Showing posts with label History. Show all posts
Showing posts with label History. Show all posts

Saturday, October 4, 2014

இந்தியாவின் முதல் ஆலயம்

முதல் ஆலயம் தோன்றிய வருடம் 52ம் வருடம்.
இடம்.... பழையூர், கேரளா. திருச்சூர் பகுதியில் உள்ளது

இயேசு கிறிஸ்துவோடு இருந்த சீஷர் பரிசுத்த தோமா அவர்கள் இந்தியாவிற்கு வந்தார். கேர்ளா பகுதிக்கு வந்த இவர் அங்குள்ளவர்களுக்கு இயேசு கிறிஸ்துவை பற்றி உரைத்து பின் சபையை நிறுவினார். இது 52ம் வருடம் கட்டப்பட்ட ஆலயம் ஆகும்.

இது இன்று வரை கத்தோலிக்க தேவாலையமாக இருந்தாலும் இயேசு கிறிஸ்துவை சுமந்து வந்த முதல் ஆலயம். கால் மிதிக்கும் தேசம் எல்லாம் நமக்கு சொந்தமாகும். நிச்சயம் இந்தியா இயேசு அண்டை வந்தே தீரும்.

உங்கள் ஆலயங்களை நினைத்து கொள்ளுங்கள். இன்று ஒரு ஆலயமாக நிறுக்கும் உங்கள் ஆலயம் நிச்சயம் பல ஆயிரமாக பெருகும் நாள் வரும். அப்போது தேவனின் மகிமையை மீண்டும் உணர்வீர்கள்.

பரிசுத்த தோமாவால் கட்டப்பட்ட முதல் இந்திய ஆலயத்திற்கு நன்றி செலுத்துவோம். அன்று தோமா போன்ற பாரம் மிகுந்த ஊழியர்கள் வராமல் இருந்திருந்தால் இன்று நாம் வேதாகமத்தை ஏந்தியிருக்க முடியாது. இன்று நீங்கள் தேவனுக்காக எழாவிட்டால் உங்கள் சந்ததி அழிவதை தடுக்கமுடியாது.

தேவனுக்காக வைராக்கியமாய் எழுந்து நிற்போம்.

தேவன் உங்கள் மூலமாக செயல்படுவாராக. ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

Tuesday, February 18, 2014

இந்திய நிலத்தில் விழுந்த கோதுமை மணிகள்

based on the article: http://articles.timesofindia.indiatimes.com/2014-01-23/mumbai/46513426_1_christians-attacks-catholic-secular-forum


கிறிஸ்தவ விழிப்புணர்வு அறிக்கை
இந்திய கிறிஸ்தவம் கடந்து வந்த சுவடுகள் பற்றிய ஓர் பதிவு - 2013

II தீமோத்தேயு 3:1 மேலும், கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று அறிவாயாக.

இந்திய தேசத்தில் கடந்த வருடத்தில் பல போராட்டங்கள். கிறித்தவர்களுக்கு எதிராக எழும்பியிருக்கும் போராட்டங்கள் இன்று தலை தூக்கி உள்ளன.. இதில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது மத்தியில் மகராஷ்டிரா மாநிலமும், கர்நாடக மாநிலமும் தான். இங்கு பல ஆலயங்கள் இடிக்கப்பட்டுள்ளன, போதர்கர்கள், ஊழியக்காரர்கள், சபை உறுப்பினர்கள் என்று பலரும் தாக்கப்பட்டுள்ளனர். இந்த பதிவு Times of India என்ற ஓர் ஆங்கில செய்தி தாளை முன் வைத்து எழுதப்பட்டுள்ளது.

http://articles.timesofindia.indiatimes.com/2014-01-23/mumbai/46513426_1_christians-attacks-catholic-secular-forum
இதில் கூறப்பட்டுள்ள சில முக்கியமான பதிவுகள்.
1) எந்த ஆண்டிலும் இல்லாதவண்ணம் 2013ம் ஆண்டு இந்திய கிறிஸ்தவர்களுக்கு எதிராக பல எதிர்ப்புகள் கிளம்பினது
2) இதில் முக்கியமாக மகராஷ்டிரா மாநில கிறிஸ்தவர்கள் தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
3) இரண்டாவதாக கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநில கிறிஸ்தவர்கள் பல துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டனர்
4) ஓடிஸா நான்காவது இடத்திலும், சத்தீஸ்கர் ஐந்தாவது இடத்திலும், மத்திய பிரதேசம் 6ம் இடத்திலும், தமிழ்நாடு 7ம் இடத்திலும், கேரளா 8ம் இடத்திலும் ராஜஸ்தான் 9ம் இடத்திலும், டெல்லி 10ம் இடத்திலும் உள்ளது
5) இவர்கள் சபைகள் பாதிக்கப்பட்டுள்ள தன்மை, கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டுள்ள எண்ணிக்கை, கிறிஸ்தவ சபைகளை கட்ட கூடாதபடி போடப்பட்டுள்ள வழக்குகள், கிறிஸ்தவ இல்லங்களில் கூட்டங்கள் நடத்தகூடாதபடி உள்ள தடைகள், போதகர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள், கிறிஸ்துவின் மேல் உள்ள விசுவாசத்திர்க்காக கொடூரமாக கொல்லப்பட்ட கிறிஸ்தவர்கள் என்ற நிலையில் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
6) முக்கியமாக தமிழ்நாடு மற்றும் கேரளா முதல் பத்து இடங்களை பிடித்துள்ளதை காணலாம்.
7) சுமார் 4,000 கிறிஸ்தவ குடும்பங்கள் கடந்த ஒரே வருடத்தில் பாதிக்கப்பட்டுள்ளன.
8) இதில் சுமார் 1,000 பெண்கள் மற்றும் 500 குழந்தைகளும் அடங்குவர்
9) சுமார் 400 கிறிஸ்தவ தலைவர்கள் கடந்த வருடத்தில் தாக்கப்பட்டுள்ளனர்.
10) சுமார் 100 சபைகள் தாக்கப்பட்டுள்ளன.
11) கடந்த வருடத்தில் 7 கிறிஸ்தவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டு மரணத்திர்க்குடுத்தப்படுள்ளனர்.

சில முக்கியமான சம்பவங்கள்
1) மும்பையில் 133 ஆண்டு பழமை வாய்ந்த இயேசு கிறிஸ்துவின் சிலை தகர்க்கப்பட்டது. இதில் இந்த சிலை துண்டானது http://www.christiantoday.co.in/articles/testing/7898.htm
2) டெல்லியில் கிறிஸ்தவ சபை போதகர்கள், ஊழியர்கள், கன்னியாஸ்திரிகள் நடத்திய அமைதி பேரணியில் போலீஸ் திடீரென்று தடியடி நடத்தியது. இதில் பலரும் காயப்பட்டனர். பலர் சிறைகைதிகள் ஆயினர். http://www.catholicherald.co.uk/news/2013/12/13/indian-prime-minister-apologizes-after-christian-marchers-beaten/
ஒரு பக்கம் கிறிஸ்தவம் போராடி கொண்டிருக்கிறது.. இன்னொரு பக்கம் தூங்கி கொண்டிருக்கிறது. கிறிஸ்தவனே நீ எப்போது உன் கைகளை இணைக்க போகிறாய்? உன் சபையை மட்டும் பாதிகாத்துகொண்டிருக்கும் நீ உன்னை போல உள்ள பல கிறிஸ்தவ குடும்பங்களுக்காக என்றைக்கு போராட போகிறாய்? உங்களை வன்முறையில் இறங்க சொல்லவில்லை. அதை நம் தேவன் கற்று கொடுக்கவும் இல்லை. இந்த டெல்லி போராட்டத்திற்கு உங்கள் சபையின் பங்கு என்ன? உனக்கும் தானே இணைந்து பேரணி நடத்தினார்கள்? உன் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு தானே அவர்கள் ஜெபித்தார்கள்? உன்னுடைய பங்கு என்ன?

