Showing posts with label prayer. Show all posts
Showing posts with label prayer. Show all posts

Wednesday, January 15, 2014

கர்த்தருடைய ஜெபம்

கர்த்தருடைய ஜெபம்

மத்தேயு 6:9-13
நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது;
பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக;
உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.
எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.
எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.
எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே.

குழந்தைகளுக்கான ஜெபம்

நானும் கர்த்தர் எனக்கு கொடுத்த பிள்ளைகளும் சியோன் பர்வதத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும், அற்புதங்கலாகவும் இருக்கிறோம். (ஏசாயா 8:18)
என் பிள்ளைகள் எல்லோரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள். என் பிள்ளைகளுடைய சமாதானம் பெரியதாய் இருக்கும் (ஏசாயா 54:13)\
இதி என் பிள்ளைகள் கர்த்தரால் வந்த சுதந்திரம்; என் கர்ப்பத்தின் கனி அவரால் எனக்கு கிடைத்த பலன் (சங்கீதம் 127:4)
என் பிள்ளைகள் என் பந்தியை சுற்றிலும் ஒலிவமர கன்றுகளைப் போல் இருப்பார்கள் (சங்கீதம் 128:3)
என் சந்ததியுன் மேல் கர்த்தருடைய ஆவியையும், என் சந்தானத்தின் மேல் ஆசீர்வாதங்களும் ஊற்றப்படும். அதனால் அவர்கள் புல்லின் நடுவே நீர்க்கால்கள் ஓரத்தில் உள்ள அலரிச் செடியை போல் வளருவார்கள். (ஏசாயா 44:3,4)
என் மேல் இருக்கும் தேவ ஆவியும், என் வாயில் அவர் வைத்துள்ள அவர் வார்த்தைகளும் என் வாயினின்றும் என் சந்ததியுன் வாயினின்றும் நீங்குவதில்லை (ஏசாயா 59:21)
என் பிள்ளைகள் பாதிகாப்புடன் வாழ்வார்கள். அவர்கள் சந்ததி கர்த்தருக்கு முன்பாக நிலைத்திருக்கும் (சங்கீதம் 102:8)
கர்த்தருடைய கிருபையோ அவருக்கு பயந்த என் மேலும், அவருடைய நீதி என் பிள்ளைகளுடைய பிள்ளைகள் மேலும் என்றென்றும் இருக்கும். (சங்கீதம் 103:17)
கர்த்தர் என் வாசல்களின் தாள்ப்பாகளைப் பெலப்படுத்தி என்னிடத்திலுள்ள என் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார் (சங்கீதம் 147:13)
கர்த்தருக்கு பயப்படுகிற எனக்கு எனக்கு திடநம்பிக்கை உண்டு, என் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும் (நீதிமொழிகள் 14:26)
என் பிள்ளைகளின் பிள்ளைகள் எனக்கு கிரீடமாய் விளங்குவார்கள் (நீதிமொழிகள் 17:6)
நான் என் உத்தமத்திலே நடக்கிறேன். எனக்கு பிறகு என் பிள்ளைகளும் பாக்கியவான்களாய் இருப்பார்கள். (நீதிமொழிகள் 20:7)
இயேசுவை போல் என் பிழைகள் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவ கிருபையிலும், மனுஷர் தயவிலும், அதிகதிகமாய்  விருத்தியடைவார்கள் (லூக்கா 2:52)
சாமுவேலை போல் என் பிள்ளை வளர்ந்து கர்த்தருக்கும் மனிதருக்கும் பிரியமாக நடந்து கொள்ளுவான் (1 சாமுவேல் 2:26)
யோவான் ஸ்நானகனை போல என் பிள்ளை ஆவியில் பெலன்கொண்டு வளருவான். பாவ மன்னிப்பாகிய ரட்சிப்பை தெரியப்படுத்துவான் (லூக்கா 1:80)
என் பிள்ளைகள் தானியேலை போல உண்மையுள்ளவர்களாக இருப்பார்கள். இடைவிடாமல் தேவனை ஆராதிப்பார்கள். தேவன் பேரில் விசுவாசம் வைப்பார்கள். அவர்கள் கையில் எடுத்தது ஜெயமாயிருக்கும் (தானியேல் 6:4, 16,23,28)
என் குமாரரும் குமாரத்திகளும் தீர்க்கதரிசனங்கள் சொல்லுவார்கள். தரிசனங்களை காண்பார்கள்

Tuesday, July 9, 2013

சாட்சி - பிள்ளைகளின் ஜெபத்தை கேட்டார்

என்னுடைய பெயர் கோயில் துரை. நெல்லை மாவட்டம் நான்குநேரி தாலுக்கா விஜயாச்சம்பாடு என்ற கிராமத்தில் வாழ்ந்து வந்தேன். என்னுடன் பிறந்தவர்கள் ஆறு பேர். அதில் நான் இரண்டாவது மகன். என் சிறுவயதில் தினமும் சர்ச்க்கு செல்வேன். ஆனால் தேவனுக்கு பயப்படும் பயம் என்னில் இல்லாது இருந்தது. நான் +2 வரை படித்து இருக்கிறேன் பள்ளியில் படிக்கும் போது தவறான நண்பர்கள் மூலமாக குடிப்பழக்கம் எனக்கு இருந்தது.

