எங்கள் தளத்தில் உங்களுக்கு பிடித்த கதைகளை பதிவு செய்துள்ளோம். உங்கள் சொந்த வாழ்க்கைக்கும், குடும்ப வாழ்க்கைக்கும், குழந்தைகளோடு பகிர்ந்துகொள்வதற்கும், ஊழியத்தின் பாதையில் பகிர்ந்து கொள்வதற்கும் எனக்கு பிடித்த கதைகளை இனைத்துள்ளோம். படியுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள்
Showing posts with label Bible facts. Show all posts
Showing posts with label Bible facts. Show all posts
Tuesday, February 18, 2014
அறிவியலும் வேதாகமம்
நீதிமொழிகள் 2:6. கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்
சந்திக்க ஆயத்தமா??
வருவேன் என்று சொன்னவர் நிச்சயம் வருவார் - சந்திக்க ஆயத்தமா??
வெளிப்படுத்தல் 22:20. இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.
Source: தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

வெளிப்படுத்தல் 22:20. இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.
Source: தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

Thursday, January 2, 2014
புனித வேதாகமத்தின் வரலாறு பகுதி இரண்டு
சகோ.M.S.வசந்தகுமார்
அமெரிக்க தராதரப்பதிப்பை அமெரிக்கர்கள்
திருத்தி வெளியிட்டபடியால், இங்கிலாந்தில் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட
பதிப்பு வேதாகமத்தை மறுபடியுமாகத் திருத்தி வெளியிடும் முயற்சிகள் 1930 இல்
ஆரம்பமாகின. எனினும், 1939 இல் ஏற்பட்ட இரண்டாவது உலக மகா யுத்தத்தினால்
இப்பணி பாதிக்கப்பட்டது. பின்னர் 1946ல் ஸ்காட்லாந்து சபையின் பொதுச்
சங்கம் இப்பணியை ஆரம்பிக்கத் தீர்மானித்து, இங்கிலாந்திலுள்ள ரோமன்
கத்தோலிக்கச் சபை தவிர்த்த ஏனைய சபைகளின் கூட்டுறவுடன் 1947 இல் ஒரு மொழி
பெயர்ப்புக் குழுவை நியமித்தது. இக்குழுவினரது முயற்சி காரணமாக, 1961 இல்
புதிய ஏற்பாடும், 1965இல் பழைய ஏற்பாடு உட்பட முழுவேதாகமமும் புதிய ஆங்கில
வேதாகமம் எனும் பெயரில் வெளியிடப்பட்டது.
1610இல் ரோமன் கத்தோலிக்கச் சபையினால்
வெளியிடப்பட்ட டூவாய் எனும் ஆங்கில வேதாகமம் பிஷப் சலோனர் என்பவரினால்
திருத்தப்பட்டது. இவர் கி.பி.1749இற்கும் 1772இற்கும் இடைப்பட்ட காலத்தில்
புதிய ஏற்பாட்டை 5 தடவைகள் திருத்தி வெளியிட்டதோடு, 1750 இலும் 1763 இலும்
பழைய ஏற்பாட்டையும் இரு தடவைகள் திருத்தி வெளியிட்டார். 1810லிருந்து,
அமெரிக்காவிலுள்ள ரோமன் கத்தோலிக்கச் சபையும் இத்திருத்தப்பட்ட
மொழிபெயர்ப்பை உபயோகிக்கத் தொடங்கியது. இதைவிட ஒரு சில ரோமன்
கத்தோலிக்க வேதபண்டிதர்களது தனிப்பட்ட ஆங்கில மொழி பெயர்ப்பு
வேதாகமங்களும் 19ஆம் நூற்றாண்டில் வெளிவந்துள்ளன. சலோனரின் மொழி
பெயர்ப்பு மறுபடியுமாகத் திருத்தப்பட்டு, 1941இல் புதிய ஏற்பாடு
அமெரிக்காவில் பிரசுரமாகியது. இத்திருத்த மொழிபெயர்ப்பு, அமெரிக்க
கத்தோலிக்க வேதாகம ஒன்றியத்தைச் சேர்ந்தவர்களால் தயாரிக்கப்பட்டதாகும்.
