எங்கள் தளத்தில் உங்களுக்கு பிடித்த கதைகளை பதிவு செய்துள்ளோம். உங்கள் சொந்த வாழ்க்கைக்கும், குடும்ப வாழ்க்கைக்கும், குழந்தைகளோடு பகிர்ந்துகொள்வதற்கும், ஊழியத்தின் பாதையில் பகிர்ந்து கொள்வதற்கும் எனக்கு பிடித்த கதைகளை இனைத்துள்ளோம். படியுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள்
Showing posts with label இரட்சிப்பு. Show all posts
Showing posts with label இரட்சிப்பு. Show all posts
Thursday, May 10, 2018
Saturday, August 2, 2014
உணர்வில்லாத இருதயம்
.
அதைப்போலவே ஒரு
ஐசுவரியவான் தான் நரகத்தின் அக்கினியில் எரியும்போது,
லாசருவை தன் சகோதரரிடத்தில் அனுப்பும்படிக்கும்,
அவர்கள் அந்த நரக அக்கினியில் சிக்கி கொள்ளாதபடி லாசரு
சென்று எச்சரிக்கும்படியாகவும் அவனை அவனுடைய தகப்பன்
வீட்டிற்கு அனுப்பும்படி ஆபிரகாமிடம் கெஞ்சுகிறான் (லூக்கா 16:27-28). 'ஆபிரகாம் அவனை நோக்கி:
அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு,
அவர்களுக்கு அவர்கள் செவி கொடுக்கட்டும் என்றான். அதற்கு
அவன்: அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே,
மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப் போனால்
மனந்திரும்புவார்கள் என்றான். அதற்கு அவன்: அவர்கள்
மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால்,
மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும்,
நம்பமாட்டார்கள் என்று சொன்னான் என்றார்' (லூக்கா 16:29-31). எத்தனை சோகமான காட்சி!
அத்தனை நாட்கள் பூமியிலிருந்த நாட்களில் தன்னுடைய
சகோதரர்கள் மேல் இல்லாத கரிசனை நரகத்தில் எரியும்போது
அந்த ஐசுவரியவானுக்கு வருகிறது, ஆனால் ஏற்கனவே காலம்
கடந்து விட்டபடியால், ஒன்றுமே செய்யமுடியாத நிலைமை!
அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு
ஐந்துபேர் சகோதரருண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த
இடத்துக்கு வராதபடி, அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக
அறிவிக்கும்பொருட்டு, நீர் அவனை என் தகப்பன் வீட்டுக்கு
அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன்
என்றான். - (லூக்கா 16:27-28).
Wednesday, July 2, 2014
புல்லுக்கு ஒப்பான ஜீவியம்
.
நம்முடைய
வாழ்க்கை கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற
புகையைப்போலிருக்கிறது என்று வேதம் சொல்கிறது. நம்முடைய
வாழ்க்கை அத்தனை குறைவானது. நாளை நமக்கு என்ன நடக்கும்
என்று நமக்கு தெரியாது. மனிதனுக்கு தான் இன்று தான்
மரிக்கபோகிறோம் என்று தெரிந்தால் கடைசி நிமிடம் வரை
பாவம் செய்து, கடைசி நிமிடத்தில் மனம் திரும்பி
கொள்ளலாம் என்று பாவத்திற்கு மேல் பாவம் செய்து கொண்டே
இருப்பான். அதனால்தான் கர்த்தர் அதை இரகசியமாகவே
வைத்திருக்கிறார்.
நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள்
ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு
தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே. -
(யாக்கோபு 4:14).
Tuesday, June 3, 2014
சத்தம் கேட்கும் ஆடு
.