இந்த நிலையிலும் எனக்கு திருமணமு

நல்ல முறைகள் இருந்த இன்ச்டால்மென்ட் பிசினஸ் அடியோடு நாசமாகி போனது. எனக்கு இருந்த எல்லா இடத்தை விற்று மறுபடியும் குடிக்க சென்றேன். இந்த இடைப்பட்ட காலத்தில் என் பிள்ளைகள் உபவாசம் இருந்து எனக்காக ஜெபித்திருகிறார்கள். என் பிள்ளைகளை பார்க்கும்படி வீட்டிற்க்கு சென்ற நான் என் பிள்ளைகளின் நிலைமையை கண்டு மிகவும் வருத்தப்பட்டேன். பின் நாட்களில் தேவன் என் குடிப்பழக்கத்தை முழுவதுமாக மாற்றினார். குடும்பத்தோடு சந்தோஷமாக இருக்கும் பாக்கியத்தை எனக்கு தந்தார்
ம் நடந்தது. மூன்று பிள்ளைகளும் பிறந்தார்கள். சில நாள் தெரிந்தும் பல தெரியாமலும் குடித்ததால் மிகவும் பெலவீனப்பட்டு 45 நாள்கள் ஆஸ்ப்பத்திரி சேர்க்கப்பட்டேன். பின்னர் சில நாட்கள் கழித்து மீண்டும் குடிப்பழக்கம் மிக அதிகம் ஆனதே தவிர குறையவில்லை. இப்படியாக இருக்கும் போது குடும்பத்தில் பிரச்சனை வர ஆரம்பித்தது. சின்ன சின்ன பிரச்சனை வந்து இரண்டரை ஆண்டுகள் குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்தேன். இன்னும் அதிகமாக குடித்து விட்டு சாப்பிடாமல் இருப்பேன். மன அழுத்தம் காரணமாக இன்னும் நிறையே குடிக்க ஆரம்பித்தேன்.

Thursday, May 9, 2013

கண்ணீரோடு விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடு அறுப்பார்கள்

திருச்சபைச் சரித்திரத்தின் குறிப்புக்களை ஆராயும்போது, தேவனால் அதிகம் பயன்படுத்தப்பட்டவர்கள் ஜெபவீரர்களே என்று கண்டுகொள்ளலாம். அவர்கள் அந்தரங்கத்தில் ஜெபத்தில் தரித்திருந்து, தேவன் தம்முடைய இருதயத்தைத் தங்களோடு பகிர்ந்துகொள்ளக் கற்றிருக்கிறார்கள். தேவன் எவைகளைக்குறித்துக் கரிசனைகொண்டிருக்கிறாரோ அவைகளைக்குறித்தே அவர்களுடைய இருதயமும் கரிசனைகொள்ளுகிறது.


ஜார்ஜ் முல்லர் பிரிஸ்ற்றலில் 1891-களில் அநாதைஇல்லங்களை ஆரம்பித்தார். தங்களது எல்லாத் தேவைகளையும் சந்திக்க அவர் தேவனையே நம்பினார். அவர் ஒருபோதும் யாரிடமும் பணம் கேட்டதில்லை; ஆனால், அநேகமாயிரம் குழந்தைகளுக்கு ஆடையும் ஆகாரமும் உறைவிடமும் இலவசமாகக் கொடுத்தார். அவருடைய வாழ்க்கையின் இறுதியில் அவர் யார்யாருடைய இரட்சிப்புக்காக ஜெபித்தாரோ அவர்கள் யாவரும் (இரண்டுபேர் தவிர) கிறிஸ்துவைத் தங்கள் இரட்சகராக ஏற்றுக்கொண்டார்கள். இந்த இரண்டுபேருங்கூட முல்லர் மரித்தபின் இரட்சிக்கப்பட்டார்கள்.
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வடகிழக்கு பாகத்தில் வாழ்ந்துவந்த செவ்விந்தியர்கள் மத்தியில் 1700-களில் டேவிட் பிரெய்னார்டு ஊழியஞ்செய்தார். அவர் அந்த மக்களுக்காக அதிக நேரம் ஜெபித்ததால் அவருக்குக்கீழிருந்த பனிக்கட்டி உருகிப்போயிற்று என்று அவரைக்குறித்துச் சொல்லப்பட்டது. அநேகர் இரட்சகரை ஏற்றுக்கொள்ள அவர் தேவனுடைய கருவியாயிருந்தார்.
நம்முடைய இருதயத்துடிப்பு தேவனுடைய இருதயத்துடிப்புக்கு இசைந்து காணப்படும்போது, நாம் பரிந்துபேசியவைகளாகிய நம்புவதற்கரிய காரியங்களையும் அவர் செயல்படுத்துவார். அழிந்துபோகிற உலகத்துக்காக தேவனுடைய இருதயம் வேதனைப்படுகிறது. அத்தகைய பாரம் நம்மில் வரும்போது நாம் அவரை நோக்கிக் கூப்பிடுவோம்; அவர் கேட்டு அதற்குப் பதில் கொடுப்பார். கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள். அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான் (சங்.126:5,6) என்று சங்கீதக்காரன் சொல்லுகிறார்.