3) 3rd October, 2013 - கர்நாடகா கிறிஸ்தவ போதக குடும்பம் கடுமையாக தாக்கப்பட்டது http://www.churchinchains.ie/node/660
4) கிறிஸ்தவ பள்ளிகூட உதவியாளரும், போதகரும் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் http://www.churchinchains.ie/node/661
5) கர்நாடகாவில் கடந்த வருடம் ஜூன் மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதத்திற்குள்ளாய் சுமார் 21 வழக்குகள் பதிவாகி உள்ளது. இதில் பல கிறிஸ்தவ குடும்பங்கள் அடியோடு அடித்து விரட்டப்பட்டு பாதிப்புக்குள்ளாகினர்.
6) 31 ஆகஸ்ட் 2013 கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் இரண்டு கிறிஸ்தவ குடும்பங்களை அடித்து துன்புறுத்தி இந்து தெய்வங்களை வணங்க சொல்லி வற்புறுத்தியிருக்கிறார்கள்
7) ஆகஸ்ட் 24 Ilkal Bagalakote பகுதியில் உள்ள ஷாலோம் சபை போதகர் சாம்சன் கடுமையாக தாக்கப்பட்டு மூக்கில், காதில் ரத்தத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
8) இதே பகுதியில் போதகர் பரம ஜோதி என்பாரும் தாக்கப்பட்டார்
9) Karwar, போதகர் Devu Gowli, மற்றும் மனைவி, ஒரு மாத கைக்குழந்தையை கிராமத்திற்கு முன் வரசெய்து கடுமையாக இந்து கட்சியை சேர்ந்தவர்கள் தாக்கி உள்ளனர். இதில் இவரின் மனைவி கடுமையாக பாதிக்கப்பட்டார். இருவரையும் கிறிஸ்துவை மறுதலிக்க வற்புருத்தினர். ஆனால் அவர்கள் இயேசு கிறிஸ்துவை மறுதலிக்க மறுத்து விட்டனர்..
10) உத்தர காண்டாவை சேர்ந்த மூன்று கிறிஸ்தவ வாலிபர்களை மதம் மாற்றுகிறார்கள் என்று சொல்லி போலியாக புகார் கொடுத்து கைது செய்ய வைத்திருக்கிறார்கள்
11) மத்திய பிரதேஷ் மாநிலத்தில் 5 வாலிப பெண் கிறிஸ்தவர்களை நாடு ரோட்டில் வைத்து அடித்துள்ளனர்.

இப்படி இன்னும் அடுக்கி கொண்டே போகலாம். தமிழ்நாட்டில் பல கிறிஸ்தவ வீடுகள் இன்றும் மிரட்டப்பட்டு உள்ளது. கிறிஸ்தவ சபைகள் கட்ட கூடாதபடி வழக்குகள் போடப்பட்டுள்ளன. கிறிஸ்தவர்கள் நிலங்கள் வாங்கக்கூடாது என்றும் பல இந்து மதத்தலைவர்கள் கண்காணித்து வருகின்றனர். பல கிறிஸ்தவ சபைகள் இரவு கூட்டங்கள் நடத்தி தொந்தரவு செய்கின்றனர் என்று கூறி பொய்யான தகவல்கள் கொடுத்து போலீஸ் மூலம் எச்சர்க்கின்றனர். பல கிறிஸ்தவ குடும்பங்கள் வீடுகளில் சபை கூட்டம் நடத்த முடியாதபடி வழக்குகள் போடப்பட்டுள்ளன.

இப்படி கிறிஸ்தவர்களுகெதிரான வன்முறை பல மடங்கு தலை தூக்கி உள்ளது. பல வலைத்தளங்கள் இன்று கிறிஸ்தவ மார்க்கத்திற்கு எதிராக எழும்பி பல்வேறு வேலைகள் செய்கின்றன.

கிறிஸ்தவனே, உன் பங்கு என்ன.. சபைகளுக்குள் இன்னமும் சண்டை சச்சரவோடு திரிகிராயொ? என் சபை பெரியது, உன் சபை பெரியது என்று கணக்கு போட்டு கொண்டிருகிராயொ? உங்கள் சபையில் ஆவி இல்லை, அனலும் இல்லை என்று வசனம் பேசி திரிகிராயொ? மற்றவர்களை குறை சொல்லுவதை விட்டு விட்டு வேதாகமத்தை எடுத்து அதன் படி வாழ கற்று கொள்.

இன்று வீதிகளில் திரியும் இந்த கொடூர பிசாசு நாளைக்கு உன் இல்லத்திர்க்குள்ளும் வரும். கிறிஸ்தவன் என்று சொல்லும் எவன் வீட்டிற்க்கும் இந்த கொடூர தாக்குதல்கள் வரும்.

ஒரு கிறிஸ்தவன் தாக்கப்பட்டால் அவனோடு தோள்கொடுத்து நில். கூடி ஜெபி. உடனடியாக அந்த செய்தியை மற்ற கிறிஸ்தவர்களுக்கு சொல். மதவாதத்தை தூண்ட அல்ல.. முழங்களை முடக்க.. ஜெபிக்க ஜெபிக்க சாத்தான் ஓடிபோவான்.

நான் மகிழ வேண்டிய விஷயம்
எந்த ஆண்டிலும் இல்லாத வளர்ச்சி கிறிஸ்தவம் 2013ம் ஆண்டு கண்டிருக்கிறது. முக்கியமாக நடுத்தர குடும்பங்கள், வசதி படைத்தவர்கள், மற்றும் வாலிபர்கள் என்று பல விதங்களில் நம் கிறிஸ்தவம் வளர்ச்சி கண்டுள்ளது. 71 லட்சம் பேர் இந்திய தேசத்தில் கிறிஸ்தவர்களாக இருக்கின்றனர் என்று ஓர் கணக்கெடுப்பு சொல்கிறது. மறைமுக கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையும் கூடி கொண்டே போகிறது.

இந்திய தேசம் உலக கிறிஸ்தவ எண்ணிக்கையில் இப்போது 8வது இடத்தை பிடித்திருக்கிறது. http://www.persecution.org/2013/12/06/christianitys-unexpected-growth-in-india/


2014ம் ஆண்டில் இருக்கிறோம். தொடர்ந்து ஜெபிப்போம். தேவன் பெரிய காரியங்களை செய்வார்.

இந்த பதிவு தொடர்ந்து update செய்யப்படும்.

கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

இயேசுவே ஆண்டவர் என்று நிருபித்த கடிதம்

பரவசமூட்டும் நற்செய்தி
இஸ்ரேல நாட்டில் யூதர்கள் அதிகமாக மதிப்பது அவர்களின் ரபியை தான். நமக்கு பிஷப்கள், போதகர்கள் இருப்பதை போல வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள ரபியை இன்னமும் யூதர்கள் உயர்வாக வைத்துள்ளனர். புதிய ஏற்பாட்டில் இயேசுவின் காலத்தில் ரபி என்கிற வார்த்தை வழக்கத்தில் இருப்பதை நீங்கள் அறியலாம்.

சமீபத்தில் 108 வயதான தலைமை Rabbi Yitzhak Kaduri என்பவர் மறித்து போனார். ஆனால் இவரை பற்றின உண்மைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டியது உள்ளது. இவர் பல தீர்க்கதரிசனங்கள் உரைத்து நிறைவேறி இருக்கின்றன. இவர் கடைசியாக மரிப்பதற்கு முன் இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷரோன் அவர்கள் விரைவில் மரிப்பார் என்றும் கூறி இருந்தார். அந்த சமயத்தில் ஏரியல் ஷரோன் அவர்கள் ஆரோக்கியமாக இருந்தார்கள்.

அதனால் இந்த தீர்க்கதரிசனம் நிறைவேறாது என்று பலரும் நினைத்தனர். ஆனால் அவ்வருடத்திலேயே ஷரோன் அவர்கள் சுகவீனமடைந்து சுயநினைவை இழந்தார்கள். இதன் பிறகு நபியின் தீர்க்கதரிசனம் உலகெங்கும் பரவியது. பல you tube காணொளிகள் மேடையேறின. ரபி சொன்னபடியே ஷரோன் அவர்கள் மறித்தும் போனார்கள்.

இது உலகையே உலுக்கியது.. சரி... இதற்கும் இயேசுவே ஆண்டவர் என்பதற்கும் என்ன சம்பந்தம்? இதோ தொடர்கிறேன்....

யூதர்கள் இயேசு மேசியா என்றும் மீண்டும் வருவார் என்றும் நம்பாதவர்கள். இயேசு தெய்வம் இல்லை என்பதில் ஆணித்தரமாக இருப்பவர்கள். ஆனால் இந்த ரபி அவர்கள் இறப்பதற்கு முன்னால் ஓர் சிறிய கடிதத்தில் சில வார்த்தைகளை எழுதினார்கள். அதில் தான் மேசியாவை சந்தித்ததாகவும், பேசினதாகவும் இருந்தது.

அந்த கடித்ததில் கூறப்பட்டிருந்த வார்த்தார்கள் இதோ உங்களுக்காக.. He will lift the people and prove that his word and law are valid.
This I have signed in the month of mercy,
Yitzhak Kaduri

The Hebrew sentence (translated above in bold) with the hidden name of the Messiah reads: Yarim Ha’Am Veyokhiakh Shedvaro Vetorato Omdim

இதில் எபிரேய வார்த்தான yesuva என்கிறா வார்த்தை பதிவாகி இருந்தது. மேசியா ஏசுதான் என்று இவர் எழுதி இருந்தது எல்லோருக்கும் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்ப்படுத்தி இருந்தது.