'என் சத்தத்தை
கேட்டு என் பின்னே வாருங்கள்' என்று நம் நேசர்
இயேசுகிறிஸ்து வழிதவறி போன ஆடுகளை நோக்கி அழைத்து கொண்டே
இருக்கிறார். இயேசுகிறிஸ்துவே நல்ல மேய்ப்பர்;. 'வாசலைக்
காக்கிறவன் அவனுக்குத் திறக்கிறான்; ஆடுகளும் அவன்
சத்தத்துக்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய
ஆடுகளைப் பேர்சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வெளியே
நடத்திக் கொண்டுபோகிறான்' என்று யோவான் 10:3
ல் பார்க்கிறோம். நம் ஒவ்வொருவரையும் பேர் சொல்லி
அறிந்திருக்கிற தேவன் நம் தேவன். அவர் நம்மை அழைத்து,
நம்மை புல்லுள்ள இடங்களுக்கு நடத்தி கொண்டு
செல்கிறார்.
.
இந்த உலகத்தின்
பாவத்திலும், துன்பத்திலும், வெளியே வர முடியாதபடி
தவிக்கிற ஒவ்வொருவரையும் தேவன் அழைத்து, என் பின்னே
வாருங்கள் என்று அழைக்கிறார். அப்படி அவருடைய சத்தத்தை
கேட்டு வரும்போது, நாம் பத்திரமாக கரை கொண்டு
சேர்க்கப்படுவோம்
|
Sunday, June 1, 2014
நம் வாயின் வார்த்தைகள்
Monday, November 4, 2013
முழுவதுமாக தன்னை கொடுத்த இயேசு
ஒரு பணக்கார தகப்பனும் மகனும்
புகழ்பெற்ற ஓவியர்கள் வரைந்த ஓவியங்களை சேர்ப்பதில்
மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில்
வியட்நாம் போர் நடைபெறவே, மகன் அந்த போருக்கு போக
வேண்டியதாயிருந்தது. அவன் அந்தப் போரில் மிகவும் நன்றாக
போரிட்டு, மற்றும் அநேக போர் வீரர்களை காப்பாற்றினான்.
அப்படி ஒரு வீரனை காப்பாற்றும்போது, அவன் நெஞ்சில்
குண்டு பாய்ந்து அந்த இடத்திலேயே மரிக்க நேரிட்டது.
தகப்பனுக்கு அந்த செய்தி போய் தனது ஒரே மகன் இறந்த
துக்கத்திலே இருந்தார். ஒரு மாதம் கழித்து அவர் வீட்டு
கதவு தட்டப்பட்டது. கதவை திறந்த போது ஒரு வாலிபன்
நின்றுக் கொண்டிருந்தான். அவன் சொன்னான், ‘உங்கள் மகன் காப்பாற்றிய போர் வீரரில் நானும் ஒருவன். உங்கள் மகன் உங்களைப் பற்றி அடிக்கடி பேசுவான். நீங்கள் ஓவியங்களை சேர்த்து வைத்துள்ளீர்கள் என்று. நான் ஒரு பெரிய ஓவியன் அல்ல, ஆனால் உங்கள் மகனை நான் வரைந்துள்ளேன். தயவுசெய்து ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று வேண்டிக் கொணடான். தகப்பன் எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்டதற்கு, ‘இல்லை இல்லை உங்கள் மகனால்தான் நான் இன்று உயிரோடு இருக்கிறேன்’ என்று கூறி படத்தைக் கொடுத்து விட்டுச் சென்றான். அவர் அந்த படத்தை வீட்டில் மாட்டி வைத்து, வருகிற ஒவ்வொருவருக்கும் காட்டினார்.
.
சில மாதங்கள்
கழித்து அவரும் மரித்தார். அவருடைய ஓவியங்கள் ஏலத்திற்கு
வந்தன. புகழ்பெற்ற ஓவியங்களாக இருந்தபடியால் அவற்றை
வாங்க அநேகர் வந்திருந்தனர். ஏலத்தை நடத்துபவர்,
முதலாவது அவருடைய மகனின் அந்தப் படத்தைக் காட்டி ‘யார்
இதை வாங்க முன்வருகிறீர்கள்’ என்று ஏலத்தை ஆரம்பித்தார்.