வழிதவறிப்போன தன் மகனுக்காக அழுகிற தாயாரின் கண்ணீர் தேவனுடைய இருதயத்தைத் தொடுகிறது. கேட்டுப்போன தன் பிள்ளைகளுக்காக ஒரு தகப்பன் விடுகிற கண்ணீர் பரலோகத்தை அசைக்கிறது. தங்களோடு கல்விகற்கிறவர்களுடைய இரட்சிப்புக்காக இளைஞர்கள் இருதயம் நொறுங்கும்போது, அந்தப் பள்ளியையே கிறிஸ்துவுக்குச் சொந்தமாக்கத்தக்கதாக தேவனுடைய ஆவியானவர் பரலோகத்திலிருந்து இறங்கிவருகிறார். தம்முடைய மக்களின் கண்ணீர் தேவனுக்கு அருமையானது.
என் அலைச்சல்களைத் தேவரீர் எண்ணியிருக்கிறீர்; என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது? (சங்.56:8) என்று சங்கீதக்காரன் சொன்னதை வேதத்தில் வாசிக்கிறோம். நம்முடைய கண்ணீரைச் சேர்த்துவைக்கும் ஒரு துருத்தி அல்லது குப்பி தேவனிடத்திலிருக்கிறது; நம்முடைய இருதய வேதனைகளையெல்லாம் பதிவுசெய்யும் ஒரு புத்தகமும் அவரிடமுண்டு

கிறிஸ்துவற்றவர்களுக்காக நாம் கண்ணீர் விடும்போது, தேவன் அதை மறக்கவில்லையென்பதை நாம் நினைவிற்கொள்ளவேண்டும். அவருடைய காலம் வரும்போது, ஒருநாள் அவர் வானத்தைத் திறந்து நம்முடைய கற்பனைக்கு அதிகமான ஆசீர்வாதங்களை நம்மீது ஊற்றுவார்.

ஒரு ஆலயத்தின் ஜெபஅறையில் புதிய கம்பளம் விரிக்கப்பட்டபோது, அச்சபையின் போதகர் தேவனிடம் ஒரு சிறப்பான வேண்டுகோள் விடுத்ததாக அவர் என்னிடம் கூறினார். ஆண்டவரே, இந்தக் கம்பளம் உம்முடைய மக்களின் கண்ணீரினால் உமக்கு அர்ப்பணிக்கப்படட்டும் என்று நான் ஜெபிக்கிறேன் என்பதே அவர் வேண்டுதல். வெகு சீக்கிரத்தில் அவருடைய ஜெபம் கேட்கப்பட்டது. அத்திருச்சபையில் எழுப்புதல் கூட்டங்கள் ஒழுங்குசெய்யப்பட்டன. தேவன் வல்லமையாய் அசைவாடினார்; இருதய உடைவோடும் பாவ உணர்வோடும் கண்ணீர் வடித்த மக்களால் அந்த அறை நிரம்பியது.

கண்ணீர் தேவனுடைய இருதயத்தைத் தொடுகிறது. மனுக்குலத்தின் வேதனை அவருக்குத் தெரிந்ததால், தங்களுடைய பாவங்களால் காயப்பட்ட மக்களுக்காகத் தம்முடைய சொந்தக் குமாரனை அனுப்பித் தந்தார். வேதபுத்தகத்தில் மிகவும் குறுகியதும் கூடுதல் வல்லமையுள்ளதுமான வசனம், இயேசு கண்ணீர் விட்டார் என்பதுவே. மனிதனாய் அவதரித்த தேவன் கண்ணீர் விட்டாரேயாகில், அவருடைய இருதயத்தை நாம் உணரும்போது, நாமும் கண்ணீர் விடுவோம். ஆத்துமாக்களுக்காக நீங்கள் கண்ணீர் சிந்தினால், தேவன் உங்கள் கண்ணீரைக் குப்பியில் பத்திரப்படுத்துவார் என்பதை மறந்துபோகவேண்டாம். ஒரு நாள் அவர் அந்தக் குப்பியைத் திறப்பார்; அப்போது அதிலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்

