Showing posts with label Billy Graham. Show all posts
Showing posts with label Billy Graham. Show all posts

Saturday, November 1, 2014

பில்லிகிரகாம் - என்னையும் நம்பிடுமே

பில்லிகிரகாம் இளம் வயது வாலிபனாக இருந்தபோது, தேவனுக்காக எதையாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உடையவராக இருந்தார். ஒரு நாள் தன் நண்பர்களோஈஷடு கால்பந்தாடச் சென்றார். விளையாடிக் கொண்டிருந்த நேரத்திலும் அவர் உள்ளம் தேவனோடு உறவாடிக் கொண்டிருந்தது. கர்த்தர் பில்லிகிரகாமின் உள்ளத்தில் உலகத்திலுள்ள மற்ற வாலிபர், வயோதிபர், சிறியோர், பெரியோரின் ஆத்தும தேவைகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்.
.
விளையாட்டு முடிந்தது. நண்பர்கள் எல்லோரும் அவரவர் தம்தம் வீட்டிற்கு சென்று விட்டார்கள். ஆனால் பில்லிகிரகாமோ, அந்த கால்பந்து மைதானத்திலே முழங்கால்படியிட்டார். கண்களிலிருந்து தாரை தாரையாய் கண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது.
.
'ஆண்டவரே என்னை நம்பும், என்னை நம்பும், உமது பார்வையிலே என்னை நம்பிக்கைக்குரியவனாக்கும்' என்று கதறினார். அந்த வார்த்தைகளே அவரது ஜெபமாக இருந்தது. அவரது உள்ளம் தேவனிடத்தில் கெஞ்சிக் கொண்டிருந்தது, ஏறத்தாழ நான்கு மணி நேரம் மிகுந்த சத்தத்தோடு ஜெபித்தார், 'ஆண்டவரே என்னை நம்பும்' என்பதுதான் அவரது ஜெபமாக இருந்தது. கர்;த்தருடைய ஆவியானவர் வல்லமையாக இறங்கி அவரை அபிஷேகித்தார். அன்றிலிருந்து கர்த்தர் ஒரு பெரிய திருப்பத்தை அவர் வாழ்வில் கட்டளையிட்டார். மாபெரும் விளையாட்டு வீரரான அவரை மாபெரும் சுவிசேஷ வீரனாக மாற்றினார். அல்லேலூயா!

Wednesday, September 24, 2014

அதிக ஐசுவரியமுளள்வர் யார்?

உலக பிரசித்தி பெற்ற தேவ ஊழியரான பில்லி கிரகாம் தனது சுய வரலாற்று புத்தகத்தில் ஒர நிகழ்ச்சியை பின்வருமாறு எழுதியிருந்தார்: “உலகிலுள்ள மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவராக இருந்த ஒரு மனிதர் தனது ஆடம்பரமான பங்களாவிற்கு என்னையும் என் மனைவி ரூத்தையும் மதிய உணவிற்கு அழைத்திருந்தார். எழுபத்தைந்து வயதான அவர் நாங்கள் இருந்த நேரம் முழுவதும் கண்ணீர் சிந்த கூடிய நிலையிலேயே இருந்தார். ‘உலகிலுள்ள அனைவரைக் காட்டிலும் மிகுந்த வேதனையுள்ளவனாக நான் இருக்கிறேன், உலகில் நான் எங்கு எந்த இடத்திற்கு போக வேண்டுமென்று விரும்பினாலும் என்னால் அங்கு செல்ல முடியும். எனக்கு சொந்தமாக ஆகாய விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களும் இருக்கின்றன. எனக்கு மகிழ்ச்சி தரக்கூடிய எல்லா காரியங்களும் என்னிடம் உள்ளன. ஆனால் நான் எப்போதும் நரகத்திலிருப்பதை போலவே உணர்கிறேன்’ என்றார். நாங்கள் அவருக்காக ஜெபித்து விட்டு கடந்து வந்தோம்.
.
அன்று மதியம் அப்பகுதியிலுள்ள 70 வயது நிரம்பிய போதகர் ஒருவரை சந்தித்தோம். அவர் உற்சாகத்தினாலும், கிறிஸ்துவின் மேலும், பிறரின் மேலும் கொண்டிருந்த அன்பினாலும் நிறைந்திருந்தார். அவர், ‘என்னுடைய பெயரில் இரண்டு பவுண் நாணயங்கள் கூட இல்லை. ஆனால் நான் மிகுந்த மகிழ்ச்சியோடிருக்கிறேன்’ என்றார். அவர் எங்களை விட்டுசென்ற பிறகு, ‘இவ்விருவரில் அதிக ஐசுவரியமுளள்வர் யார்’ என்று நான் ரூத்திடம் கேட்டேன். எங்களிருவருக்கும் அதற்குரிய விடை தெரியும்” என்று எழுதியிருந்தார்