அங்கு அமைதி நிலவியது. திரும்பவும் அவர் 'யார்
வாங்குகிறீர்கள்? 200 டாலர் அல்லது 300 டாலர்? எவ்வளவு?' என்று
கேட்டார். பின்னாலிருந்து ஒரு குரல் ‘நாங்கள் அவருடைய
மகனின் படத்தை வாங்க வரவில்லை. மற்ற ஓவியங்களை ஏலமிட
ஆரம்பியுங்கள் என்று கேட்டது. ஏலமிடுபவரோ, ‘அவருடைய
மகன்; அவருடைய மகன் யார் வாங்க முன்வரகிறீர்க்ள்’ என்று
தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார். கடைசியில்
பின்னாலிருந்து ஒரு குரல், அந்த வீட்டில்
தோட்டக்காரனாயிருந்தவர், 10 டாலர் எனக் குரல் கொடுத்தார்.
உடனே ஏலமிடுபவர் யாராவது 20 டாலர் என்றுக் கேட்டார்.
யாரும் பதில் சொல்லவில்லை. ‘10 டாலர் ஒரு தரம், இரண்டு தரம்,
மூன்று தரம்’ என்று ஏலமிட்டு அந்த படத்தை அந்தத்
தோட்டக்காரனுக்குக் கொடுத்தார். மற்றவர்கள் பொறுமையை
இழந்து, ‘மற்ற ஓவியங்களை ஆரம்பியுங்கள்’ என்றுக்
கத்தினார்கள். ஏலமிடுபவர், ‘மன்னிக்கவும் ஏலம்
முடிந்தது’ என்று கூறினார். மற்றவர்கள் ‘ஏன்’ என்றதற்கு
‘எனக்கு முன்னமே இரகசிய உயிலைப் பற்றி சொல்லப்பட்டது.
யார் அவருடைய மகனுடைய ஓவியத்தை வாங்குகிறார்களோ
அவர்களுக்கு அவருடைய எஸ்டேட்டும் எல்லா ஓவியங்களும்
சொந்தம் என்று அவர் உயிலில் எழுதி வைத்துள்ளார். ஆகையால்
யார் மகனுடைய ஓவியத்தை வாங்கினார்களோ அவர்களுக்கே
எல்லாம் சொந்தம்’ என்று கூறி ஏலத்தை முடித்தார்.
.
2000
வருடங்களுக்கு முன்பு தமது சொந்தக் குமாரன் என்றும்
பாராமல், அவரை ஒப்புக் கொடுத்த தேவன் ‘இதோ என் மகன்,
அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை
ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும்
தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்
கொடுத்தார் - யோவான் 1:12. மட்டுமல்ல,
அவரோடுகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளி
இருக்கிறார். ஆனால், எத்தனைப் பேர் அவரை புறக்கணித்து,
கிறிஸ்து கிறிஸ்தவர்களுக்கே சொந்தம் என்று அவரை
அடையாமற் இருக்கிறார்க்ள. கிறிஸ்துவை ஏற்றுக்
கொண்டவர்களுக்கு எத்தனை பாக்கியம்! மற்றவர்களும் இந்த
பாக்கியத்தை அடையும்படிக்கு நாம் திறப்பின் வாசலில்
நிற்போமா? அவர்களுக்கு சத்தியத்தை சொல்வோமா?
Sunday, August 4, 2013
இரட்சிப்பின் வழி
ஒரு முறை பில்லி
கிரகாம் அவர்கள் இரட்சிப்பைக் குறித்து ஒரு உதாரணத்தின்
மூலமாக விளக்கினார். அவர் சொன்னது, 'அநேகர் நான் கர்த்தரை
விசுவாசிக்கிறேன், வேதாகமத்தை விசுவாசிக்கிறேன், சபை
கூடுதலை விசுவாசிக்கிறேன் இது போதாதா நான் பரலோகம்
போவதற்கு? என்று வாதிடுகிறார்கள். இல்லை, இது ஒரு போதும்
போதாது, இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ள
வேண்டும். உதாரணத்திற்கு, ஒருவன் ஒரு இடத்திற்கு செல்ல
வேண்டும் என்று விமான டிக்கெட் வாங்கி, குறிப்பிட்ட
நேரத்திற்கு ஏர்போர்ட்டும் போய் சேர்ந்து விடலாம். அந்த
விமானம் மிகவும் உயர்ரக விமானம். அது அவனை சரியாக அவன்
செல்ல வேண்டிய இடத்திற்கு கொண்டு செல்லும் என்பதில்
சந்தேகமேயில்லை.