Monday, April 22, 2013

ஜெபத்திற்கு பதில் கொடுக்கும் தேவன்

ஜெபசீலன் தன் பெயருக்கேற்ப ஒரு ஜெப வீரர். தன் குடும்பத்தோடு மலையடிவார கிராமம் ஒன்றில் குடியிருந்தார். ஞாயிறு தவிர தினமும் மலையில் ஏறி, விறகுகளை வெட்டி, தனது இரட்டை மாட்டு வண்டியில் ஏற்றி வந்து பக்கத்து கிராமங்களில் விற்று வந்து குடும்பத்தை நடத்தி வந்தார். அவர் பக்தி வைராக்கியம் நிறைந்த கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர். ஆனால் முழுமையான இரட்சிப்பின் அனுபவத்தில் வாழாதவர்.
.
வழக்கம் போல அன்றும் விறகுகளை வெட்டி தன் வண்டியில் ஏற்றி கொண்டு புறப்பட்டார். பலத்த மழை பெய்தது. சற்று நேரம் மழைக்கு ஒதுங்கி விட்டு வண்டியை ஓட்டி வந்தார். வழியில் சக்கரம் சேறு நிறைந்த ஒரு குழியில் மாட்டி கொண்டது. வண்டியை வெளியே கொண்டு வர மாடுகளை முடுக்கி விட்டார். வண்டி நகரவில்லை. கண்ணீரோடு ஜெபித்தார். ஜெபித்து விட்டு வண்டியை ஓட்டி விடலாம் என்ற நம்பிக்கையில் மாடுகளை அதட்டினார். வண்டி ஒரு அடி கூட நகரவில்லை. மீண்டும் ஒரு முறை ஜெபித்தார். பலனில்லை. மூன்றாவது முறை, 'என்ன ஆண்டவரே, நான் உம் பிள்ளையல்லவா? ஜெபத்தில் எதை கேட்டாலும் செய்வேன் என்று சொல்லியிருக்கிறீரே, நான் இரண்டு முறை ஜெபித்தேன். நீங்கள் வண்டியை வெளியே வர செய்யவில்லையே' என்றார். ஆண்டவர் சொன்னார், ' ஜெபசீலன், நீ ஒரு ஜெபவீரன் என்பது உண்மை. நான் ஜெபத்திற்கு பதில் கொடுக்கும் தேவன் என்பதும் உண்மை. அதே நேரத்தில் உன்னுடைய முயற்சியும் வேண்டும். நீ இப்பொழுதே போய் குழியில் மாட்டியிருக்கும் சக்கரத்தை இழு, நான் உனக்கு உதவியாய் இருப்பேன்' என்றார். அப்படியே ஜெபசீலன் சக்கரத்தை இழுக்க முயற்சித்த போது ஆண்டவருடைய கரமும் இணைந்து செயல்பட்டது. வண்டி குழியை விட்டு வெளியே வந்தது. ஆண்டவருக்கு நன்றி கூறி வண்டியை ஓட்டினார்.

Saturday, March 30, 2013

தேவனின் பதில் தாமதிப்பது ஏன்?

குளத்தில் குளித்து கொண்டிருந்த ஒருவன் திடீரென்று அதில் மூழ்கி விட்டான். அனைவரும் பதற்றத்தோடு அதை பார்த்து கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவருக்கு மாத்திரமே நீச்சலடித்து, மூழ்கி கொண்டிருந்தவனை காப்பாற்ற முடியும். ஆனால் அவரோ அமைதியாக இருக்கிறார். தண்ணீரில் மூழ்கினவன் ஒரு தடவை, இரண்டு தடவை மூழ்கி, மூன்றாம் முறையாக மூழ்க ஆரம்பிக்கிறான். அப்போது நீச்சல் தெரிந்த இவர் குளத்திற்குள் பாய்ந்து சென்று நீரில் மூழ்கினவனை தூக்கி கொண்டு வந்து சேர்த்தார். ஏன் அவ்வளவு நேரமும் அமைதியாக இருந்து விட்டு மூன்றாம் முறை மூழ்க ஆரம்பித்தவுடன் பாய்ந்து சென்று காப்பாற்றினார்? பதிலை நீங்களே யூகித்திருப்பீர்கள்! தண்ணீரில் மூழ்கினவனை உடனே நாம் காப்பாற்ற முயற்சித்தால் காப்பாற்றுபனை மூழ்குகிறவன் கட்டி பிடித்து இருவரும் மூழ்க நேரிடும். மூழ்கினவன் தன் சொந்த பெலனை எல்லாம் இழந்தால்தான் அவனை காப்பாற்றுவது எளிது. இதுபோல தான் நமது சில தேவையிலும் தேவன் உதவி செய்ய கடைசி மணித்துளிவரை பொறுத்திருப்பதுண்டு.
 