இதன் பின்னர் எபிரேய மொழியிலிருந்து நேரடியாக ஆங்கிலத்துக்கு மொழி
பெயர்க்கப்பட்ட ரோமன் கத்தோலிக்கச் சபையினரது பழைய ஏற்பாட்டு மொழி
பெயர்ப்பு நான்கு பகுதிகளாக 1948 முதல் 1969 வரையிலான காலப்பகுதியில்
வெளியிடப்பட்டது. அமெரிக்காவில் ஏற்கனவே பிரசுரிக்கப்பட்ட ரோமன்
கத்தோலிக்க சபையின் புதிய ஏற்பாடு, லத்தீன் மொழிபெயர்ப்பை அடிப்படையாய்க்
கொண்டிருந்தமையினால் 1970இல், மூலமொழியான கிரேக்கத்திலிருந்து நேரடியாக
ஆங்கிலத்துக்கு மொழி பெயர்க்கப்பட்ட புதிய ஏற்பாட்டையும் அமெரிக்க
கத்தோலிக்க வேதாகம ஒன்றியம் வெளியிட்டது. இவர்களது மொழி பெயர்ப்பு
வேதாகமம், புதிய அமெரிக்க வேதாகமம் என அழைக்கப்படுகின்றது. இதேபோல,
இங்கிலாந்திலும், வெஸ்ட்மின்ஸ்டர் பதிப்பு எனும் பெயரில் ரோமன்
கத்தோலிக்க ஆங்கில மொழி பெயர்ப்பு வேதாகமம் பிரசுரிக்கப்பட்டது. இது
கட்பர்ட் லெட்டர் என்பவரது முயற்சியினால் தயாரிக்கப்பட்ட
மொழிபெயர்ப்பாகும். இதன் புதிய ஏற்பாடு 1948ல் வெளிவந்தது. பழைய
ஏற்பாட்டுப் புத்தகங்கள் 1935லிருந்து வெளிவரத் தொடங்கியபோதிலும் 1954ல்
ஏற்பட்ட லெட்டரின் மரணம் இம்மொழி பெயர்ப்பு பூர்த்தியடைவதைத்
தடுத்துவிட்டது.
1945ல் ஆர்.ஏ. நொக்ஸ் என்பவர் புதிய
ஏற்பாட்டையும், 1949ல் பழைய ஏற்பாட்டையும், 1955ல் இரு ஏற்பாடுகளை
ஒன்றாகவும் வெளியிட்டார். இதற்கு இங்கிலாந்திலுள்ள ரோம சபையின் அங்கீகாரம்
கிடைத்தது. இது லத்தீன் மொழிபெயர்ப்பை அடிப்படையாய்க் கொண்டு மொழி
பெயர்க்கப்பட்ட ஆங்கில வேதாகமமாகும். பின்னர் வத்திக்கானின் 2வது ஆலோசனைச்
சங்கத்தின் விளைவாக (1963-1965) வேதாகமத்தை வெளியிடுவதில் ரோமன்
கத்தோலிக்கச் சபை மற்ற சபைகளுடன் இணைந்து பணிபுரியும் முயற்சி உருவானது.
இதனால் 1965ல் திருத்தப்பட்ட தராதரப்பதிப்பு வேதாகமத்தின் புதிய
ஏற்பாட்டையும், 1966ல் பழைய ஏற்பாட்டையும் ரோமன் கத்தோலிக்கச் சபை
வெளியிட்டது.
இதன் பின்னர் 1967ல், ரோமன் கத்தோலிக்க சபை எருசலேமில் வெளியிட்ட ஆங்கில வேதாகமம் “எருசலேம் பைபிள்”
என அழைக்கப்படுகிறது. இது எபிரேய, கிரேக்க, அரமிக், பிரான்ஸ் மொழி
வேதாகமங்களை அடிப்படையாய்க்கொண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட
வேதாகமமாகும்.
