Showing posts with label ஜெபம். Show all posts
Showing posts with label ஜெபம். Show all posts

Thursday, October 23, 2014

ஆண்டவரோடு பேசி கொண்டிருந்தேன் - ஆபிரகாம் லிங்கன்

அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அமெரிகாவின் 16ஆவது ஜனாதிபதியாக இருந்தவர் இவர். அந்நாட்களில் ஒரு நாள் அதிகாலையில் மூத்த அரசு அலுவலர்கள் அவரை பார்த்து ஒரு முக்கியமான காரியத்தில் அவருடைய ஆலோசனையை பெறும்படி சென்றிருந்தார்கள். அவரது அறையின் அருகில் சென்ற போது அவர் யாருடனோ பேசி கொண்டிருந்தது போல் பேச்சு குரல் கேட்டது, ஆகவே இவரை தொந்தரவு செய்ய மனமில்லாமல் அவர் வரும் வரை பக்கத்து அறையில் காத்திருந்தனர்.
.
வெகு நேரம் கழித்து ஆபிரகாம் லிங்கன் வெளியே வந்தார். 'ஐயா நாங்கள் காலை 5 மணிக்கே வந்து விட்டோம். நீங்கள் யாருடனோ பேசி கொணடிருந்தீர்கள். ஆகவே காத்திருந்தோம்' என்றனர். 'வேறு யாருமல்ல, நான் ஆண்டவரோடு பேசி கொண்டிருந்தேன்' என்று ஆபிரகாம் சொன்னவுடன் அவாகளுக்கொல்லாம் பெரிய ஆச்சரியம்! அவர்களது வியப்பை கண்ட ஆபிரகாம் சிறிது விளக்கம் அளித்தார். 'நான் சிறு பையனாக இருககும் போது காடுகளில் விறகு வெட்டி ஜீவனம் செய்து வந்தேன். என் பாட்டி தான் என்னை பராமரித்து வந்தார்கள். அவர்கள் எனக்கொரு வேதத்தை கொடுத்து ஒவ்வொரு நாள் அதிகாலையிலும் எழுந்தவுடன் அதை தியானிக்க வேண்டும் என்றும், ஆண்டவருடன் மாத்திரமே முதலில் பேச வேண்டும் என்றும் கூறினார்கள். அந்த பாடத்தை இன்னும் விட்டு விடாமல், முதலில் ஆண்டவருடன் நான் பேசுகிறேன்' என்றார்.
.
நாம் முதலில் யாரோடு பேசுகிறோம்?

Monday, September 29, 2014

விலையுயர்ந்த வைரம் - ஜெபிக்கிற ஜெபங்கள்

பல வருடங்களாக அந்த மரம் அக்காட்டிலே இருந்தது. மிகுந்த ருசியுள்ள நல்ல கனிகளைக் கொடுத்து, பறவைகள், விலங்குகள், வழிப்போக்கர்கள் என அனைவரும் பசியாற பழங்களைக் கொடுத்தது, ஆனால் ஒருநாள் வீசிய பலத்த காற்றில் வேரோடு சாய்ந்தது அந்த மரம். அவ்வழியே சென்ற ஒருவரும் அதை தூக்கி நிறுத்த முன்வரவில்லை. பரிதாபத்தோடு அதைப் பார்த்துவிட்டு சென்று விட்டனர். அந்த மரமோ, 'நான் எவ்வளவோ கனிகளைக் கொடுத்து மற்றவர்களுக்கு உதவியாகத்தானே இருந்தேன். எனக்கு இப்படி ஒரு நிலை வந்துவிட்டதே' என மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டது.
.
நாட்கள் உருண்டோடி வருடங்களாயின. மரம் மண்ணுக்குள் புதைந்து போனது. பூமியின் உஷ்ணம் மற்றும் அழுத்தத்தினால் அது நிலக்கரியாக மாறியது. ஒருநாள் சாலையமைப்பதற்காக ஆட்கள் வந்து தோண்டினபோது நிலக்கரி இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். மேலும் தோண்டினபோது மிகவும் கடினமான கல்போன்ற ஒரு பகுதியை கண்டு அதை வெட்டி எடுத்து சோதித்தபோது அது விலையுயர்ந்த வைரம் என்று கண்டுபிடித்தனர். இறுதியில் சரியான அளவில் வெட்டப்பட்டு, ஜொலிக்கிற வைரமாக மாறினது.