வேதத்திலே நாம் பார்ப்போமென்றால், சாறிபாத் விதவையின் வாழ்விலும் கடைசி வேளையில் இதே மாதிரியான ஒரு அற்புதம் நிகழ்ந்தது. கடும் பஞ்ச வேளையில் அவளிடமிருந்த எல்லா பொருட்களும் தீர்ந்து விட்டது. கடைசியாக பானையை வழித்தெடுத்தால் ஒரு படி மாவும், ஒரு கரண்டி எண்ணையும் தேறும். அதில் அடை செய்து சாப்பிட்டு விட்டு உயிரை விட எண்ணினாள். அந்த கடைசி கட்டத்தில் ஆண்டவர் எலியாவை அவளிடத்தில் அனுப்புகிறார். சில வேளைகளில் நம்முடைய வாழ்வில் நமது தேவை உச்சக்கட்டத்தை அடையும்போதுதான் தேவன் நமது வாழ்க்கையில் குறுக்கிடுகிறார். காரணம் என்ன? நமது சொந்த முயற்சிகளினால் பல இடங்களுக்கு உதவி நாடி சென்று பலரை சந்தித்து, பல கதவுகளை தட்டி எங்கும் உதவிக்கான வாசல் அடைபடும் போது இறுதியில் ஆண்டவரிடத்தில் வந்து 'ஆண்டவரே நீரே என் தஞ்சம், வேறு கதி இல்லை' என்று நாம் சொல்லும் நிலைக்கு வரும்வரை தேவன் நமது வாழ்வில் குறுக்கிட மாட்டார். நாம் அவரிடம் சரணடைந்து அவர் பாதத்திற்கு வரும்வரை அவர் அமர்ந்திருப்பார்.

Monday, December 10, 2012

கர்த்தருக்கென்று

ஒரு வாலிபன் தொழிலை ஆரம்பித்து தோல்வியை கண்டான். அப்போது அவனுடைய நண்பன் அவனிடம், ‘நீ கர்த்தரை முதலாவது வைக்காவிட்டால், உன் தொழிலால் பயனில்லை’ என்று கூறினான். அப்போது அந்த வாலிபன், ‘என்னுடைய (Cheese) சீஸ் செய்யும் தொழிலில் நான் தேவனை என் பங்காளராக சேர்த்து கொள்கிறேன். அவர் சொல்கிறபடி நான் அவருடன், அவருக்காக உழைப்பேன் என்று தீர்மானித்தவனாக, தன் லாபம் எல்லாவற்றையும் கர்த்தருக்கென்று கொடுத்தபோது, அவனுடைய சீஸ் வியாபாரம் செழித்தோங்கியது. அது யார் என்று கேட்கிறீர்களா? Kraft Cheese Company - யின் முதலாளி J.L. Kraft தான் அவர்.

Sunday, October 28, 2012

ஜெப ஜீவியம்

ஹேமில்ட்டர் என்ற வேத கலாசாலையிலிருந்த மூத்த ஊழியரான பாக்கஸ் என்பவர் மரிக்கும் தருவாயில் இருந்தார். மருத்துவர் பாக்கஸை சோதித்து விட்டு, அறையின் வாசலில் நின்று கொண்டிருந்த அவரது நண்பர்களிடத்தில் ஏதோவொன்றை மிக அமைதியாக சொல்லி விட்டு சென்றார். டாக்டர் சென்றவுடன் படுக்கையிலிருந்து பாக்கஸ், தன்னுடைய நண்பர்களை கையசைத்து கூப்பிட்டு, 'டாக்டர் சொன்னதை என்னிடம் மறைக்காமல் கூறுங்கள்' என்றார். இன்னும் அரைமணி நேரத்திற்கு மேல் உயிருடன் இருக்க முடியாது என்று டாக்டர் சொன்னதை கண்ணீர் மல்க கூறினர். உடனே பாக்கஸ், 'அப்படியானால் என்னை படுக்கையிலிருந்து எடுத்து முழங்காலில் நிறுத்துங்கள். என் வாழ்வின் கடைசி நிமிடங்களில இந்த உலகிற்காக ஜெபிப்பதில் செலவிட விரும்புகிறேன்' என்றார். ஒரு சில நிமிடங்களில் முழங்காலில் நின்றபடியே அவரது உயிர் பிரிந்தது. பல வருடங்களாக தான கடைபிடித்து வந்த ஜெப பழக்கத்தை உயிர் பிரிகிற கடைசி மணித்துளிகளிலும் தவறாமல் கடைபிடித்தார்.