மட்டும் அல்ல.. இவர் முக்கியமாக இன்னொன்றையும் கூறி இருக்கிறார். அது.. இயேசு மிக சீக்கிரம் வரப்போகிறார் என்பது தான். ஏரியல் ஷாரோன் மறைவுக்கு பின்னர் மிக விரைவில் இயேசுவின் வருகை இருக்கும் என கூறி இருக்கிறார்.

உலகத்தில் நடக்கும் பல நிகழ்வுகள் இயேசுவின் வருகையை முன்னறிவிக்கின்றன.. சுவிசேஷம் பரவமுடியாத இடங்களில் தேவன் செயல்பட்டு கொண்டிருக்கிறார். அரபு தேசங்களில் இயேசுவின் அன்பு ஊற்றப்பட்டு கொண்டிருக்கிறது. இயேசுவை தரிசனங்களில் கண்டு கர்த்தரிடத்தில் திரும்புவோர் எண்ணிக்கை அதிகமாகி கொண்டுள்ளது. தொடர்ந்து ஜெபிப்போம். கர்த்தருக்காக வைராக்கியத்துடன் காத்திருப்போம்.

கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

http://realityofchrist.me/2014/01/02/shocking-jesus-coming-after-ariel-sharons-death-prophecy-by-rabbi-yitzhak-kaduri/
http://www.youtube.com/watch?v=R3GJ94aGOeY
http://www.youtube.com/watch?v=B3fosCXsLrk

காதலர் தினத்தை குறித்த ஓர் உண்மை பதிவு..


பிப்ரவரி 14, உலக காதலர் தினம்.. இந்தியாவில் மட்டும் அல்ல... உலக நாடுகளில் உள்ள பல கல்லூரிகள், மேல்நிலை பள்ளிகள் பருவ மாணவர்கள் இந்த நாளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.. இந்தியா மற்றும் இதர நாடுகளில் இதற்க்கு எதிர்க்கு வலுத்து வந்தாலும் மறைமுகமாக ஆதரவும் பெருகி வருகிறதை யாரும் மறக்க முடியாது..

இந்த காதலர் கொண்டாட்டம் கிறிஸ்தவர்களை சார்ந்தது என்ற ஓர் பொய்யான பிரசாரம் இந்தியா முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதன் உண்மையை வேரறுக்க இந்த பதிவு உங்களுக்கு நிச்சயம் பயன்படும்...
பிப்ரவரி 14கு இரண்டு கிறிஸ்துவுக்காக மரித்த ரத்த சாட்சிகளின் நினைவு நாளாகும். அந்த இரண்டு பேர் பெயரும் செயின்ட் வலெண்டின் (Valentine of Rome (Valentinus presb. m. Romae) and Valentine of Terni (Valentinus ep. Interamnensis m. Romae)) என்று தான் முடியும். இதில் ரோம நகரத்தில் இருந்த செயின்ட் வலெண்டின் கி.பி. 496ம் ஆண்டு ப்லமினா என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டார். (Ansgar, 1986, Chaucer and the Cult of Saint valentine, pp. 46-58)

மற்றொரு செயின்ட் வலெண்டின் (bishop of Interamna) அவர்கள் Emperor Aurelian ஆட்சி காலத்தில் கொடுமைபடுத்தப்பட்டு பின் ஆபிரிக்கா தேசத்தில் பல கிறிஸ்தவர்களோடு கொல்லப்பட்டார். இவரும் ப்லமினா என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டார். இந்த இருவரையும் ரோம நகரத்திலேயே அடக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. கத்தோலிக்க வரலாற்றின் பதிவுபடி இருவரும் பிப்ரவரி 14 அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆதி நாட்களில் இவர்களின் இறந்த நாளை கத்தோலிக்க காலெண்டெர்கலில் குறித்து வைத்து நினைவு கூர்ந்துள்ளனர். ஆங்கிலிக்கன் திருச்சபைகளிலும் இந்த நினைவு நாளை பதிந்துள்ளனர்...(Holy Days". Church of England (Anglican Communion). 2012. Retrieved 27 October 2012. "February 14 Valentine, Martyr at Rome, c.269") அதன் பிறகு 1969க்கு பிறகு கத்தோலிக்க காலண்டெர்கலில் இருந்து இந்த பதிவு நீக்கப்பட்டது.. இதற்கு முக்கிய காரணமாக அவர்களின் நினைவு நாள் பதிவுகளில் சரியான ஆதாரங்கள் இல்லை என்பதே. இன்று வளர்ந்த கிறிஸ்தவ சபைகள் இந்த நினைவு கூறுதலை ஆதரிப்பதில்லை... (Calendarium Romanum ex Decreto Sacrosancti Œcumenici Concilii Vaticani II Instauratum Auctoritate Pauli PP. VI Promulgatum (Typis Polyglottis Vaticanis, MCMLXIX), p. 117)

செயின்ட் வலெண்டின் ரோம பேரசராக இருந்த Roman Emperor Claudius II அவர்களின் காலத்தில் கொடுமைக்குள்ளான கிறிஸ்தவர்களை ஆதரித்ததால் அரசரால் நேரடி பார்வையின் கீழ் வந்தார். வலெண்டின் அவர்களை சிறையில் அடைத்து கொடுமைபடுத்தியது அரசாங்கம்.. ஆனால் சிறைச்சாலையில் இவர் ஊழியம் செய்ததை நிறுத்தவில்லை. அங்குள்ள ராணுவ வீரர்களை தேவனுக்குள் வழிநடத்தினார்.

Roman Emperor Claudius II அவர்களின் காலத்தில் ராணுவ வீர்களுக்கு திருமணம் செய்ய மறுக்கப்பட்டது. மற்ற நாடுகளுக்கெதிராக போர் முடிந்தவுடன் ராணுவ வீரர்கள் தங்களுக்கு தேவையான பெண்களை எடுத்து கொள்ளலாம் என்று கட்டளையிடிருந்தான். வலெண்டின் அவர்கள் இதை எதிர்த்தார். வேதாகமத்தில் சொல்லப்பட்ட திருமணத்தை ராணுவ வீரர்களுக்கு கற்று கொடுத்து அவர்கள் விரும்பிய மங்கையரை ரகசியமாக திருமணம் செய்து வைத்தார்... (David James Harkness, Legends and Lore: Southerns Indians Flowers Holidays, vol. XL, No. 2, April 1961, University of Tennessee Newsletter (bimonthly), p. 15.)

இதன் மத்தியில் வலெண்டின் அவர்கள் Roman Emperor Claudius II அவர்களையும் கிறிஸ்துவை ஏற்று கொள்ள அறிவுறுத்தினார். இதனால் கோபம் அடைந்த பேரரசர் Roman Emperor Claudius II வலெண்டின் அவர்களை கொல்ல உத்தரவிட்டார்.

செயின்ட் வலெண்டின் அவர்கள் மரிப்பதற்கு முன் ஓர் அற்புதம் செய்தார். அதாவது ரோம பேரரசின் சிறை அதிகாரியாக இருந்த Asterius
என்பரின் மகள் ஜூலியா என்பவர் கண்பார்வை அற்றவராக இருந்தார். ஒரு முறை செயின்ட் வலெண்டின் அவர்கள் ஜெபித்ததின் விளைவாக ஜூலியாவிர்க்கு பார்வை கிடைத்தது. இந்த அற்புத நிகழ்வு சிறையில் இருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்த நிகழ்வு மூலம் சிறை அதிகாரியும், அவர் மகள் ஜூலியா மற்றும் குடும்ப உறுப்பினர்கள் 44 பேர் இயேசு கிறிஸ்துவை சொந்த ரட்சகராக ஏற்று கொண்டனர்... (Oruch, Jack B., "St. Valentine, Chaucer, and Spring in February", Speculum, 56 (1981): 534–65. Oruch's survey of the literature finds no association between Valentine and romance prior to Chaucer. He concludes that Chaucer is likely to be "the original mythmaker in this instance.)