Monday, September 8, 2014

நிச்சயமான ஓட்டம் - சுவிசேஷகர் பில்லிகிரகாம்

புகழ்பெற்ற சுவிசேஷகர் பில்லிகிரகாம் அவர்களுக்கு தற்போது 96 வயதாகிறது (நவம்பர் மாதம் 1918ம் வருடம் பிறந்தார்). அவருக்கு பார்க்கின்ஸன் என்னும் வியாதி உள்ளது.
.
2000ம் வருடம் ஜனவரி மாதத்தில் வட கரோலினா மாநிலத்தை சேர்ந்தவர்கள் பில்லி கிரகாமை கௌரவிக்கும் பொருட்டு, ஒரு கூட்டத்தை ஒழுங்குபடுத்தியிருந்தனர்.
.
ஆரம்பத்தில் அந்த கூட்டத்திற்கு போக அவர் மனமில்லாதிருந்தார். ஆனால் அந்த கூடடத்தை ஒழுங்கு செய்திருந்தவர்கள், 'நீங்கள் பெரிய பேச்சொன்றும் பேச வேண்டாம். நீங்கள் வந்தாலே போதும், அது எங்களுடைய பாக்கியம், நாங்கள் உங்களை கௌரவிக்கவே விரும்புகிறோம்' என்று கூறினர். பின் அவர் சம்மதித்தார்.
.
அவரை குறித்த புகழாரங்களை சூட்டி முடித்தபிறகு, பில்லி கிரகாம் பேச எழுந்தார். எழுந்து அங்கு கூடியிருந்தவர்களிடம், 'இன்று எனக்கு ஆல்பர்ட் ஐன்ஸ்டின் அவர்களை குறித்த ஞாபகம் வருகிறது. அவர் ஒரு நாள் நியுயார்க் நகருக்கு செல்லும் இரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். டிக்கெட் பரிசோதகர் ஒருவர் வரிசையாக மக்களிடம் பரிசோதனை செய்து கொண்டு வந்தார். அவர் ஐன்ஸ்டனிடம் அவர் பயண டிக்கெட்டை காட்டும்படிக் கேட்டார். அவரும் தனது கோட் பாக்கெட்டில் கையை விட்டு துளாவினார். டிக்கெட்டை காணவில்லை. அவரது இக்கட்டான நிலையை கண்ட பரிசோதகர், 'ஐயா உங்களை இந்த நாடே அறியும், நானும் உங்களை அறிவேன். நீங்கள் டிக்கெட் எடுக்காமல் இருக்க மாட்டீர்கள். சிரமப்பட்டு கொள்ள வேண்டாம்' என்று ஆறுதலோடு பேசினார். எனினும் ஐன்ஸ்டினுக்கு சமாதானமில்லை. 'என்னை யார் என்று உங்களுக்கு தெரியும், நான் யார் என்று எனக்கு தெரியும், ஆனால், இப்போது என்னுடைய பிரச்சனை என்னவென்றால், நான் நியுயார்க் பெருநகரில் எந்த ஸ்டெஷனில் இறங்க வேண்டும் என்பது எனக்கு தெரியாதே' என்று அங்கலாய்த்தார்.
.