முழங்கால்களால் சாதிக்க முடியும்

ஒரு மிஷனெரி நிறுவனமானது மிஷனெரி ஒருவரை குறிப்பிட்ட பட்டணத்திற்கு ஊழியம் செய்ய அனுப்பியது. உற்சாகமாக சென்ற அவர் அப்பட்டணத்தை சுற்றி பார்த்தார். ஓரிரு நாட்களில் ஊழியத்தை ஆரம்பித்தார். மாதங்கள் பல உருண்டோடின. எவரும் இவரது போதனைக்கு செவிசாய்க்கவில்லை. மக்கள் மிகவும் முரட்டாட்டம் மிக்கவர்களாய் மனம் போன போக்கில் வாழ்ந்து வந்தனர். தினமும் இடைவிடாமல் ஊழியம் செய்தும் ஒரு சிலரை கூட மாற்ற முடியவில்லை. எனவே மிகவும் சோர்வுற்றவராக எனது எல்லா முயற்சியும் பயனற்று போய் விட்டதே என்று நினைத்தவராக பட்டணத்தின் இன்னொரு பகுதிக்கு வந்தார்.
.
அங்குள்ள சாலை அருகில் கல் உடைக்கும் ஒருவரை பார்த்தார். பெரிய பெரிய கற்களை அவர் சம்மட்டியால் உடைத்து கொண்டிருந்தார். ஊழியர் அவரிடம் சென்று, 'ஐயா உங்களால் எப்படி இவ்வளவு பெரிய கடினமான பாறைகளை உடைக்க முடிகிறது?' என்று கேட்டார். அதற்கு கல் உடைப்பவர், 'ஐயா கடினமான பாறையை உடைக்கும்போது. முழங்காலில் நின்று உடைக்க வேண்டும். முழங்காலில் நிற்கும்போது, நமது வல்லமை அதிகரிக்கும். எப்படிப்பட்ட கடினமான பாறையையும் உடைத்து விடலாம்' என்றார். அவர் மூலம் தேவன் தன்னோடு பேசுவதை ஊழியர் ஒரு நொடிப்பொழுதில் புரிந்து கொண்டார். உள்ளத்தில் உற்சாகமடைந்தவராக வீடு திரும்பினார். அன்றிலிருந்து பல மணி நேரம் முழங்காலில் நின்று ஜெபித்து வெற்றி பெற்றார்.
.
உண்மைதான், முழங்காலில் நிற்பதுதான் வெற்றியின் இரகசியம்! வேதத்திலே தானியேல், எலியா, பவுல், எஸ்தர் இவர்களெல்லாம் ஜெபித்து வெற்றி கண்டனர். நாமும் முழங்காலில் நின்று இருதயத்தை ஊற்றும்போது, மிகுந்த பெலனை பெற் முடியும். முழங்கால் ஜெபம் பல தடைகற்களை தகர்த்து வெற்றி பெற செய்யும்.

Thursday, October 18, 2012

ஏன் ஆலயததிற்கு செல்ல வேண்டும்?

ஒரு போதகர் தனது சபைக்கு எப்போதும் வரும் ஒருவர் தொடர்ந்து வராததை கண்டார். சில வாரங்கள் கழித்துஅவர் வராததால்அவரை காண சென்றார். அங்கு அந்த மனிதர்தனியாக நெருப்பு எரியும் இடத்திற்கு பக்கத்தில் அனலுக்காக அமர்ந்திருப்பதை கண்டார். ஆரம்பத்தில் அவரை குசலம் விசாரித்து விட்டுஅவர் பக்கத்தில் போய் அமர்ந்தார். ஆனால் ஒன்றும் பேசவில்லை.

இருவரும் பேசாமல் அமர்ந்து இருந்தனர். அந்த போதகர் நெருப்பு எரிவதையே பார்த்து கொண்டிருந்தார். சற்று நேரம் கழித்து அவர் ஒரு கரண்டியை எடுத்துஎரிந்து கொண்டிருந்த ஒரு கரித்துண்டை எடுத்து தனியே வைத்தார். கனகனவென்று எரிந்து கொண்டிருந்த அந்த கரித்துண்டு சற்று நேரம் ஆனவுடன் சாம்பல் பூத்து போய்அப்படியே அடங்கி அணைந்து போனது.

பின்னர் அந்த போதகர் 'சரி நான் போக வேண்டும்என்று சொல்லி எழுந்தார். போவதற்கு முன்மீண்டும் அந்த கரித்துண்டை எடுத்துநெருப்பில் போட்டார். உடனே அது பற்றி கொண்டு எரிய ஆரம்பித்தது. இதை கவனித்து கொண்டிருந்த அந்த மனிதர், ' போதகர் ஐயா அவர்களே உங்களுடைய அமைதியான இந்த செய்திக்காக நன்றி! நான் அடுத்த வாரம் உங்களை ஆலயத்தில் பார்க்கிறேன்என்று கூறினார்.

ஜெபமும் வெட்டுக்கிளியும்


நாம் எல்லோரும் வெட்டுக்கிளிகளை பார்த்திருக்கிறோம். அது தனியாக தாவி தாவி வரும்போது அதனால் யாரும் பயப்படுவதில்லை. அதில் எந்த முக்கியத்துவமும் இல்லை. ஆனால் அதுவே ஒரு முழு படையாக வரும்போது, வழியில் காணப்படும் எந்தவிதமான பச்சையான இலைகளையும் விட்டுவைக்காமல், முழு பயிர்களையும் மேய்ந்து போடும்.