.
எல்லாம் ரெடியாக இருக்கிறது. விமானம் புறப்பட சில நிமிடங்களே இருக்கிறது. அவனுடைய பெயர் சொல்லி கூப்பிடுகிறார்கள். ஆனால் அவனோ விமானத்தில் ஏறாமல் காலம் தாழ்த்தி கொண்டே இருக்கிறான். விமானத்தின் கதவு மூடப்படுகிறது, விமானம் தளத்தில் ஓடி, உயரே எழும்பி பறக்க ஆரம்பிக்கிறது. அந்த மனிதன் விமானத்தின் மேல், அது தன்னை உரிய இடத்தில் கொண்டு போய் சேர்க்கும் என்று நம்பிக்கை வைத்திருந்தான். ஆனால் அதில் அவன் போய் ஏறவில்லை. எல்லாமே தயாராக இருந்தும், அவன் அதில் போய் ஏறவில்லை. அதனால் அவனால் தான் போய் சேர வேண்டிய இடத்திற்கு போய் சேர முடியவில்லை. அதுப் போலத்தான் ஒரு வேளை நீங்கள் இயேசுகிறிஸ்துவின் மேலும், வேதத்தின் மேலும், அவருடைய வருகையின் மேலும் நம்பிக்கை வைக்கலாம், ஆனால் நீங்கள் அவரை ஏற்றுக் கொள்ளாவிட்டால், உங்கள் நம்பிக்கை எல்லாமே வீண்' என்று கூறினார்.
.
எல்லாம் ரெடியாக இருக்கிறது. விமானம் புறப்பட சில நிமிடங்களே இருக்கிறது. அவனுடைய பெயர் சொல்லி கூப்பிடுகிறார்கள். ஆனால் அவனோ விமானத்தில் ஏறாமல் காலம் தாழ்த்தி கொண்டே இருக்கிறான். விமானத்தின் கதவு மூடப்படுகிறது, விமானம் தளத்தில் ஓடி, உயரே எழும்பி பறக்க ஆரம்பிக்கிறது. அந்த மனிதன் விமானத்தின் மேல், அது தன்னை உரிய இடத்தில் கொண்டு போய் சேர்க்கும் என்று நம்பிக்கை வைத்திருந்தான். ஆனால் அதில் அவன் போய் ஏறவில்லை. எல்லாமே தயாராக இருந்தும், அவன் அதில் போய் ஏறவில்லை. அதனால் அவனால் தான் போய் சேர வேண்டிய இடத்திற்கு போய் சேர முடியவில்லை. அதுப் போலத்தான் ஒரு வேளை நீங்கள் இயேசுகிறிஸ்துவின் மேலும், வேதத்தின் மேலும், அவருடைய வருகையின் மேலும் நம்பிக்கை வைக்கலாம், ஆனால் நீங்கள் அவரை ஏற்றுக் கொள்ளாவிட்டால், உங்கள் நம்பிக்கை எல்லாமே வீண்' என்று கூறினார்.
Saturday, July 20, 2013
பாவத்தை வளர்க்காதே - அது நம்மை கொல்லும்
ஒரு காட்டில் ஆடு ஒன்றுக்கு இரண்டு குட்டிகள் இருந்தன. அவைகளுக்கு
நள்ளி, புள்ளி என்று பெயரிட்டுச் செல்லமாக வளர்த்து வந்தது. குட்டிகளும் வளர்ந்து
சுயமாக வாழ வேண்டிய நேரம் வந்து விட்டது. எதிரிகளிடம் அகப்பட்டுக்
கொள்ளாமல் வாழ்க்கையை நன்றாக அனுபவிக்கச் சொல்லித் தாய் ஆடு அனுப்பி
வைத்தது. இரண்டும் தனித்தனியாக வீடுகள் கட்டிக் கொண்டு வாழ ஆரம்பித்தன.