1962ஆம் ஆண்டு அமெரிக்க வேதாகமச் சங்கம்
அன்றாட மொழியில் ஆங்கிலத்தில் ஒரு புதிய மொழிபெயர்ப்பைத் தயாரிக்கும்
பணியை ஆரம்பித்தது. இதன் பயனாக 1966ல் நவீன மனிதனுக்கான நற்செய்தி எனும்
தலைப்பில் புதிய ஏற்பாடும் 1976 இல் முழுவேதாகமமும் “குட்நியூஸ் பைபிள்”
எனும் பெயரில் வெளிவந்தது. இதைத் தவிர இன்னும் சில ஆங்கில மொழி பெயர்ப்பு
வேதாகமங்களும் தற்சமயம் வெளிவந்துள்ளன. இவற்றுள் முக்கியமானது இன்று
பெரும்பாலான மக்களால் உபயோகிக்கப்படும், புதிய சர்வதேசப் பதிப்பு
வேதாகமமாகும் (என்.ஐ.வி.). இதை வெளியிட வேண்டும் எனும் கருத்து
அமெரிக்காவிலுள்ள இலிநொஸ் என்ற இடத்தில் 1965 இல் கூடிய சகல சபைகளையும்
சார்ந்த வேத பண்டிதர்களால் வலியுறுத்தப்பட்டது. இக்கருத்துக்கு அதிக ஆதரவு
கிடைத்தமையினால் 1966 இல் சிக்காகோ எனுமிடத்தில் கூடிய சபைத்தலைவர்களது
கூட்டத்திலும் இதற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. 1967 இல் நியூயார்க்
சர்வதேச வேதாகமச்சங்கம் இப்பணியைப் பொறுப்பேற்றது. இதன் பயனாக 1973இல்
புதிய ஏற்பாடும், 1978இல் முழு வேதாகமமும் “புதிய சர்வதேச பதிப்பு”
எனும் பெயரில் வெளிவந்தது. இன்றிருக்கும் ஆங்கில வேதாகமங்களில் இதுவே
சிறப்பானதாகக் கருதப்படுவதோடு பெரும்பாலான கிறிஸ்தவர்களால்
உபயோகிக்கப்பட்டும் வருகின்றது.
Monday, November 4, 2013
வியப்பூட்டும் வேதாகமம்
ஆசிய கண்டத்திலேயே முதன் முறையாக அச்சிடப்பட்ட புத்தகம் 'பைபிள்' எனப்படும் பரிசுத்த வேதாகமமாகும்.
அதிலும் சிறப்பு என்னவென்றால், முதல் வேதாகமம் தமிழில் அச்சடிக்கப்பட்டதால் ஆசிய கண்டத்திலேயே முதலில் அச்சில் ஏறிய மொழி 'தமிழ்' ஆகும்.
ஜெர்மனி நாட்டிலிருந்து தமிழகம் வந்த சீகன் பால்க் தமிழ் மொழியில் புதிய ஏற்பாட்டை மொழி பெயர்த்து முடித்தார். 1714ம் ஆண்டில் இந்திய மொழிகளிலே முதல் தடவையாக வேதாகமத்தைத் தமிழிலே அச்சிட்டார்.
பரிசுத்த வேதாகமத்தை ஜுவாலித்து பிரகாசிக்கிற விலையேறப்பெற்ற பளிங்கு கற்களினால் மகா ஞானம்பெற்ற சிற்பாசாரியால் அதிக அழகாகவும் விசேஷித்த கைவேலைப்பாடுகளுடனும் செய்யப்பட்டதும், சிறிதும் பெரிதுமான அறுபத்தாறு அறைகளுள்ளதும் இராஜாதிராஜா உலாவிக்கொண்டிருக்கிறதுமான மகா பெரிய இராஜ அரண்மனைக்கு ஒப்பிடலாம்.