வெட்டுக்கிளிகள் ஒன்றாக இணைந்து செயலாற்றும் தன்மை கொண்டவை. தனியாக அவை எவற்றை செய்ய முடியாதோ அவற்றை அவைகள் கூட்டமாக இருக்கும்போது செய்து முடித்துவிடும். பூமியில் சிறியவைகளாயிருந்தும், மகா ஞானமுள்ளவைகள் நான்குண்டு என்று நீதிமொழிகளில் ஆகூர் என்னும் ஞானி, அதில்  வெட்டுக்கிளிகளைக் குறித்து,  ராஜா இல்லாதிருந்தும், பவுஞ்சு பவுஞ்சாய்ப் புறப்படுகிற வெட்டுக்கிளிகள், அவை மகா ஞானமுள்ளவைகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த மிகச்சிறிய உயிரினமான வெட்டுக்கிளிகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம் உண்டு. கிறிஸ்துவின் விசுவாசிகள், தாங்கள் தனியாக இருந்து செய்யும் காரியங்களைவிட ஒரு குழுவாக, ஒரே மனதாக ஜெபித்து கர்த்தருக்கென்று உழைக்கும் போது, அரிய பெரிய காரியங்களை செய்யலாம், பெரிய சேனையாக எழும்பி, கர்த்தர் தமது சபையை கொண்டு செய்ய இருக்கும் நோக்கத்தை நிறைவேற்ற முடியும்

Wednesday, October 10, 2012

தாயார் ஒரு ஜெப வீராங்கனை

சீனாவில் எழுப்புதலுக்கு காரணமாயிருந்த ஹட்சன் டெய்லர் என்ற ஊழியரை  குறித்து அநேகருக்கு தெரியும். அவருக்கு ஜெபிக்கும் தாயார் இருந்தார் என்றும், அவர்களுடைய ஜெபத்தினால் அவர் இரட்சிக்கப்பட்டார் என்றும் ஒருவேளை நாம் அறிந்திருக்கலாம். அந்த முழு சம்பவமும் நாம் அறிந்திருப்பது நமது குடும்பங்களையும் தேவன் ஆசீர்வதிப்பதற்கு ஏதுவாக அமையும்.ஹட்சனின் தாயார் ஒரு ஜெப வீராங்கனை. அவர்கள் எப்போதும் ஹட்சன் ஒரு பெரிய தேவ ஊழியராக வேண்டும் என்று ஜெபித்து வந்தார்கள். ஆனால் ஹட்சன் தனது 15ஆவது வயதில் ஒரு பேங்கில் வேலைக்கு சேர்ந்து, ஜெபிக்க மறந்து, கிறிஸ்தவர்களை கேலி கிண்டல் செய்து, தேவனற்றவராகவே வாழ்ந்து வந்தார். அது அவருடைய தாயாருக்கு மிகவும் வருத்தமாகவே இருந்து வந்தது. ஹட்சனுக்கு இரண்டு வயது இளைய சகோதரி அமிலியா இரட்சிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கும் ஹட்சனை குறித்து அவர் இரட்சிக்கப்பட வேண்டுமே என்ற பாரம் இருந்தது. தொடர்ந்து அவர்களும் ஜெபித்து வந்தார்கள்.
.
ஒரு முறை ஹட்சனின் தாயார் அவர்களுடைய தோழியை சந்திக்க 70 மைல் தூரம் கடந்து செல்ல வேண்டி வந்தது. அவர்கள் போய் சேர்ந்த அன்று மதியம் அவர்களுடைய உள்ளத்தில் ஹட்சனுக்காக ஜெபிக்க வேண்டும் என்று உந்துதல் பெற்றார்கள். உடனே அவர்கள் உள்ளே சென்று, கதவை தாழிட்டு, கர்த்தரிடம் ஹட்சனுக்காக மன்றாட தொடங்கினார்கள். ஆத்தனை தூரத்தில் தன் மகன் எங்கிருக்கிறான், என்ன செய்கிறான் என்று அறியாதவர்களாக, அவனுக்காக ஊக்கமாய் ஜெபித்து கொண்டிருந்தார்கள்.
.
அதே மதிய வேளையில் ஹட்சன் அந்த நாளில் அவருக்கு வேலை இல்லாமல் விடுமுறை தினமாக இருந்தபடியால், தன் தகப்பனின் அறைக்குள் சென்று ஏதாவது புத்தகம் எடுத்து படிக்கலாம் என்று தேட சென்றார். அப்பொழுது அவருக்கு 'எல்லாம் முடிந்தது' என்ற கிறிஸ்தவ கைப்பிரதி கிடைத்தது. அதை படிக்க ஆரம்பித்த ஹட்சனோடு ஆவியானவர் இடைபட ஆரம்பித்தார். தேவனாலே அன்றி தன்னால் எதையும் செய்ய முடியாதென்றும், தேவனை தன் முழு இருதயத்தோடும் நேசிக்கவும், விசுவாசிக்கவும் மாத்திரமே செய்ய வேண்டும் என்பதை அவர் அறிந்தவராக, அப்போதே அவர் தன்னுடைய இருதயத்தை தேவனுக்கு அர்ப்பணித்தார். தன் பாவங்களை அறிக்கையிட்டு, புது மனிதனாக வெளிவந்தார்.
.
அவருடைய தாயார் ஜெபித்த அதே மதிய வேளையில் தானே இந்த அற்புதம் நிகழ்ந்தது. அந்த தாயார் ஜெபித்து முடித்து, தேவன் தன் ஜெபத்தை கேட்டார் என்ற உறுதியுடன் கர்த்தரை துதிக்க ஆரம்பித்தார்கள்.
.
ஹட்சன் தன் புதிய அனுபவத்தை தன் சகோதரி அமிலியாவிடம் சொல்லி, 'அம்மாவிற்கு இப்போது இதை தெரியப்படுத்தாதே, அவர்கள் வரும்போது நானே அவர்களிடம் சொல்வேன்' என்று கூறினார். சகோதரியும் அதற்கு ஒப்புக்கொண்டு, தேவன் தன் சகோதரனை சந்தித்ததற்காக அவரை துதித்தார்கள்.
.
இரண்டு வாரம் கழித்து அவருடைய தாயார் வீட்டிற்கு வந்தபோது, ஹட்சன் அவர்களுக்கு எதிர்கொண்டோடி வரவேற்றார். அவர் எதுவும் சொல்ல ஆரம்பிக்கிறதற்கு முன்பே அவருடைய தாயார், 'மகனே எனக்கு தெரியும், நீ என்ன சொல்ல வருகிறாய் என்று. நான் ஏற்கனவே கர்த்தருக்கு அதற்காக நன்றி செலுத்தி கொண்டிருக்கிறேன்' என்று கூறினார்கள். ஹட்சனுக்கு புரியவில்லை, ஒருவேளை அமிலியாதான் சொல்லியிருப்பார்கள் என்று நினைத்து, 'அமிலியா உங்களுக்கு தெரிவித்தாளா?' என்று கேட்டார். அதற்கு தாயார், 'இல்லை, தேவனே என் இருதயத்தில் நீ இரட்சிக்கப்பட்ட அன்று மதியமே எனக்கு கூறினார்' என்று சொன்னார்கள். 'நான் சமீபத்திற்கு மாத்திரமா தேவன், தூரத்திற்கும் தேவன் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார்' (எரேமியா 23:23). ஆமென்.

