத்து சென்று ஊழியம் செய்வதின் முக்கியத்துவத்தை பகிர்ந்து கொள்ளலாம்.
  • ஆழையங்கள் 22ம் தேதி ஒட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று 'ஊழிய ஞாயிறு" ஆக அனுசரிக்க பட வேண்டும்.
  • ஊழிய ஸ்தாபனங்களை  அழைத்து சபை மக்களோடு ஊழியத்தை பகிர்ந்து கொள்ளலாம்.
  • ஒரு ஊழிய குடும்பத்திற்கு பணமோ அல்லது பரிசு அனுப்பி மகிழ்விக்கலாம்.
  • உங்கள் வீட்டின் அருகில் missionary குழந்தைகள் படிப்பார்கள் என்றால் அவர்களை உங்கள் வீட்டிற்கு அழைத்து அவர்களோடு நேரம் செலவிடலாம்.
  • ஒருவருக்கவாவது இயேசுவை பற்றி சொல்லலாமே?
இது நீங்கள் விரும்பினீர்கள் என்றால் உங்கள் சபைகளில் இதை பகிர்ந்து கொள்ளுங்கள். தேவன் உங்களை ஆசிர்வதிப்பார். 
 
                                                                       

Friday, December 21, 2012

ஜாமக்காரராய் நாம்.....

இதோ, திருடனைப்போல் வருகிறேன். தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்.
- (வெளிப்படுத்தின விசேஷம் 16:15).
இந்த வசனத்திற்கு அநேக வியாக்கியானங்கள் இருக்கிற போதிலும், இஸ்ரவேலில் வழங்கப்பட்டு வந்த காரியம் இந்த வசனத்தின் அர்த்தத்திற்கு ஒத்துப் போவதால், இதை இங்கே எழுதுகிறேன். எருசலேமில் தேவாலயம் இருந்த நாட்களில் லேவியர்கள் அந்த ஆலயத்தை பரிசுத்தமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவர்களது வேலையாகும். ஆகையால் அவர்களின் தலைவன், முழு இரவும் பாதுகாப்பு ஒழுங்காக மற்றவர்கள் செய்கிறார்களா என்று கண்காணிப்பது வழக்கம். அதை அழுக்காகாதபடிக்கு அதைக் காக்க வேண்டியது, அங்கு ஜாமக்கார லேவியனின் பொறுப்பில் இருந்து வந்தது. எந்த ஜாமக்காரனாவது இரவில் களைப்பின் மிகுதியால் தூங்கிவிட்டால், அவர்களின் தலைவன் வந்து கண்காணிக்கும் நேரத்தில், அவனை தூங்குகிறவனாக கண்டால், அந்தக் ஜாமக்காரனை அடித்து, அவனுடைய துணிகளை உரிந்து, அவற்றை நெருப்பில் போட்டுவிடுவான். அப்போது அந்தக் காவல்காரன் துணியில்லாமல், நிருவாணமாகத்தான் தன் வீட்டிற்கு செல்ல வேண்டும். இதைத்தான் உவமையாக இயேசுகிறிஸ்து தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான் என்றுக் கூறிகிறார்.
.
இயேசுகிறிஸ்து சீக்கிரம் வரப் போகிறார். அதற்கான அடையாளங்கள் வெகு விரைவாக நடந்தேறி வருகின்றன. இதோ திருடனைப் போல் வருகிறேன் என்றுச் சொன்னவர் சீக்கிரம் வந்துவிடுவார். ஆனால் நாம் ஆயத்தமா?