இவர் மரிப்பதற்கு முன் கடைசியாக ஜூலியாவிர்க்கு ஓர் கடிதம் எழுதினார்... சிறை அதிகாரி Asterius மகளான ஜூலியா ஓர் கடிதம் எழுதினார். அதின் இறுதியில் "Your Valentine" என்று முடித்திருந்தார். இந்த வார்த்தை இன்றும் கடிதங்களில் பரிமாறப்படுகிறது. இது காதல் கடிதம் அல்ல.. அன்பின் கடிதம்... இயேசு கிறிஸ்துவே தெய்வம் என்று முழங்கினவர் தன் இறுதி நாட்களில் இயேசுவை ஏற்று கொண்ட, கண்களில் அற்பதம் பெற்ற தேவ பிள்ளைக்கு எழுதின கடிதம்... அந்த கடிதம் அன்பையும் நட்பையும் ஆழமாக உணர்த்தும் ஓர் அழகிய மடல் (ஆதாரம்: Ruth Webb Lee, A History of Valentines, 1952, Studio Publications in association with Crowell)... இன்றைய காலத்தில் எழுதுவது போன்ற கேவலமான கடிதம் அல்ல... உங்கள் அனைவருக்கும் புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

மரித்த பின் செயின்ட் வலெண்டின் அவர்கள் Church of Praxedes என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டார். இவரின் இடத்தில் ஜூலியா ஓர் பாதாம் மரத்தை நட்டார். இன்றும் கடிதங்களில் பாதாம் மரத்தின் அடையாளத்தை அன்பிற்கும், நட்பிற்கும் இருப்பதை யாவரும் அறியலாம். (John Foxe. Voices of the Martyrs. Bridge Logos Foundation. pg. 62.)

சரி... இவரின் நினைவு நாள் எப்படி காதலர் தினமானது??? இதை அறிந்து கொள்ளும் முன்னர் நீங்கள் தெரிந்து கொல்ல வேண்டிய முக்கியமான காரியம்.. செயின்ட் வலெண்டின் நினைவு நான் காதலர் தினமாக கொண்டாடப்படவில்லை. அதற்க்கு ஆதாரமும் கிடையாது. செயின்ட் வலெண்டின் ஓர் கத்தோலிக்க போதகர். இயேசு கிறிஸ்துவுக்காக தீவிரமாக உழைத்தவர். கத்தோலிக்க போதகர்கள் திருமணம் செய்வதில்லை. தங்கள் வாழ்க்கையை தேவனுக்காக அர்ப்பணித்தவர்கள். அதை போலவே செயின்ட் வலெண்டின் அவர்களும் வாழ்ந்தார். எந்த ஓர் சூழ்நிலையிலும் இவர் தன்னிலை மாறவில்லை... இவருக்கும் இந்த காதலர் தின கொண்டாடத்திர்க்கும், முன் இருந்த சபை நினைவு கூறுதலுக்கும் சம்பந்தம் இல்லை.. (ஆதாரம்:Oruch, Jack B., "St. Valentine, Chaucer, and Spring in February", Speculum, 56 (1981): 534–65.)

14 ன்காம் நூற்றாண்டுகளில் கிரேக்க-ரோம சாம்ராஜ்யங்களில் பிப்ரவரி மாதம் விடுமுறை மாதங்களாக இருந்துள்ளது. (Oruch, Jack B., "St. Valentine, Chaucer, and Spring in February", Speculum, 56 (1981): 534–65. ) அந்நாட்களில் ராணுவ வீரர்கள் தங்கள் மனைவிகளோடு நேரத்தை செலவிடுவர். திருமணம் ஆகாத ஆண்கள், பெண்கள் தங்கள் துணியை தேடுவது இந்த விடுமுறை நாட்களில் தான். செயின்ட் வலெண்டின் அவர்களில் நினைவு கூறுதலும் இந்த பிப்ரவரி மாதத்தில் வருவதால் அந்த நினைவு கூறும் விழாவில் இணைய ஆரம்பித்தனர்..

இதற்கு முக்கிய காரணம் செயின்ட் வலெண்டின் அவர்கள் ராணுவ வீர்களுக்கு திருமணம் செய்துவைத்த நிகழ்வுகள் தான். ராணுவ வீரர்கள் தங்கள் துணையை நிச்சயம் தேட வேண்டும், திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று செயின்ட் வலெண்டின் அவர்கள் அறிவுறுத்தி பல திருமணங்களை அரசுக்கு தெரியாமல் நடத்தி இருந்தார். ரோம பெரருசு கிளாடிஸ் II க்கு பின்னர் ராணுவ வீரர்கள் திருமணம் செய்து கொள்ள ஆரம்பித்தனர். இந்த நிகழ்வும் இணைந்து கொண்டதால் பிப்ரவரி மாதம் 14ன்காம் நாள் துணையை தேடும் நாளாகவும், தாங்கள் நேசிக்கும் நபரை சந்திக்கும் நாளாகவும், மனைவியோடு நேரம் செலவிடும் நாளாகவும் அனுசரிக்கப்பட்டது.

இந்த விழா கொஞ்சம் திசை மாறி வேகமாக உலகெங்கும் பரவ ஆரம்பித்தது. காதலர்கள் தினமாக இன்று மாறிப்போனது. சாத்தான் எப்படி ஓர் உன்னத நினைவு கூறும் நாளை மாற்றி விட்டான் பாருங்கள். இன்று பெற்றோருக்கு தெரியாமல் இருட்டறையை தேடி ஓடும் இளம் உள்ளங்கள் எத்தனை. இதன் மூலம் கிறிஸ்தவத்திற்கு ஓர் கெட்ட பெயரை உருவாக்கவும் சாத்தான் செயல்பட்டு வருகிறான்.

வாலிபனே, உன் இளவயது மனைவியோடு மகிழ்ந்திரு என்று தான் வேதம் நமக்கு கற்று கொடுக்கிறது. உன்னை நேசிப்பவர்கள் என்று ஓர் பெண்ணையோ, ஆணையோ களவில் தேடாதே.. உன்னை நேசிப்பவர்கள் உன் தாயாக இருந்தால் இந்த நாளில் அவர்களுக்கு ஓர் அன்பின் கடிதம் எழுது. உன் அக்கா, தம்பி அப்பா நண்பர்களுக்கும் நீ கடிதம் எழுதலாம். நீ உன் மனைவியை நேசிப்பாய் என்றால் அவர்களோடு நேரம் செலவிடு. உனக்கு துணையை பேசி முடித்திருப்பார்கள் என்றால் அவர்களோடு உன் அன்பை பகிர்ந்து கொள்...

அதை விட்டு விட்டு திருட்டுத்தனமாய் உன் உடலை தெருவில் கலையாதே.. வீட்டிற்கு தெரியாமல் நீ வைக்கும் உறவுகள் உன் நிம்மதியை நிச்சயம் குலைக்கும். உன் பெற்றோருக்கு, தேவனுக்கு உண்மையாய் இருக்கும் நாட்களில் அவர்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்யாதே. இது காதலர் தினம் அல்ல.. அன்பின் தினம்.. ஏசுவுக்கு இரண்டு தேவ மனிதர்கள் தன்னை அர்ப்பணித்த தினம் என்பதை எள்ளளவும் மறந்து விடாதே..

தேவை இல்லாத நட்பு உன்னை சாவுக்கு இழுக்கும். தேவை இல்லாத அன்பு உன்னை தெருக்களில் அலைகழிக்கும். தேவையில்லாத பருவக்காதல் உன் குடும்ப வாழ்க்கையை சீர்குலைத்து உண்மையான அன்புகளை கொன்றுவிடும்.. மீண்டும் இதை பற்றி மற்றொரு பதிவில் எழுதுகிறேன்...

தேவன் உங்களோடிருப்பாராக.. ஆமென்..

நான் என்னை நேசிப்பதை காட்டிலும்
என்னை அதிகதிகமாக நேசிக்கும்
இயேசு கிறிஸ்து

கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

ஆதாரம்....

"Valentine's Day worth £1.3 Billion to UK Retailers". British Retail Consortium
Eve Devereux (2006). Love & Romance Facts, Figures & Fun
David James Harkness, Legends and Lore: Southerns Indians Flowers Holidays, vol. XL, No. 2, April 1961, University of Tennessee Newsletter (bimonthly), p. 15.
http://en.wikipedia.org/wiki/Valentine%27s_Day
Domingo, Ronnel. Among Asians, Filipinos dig Valentine's Day the most. Philippine Daily Inquirer,
New Patterns for Worship. Church of England. 2002. p. 408. ISBN 0715120603.
Valentine`s Day versus Dragobete at the Wayback Machine (archived June 27, 2010), cultura.ro (Romanian)

Wednesday, December 18, 2013

எதற்காக 25ம் தேதி கிறிஸ்மஸ் கொண்டாட வேண்டும்????


உங்கள் அனைவருக்கும் எங்கள் கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்.
ஒவ்வொரு கிறிஸ்தவனும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான ஓர் காரியம் "எதற்காக 25ம் தேதி கிறிஸ்மஸ் கொண்டாட வேண்டும்?" அதற்கு விடை காணும் வண்ணமாக இதை பதிந்துள்ளேன்.