இதை பில்லிகிரகாம் சொல்லிவிட்டு, 'இப்போது நீங்கள் பார்க்கிறீர்களே, நான் அணிந்திருக்கும் இந்த சூட், இது புத்தம் புதிய சூட்டாகும், என்னுடைய பிள்ளைகளும், எனது பேர பிள்ளைகளும், நான் இந்த வயதான காலத்தில் கொஞ்சம் மெதுவாக எல்லாவற்றிலும் இருக்கிறேன் என்று கூறுகிறார்கள். நான் எப்போதும் வேகமாக காரியங்களை செய்து பழகினவன். அதனால் இந்த விசேஷித்த கூட்டத்திற்கு நான் போய் இந்த சூட்டை வாங்கி அணிந்து வந்தேன். இதற்கு மட்டுமல்ல, வேறு ஒரு முக்கிய நாளிலும் இதே சூட்டை அணிவேன். அந்த நாள் என்னவென்றால், நான் மரித்து அடக்கம்பண்ணப்படும்போது இதே சூட்டை அணிவேன். நான் மரித்தேன் என்று நீங்கள் கேள்விப்படும்போது, நான் அணிய இருக்கும் இந்த உடையை எண்ணாமல், நான் இப்பொது சொல்ல இருக்கும் வார்த்தைகளை நினைவு கூருங்கள். அது என்னவென்றால், நான் யார் என்பதும் எனக்கு தெரியும், மட்டுமல்ல, நான் மரித்தபின் எங்கே போவேன் என்பதும் எனக்கு நிச்சயமாக தெரியும்' என்று கூறினார்.
.
ஆல்பர்ட் ஐன்ஸ்டினுக்கு இந்த உலகத்தில் தான் எங்கே போகிறோம் என்று தெரியவில்லை. ஆனால் பில்லிகிரகாம் அவர்களுக்கு தான் மரித்த பிறகு தான் போகும் இடத்தை நன்கு அறிந்து வைத்திருக்கிறார். நாம் எங்கே எதை நோக்கி போய் கொண்டிருக்கிறோம் என்று நம்மால் கூற முடியுமா? ஆனால் நாம் எங்கு போய் கொண்டிருக்கிறொம் என்ற இலக்கு தெரியாவிட்டால் நமது நிலைமை எத்தனை பரிதாபம்!
.
'நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன்' என்று பவுல் அப்போஸ்தலன் சொன்னார். அவருக்கும் தான் என்ன செய்கிறோம், எதை நோக்கி ஓடுகிறோம் என்று நிச்சயம் இருந்தது. ஒரு ஓட்டபந்தயம் என்று இருந்தால் அதற்கான இலக்கு குறிக்கப்படும். அந்த இலக்கை நோக்கி சரியான தடத்தில் ஓடி, முதலில் வந்தாலே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இலக்கு இல்லாதபடி ஓடினால், நாம் எவ்வளவு வேகமாக ஓடினாலும் எந்த பயனும் இல்லை. நாம் தடம் மாறி ஓடினாலும் நாம் தோற்றவர்களே!
.
பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம் (1கொரிந்தியர் 9:25).