பிரியமானவர்களே, நீங்களும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு, அவருக்காக வாழ்ந்து மிகுந்த கனிகளை கொடுத்து வருகிறவர்களாக இருக்கலாம். ஆனால் அதினிமித்தம் உங்கள் குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள் உங்களை வெறுத்து, ஒதுக்கிதத்ள்ளி தனிமைப்படுத்தலாம். இருப்பினும் எல்லா கஷ்டங்களையும் அவதூறான வார்த்தைகளையும் பொறுமையாய் சகித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் நீங்கள் கண்ணீரோடு மறைந்திருந்த ஜெபிக்கிற ஜெபங்கள் உங்களை விலையுயர்ந்ததாக்கி, உங்கள் குடும்பத்தாரையும் இரட்சிக்கும்.

Wednesday, January 15, 2014

கர்த்தருடைய ஜெபம்

கர்த்தருடைய ஜெபம்

மத்தேயு 6:9-13
நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது;
பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக;
உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.
எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.
எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.
எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே.

குழந்தைகளுக்கான ஜெபம்

நானும் கர்த்தர் எனக்கு கொடுத்த பிள்ளைகளும் சியோன் பர்வதத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும், அற்புதங்கலாகவும் இருக்கிறோம். (ஏசாயா 8:18)
என் பிள்ளைகள் எல்லோரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள். என் பிள்ளைகளுடைய சமாதானம் பெரியதாய் இருக்கும் (ஏசாயா 54:13)\
இதி என் பிள்ளைகள் கர்த்தரால் வந்த சுதந்திரம்; என் கர்ப்பத்தின் கனி அவரால் எனக்கு கிடைத்த பலன் (சங்கீதம் 127:4)
என் பிள்ளைகள் என் பந்தியை சுற்றிலும் ஒலிவமர கன்றுகளைப் போல் இருப்பார்கள் (சங்கீதம் 128:3)
என் சந்ததியுன் மேல் கர்த்தருடைய ஆவியையும், என் சந்தானத்தின் மேல் ஆசீர்வாதங்களும் ஊற்றப்படும். அதனால் அவர்கள் புல்லின் நடுவே நீர்க்கால்கள் ஓரத்தில் உள்ள அலரிச் செடியை போல் வளருவார்கள். (ஏசாயா 44:3,4)
என் மேல் இருக்கும் தேவ ஆவியும், என் வாயில் அவர் வைத்துள்ள அவர் வார்த்தைகளும் என் வாயினின்றும் என் சந்ததியுன் வாயினின்றும் நீங்குவதில்லை (ஏசாயா 59:21)
என் பிள்ளைகள் பாதிகாப்புடன் வாழ்வார்கள். அவர்கள் சந்ததி கர்த்தருக்கு முன்பாக நிலைத்திருக்கும் (சங்கீதம் 102:8)
கர்த்தருடைய கிருபையோ அவருக்கு பயந்த என் மேலும், அவருடைய நீதி என் பிள்ளைகளுடைய பிள்ளைகள் மேலும் என்றென்றும் இருக்கும். (சங்கீதம் 103:17)
கர்த்தர் என் வாசல்களின் தாள்ப்பாகளைப் பெலப்படுத்தி என்னிடத்திலுள்ள என் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார் (சங்கீதம் 147:13)
கர்த்தருக்கு பயப்படுகிற எனக்கு எனக்கு திடநம்பிக்கை உண்டு, என் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும் (நீதிமொழிகள் 14:26)
என் பிள்ளைகளின் பிள்ளைகள் எனக்கு கிரீடமாய் விளங்குவார்கள் (நீதிமொழிகள் 17:6)
நான் என் உத்தமத்திலே நடக்கிறேன். எனக்கு பிறகு என் பிள்ளைகளும் பாக்கியவான்களாய் இருப்பார்கள். (நீதிமொழிகள் 20:7)
இயேசுவை போல் என் பிழைகள் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவ கிருபையிலும், மனுஷர் தயவிலும், அதிகதிகமாய்  விருத்தியடைவார்கள் (லூக்கா 2:52)
சாமுவேலை போல் என் பிள்ளை வளர்ந்து கர்த்தருக்கும் மனிதருக்கும் பிரியமாக நடந்து கொள்ளுவான் (1 சாமுவேல் 2:26)
யோவான் ஸ்நானகனை போல என் பிள்ளை ஆவியில் பெலன்கொண்டு வளருவான். பாவ மன்னிப்பாகிய ரட்சிப்பை தெரியப்படுத்துவான் (லூக்கா 1:80)
என் பிள்ளைகள் தானியேலை போல உண்மையுள்ளவர்களாக இருப்பார்கள். இடைவிடாமல் தேவனை ஆராதிப்பார்கள். தேவன் பேரில் விசுவாசம் வைப்பார்கள். அவர்கள் கையில் எடுத்தது ஜெயமாயிருக்கும் (தானியேல் 6:4, 16,23,28)
என் குமாரரும் குமாரத்திகளும் தீர்க்கதரிசனங்கள் சொல்லுவார்கள். தரிசனங்களை காண்பார்கள்

Friday, October 4, 2013

கிறிஸ்தவர்களுக்கு எதிரான தீவிரவாதம்.. ஜெபிப்போம்..