நள்ளி இரக்க குணமுடைய அறிவாளி.. மற்றவர்களைக் கவரக்கூடிய பேச்சுத்
திறமையும் அதற்கு இருந்தது. அன்பினால் கொடிய விலங்குகளையும் நண்பர்களாக்கி,
காட்டில் யாரும் பயமில்லா வாழ்க்கை வாழ எண்ணியது. முதலில் அதனுடைய
போதனையைச் சிறிய பிராணிகளிடம் ஆரம்பிக்க, நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனுடைய
கனிவான அர்த்தமுள்ள சிந்தனையைத் தூண்டும் பேச்சுக்கள் அவைகளைக் கவர்ந்து
இழுத்தன.
தினமும் நள்ளி வீட்டின் முன் உபதேசம் நடக்கும். நாளுக்கு நாள் பல புதிய பிராணிகள் சேர்ந்து கொண்டே
இருந்தன. ஒரு நாள் பெரிய ஓநாய் ஒன்று அங்கு வந்தது. அதைப் பார்த்து மற்ற
பிராணிகள் பயந்து நடுங்கின. நள்ளி தன் கவர்ச்சிப் பேச்சால் அவைகளுடைய
பயத்தைப் போக்கியதுடன் ஓநாயைத் தன் அருகில் கூப்பிட்டு உட்கார வைத்துக்
கொண்டது.. திருப்தியாகச் சாப்பிட்டு வந்த ஓநாய்க்குப் பசியில்லை. நள்ளியின்
பேச்சை ரசித்துக் கேட்டுத் தலையாட்டிக் கொண்டிருந்தது. கூட்டம்
முடிந்தவுடன் கைகுலுக்கி ஓநாயை அனுப்பி வைத்தது.
எப்பொழுது வேண்டுமானாலும் தாழ்ப்பாள் போடாத தன் வீட்டுக்கு வரச் சொன்னது..
இந்த அதிசயத்தைப் பார்த்த மற்ற பிராணிகள் நள்ளியைப் பாராட்டின. ஆனால்
புத்திசாலியான புள்ளி அசைவ உணவால் வாழும் மிருகங்களின் ஆபத்தை எடுத்துக்
கூறியது. ஆனால், நள்ளி அதைக் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. அன்பு கலந்த
உபதேசத்தால் கொடிய மிருகங்களின் உணவுப் பழக்கத்தையே மாற்றி விடப்போவதாகச்
சொன்னது. 'கூரான கொம்புகள் உள்ள நமக்குப் பகலில் இந்த ஓநாயால் பயம்
கிடையாது; இரவில் பாதுகாப்புக்காகக் கதவையாவது தாள் போட்டுக்ககொள்' என்று
அது சொன்னதையும் அலட்சியம் செய்து விட்டது நள்ளி.
ஒரு நாள் ஓநாய்க்கு இரை கிடைக்கவில்லை. அலைந்து திரிந்ததால் அதற்கு
அகோரப் பசி உண்டான போது நள்ளியின் நினைவு வந்தது. 'பசி வந்தால் பத்தும்
பறந்து போகும்' என்பது போல் அன்று இரவு எல்லோரும் தூங்கிய பின் நள்ளி
வீட்டுக்குச் சென்றது. தாழ்ப்பாள் போடாத கதவைத் திறந்து உள்ளே சென்றபோது
நள்ளி நன்றாக துங்கிக் கொண்டிருந்தது.
பாவம் நள்ளி, சிறிது நேரத்தில் ஓநாய்க்கு இரை ஆகிப்போனது..
நள்ளியின் அன்பும், அருளும், பண்பும், பாசமும், இரக்க குணமும்
பயனில்லாமல் போய்விட்டன. அடுத்த நாள் புள்ளி நள்ளி வீட்டிற்கு வந்து
அங்கிருந்த எலும்புகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தது. அதற்கு ஓநாய் மேல்
சந்தேகம் வர, அதனால் வரும் ஆபத்திலிருந்து தப்பிக்க அறிவோடு சிந்தனை செய்ய
ஆரம்பித்தது.