Friday, October 4, 2013

பில்லி கிரஹாமின் கண்களில் கண்ணீர் வழிந்தது

ஒரு முறை சுவிசேஷகர் பில்லிகிரஹாம் அவர்கள் செய்தியளிக்கும்படி லண்டனில் ஒரு நற்செயதி கூட்டமொன்றை ஒழுங்கு செய்திருந்தார்கள். பில்லிகிரஹாம் இங்கே கூட்டம் நடத்த வரக்கூடாது என்று பயங்கரமான எதிர்ப்பு கிளம்பியது. 'காஸ்பல் சர்க்கஸ் நடத்த பில்லிகிராஹம் வருகிறார்' என்றெல்லாம் மீடியாக்கள், பத்திரிக்கையெல்லாம் அவரைக் கிண்டல் பண்ணி சரமாரியாக எழுதினர். திருச்சபைகள் கூட அவரை எதிர்த்தன.
.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவரும், அவருடைய மனைவியும் கப்பலில் வந்து லண்டன் துறைமுகத்தில் இறங்கியவுடன் பத்திரிக்கையாளர்கள் அவரை சூழ்ந்துக் கொண்டு, 'எங்கள் லண்டனை மாற்ற வந்திருக்கிறீர்களே, உங்கள் அமெரிக்காவை மாற்றி விட்டீர்களா?' என்றெல்லாம் ஆளாளுக்கு பல விதமான கேள்விகளைக் கேட்டு பரியாசம் பண்ணினார்கள். சுவிசேஷத்தை அறிவிக்க வந்த ஒரு கிறிஸ்தவ நாடு இப்படியாக இருக்கிறதே என்றெண்ணி, பில்லிகிரஹாம் மனமுடைந்து போனார். துறைமுகத்திலிருந்து, தாங்கள் செல்ல வேண்டியப் பட்டணத்திற்கு ரயில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது, 'இயேசுவே காரியங்கள் இப்படியிருக்கிறதே, எப்படி நான் இங்கு போய் ஊழியம் செய்ய போகிறேன்?' என்று இருதயம் நொறுங்குண்டு தேவனுடைய முகத்தை நோக்கிப் பார்த்தார்.
.
'அன்பு சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் சகிக்கும்' என்ற வேத வசனத்தின் மூலம் தேவன் அவரோடு பேசினார். உடனே அவர், 'ஆண்டவரே, என்ன நிந்தை, நெருக்கம், அவமானம், போராட்டம் வந்தாலும் அவைகளை சகித்துக் கொள்ளக் கூடிய கிருபையை எனக்கு தாரும்' என்று சொல்லி கண்ணீரோடு ஜெபித்தார். உடனே பாரமெல்லாம் மாறி அவரது உள்ளம் இலகுவாகி விட்டது. இரயிலிலிருந்து அவர்கள் இறங்கிய போது ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடி நின்று அவர்களை ஆர்ப்பரித்து வரவேற்றார்கள். 'உனக்காக நான் எவ்வளவு மக்களை வைத்திருக்கிறேன் பார்த்தாயா?' என்று அவரது உள்ளத்தில் தேவன் பேசினார். அதை கண்ட பில்லி கிரஹாமின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
.
பிரியமானவர்களே, நீங்களும் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டதினிமித்தமோ, அவரை மற்றவர்களுக்கு அறிவித்ததினிமித்தமோ உங்கள் குடும்பத்தாராலும், மற்றவர்களாலும் நிந்தனையும், அவமானத்தையும் அடைந்து வருகிறீர்களோ? கலங்காதீர்கள்! கிறிஸ்துவின் மேல் உள்ள அன்பினால் சகலத்தையும் தாங்கிக் கொள்ளுங்கள். காரணம் அன்பு சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் சகித்துக் கொள்ளும். அப்பொழுது தேவ அன்பு நம் இருதயத்திற்கு மருந்தாய் அமையும். யார் உங்கள் மேல் எரிச்சலானார்களோ, அவர்களே உங்கள் பக்கம் வரும்படி தேவன் அவர்களை மாற்றுவார். அப்படி அவர்கள் வராவிட்டாலும், தேவ அன்பு உங்களை மூடிக் கொள்ளும். உங்களுக்கென்று தேவன் வைத்திருக்கிற ஆசீர்வாதங்களை நீங்கள் சுதந்தரிப்பீர்கள். உங்களுக்கென்று தேவன் வைத்திருக்கிற ஆத்துமாக்கள் உங்கள் மூலமாய் ஆசீர்வதிக்கப்படுவார்கள். மனம் சோர்ந்து போகாதிருங்கள்.

Monday, October 8, 2012

நாம் எதற்காக மரிக்க இருக்கிறோம்?