கென்யாவில் உள்ள நெய்ரோபியில் ஷாப்பிங் மாலில் அங்கு இருந்த சாதாரண மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு, 68 பேருக்கும் மேலாக கொல்லப்பட்டிருக்கிறார்கள். அநேகர் காயம் அடைந்திருக்கிறார்கள்.
.
ஈராக்கில் அடிக்கடி குண்டு வெடிப்பு சம்பவங்கள். சிரியாவில் குண்டு வெடிப்பு சம்பவங்கள். ஒவ்வொரு முறையும் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்படுகிறார்கள்.
.
ஞாயிற்றுக் கிழமை ஆலயத்திற்கு சென்று, ஆராதனை முடிந்து வெளியே வந்து நின்று பேசிக் கொண்டிருந்தவர்கள் மீது தற்கொலைப்படையை சேர்ந்த இருவர் தாக்கியதில் பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் 70பேருக்கும் மேலாக கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டார்கள். 130 பேருக்கு மேலாக காயம் அடைந்திருக்கிறார்கள். ஆலயத்தின் முன்புறம் ஏராளமாய் இரத்தம் சிந்தப்பட்டிருக்கிறது.
.
தீவிரவாத சக்திகளுக்கு, மனித உயிரின் அருமையை அறியாதபடி அவர்களின் கண்கள் மறைக்கப்பட்டிருக்கிறபடியால், அருமையான உயிர்கள் வேட்டையாடப்படுகின்றன. 2000 வருடங்களுக்கு முன்பே இயேசுகிறிஸ்து இவர்களைப் பற்றி 'மேலும் உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டுசெய்கிறவனென்று நினைக்குங் காலம் வரும். அவர்கள் பிதாவையும் என்னையும் அறியாதபடியினால் இவைகளை உங்களுக்குச் செய்வார்கள்' என்று சொல்லி விட்டார். கொலை செய்கிறவர்கள் கிறிஸ்துவையும், பிதாவையும் அறியாபடியினால் இப்படி செய்வார்கள் என்று காரணத்தையும் அவரே சொல்லி விட்டார்.
.
காலாகாலமாய் நாம் இதுப் போன்ற தீயசக்திகள் சாதாரண மக்களை கொல்வதுப் போன்ற செய்திகளைக் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் தற்போது இதுப் போன்ற செய்திகள் அடிக்கடி வந்துக் கொண்டிருக்கின்றன. இயேசுக்கிறிஸ்து கடைசிக் கால நிகழ்ச்சிகளைக் குறித்து தீர்க்கதரிசனமாக கூறும்போது, 'ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; .. உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்; என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்' (மத்தேயு 24:7,9) என்றுக் கூறினார். அதன்படி இந்த நாட்களில் நடந்து வருகிறது.
.
இதற்கு விசுவாசிகளாகிய நாம் என்ன செய்ய வேண்டும்? முதலாவது நாம் ஜெபிக்க வேண்டும். தீவிரவாதிகளின், மதவாதிகளின் மனக்கண்கள் திறக்கப்பட வேண்டும் என்று ஜெபிக்க வேண்டும். 'தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்' (2கொரிந்தியர் 4:4). இப்பிரபஞ்சத்தின் தேவனான சாத்தான் குருடாக்கியருக்கிற இவர்களின் மனக்கண்களை கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி பிரகாசிக்கும்படியாக இவர்களுக்காக ஜெபிக்க வேண்டும். ஒரு பார்வையற்ற மனிதனால் இயற்கை காட்சிகளையோ, நிறங்களையோ, அழகையோ இரசிக்க முடியாது. எல்லாமே இருளாகத்தான் இருக்கும். அப்படித்தான் மனம் குருடாகியிருக்கிற இந்த மனிதர்களுக்கு மனிதனின் ஆத்துமாவின் அருமையோ, உயிரின் விலையே தெரியாது. ஆனால் அவர்களின் மனக் கண்கள் திறக்கப்படும்போது, அவர்கள் அதன் அருமையை அறிந்துக் கொள்வார்கள். ஆகவே அவர்களின் மனக்கண்கள் கிறிஸ்துவின் சுவிசேஷ ஒளியைக் காண வேண்டும் என்று ஜெபிக்க வேண்டும்.
.
இரண்டாவது, சுவிசேஷம் அவர்களை சென்றடையும்படியாக வாசல்கள் திறக்கப்படும்படியாகவும், அவர்களை நற்செய்தி சென்றடையும்படியாகவும் ஜெபிக்க வேண்டும். 'அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக்குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக்கேள்விப்படுவார்கள்?' (ரோமர் 10:14). ஆகவே அவர்கள் சுவிசேஷத்தை கேள்விப்படும்படியாக வாசல்கள் திறக்கப்பட்டு, அதன் மூலம் அவர்கள் சத்தியத்தை கேள்விப்பட்டு, அவரை விசுவாசிக்கத்தக்கதாக ஜெபிக்க வேண்டும்.
.
மூன்றாவதாக, நாம் நம் சாட்சியைக் காத்துக் கொள்ள வேண்டும். நாம் பாவத்தின் மேல் பாவம் செய்துக் கொண்டு, கிறிஸ்துவை பிரசங்கித்தால் மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள முடியுமா? நாம் மற்றவர்களுக்கு இடைஞ்சலாக இருந்துக் கொண்டோ, மற்றவர்கள் கேட்கும் சாதாரண உதவிக்கூட செய்யாமல், கிறிஸ்துவின் அன்பைக் குறித்து சொன்னால் அவர்கள் விசுவாசிப்பார்களா? நாம் எல்லாவற்றிலும் கிறிஸ்துவுக்கு மாதிரியாக வாழ்ந்தால் நம்மைக் காண்பவர்கள் நம்மில் வாழும் கிறிஸ்துவைக் காண்பார்களல்லவா? இருளில் வாழும் அவர்களுக்கு வெளிச்சமாக நம் ஒளி அவர்கள் முன் பிரகாசிக்கட்டும். 'இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது' (மத்தேயு 5:16).