கிறிஸ்மஸ்... கிறிஸ்தவர்கள் மத்தியில் சந்தோஷம், மகிழ்ச்சி, அன்பு பொங்கும் அழகு நாளாக இன்றும் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வளர்ச்சி முதலில் கொண்டாட்டமாக ஆரம்பிக்கப்பட்டு பின் கிறிஸ்மஸ் மரம், அலங்காரங்கள், கிறிஸ்மஸ் தாத்தா, புதிய ஆடை அலங்காரங்கள், ஆனாதை குழந்தைகள் உபசரிப்பு என்று பல விதங்களில் வளர்ந்து விட்டது.

இந்த கிறிஸ்மஸ் எப்போது ஆரம்பிக்கப்பட்டது? யாரால்? என்ன தேதியில்? என்ற பல விஷயங்களை ஆராய்ந்து வரும் இந்த காலங்களில் நாம் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை இது.

கிறிஸ்மஸ் எப்படி உருவானது??

இந்த உண்மையை அறிந்து கொள்ளும் முன்னர் நாம் தெரிந்து கொள்ளும் முன்னர் இயேசு கிறிஸ்து பிறந்த கால நாட்களில் உலகம் முழுவதும் வித்தியாசமான காலண்டர்கள் இருந்தன என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.. கி.பி 70ல் எருசலேம் தேவாலயம் ரோமர்களால் அழிக்கப்பட்ட பின்னர் கிறிஸ்தவம் முழுமையாக யூதமாரக்கத்திலிருந்து பிரிந்து தனியான ஒரு மார்க்கமாகியது. அதன்பின்னர் இயேசுக்கிறிஸ்துவின் மரணம் சம்பவித்த நாளைக் கிறிஸ்தவர்கள் கணிப்பிடத் தொடங்கினார்கள். அக்காலத்தில் வித்தியாசமான கலண்டர்கள் உபயோகத்தில் இருந்தமையால், கிழகத்திய சபைகள் ஏப்ரல் 6ம் திகதியையும் மேற்க்கத்திய சபைகள் மார்ச் 25ம் திகதியையும் இயேசுக்கிறிஸ்து சிலுவையில் மரித்த நாளாகக் கணித்தனர். பழைய ஏற்பாட்டுத் தீரக்கதரிசிகள், தாங்கள் கருவுற்ற அல்லது பிறந்த தினத்திலேயே மரித்தார்கள் என்னும் நம்பிக்கையின்படி இயேசுக்கிறிஸ்து சிலுவையில் மரித்த நாளை அடிப்படையாகக் கொண்டு, கிழக்கத்திய சபைகளில் இயேசு கிறிஸ்து ஜனவரி 6ம் திகதி பிறந்தார் என்றும் மேற்கத்திய சபைகளில் அவர் டிசம்பர் 25ம் திகதி பிறந்தார் என்றும் முடிவு செய்யப்பட்டது.

இதற்க்கு சரித்திர ஆதாரங்களை பாப்போம்.

வேதாகமத்தில் கிறிஸ்து பிறந்த நேரத்தையோ, நாளையோ, வருடத்தையோ குறிப்பிடவில்லை.. ஆனால் வேதாகமம் சில கால உண்மைகளை நமக்காக வைத்துள்ளது. லூக்கா 2:8 8. அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.

இதன் மூலம் அது ஓர் இளவேனிற்காலம் என்பதையும், குளிர் மாதமான டிசம்பர் அல்லது ஜனவரி என்பதையும் அறியலாம்... முதலாம் இரண்தாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த Irenaeus (c. 130–200) or Tertullian (c. 160–225) என்பவர்கள் கிறிஸ்மஸ் பற்றி எழுதவில்லை. Alexandria (c. 165–264) என்பவர் ரோமர்களில் காலத்தில் இருந்த பிறந்த நாள் பண்டிகைகள், மற்றும் பல விழாக்களை "பேகன்" என்ற கடவுளின் பண்டிகை என்று கூறி அனைத்து ரோம விழாக்களுக்கும் தடை விதித்தார். இதிலும் கிறிஸ்து பிறப்பு இடம் பெறவுல்லை. ஆதலால் இந்த காலத்திலும் கிறிஸ்து பிறந்த நாள் கொண்டாடி இருக்க முடியாது என்பது நிச்சயம். கிறிஸ்மஸ் பேகன் கடவுளின் விழா அல்ல என்பதையும் நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

இப்போது இன்னொரு கோணத்தில் இருந்து ஆராய்வோம்.. நாம் வைத்திருக்கும் பரிசுத்த வேதாகமத்தில் நான்கு சுவிசேஷ பகுதிகளும் (மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான்) கிறிஸ்துவின் மரித்ததை தெளிவாக எழுதி வைத்துள்ளனர்.. இதில் இருந்து பல உண்மைகளை நாம் உணரலாம்.. சுவிஷேசத்தில் பஸ்கா பண்டிகைக்கு முன் தேவன் சிலுவையில் அறையப்பட்டதை குறித்து எழுதுகிறார்.

மத்தேயு 26:2 இரண்டு நாளைக்குப்பின்பு பஸ்காபண்டிகை வருமென்று அறிவீர்கள்; அப்பொழுது, மனுஷகுமாரன் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றார்
மத்தேயு 26:2 இரண்டு நாளைக்குப்பின்பு பஸ்காபண்டிகை வருமென்று அறிவீர்கள்; அப்பொழுது, மனுஷகுமாரன் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றார்

இதனை அடிப்படையாக வைத்து இருவேறு நாட்கள் தேவன் பூமியில் அவதரித்த நாட்களாக ஏற்று கொள்ளப்பட்டது. நான் ஏற்க்கனவே குறிப்பிட்டுள்ளபடி அந்நாட்களில் இருவேறு நாட்க்காடிகள் இருந்த படியால் கிறிஸ்து பிறந்த நாட்கள் சில நாடுகளில் மாறுபடுகின்றன.. இன்றும் சில மதத்தினரும், நாட்டினரும் தங்கள் சொந்த நாட்க்காடிகளையே பயன்படுத்துகின்றனர்...

Egypt, Ethiopia, Eriteria, Russia, Georgia, Ukraine, Serbia, the Republic of Macedonia, and the Republic of Moldova போன்ற நாடுகள் Gregorian calendar நாட்க்காட்டி வழியில் January 7 ஐ கிறிஸ்து பிறந்த நாளாக கொண்டாடி வருகின்றனர். . கிழக்கு Orthodox Churches in Bulgaria, Greece, Romania, Antioch, Alexandria, Albania, Finland, and the Orthodox Church in America போன்றவைகள் டிசம்பர் 25ம் தேதியை ஜூலியன் நாட்க்காட்டி வழியில் ஏற்று கொண்டனர்.. இதற்கு காரணம் இருவேறு வித்தியாசமான நாட்க்காட்டிகளை பின்பற்றி தேதியை முடிவு செய்தனர். (http://en.wikipedia.org/wiki/Christmas)

கி.பி. 360களின் ஆதாரமொன்று அக்காலத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் உரோமில் நிலைபெற்றிருந்ததைக் காட்டுகின்றன. ஆனால் கிழக்குத் திருச்சபை கிறிஸ்தவர்கள் குழந்தை இயேசுவைக் காண கிழக்கில் இருந்து ஞானிகள் வந்ததை கொண்டாடும் திருநாளின் (சனவரி 6) ஒரு அங்கமாக இருக்கிறது.

200 C.E. வாக்கில் Tertullian of Carthage என்பவர் நிசான் மாதம் 14ம் நாள் (பரிசுத்த பவுல் கூற்றுப்படி) இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார். இது ரோம நாட்டு சோலார் நாட்க்காட்டி படி மார்ச் மாதம் 25ம் தேதி. அக்காலங்களில் மனிதன் கருவில் உருவாவதும் மரிப்பதும் ஒரே நாள் என்று நம்பப்பட்டது. அதனால் மார்ச் 25 (கர்த்தர் சிலுவையில் அறையப்பட்ட நாள்) இயேசு கிறிஸ்து கருவில் ஜெனிபித்த நாளாக கருதப்பட்டது. அன்றில் இருந்து ஒன்பது மாதங்கள் கழித்து பார்த்தால் டிசம்பர் 25ம் தேதி வரும். இதுவும் ஓர் சாந்து.. நாம் கிறிஸ்மஸ் 25ம் தேதி கொண்டாடுவதற்கு.(Trinity (c. 399–419))

நான் மேலே குறிப்பிட்டுள்ளபடி இரண்டு வித்தியாசமான கால நாட்க்காடிகளை வைத்து இயேசு பிறப்பை குறித்தனர். கிரேக்க கால அட்டவணை படி ஏப்ரல் 6ம் தேதி இயேசு சிலுவையில் அறையப்பட்டதாக நம்புகின்றனர். அதனால் பல நாடுகளில் ஜனவரி 6ம் நாள் கிறிஸ்மஸ் கொண்டாடப்படுகிறது. இதன் மூலம் அக்காலங்களில் ஒரே விதமான நம்பிக்கை உலகம் முழுவதும் இருந்ததை அறியலாம்.

