Showing posts with label Humble. Show all posts
Showing posts with label Humble. Show all posts

Saturday, March 30, 2013

தாழ்மை - நற்பண்பு

ஒரு பெரிய
கர்வாலி மரமும் சிறிய புல்லும் பற்றிய ஒரு சிறுகதை உண்டு. அக்கர்வாலி மரம் தன்னருகில் வளர்ந்து வந்த சிறிய புல்லை நோக்கி, 'ஓ அற்பப்புல்லே, நீ எவ்வளவு பெலனற்றதும், நிலையற்றதும் சிறியதுமாயிருக்கிறாய்! ஆனால் என்னைப் பார் நான் எவ்வளவு உயர்தோங்கி பெரிய மரமாயிருக்கிறேன்' என்று அடிக்கடி பெருமையடித்துக் கொண்டது. தன்னைப் பற்றி பெருமையாக சொல்லிக் கொள்ள அந்த புல்லுக்கு ஒன்றுமில்லாதிருந்தபடியால் அது எப்போதும் அமைதியாகவே இருக்கும். ஒரு நாள் ஒரு பலத்த புயல் காற்று வீசவே, அந்த பலம் வாய்ந்த கர்வாலி மரம் ஆட ஆரம்பித்தது, தன்னால் இயன்ற மட்டும், நேராக நிமிர்ந்து நிற்க முயற்சித்தும் அது வெகு சீக்கிரமாகவே பெருஞ்சத்தத்துடன் தரையில் விழுந்து விட்டது.
.
.புயல் காற்று ஓய்ந்தபோது, கர்வாலி மரம் புல்லுக்கு என்ன நேர்ந்தது என்று
அறியும்படி மெதுவாக அதனை எட்டிப்பார்த்தது. புல் எப்போதும் போல்
தழைத்து நின்று கொண்டிருந்தது. அதை கண்ணுற்று வியப்படைந்த
கர்வாலிமரம், 'ஓ, சிறிய புல்லே, அவ்வளவு உயர்ந்தோங்கிய என்னாலேயே
அப்பலத்த புயற்காற்றில் நிலைநிற்க முடியவில்லையே, நீ இவ்வளவு சிறிய
அற்பப்புல்லாயிருந்தும், உன்னால் எப்படி அப்புயலை சமாளிக்க
முடிந்தது?'என்று கேட்டது. அதற்கு அந்தப்புல் புன்முறுவுலுடன், 'அது
மிகவும் எளிதானது. காற்றும் புயலும் என் மீது வீசும்போது நான் தலை
குனிந்து கொள்வேன். அப்பொழுது அவை எனக்கு எந்த பிரச்சனையையும்
உண்டாக்காமல் எனக்கு மேலாக கடந்து சென்று விடும்' என்று பதிலளித்தது,
.

.தாழ்மை எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு நற்பண்பு பார்த்தீர்களா? நாம் மற்றவரை மன்னிக்க பழகும்வரை ஒருக்காலும் மெய்யான மனத்தாழ்மையை கற்றுக் கொள்ள முடியாது. மன்னிக்க முடியாத ஒவ்வொரு ஆவியின் அடித்தளத்திலும் பெருமை நிறைந்திருக்கிறது. நம்மை யாராகிலும் தரக்குறைவாய் பேசி அவமதிக்கும்போது நம் மனம் புண்படுமாயின், உண்மையில் புண்படுத்தப்பட்டிருப்பது நம்முடைய பெருமையே ஆகும்.

Saturday, December 22, 2012

சாது சுந்தர் சிங் தாழ்மை

ஒருமுறை சாது சுந்தர் சிங் இங்கிலாந்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, ஒரு சகோதரி, ‘உமக்கென்ன, நீர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட பின், உமக்கு என்ன வரவேற்பு, என்ன புகழ்!’ என்று அவரிடம் கூறினார்கள். அப்போது அவர் சொன்னார், 'இயேசுகிறிஸ்து ஏறி சென்ற கழுதையாகவே நான் என்னை நினைக்கிறேன். அன்று கிறிஸ்துவை சுமந்த கழுதை, தனக்குதான் மக்கள் வரவேற்பளிக்கிறார்கள். தனக்குதான் மகிமை செலுத்துகிறார்கள் என்று நினைத்திருந்தால் அது எத்தனை முட்டாள்தனமோ அதுப் போலத்தான், இப்போது கிடைக்கிற புகழ் எல்லாம் எனக்குத்தான் என்று நான் நினைத்தால் நானும் ஒரு முட்டாளாகத்தான் இருப்பேன். கிறிஸ்துவை நான் சுமப்பதால்தான் எனக்கு இந்த புகழ் எல்லாம், கிறிஸ்து எனக்குள் இல்லாவிட்டால், நான் வெறும் கழுதைதான்' என்று கூறினாராம்! என்ன ஒரு தாழ்மை பாருங்கள்!

தாழ்மையுள்ள பாத்திரங்களையே கர்த்தர் தேடுகிறார்

மிகச்சிறந்த படிப்பாளரான Booker T. Washington என்பவர் Hampton Institute in Virginia என்னும்  இன்ஸ்டியூட்டியில் சேருவதற்காக இன்டர்வியூவிற்காக சென்றிருந்தார். அந்த இன்ஸ்டிடியூட்  மிகவும் பெயர் பெற்றதாகும். அதில் இடம் கிடைப்பது மிகவும் அரிது, அப்போது அங்கு வந்த  தலைமை ஆசிரியை அங்கிருந்த வகுப்பறையை கழுவ சொல்லிவிட்டு, அங்கிருந்த பெஞ்சுகளையும்  துடைக்க சொல்லி விட்டு போனார்கள். அவர் பாடம் சம்பந்தமான கேள்வியை கேட்பார்கள் என  நினைத்தால் இந்த வேலையை சொல்லுகிறார்களே என்று அவருக்கு கோபமிருந்தாலும்  வேறுவழியில்லாமல், அதை துடைக்க ஆரம்பித்தார்.சிறிது நேரம் கழித்து அங்கு வந்த தலைமை  ஆசிரியை எல்லாவற்றையும் தனது கைக்குட்டையால் துடைத்து பார்த்து, ‘சிறப்பான காரியத்தை  செய்தாய்’ என்று அவரை பாராட்டி அவருக்கு அங்கு ஒரு இடத்தை கொடுத்தார்களாம்.  அது தன் வாழ்க்கையையே மாற்றிற்று என அவர் தனது புத்தகத்தில் எழுதினார்.