Tuesday, July 9, 2013

சாட்சி - பிள்ளைகளின் ஜெபத்தை கேட்டார்

என்னுடைய பெயர் கோயில் துரை. நெல்லை மாவட்டம் நான்குநேரி தாலுக்கா விஜயாச்சம்பாடு என்ற கிராமத்தில் வாழ்ந்து வந்தேன். என்னுடன் பிறந்தவர்கள் ஆறு பேர். அதில் நான் இரண்டாவது மகன். என் சிறுவயதில் தினமும் சர்ச்க்கு செல்வேன். ஆனால் தேவனுக்கு பயப்படும் பயம் என்னில் இல்லாது இருந்தது. நான் +2 வரை படித்து இருக்கிறேன் பள்ளியில் படிக்கும் போது தவறான நண்பர்கள் மூலமாக குடிப்பழக்கம் எனக்கு இருந்தது.

இந்த நிலையிலும் எனக்கு திருமணமு

நல்ல முறைகள் இருந்த இன்ச்டால்மென்ட் பிசினஸ் அடியோடு நாசமாகி போனது. எனக்கு இருந்த எல்லா இடத்தை விற்று மறுபடியும் குடிக்க சென்றேன். இந்த இடைப்பட்ட காலத்தில் என் பிள்ளைகள் உபவாசம் இருந்து எனக்காக ஜெபித்திருகிறார்கள். என் பிள்ளைகளை பார்க்கும்படி வீட்டிற்க்கு சென்ற நான் என் பிள்ளைகளின் நிலைமையை கண்டு மிகவும் வருத்தப்பட்டேன். பின் நாட்களில் தேவன் என் குடிப்பழக்கத்தை முழுவதுமாக மாற்றினார். குடும்பத்தோடு சந்தோஷமாக இருக்கும் பாக்கியத்தை எனக்கு தந்தார்
ம் நடந்தது. மூன்று பிள்ளைகளும் பிறந்தார்கள். சில நாள் தெரிந்தும் பல தெரியாமலும் குடித்ததால் மிகவும் பெலவீனப்பட்டு 45 நாள்கள் ஆஸ்ப்பத்திரி சேர்க்கப்பட்டேன். பின்னர் சில நாட்கள் கழித்து மீண்டும் குடிப்பழக்கம் மிக அதிகம் ஆனதே தவிர குறையவில்லை. இப்படியாக இருக்கும் போது குடும்பத்தில் பிரச்சனை வர ஆரம்பித்தது. சின்ன சின்ன பிரச்சனை வந்து இரண்டரை ஆண்டுகள் குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்தேன். இன்னும் அதிகமாக குடித்து விட்டு சாப்பிடாமல் இருப்பேன். மன அழுத்தம் காரணமாக இன்னும் நிறையே குடிக்க ஆரம்பித்தேன்.