டிசம்பர் 25 பேகன் சூரிய கடவுள் பிறந்த நாளாக அனுசரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அது பிறகு கிறிஸ்துமஸ் ஆகா மாற்றப்பட்டது என சொல்லப்படுகிறது. இதில் உண்மை இருக்க முடியாது. ஏன் என்றால் இக்கால அட்டவணையின் படி பேகன் சொறிய கடவுள் பிறந்த நாள் டிசம்பர் 21 அல்லது 22 ஆகத்தான் இருக்க முடியும். 25ந்து அல்ல.

இயேசு பிறந்த வருடமோ, நாளோ வேதாகமத்தில் குறிப்பிடவில்லை. ஆனால் மரபு வழியாக இதை நாம் நினைவு கூர்ந்து வருகிறோம். இதற்க்கு மூன்றாம் நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவ ஆராச்சியாளர்கள் இதனை தெளிவு படுத்தி உள்ளனர்.

இன்றும் பல கிறிஸ்தவ பிரிவுகள், சபைகள், விசுவாசிகள் கிறிஸ்மஸ் ஐ கொண்டாடுவதில்லை. அவர்களை குறை சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது. கிறிஸ்து இந்த பூமியில் பிறந்தது உண்மை. நம்மோடு வாழ்வது உண்மை. இயேசு கிறிஸ்து நமக்காக வராவிட்டால் நாம் பரலோகவாசிகளை இருந்திருக்க முடியாது. இதன்று நமகொரு நம்பிக்கை கொடுத்ததே இயேசு கிறிஸ்துதான். அவரே தெய்வம். அவரை அல்லாமல் வேறு தெய்வம் இல்லை.

கிறிஸ்மஸ் பற்றி யாராவது கேள்வி கேட்டால் தைரியமாக சொல்லுங்கள். இது இயேசு இந்த பூமியில் பிறந்ததை நினைவு கூறத்தான் என்று. இந்த நாள் உலகம் முழுவதும் கொண்டாடவேண்டிய ஓர் உன்னதமான நாள். நாம் இயேசுவை தெய்வமாக கொண்டாடுவோம்.

http://www.gty.org/resources/questions/QA68/why-do-we-celebrate-christmas-on-december-25
http://christianity.about.com/od/christmas/f/christmashistor.htm
http://www.whychristmas.com/customs/25th.shtml
http://www.biblicalarchaeology.org/daily/biblical-topics/new-testament/how-december-25-became-christmas/
http://billygraham.org/answer/why-do-we-celebrate-christmas-on-december-25-when-the-bible-doesnt-mention-the-date-of-christs-birth/
 
Many thanks to
 தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

Thursday, August 1, 2013

இந்திய தேசத்தின் சுதந்திர போராட்டத்தில் கிறிஸ்தவர்களின் பங்கு என்ன?


இந்திய தேசத்தின் சுதந்திர போராட்டத்தில் கிறிஸ்தவர்களின் பங்கு என்ன?

கிறிஸ்தவ பெயரை தரித்துகொண்டவன்னேல்லாம் கிறிஸ்தவன் என்றால் இயேசு என்கிற நபர் இந்த உலகத்தில் மரித்திருக்கவேண்டிய அவசியமில்லை.
எவன் ஒருவன் கிறிஸ்து தன் பாவங்களுக்காக மரித்தார் என்று முழுமனதுடன் ஏற்றுகொள்கிரானோ, தேவன் தன்னை ரட்சித்தார் என்கிற விசுவாசத்தோடு பரிசுத்த வேதாகமத்தை அனுதினமும் வாசிக்கிறானோ அவனே கிறிஸ்தவன்.

கோல்வால்கர் (1906-1973) ஆர்.எஸ்.எஸ் தலைவர், அருண்  சௌரி (பி.ஜெ.பி, அரசியல்வாதி), saffronised  NCERT பள்ளி 9ம் வகுப்பு பாடம் என பல இடங்களில் இந்துக்களும், முகமதியர்களும் இந்தியாவின் சுதந்திரத்திற்காக பாடுபட்டனர் என்று சொல்லி வரலாற்றில் பதித்துக்கொண்டனர்.
Varghese Mappilla Kandathil
Felix Wilfred என்கிற ஓர் வரலாற்று ஆசிரியர் இந்தியாவின் சுதந்திரத்தின் கிறிஸ்தவர்களில் பங்கு என்னவென தெளிவாக ஆதாரத்தோடு எழுதிவைத்துள்ளார். சுதந்திர தேசத்திற்காக பாடுபட்ட மிஷனரிகளில்   முக்கியமானவர்கள் ஸ்டான்லி ஜோன்ஸ் , C.F.அன்றூஸ் , J.C.வின்ஸ்லோ , வர்ரியர் எல்வின், ரால்ப் ரிச்சர்ட் கைதாஹ்ன் மற்றும் எர்னெஸ்ட் போர்றேச்டார்-பேடன். இவர்கள் ஆங்கிலய காலனி ஆதிக்கத்தை நேரடியாக எதிர்த்தவர்கள். இந்திய தேசம் இந்தியர்களுக்கே இன்று முழங்கியவர்கள். பல மிஷனரிகள் இதனால் ஆங்கிலேயர்களால் நாடுகடத்தப்பட்டனர். இதன் மத்தியுலும் பல கிறிஸ்தவர்கள் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து உயிர்விட்டனர். பலரும் ஆங்கிலேயர்களால் தான் கிறிஸ்தவம் இந்திய தேசத்திற்குள்ளே வந்தது என்று கதைகட்டி நரிகளைப்போல் தெருவெங்கும் ஊளையிடுகின்றனர். கிறிஸ்தவம் 2000 ஆண்டுகளுக்கு முன்பே "பரிசுத்த தோமா" என்கிற கிறிஸ்தவ சீசர் மூலம் வந்துவிட்டது. இன்றும் இவர் சரித்திரம் சொல்லாத ஏடுகள் இல்லை. அந்நிய ஆதிக்கம் 17ம் நூற்றாண்டுகளில் தலைதூக்கியது. அன்றுவரை கிறிஸ்தவம் இந்தியத்தேசத்தில் பலவிதங்களில் சொல்லப்பட்டுவந்தது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.


ஜார்ஜ் தாமஸ் என்கிற கிறிஸ்தவர், இந்திய தேசிய காங்கிரஸ் சுதந்திரபோராத்தில் குதித்த ஆரம்ப நாட்களில், இந்திய கிறிஸ்தவ சமுதாயம் (1885) என்கிற ஓர் அரசியல் சார்ந்த ஓர் கூட்டத்தை சேர்த்து சுதந்திர போராட்டத்தில் குதித்தார். 1887ம் ஆண்டு இந்திய காங்கிரஸ் தாக்கல் செய்த மூன்றாம் அரசியல் சாசனத்தில் 607 பேர் கலந்துகொண்டனர். இதில் 15 பேர் கிறிஸ்தவர்கள் (கிறிஸ்தவர்கள் மக்கள் தொகை எண்ணிக்கை மிக குறைவு).  இதில் முக்கியமானவர்கள் ஒரிசாவை சார்ந்த மது சுதன் தாஸ்
(1848-1934),  பெங்காலி கிறிஸ்தவர் காளி சரண் பேனர்ஜி (1847-1907) என்பவர்கள். இவ்விருவரும் தேசிய அரசியலில் காங்கிரசோடு இணைந்து பல அரசியல் சாசனங்களை தாக்கல் செய்தனர். 1889ம் ஆண்டு நடைபெற்ற முக்கியமான கருத்தரங்கில் கலந்துகொண்ட 10 பெண் தலைவர்களில் 3 ன்று பேர் கிறிஸ்தவ தலைவர்கள். இவர்கள்  பண்டித ரமாபாய் சரஸ்வதி (1858-1922), திருமதி திரயும்புக் மற்றும் திருமதி நிகம்பே.


ஸ்வராஜ் இயக்கம்  (1905), the ஒத்துழையாமை இயக்கம் (1920), the Civil Disobedience Movement (1930) மற்றும் வெள்ளையனே வெளியேறு  இயக்கம் (1942) பல ஆயிரக்கணக்கான இந்திய கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு தங்கள் உயிரை கொடுத்துள்ளனர். பலர் குடும்பத்தை பிரிந்து சிறையில் மாண்டனர்.