பில்லிகிரஹாம் பொது கூட்டமொன்றில் கடிதம் ஒன்றை வாசித்தார். அது அமெரிக்க நாட்டு கல்லூரி மாணவன் ஒருவனால் எழுதப்பட்டிருந்தது. அவன் மெக்ஸிகோவிலிருந்த போது ஒரு கம்யூனிஸ்டாக மாறி விட்டான். அதினால் தான் விரும்பிய பெண்ணின் உறவை முறிக்க அவன் எழுதிய கடிதம் அது.
.
கடித்தத்தில் அவன் எழுதியிருந்தது: 'கம்யூனிஸ்டுகளாகிய எங்களுக்குள் மரண விபத்துகள் அதிகம். எங்கள் நடுவில் சுட்டு கொல்லப்படுகிறவர்களும், தூக்கிலிடப்படுபவர்களும், உயிரோடு வைத்து கொல்ல்பபடுகிறவர்களும், சிறையில் அடைக்கப்படுகிறவர்களும் ஏராளம், ஏராளம். நாங்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு பைசாவையும் கட்சிக்கு கொடுத்து விடுகிறோம். பொழுதுபோக்குகளாகிய படம், கச்சேரி, நடனம், ஆகியவற்றிற்கு செல்ல நேரமோ, பணமோ எங்களுக்கு கிடையாது. உலகம் முழுவதும் கம்யூனிச (கடவுள் இல்லை என்கிற கொள்கை) மயமாக்க வேண்டுமென்பதே எங்கள் ஒரே இலட்சியம். கம்யூனிஸ்டுகளாகிய எங்களுக்கு ஒரு வாழ்க்கை தத்துவம் இருக்கிறது. அதை எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்க முடியாது. வாழ்க்கையில் எங்களுக்கு ஒரு நோக்கமும், இலட்சியமும் உண்டு. அதை நிறைவேற்றுவதற்காக நாங்கள் எங்கள் ஆசா பாசங்களை அடக்கி கட்டுப்படுத்துகிறோம். நான் என் உயிரினும் மேலாக வாஞ்சிப்பது என் கட்சி கொள்கையின் வளர்ச்சியையே. அதன் முன் என் உணவு எல்லாம் பெரிதாக தோன்றவில்லை. என் கொள்கையின் மீதுள்ள என் பிடி நாளுக்கு நாள் இறுகுகிறதே அன்றி தளருவதில்லை. நான் இப்போதே சிறைவாசம் செல்கிறேன். துப்பாக்கி முனையில் என்னை பலியாக்கவும் ஆயத்தமாயிருக்கிறேன் ஆகவே எனனை மறந்து விடு' என எழுதியிருந்தான். அதை பில்லிகிரஹாம் படித்த போது பல கிறிஸ்தவர்களின் உள்ளத்தில் சூடேறியது.
.
கம்யூனிஸ்டுகள் தங்கள் கட்சியின் வளர்ச்சிக்காக எதை வேண்டுமானாலும் செய்வதற்கும், உயிரை பணயம் வைப்பதற்கும் வைராக்கியமாய் இருப்பார்களானால், கிறிஸ்தவர்களாகிய நாம் மகிமையின் ஆண்டவருக்காய் எவ்வளவு அதிக அன்புடனும், மகிழ்ச்சியுடனும் நம்மை அவருக்கு அர்ப்பணிக்க வேண்டும்! கிறிஸ்துவின் மீது வாஞ்சையுள்ள ஒரு மனிதனின் நோக்கமெல்லாம் ஒன்றே, அது தேவனை பிரியப்படுத்துவதுதான். அவன் இருந்தாலும், இறந்தாலும், சுகமாய் இருந்தாலும், சுகவீனமாய் இருந்தாலும், பணக்காரனாயினும், ஏழையாயினும், புகழப்பட்டாலும், இகழப்பட்டாலும், கனமடைந்தாலும், கனவீனமடைந்தாலும் எதை குறித்தும் கவலைப்படாமல், ஒன்றிற்காக மட்டும் அவன் நெருப்பாய் எரிவான். அது தேவனை பிரியப்படுத்தி, அவரது மகிமையை வளர செய்வதே ஆகும். எரிந்து  பிரகாசிக்கையில் சாம்பலாகி விட்டாலும், பரவாயில்லை, அதுதான் அவன் செய்து முடிக்கும்படி தேவன் அவனுக்கு நியமித்த வேலை என்று அறிந்து மகிழ்ச்சியடையவான்.
.

Friday, October 5, 2012

சின்ன சின்ன காரியங்களிலும் உண்மை - Billy Graham

உலகப்புகழ் பெற்ற சுவிசேஷகர் பில்லிகிரஹாமின் மகனிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. உங்கள் தந்தை ஒரு சின்ன ஆலயத்திற்கு போதகராயிருந்தும் எப்படி உலகளவில் பெரிய சுவிசேஷகராக மாறினார்?  என்பதே அந்த கேள்வி.  பில்லிகிரஹாமின் மகன் சொன்ன பதில், ‘என் தந்தை வெளியிடங்களில் எப்படி நடந்து கொள்வாரோ அப்படியே வீட்டிலும் இருப்பார். சின்ன சின்ன காரியங்களிலும் அவரிடம் காணபட்ட உண்மையே இந்த உயர்வுக்கு காரணம்’  என்றாராம்.