நள்ளியைச் சாப்பிட்ட ஓநாய்க்கு அதன் சுவை மிகவும் பிடித்திருந்தது.
புள்ளியையும் கபளீகரம் செய்ய இரவில் அங்கு வந்து வட்டமிட்டுக்
கொண்டிருந்தது. ஜன்னல் வழியாக இதைப் புள்ளி கவனித்தது. கதவு தாழ்ப்பாள்
போட்டிருந்ததால் ஓநாய்க்கு உள்ளே போக முடியவில்லை. ஆனால் கதவைத் தள்ளிப்
பார்ப்பதைப் பார்த்த புத்திசாலியான புள்ளி அதை ஒழித்துக் கட்ட ஒரு வழி
கண்டுபிடித்தது.
மறு நாள் இரவு புள்ளி கதவைத் தாள் போடாமல் ஓநாய் நுழையும் இடத்தில்
கருப்பான சுறுக்குக் கயிறை வைத்து அதன் மறு நுனியை ஜன்னல் கம்பியில் கட்டி
வைத்தது. கதவைச் சிறிதாகத் திறந்து வைத்து வெளியே மறைவான இடத்தில் ஒளிந்து
கொண்டது..
எப்பொழுதும் போல் ஓநாய் அன்றும் புள்ளி வீட்டுக்கு வந்தது. கதவு
திறந்திருப்பதைப் பார்த்தவுடன் அதற்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. புள்ளியைக்
கபளீகரம் செய்ய அவசரமாக உள்ளே நுழைந்தது. கறுப்பாக இருந்த சுருக்குக் கயிறு
அதன் கண்ணில் படவில்லை. கழுத்து நன்றாக மாட்டிக் கொண்டு கயிறு இறுக்க
ஆரம்பித்தது. பயந்துபோய் ஓநாய் துள்ளத் துள்ள, கழுத்தில் இறுக்கம் அதிகமாகி
விட்டது. குரல்வளை நசுங்கி மூச்சுத் திணறி இறந்து போனது.. அன்றிலிருந்து
ஓநாய் பயமில்லாமல் மகிழ்ச்சியாகப் புள்ளி வாழ்ந்தது.
நள்ளியின் அன்பு அதைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடப் பயன் படவில்லை.
ஆனால், புள்ளிக்கு அதனுடைய புத்திசாலித்தனம் உதவியது. அதனால்
புத்திசாலித்தனத்தோடு அன்பு இருந்தால்தான் நாமும் வாழலாம்; மற்றவர்களையும்
திருத்தி வாழ வைக்க முடியும்.
கதையை கவனமாக கேட்ட சந்தர் புத்திசாலியாக இருப்பதோடு நல்லவனாகவும்
இருக்கப் போவதாகச் சொன்னான். புவனாவும் அதை ஆமோதிக், பாட்டி அவர்களை
அணைத்து உச்சி முகர்ந்தாள். அன்பு ஸ்பரிசம் அனைவரையும் விரைவில் ஆனந்தமாகத்
தூங்க வைத்தது.
Saturday, March 30, 2013
இலவசமாய் கிடைக்கும் இரட்சிப்பு
இங்கிலாந்தை சேர்ந்த அநேக வீடுகளுக்கு
சொந்தக்காரரான ஒருவர், புதிதாய்
இரட்சிக்கப்பட்டிருந்தபடியால், தன் வீடுகளில்
தங்கியிருக்கும், வாடகை குடிமக்களுக்கு, தேவனுடைய
இரட்சிப்பு எப்படி இலவசம் என்பதை வெளிப்படுத்த வேண்டி,
தனக்கு சொந்தமான வீடு மற்றும் நிலங்களின் சுவற்றில், ஒரு
பெரிய போஸ்டர் ஒட்டி, குறிப்பிட்ட நாளில் காலை பத்து
மணியிலிருந்து, 12 மணிவரை தான் ஒரு குறிப்பிட்ட லாட்ஜில்
இருக்கப் போவதாகவும், யார்யார் தன்னிடம் கடன்
பட்டிருக்கிறார்களோ, அவர்கள் வந்து தங்களுடைய கடன்
பத்திரங்களை காட்டினால் அவர்களுக்கு அது
மன்னிக்கப்படும் என்றும் எழுதி அந்த இடங்களில்
ஒட்டியிருந்தார்.