1920ம் வருடம் ஆரம்பித்து பல கிறிஸ்தவ இயக்கங்கள் ஆங்காங்கே சபைகள், கிறிஸ்தவ கல்லூரிகள், அரசியல் சார்பு இயக்கங்கள் உருவாகி சுதந்திர தேசத்திற்காக பாடுபட்டனர். அனைத்திந்திய கிறிஸ்தவ மாநாடு, தேசிய கிறிஸ்தவ ஆலோசனை சபை (the National Christian Council of இந்திய), ஒருங்கிணைந்த கிறிஸ்தவ சாஸ்திர கல்லூரி (United Theological College (Bangalore)) சார்பாக உருவாகின  கிறிஸ்தவ தலைவர்கள் மற்றும் வாலிப மாணவ குழுக்கள் , பெங்கால் செரம்பூர் கல்லூரி (Serampore College) (Bengal), புனித பவுல் கல்லூரி, கொல்கத்தா (St. Paul’s College, Calcutta (Bengal)), கேரளா மலபார் கிறிஸ்தவ கல்லூரி (Malabr Christian காலேஜ்), Calicut (Kerala), கிறிஸ்தவ வாலிப ஆலோசனை மற்றும் செயல்படுத்தல் குழு (கேரளா) (the Youth Christian Council of Action (Kerala)), இந்திய கிறிஸ்தவ மாணவ இயக்கம் (the Student Christian Movement of India), இந்திய கிறிஸ்தவ கழகம், பெங்கால் (the Indian Christian Association of Bengal, கிறிஸ்தவ கூடுகைகள், மும்பை (conference of Christians in Bombay), இந்திய கிறிஸ்தவ கூட்டம், பாளையம்கோட்டை மற்றும் திருநெல்வேலி (Meeting of Christians in Palayamcotta and Tinnaveli) போன்றவற்றின் மூலம் பல இடங்களில் சபைகள் மூலமாக கிறிஸ்தவர்கள் ஆங்கிலேய காலனி ஆதிக்கத்திற்கு எதிர்த்து நின்று இரவு பகல் பாராமல் போராடினர். சில இடங்களில் முன்வந்து போராட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

1973ம் ஆண்டு தமிழ்நாடு அரசு சுதந்திர போராட்ட தியாகிகள் பெயரை வெளியிட்டது. அதன் தலைப்பு "யார் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றது, தமிழ்நாடு" "Who is Who of Freedom Fighters, Tamil Nadu" இதில் D.ஆர்தர் ஜெயகுமார் (D.Arthur Jayakumar) மற்றும் 103 பேர் கிறிஸ்தவர்கள் என்று குறிக்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய அளவில் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற கிறிஸ்தவர்களில் D.ஆர்தர் ஜெயகுமார் அவர்களின் பங்களிப்பு அளவிடமுடியாதது யாராலும் மறுக்கமுடியாத உண்மை.



J.C Kumarappa
J.C.குமரப்பா (உண்மையான பெயர் ஜான் ஜேசுதாசன் கொர்நெலேயு, (1892-1960), முக்கியமான காங்கிரஸ் தலைவர். ஹார்வர்ட், ஒகியோ, கொலம்பியா போன்று பல இடங்களில் படித்து பட்டம் பெற்ற இவர் லக்னோ வில் உள்ள கல்லூரியில் தத்துவ ஞான சாஸ்திர பேராசிரியராக இருந்தார். சுதந்திர தாகம் கொண்ட இவர் அண்ணல் காந்தியை 9 மே  1929 அன்று சபர்மதி ஆசிரமத்தில் சந்தித்த பின் அவர் நெருங்கிய நண்பர் ஆனார். இவர் "சத்தியக்ரஹம்" போராட்டத்தில் கலந்துகொன்று பல கிறிஸ்தவ இயக்கங்களை இதனோடு இணைத்தார்.
காந்தி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க "எங் இந்தியா" என்கிற பத்திரிக்கையின் ஆசிரியரானார். 1942ம் ஆண்டு "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தில் மும்பை, நாக்பூரில் கிளர்ச்சியை ஏற்ப்படுத்தினதால் ஜபல்பூர், மத்திய பிரதேசம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இரண்டரை ஆண்டுகள் சிறையில் இருந்தார்

பவுல் ராமசாமி (1906) மற்றொரு முக்கியமான கிறிஸ்தவர். காந்தியின் உப்பு சத்தியாக்ரஹ போராட்டத்தில் கலந்துகொண்டு பிஷப் ஹீபர் கல்லூரியை மையமாக வைத்து செயல்பட்டார். பின்னை ஆங்கிலேயர்களால் கைதுசெய்யப்பட்டு திருச்சி, அல்லிபுரம் சிறைச்சாலைகளில் வாடினார். வெங்கல் சக்கரி (1880) காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தின் முக்கிய நபராக செயல்பட்டவர். 1930 ம் வருடம் லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் K.T.பவுல் அவர்கள் கலந்துகொண்டு விடுதலை முழக்கமிட்டார்.

லக்னௌவில் நடைபெற்ற அனைத்திந்திய கிறிஸ்தவர்கள் மாநாட்டிற்கு (1922, டிசம்பர் 27-30) பிறகு "ஒத்துழையாமை" இயக்கத்தில் கிறிஸ்தவர்களின் பங்களிப்பு அதிகமாக இருந்தது. இதன் பிறகு அதிகமான கிறிஸ்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆதாரம்:1930 The editor of The Guardian. N.H.துப்ஸ் பிஷப் கல்லூரி முதல்வர், கொல்கத்தா, நிறத் பிஸ்வாஸ் (பிஷப் அஸ்ஸாம் சபைகள்) ஆகிய இருவரும் 1932ம் ஆண்டு உப்பு சத்தியாக்ரஹ போராட்டத்தில் தங்களை இணைத்துகொண்டனர்.
1930 மற்றும் 1940ம் ஆண்டுகளில் கிறிஸ்தவ தலைவர்களான T.M. வர்கீஸ், A.J. ஜான், மச்காறேனேஷ் மற்றும் அக்கம்மா செரியன் ஆரம்ப நாட்களில் முக்கியமானவர்கள். திருவேன்கொர் காங்கிரஸ் தலைவர்களில் பிலோப்போஸ் ஏலஞ்சிக்கள் ஜான் (1903-1955) முக்கியமானவர்.

Joachim Alva and Violet Alva
கிறிஸ்தவ குடும்பங்கள் பல இணைந்து சுத்திர தேசத்திற்காக போராடினர். முக்கியமாக திரு ஜோசிம்  அல்வா Joachim Alva (1907-1979) அவர்களின் பங்களிப்பும் முக்கியமானது. இவர் கிறஸ்தவ வாலிப இயக்கத்தின் முன்னோடி. சுதந்திர போராட்டத்தில் குதிக்க தான் பார்த்துவந்த பணம்கொளிக்கும் வேலையை தூக்கிஎறிந்து வந்தார். திருமதி வியோலேட் அல்வா (1908-1969). கணவனும், மனைவியுமாக இணைந்து பல இடங்களில் சுதந்திர வேட்க்கையை தீயாய் பரப்பினர்.


இதை ஒரு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை சேர்ந்த ஓர் பத்திரிகை எழுத்தாளர் M.V.காமத் அவர்கள் ஒப்புகொண்டிருக்கிறார். தன் சுயசரிதையில் கிறிஸ்தவர்களில் பங்களிப்பு பற்றி தெளிவாக குறிப்பிட்டுள்ளார். சிப்ரியன் அல்வறேஸ் (Cyprian  Alvares), திரு ஜோசிம்  அல்வா (Joachim Alva), மார்செல் (Marcel A. M. D’Souza) ஆகியோரை பற்றி இவர் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். மட்டும் அல்லாமல் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பங்களிப்பு தேசிய அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதையும் நினைவு கூறுகிறார்.

கிறிஸ்தவ மிஷனரிகள் ஆரம்பித்த பள்ளிகூடங்கள், கல்லூரிகள் விடுதலை வேட்க்கையை கல்வியோடு பக்குவமாக மாணவர்களிடத்தில் சொல்ல பெரும்பங்கு கொண்டுள்ளது. பல கிறிஸ்தவ கல்லூரிகள் விடுதலை போராட்டத்தில் நேரடியாக குதித்துள்ளது இதற்கு ஓர் பெரிய சான்றாகும்.