Saturday, September 8, 2012

ஜெபத்தினால் சாத்தான் ஓடிப் போவான்

ஒரு முறை பாலைவனப்பகுதியில் ஒரு சில கிறிஸ்தவ வியாபாரிகள் பிரயாணம் செய்தார்கள். அப்போது அவர்களை கண்ட வழியிலுள்ள கொள்ளையர்கள் கூட்டம் ஒன்று அவர்களிடம் இருககும் பெரிய தொகையை கொள்ளையடிக்க பின்தொடர்ந்தது. இரவு நேரமானதும் வியாபாரிகள் ஒரு கூடாரம் போட்டு அங்கு தங்கினர். இது தான் நல்ல சமயம் என அறிந்த கொள்ளையர் கூட்டம் அங்கு சென்றது. ஆனால் அவர்களுக்கு பெரிய அதிர்ச்சி! காரணம் அவர்களின் கூடாரத்தை சுற்றிலும் ஒரு கோட்டை போல இருந்ததே காரணம்! மிகவும் குழப்பமடைந்த கொள்ளையர்கள் 'நாளை பார்த்து கொள்வோம்' என திரும்பி சென்றனர். மறுநாளும் அதே நிகழ்ச்சிதான். அடுத்தநாள் வியாபாரிகளிடம் கொள்ளை கூட்ட தலைவன் சென்று விசாரித்தபோது, வியாபாரிகள் அதிசயித்து தேவனை மகிமைப்படுத்தினர். 'நாங்க்ள ஒவ்வொரு நாளும் இரவில் கைக்கோர்த்து ஜெபிப்பது வழக்கம். விட்டு வந்த எங்கள் குடும்பத்தினரை தேவன் பாதுகாக்கும்படியாகவும், எங்கள் பிரயாணத்திலும் தேவகரம் இருக்கும்படியாகவும் ஜெபிப்போம். அந்த ஜெபம் கோட்டை போல் எழும்பி எங்களை பாதுகாத்துள்ளது' என்றார். கொள்ளையர் தலைவன் ஜெபத்தை கேட்கும் இப்படிப்பட்ட தேவன் ஒருவர் இருக்கிறாரா என எண்ணி வியந்து, தேவனை ஏற்று கொண்டான்