எல்லாரும்
பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய
கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு
நீதிமான்களாக்கப்படுகிறார்கள். (ரோமர்
3:23:24)
அநேகர் அந்த
போஸ்டரை பார்த்தார்கள். அவர்களுக்கு நம்பிக்கை வரவில்லை.
இதுப்போல முட்டாள் தனமாக யாராவது செய்வார்களா என்று
அவர்கள் ஒருவரோடொருவர் பேசி கொண்டார்கள். சிலர் இதில்
ஏதோ தந்திரம் இருப்பதாக சொல்லி கொண்டார்கள். குறிப்பிட்ட
அந்த நாள் வந்த போது, அந்த லாட்ஜின் முன் ஒரு பெரிய
கூட்டம் கூடி இருந்தது. சரியாக தான் சொன்னபடியே, அந்த
வீட்டு சொந்தக்காரர் ஓரு காரில் வந்து இறங்கினார்.
யாரிடமும் ஒன்றும் பேசாமல், உள்ளே போய் அலுவலகத்தில்
அமர்ந்தார். வெளியே கதவு சாத்தப்பட்டிருந்தது.
கதவுக்கு
வெளியே பெரிய கூட்டம். ஓவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை
தெரிவித்து கொண்டு வெளியே நின்றிருந்தார்கள்.
நிச்சயமாகவே அவர் நம்முடைய கடன்களை மன்னித்து விடுவாரா?
ஒருவளை நாம் உள்ளே போனால் நம்மை அவர் முட்டாள் என்று
நினைத்து தள்ளிவிடுவாரா? நான் முதலில் போக மாட்டேன், வேறு
யாராவது போகட்டும் பின் நான் போகிறேன் என்று
ஒவ்வொருவரும் பேசி கொண்டு நின்றிருந்தார்களே ஒழிய
யாரும் முதலில் போக துணியவில்லை. அப்படியே நேரம் கழிந்து
கொண்டிருந்தது.
கடைசியல் 12
மணி ஆகப்போகும் நேரம், ஒரு வயதான தம்பதியினர், அங்கு
வந்தார்கள். அவர்கள் தங்களுடைய கடன் பத்திரங்களை கையில்
வைத்து கொண்டு, அங்கிருந்த கூட்டத்திடம் ‘வீட்டு
சொந்தகாரர் உள்ளே இருக்கிறாரா?’ என்று கேட்டனர், ‘ஆம்
இருக்கிறார் ஆனால் இதுவரை யாருக்கும் கடன்
மன்னிக்கப்படவில்லை’ என்று கூறினர். அப்போது அந்த
தம்பதியினர் கண்ணீருடன், ‘அவர் ஒட்டியிருந்த போஸ்டர்களை
பார்த்து நாங்கள் தொலை தூரத்திலிருந்து வந்தோம், இது
பொய்யென்று எங்களுக்கு தெரியாது’ என்று திரும்ப போக
எத்தனிக்கையில், ஒருவர் ‘யாரும் இதுவரை உள்ளே
செல்லவில்லை’ என்று கூறினார். அத்தம்பதியினர்,
‘அப்படியா? அப்படியானால் நாங்கள் உள்ளே போகிறோம்’ என்று
போக முயற்சித்த போது மற்றவர்கள், ‘அவர் என்ன சொன்னார்,
உங்கள் கடன்களை மன்னித்தாரா என்று எங்களுக்கு திரும்ப
வந்து சொல்லுங்கள், நாங்களும் போய் கேட்க வேண்டும்’
என்று கூறினார்கள். அதற்கு அத்தம்பதியினர் சம்மதித்து,
உள்ளே சென்றனர். அங்கு முன்னே அமர்ந்திருந்த காரியதரிசி,