ஜார்ஜ்  ஜோசப் (George Joseph (1887-1938) was another outstanding Christian who engaged in the freedom struggle)  அவர்களின் விடுதலை போராட்ட பங்கு மிகவும் பெரியது. 1918ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற விடுதலை போராட்ட கருத்தரங்கில் கலந்துகொண்டது மூலம் இந்திய கிறிஸ்தவர்கள் தேசிய விடுதலைக்காக போராடுகின்றனர் என்பதை உலகிற்கு உணர்த்தினார். இவர் வக்கீல் தொழிலுக்கு படித்தவர். திருமதி அண்ணி பெசன்ட் அம்மையார் நடத்தின அரசியல் கூட்டமைப்பில் பங்குகொண்டு சுதந்திர போராட்டத்தில் பங்கு கொண்டார். வாலிப நாட்களில் சுகத்தை தூக்கி எறிந்துவிட்டு ஒத்துழையாமை இயக்க ஆரம்பநாட்களில் கலந்து கொண்டார். அந்நிய பொருட்களை வாங்கமாட்டோம் என்று முழங்கினார். 1920ம் ஆண்டு ஆங்கிலேய அரசு இவரை அலகபாத் சிறையில் அடைத்தது. பின்னர் காந்திஜி அவர்கள் நடத்திவந்த "எங் இந்தியா" "young India" பத்திரிகையில் ஆசிரியராக
Joseph
மாறினார். இவர் நேரு(Jawaharlal Nehru), மகாதேவ் தேசாய்  (Mahadev Desai), புருஷோட்டம்தாஸ் டாண்டன்  Purushottamdas Tondon and தேவதாஸ் காந்தி Devdas Gandhi ஆகியோரோடு ஒன்றாக லக்னொவ் (Lucknow) சிறையில் இருந்தவர். பின்னர் காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவராக உருவெடுத்தார். ஜவர்கலால் நேரு அவர்கள் தன் சுயசரிதையில் ஜார்ஜ்  ஜோசப் அவர்களை பற்றி குறிப்பிட்டுள்ளார்.



C.சாமுவேல் ஆரோன் மற்றும் அவர் துணைவியார் திருமதி கிரேசி ஆரோன் அவர்களில் பங்களிப்பு பலரை விடுதலை போராட்டத்தில் குதிக்க வைத்தது. உப்பு சத்தியாக்ரக போராட்டம் மலபாருக்கு வந்தபோது இவர் குடும்பம் தான் முன் நின்று வழிநடத்தியது. தன் சொந்த கட்டிடத்தை இப்போராட்டத்திற்கு இலவசமாக கொடுத்து முன் நின்றவர். இவர் எந்நேரமும் கொலை செய்யப்படலாம் என்று அப்போதைய அதிகாரி E.M.கவனே மிரட்டினார். 1930ம் ஆண்டு காங்கிரஸ் தடைசெய்யப்பட்ட போது இவரும் கைதானார். ருபாய் ஆயிரம் அபராதம் அல்லது 6 வார சிறை என்ற நிலை வந்தது. தன்னுடன் போராடிய பாமர மக்கள் சிறையில் வாடும் போது இவர்மட்டும் வெளியில் இருக்க மனம் வரவில்லை. பணம் கட்ட மறுத்து சிறைத்தண்டனையை ஏற்றார்.



இது மட்டும் அல்ல. கிறிஸ்தவ பத்திரிக்கைகளும் சுதந்திர போராட்டத்திற்கு ஆதரவாக வெளிவந்தன. அதிகமாக மலையாள மொழியில் கிறிஸ்தவ பத்திரிக்கைகள் வெளிவந்தன. Rajya Samacharam published by the Basel Mission (1987), Paschimodayam (1987), கொச்சினை மையாமாக கொண்ட Paschima Taraka (1862-1863), Satyanada Kahalam (எர்ணாக்குளம்), வார பத்திரிகை Satyanadam, கோட்டயத்தை மையமாக கொண்டு வெளிவந்த Nazrani Deepikaa (1987), Malayala Manorma Company (1888) இன்றும் இந்த பத்திரிக்கை புகழ் பெற்றதாகும். இதை ஆரம்பித்தவர் ஒரு கிறிஸ்தவர். பெயர் Varghese Mappilla Kandathil (1858-1904). பின்னர் இது Malayala Manorama (1890 onwards) என்று பெயர் பெற்றது. இப்படி கிறிஸ்தவர்களால் ஆரம்பிக்கப்பட்ட பல பத்திரிக்கைகள் அரசியலையும், விடுதலை வேட்க்கையையும் பலநிலைகளில் தூண்டியது. இவைகளில் பங்களிப்பு மிகபெரிய வெற்றியை தேடித்தந்தது.

அந்நாட்களில் கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை மிகக்குறைவு. ஆனால் இவர்கள் பங்களிப்பு மிகப்பெரியது. கிறிஸ்தவர்களாகிய நாம் இதனை முழுமையாக தெரிந்து கொள்ளவேண்டும். இதனை உங்கள் சந்ததிக்கு எடுத்து சொல்லுங்கள். விடுதலை போராட்டத்தில் மட்டும் அல்ல, தீண்டாமை ஒழிப்பு, பெண் தீக்குளிப்பு, குழந்தைகள் திருமணம் போன்ற பலவற்றையும் எதிர்த்துநின்று வெற்றிகண்டனர்.

இப்படி அரும்பாடுபட்டு பெற்ற சுதந்திர இந்தியாவின் அமைதிக்காக தொடர்ந்து ஜெபிப்போம்.

பிலிப்பியர் 4:6. நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். 7. அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்

ரோமர் 13:1தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.

2 நாளாகமம் 7:14 என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன். 15. இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் ஜெபத்திற்கு என் கண்கள் திறந்தவைகளும், என் செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருக்கும்.

நம் தேசத்திற்கு சமாதானம், நிம்மதி, சேமம் வேண்டும் என்றால் கிறிஸ்தவர்களாகிய நாம் ஜெபிக்க வேண்டும். இந்த ஜெபத்தை தேவன் கேட்டு கால் மிதிக்கும் தேசமெல்லாம் கர்த்தருக்கு சொந்தமாகும் என்பது போல் நிச்சயம் இந்திய அமைதியில் தேசமாக மாறும்.

ஜெபியுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.


ஆக்கம், தொகுப்பு, படைப்பு
Article written by
Dr. Christo Selvan

You can copy this article for free. Don't forget to indicate our website address salomechristo.blogspot.com



http://www.kandathilkudumbam.com/knowus.html

Wednesday, March 20, 2013

மூலைக்கு தலைக்கல்

1968-ம் வருடத்தில், நூறு ஆண்டுகளுக்கு மேலாக சுவிஸ்சர்லாந்து நாட்டின் கைகெடிகாரங்கள் (Wrist Watches) மிகவும் புகழ் பெற்றவையாயிருந்தன. உலக பங்கு சந்தையில், 68 சதவீதமும் பங்கு விற்பனையிலும் 80 சதவீதம் லாபத்திலும் போய் கொண்டிருந்தது. ஆனால் பத்து வருடத்திற்கு பின், பங்கு விற்பனையில் 10 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. அடுத்த மூன்று வருடங்களில் அந்நாட்டின் 65,000 கடிகாரம் செய்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தங்கள் வேலைகளை இழந்தனர்.
.
இன்று கைகடிகாரம் செய்வதிலும், விற்பனையிலும் முதலிடம் வகிப்பவர்கள் ஜப்பானியர்களாவர்கள். 1968-ம் வருடம் வரைக்கும் அவர்களுடைய கடிகாரங்கள் அத்தனை புகழ் பெறவில்லை. பின் எப்படி அவர்கள், கடிகாரங்கள் புகழ்பெற்றன? அவர்கள் தாங்கள் செய்த கடிகாரங்களில் மின்னணுக்களால், படிகத்தை (Electronic Quartz) வைத்து உருவாக்க ஆரம்பித்தனர். அவை மற்ற கடிகாரங்களைவிட துல்லியமானதாக, ஒரு சிறிய பாட்டரி மூலம் வருடக்கணக்கில் ஓடும் கடிகாரங்களை உற்பத்தி செய்தனர்.
.
இந்த மின்னணுக்களால் படிகத்தை வைத்து, கடிகாரங்களை முதலில் உருவாக்கினவர்கள் யார் தெரியுமா? சுவிஸ் மக்களே! அதை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள் சுவிஸ் கம்பெனியிடம் முதலில் காண்பித்து விளக்கியபோது, அது ஒரு போதும் வேலை செய்யாது என்று கடிகார உற்பத்தியாளர்கள் அதை ஏற்க மறுத்தனர். ஆகவே சோர்வடைந்த ஆராய்ச்சியாளர்கள், அதை உலக அளவில் நடைபெற்ற கடிகாரங்களின் கருத்தரங்கில் அதை வைத்த போது, ஜப்பானியர்கள் அதை உடனே ஏற்றுக் கொண்டு அதன்படி செய்ய ஆரம்பித்தனர். அதனால், இன்று வரை அவர்களுடைய கடிகாரங்கள் உலக பிரசித்த பெற்று விளங்குகின்றன.