அவர்களுடைய பேப்பர்களை வாங்கி சற்று அமருமாறு கூறி உள்ளே
சென்று, மீண்டும் திரும்பி வந்து, அவர்களுடைய கடனை
எஜமானர் அடைத்து விட்டதாக கூறி அவருடைய கையொப்பம் இட்ட
பத்திரத்தை எடுத்து கொண்டு வந்து அந்த காரியதரிசி
அவர்களிடம் கொடுத்தார். அதை பெற்றுக் கொண்டு மிகவும்
நன்றியுடன் அவருக்கு நன்றி செலுத்தி வெளியே செல்ல
முற்படுகையில் காரியதரிசி, ‘நீங்கள் 12 மணி ஆகும் வரை
வெளியே செல்ல கூடாது’ என்று கூறினார். அப்போது அவர்கள்,
வெளியே மற்ற மக்கள் தங்களுக்கு என்ன நேர்ந்தது என்று
அறிய காத்திருப்பதாக சொன்னார்கள். அப்போது காரியதரிசி,
‘உங்களுக்கு சொன்னது போல தான் மற்றவர்களுக்கும்
சொல்லப்பட்டது. அவர்கள் உள்ளே வந்தால், அவர்களுடைய
கடன்களும் மன்னிக்கப்படும்’ என்று கூறி அவர்கள்
அமர்த்தினார். சரியாக 12 மணியானதும் கதவுகள்
திறக்கப்பட்டது. முதலில் அந்த வயதான தம்பதியினர் வெளியே
வந்தனர். உடனே, வெளியே இருந்த கூட்டம் அவர்களிடம், ‘என்ன
உங்கள் கடன்களை அவர் மன்னித்தாரா, தன்னுடைய வார்த்தையை
அவர் காப்பாற்றினாரா’ என்று மாறி மாறி கேள்விகள்
கேட்டனர். அந்த தம்பதியினர், ஆம் என்றனர். ‘பின் ஏன்
எங்களிடம் வந்து சொல்லவில்லை’ என்று கேட்டனர். அப்போது
அந்த தம்பதியினர், ‘அவர் எங்களை உள்ளே அமர சொன்னார்.
நாங்கள் உள்ளே போய், அவரிடம் மன்னிப்பு பெற்றது போல
நீங்களும் உள்ளே வந்தால் மன்னிக்கப்படும் என்று
கூறினார். எங்களை உள்ளேயே இருக்க சொன்னார்’ என்று
கூறினர். சில விநாடிகளில், வீட்டு சொந்தக்காரரும்
காரியதரிசியும் வெளியே வந்தனர். மற்றவர்கள், தங்கள்
பத்திரங்களை கையில் பிடித்து கொண்டு ‘ஐயா எங்களுக்கும்
மன்னியும்’ என்று கதறினர். அப்போது அந்த எஜமானர்,
‘இப்போது நேரமாகிவிட்டது, உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு
சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டது, ஆனால் நீங்கள் அதை
பயன்படுத்தி கொள்வில்லை, நீங்கள் உள்ளே வந்திருந்தால்
நான் உங்கள் கடன்களை முழுவதுமாக மன்னித்திருப்பேன்.
ஆனால் நீங்கள் என்னை நம்பவில்லை’ என்று கூறினார்.
Subscribe to:
Posts (Atom)
-
ஒரு தாயற்ற பெண் பிள்ளையை அவளுடைய தகப்பன் பரிவோடு வளர்த்து வந்தார். அவளுடைய தேவைகளை எல்லாவற்றையும் சந்தித்து தாய்க்கு தாயாகவும், ...
-
பல ஆண்டுகளுக்கு முன் செல்வந்தர் ஒருவர் வேலைக்கு ஆள் வேண்டி விளம்பரம் செயதிருந்தார்; விளம்பரத்தை பார்த்து இளைஞர்கள் பலர் வந்தனர்....