அதிலும் சிறப்பு என்னவென்றால், முதல் வேதாகமம் தமிழில் அச்சடிக்கப்பட்டதால் ஆசிய கண்டத்திலேயே முதலில் அச்சில் ஏறிய மொழி 'தமிழ்' ஆகும்.
ஜெர்மனி நாட்டிலிருந்து தமிழகம் வந்த சீகன் பால்க் தமிழ் மொழியில் புதிய ஏற்பாட்டை மொழி பெயர்த்து முடித்தார். 1714ம் ஆண்டில் இந்திய மொழிகளிலே முதல் தடவையாக வேதாகமத்தைத் தமிழிலே அச்சிட்டார்.
பரிசுத்த வேதாகமத்தை ஜுவாலித்து பிரகாசிக்கிற விலையேறப்பெற்ற பளிங்கு கற்களினால் மகா ஞானம்பெற்ற சிற்பாசாரியால் அதிக அழகாகவும் விசேஷித்த கைவேலைப்பாடுகளுடனும் செய்யப்பட்டதும், சிறிதும் பெரிதுமான அறுபத்தாறு அறைகளுள்ளதும் இராஜாதிராஜா உலாவிக்கொண்டிருக்கிறதுமான மகா பெரிய இராஜ அரண்மனைக்கு ஒப்பிடலாம்.
Saturday, August 31, 2013
கடல் வழிகளை உலகுக்கு காட்டிய சங்கீத புத்தகம்
கடல் வழிகளை உலகுக்கு காட்டிய சங்கீத புத்தகம் "நவீன கால கடல் வழிகளின் தந்தை" என அழைக்கப்படும் மேத்யூ மவுரிக்கே (Matthew Fontaine Maury (1806 – 1873)) அவர் சமுத்திரத்தின் வழிகளை கண்டுபிடிக்க ஒரு உந்துகோலாக அமைந்தது வேதபுத்தகம் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? வேதாகமத்தை மிகவும் நேசித்த ஒரு நபர் அவர். ஆரம்ப காலத்தில் அமெரிக்க கடற்படையில் பணிபுரிந்த போது அவர் ஒரு விபத்தில் அகப்பட்டு தன் இடது காலை இழந்துவிட படுக்கையியேலே வெகுகாலம் கழித்தார். மேத்யூ மவுரி அவ்வாறு படுக்கையில் இருந்த போது வேதபுத்தகத்தை படித்துக் கொண்டிருந்தார். அப்போது சங்கீத புத்தகம் 8ம் அதிகாரத்தில் "Paths of the Seas" என இருப்பதை அவர் படிக்க நேரிட்டது. ("The fowl of the air, and the fish of the sea, and whatsoever passeth through the paths of the seas" Psalms 8:8 ).
அப்படியானால் சமுத்திரங்களிலும் வழிகள் இருக்க வேண்டும் என்பதை அவர் உணர்ந்தார். அவர் முற்றிலும் குணமடைந்த பின்பு கடல் வழிகளை பற்றி பல ஆய்வுகள் செய்து அதில் மிகப்பெரிய வல்லுனர் ஆனார். அதனால் அவரை "Pathfinder of the Seas" என்றும் "Father of Modern Oceanography and Naval Meteorology" என்றும் , "Scientist of the Seas" என்றும் அழைப்பர். The Physical Geography of the Sea (1855) எனும் புகழ்பெற்ற நூலை எழுதினார். இன்றைக்கும் விர்ஜீனியாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அவர் வடிவ சிலையை ஒரு வேதாகமத்தின் கூடவே சேர்த்து வடிவமைத்துள்ளனர். அவ்வளவாய் அவர் வேதாகமத்தை நேசித்தார்.உலகத்துக்கும் ஆசீர்வாதமாய் அமைந்தார்.
தேவனுடைய நாமத்துக்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரமுண்டாவதாக; ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியது... ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர். அவரே ஆழமும் மறைபொருளுமானதை வெளிப்படுத்துகிறவர்; இருளிலிருக்கிறதை அவர் அறிவார்; வெளிச்சம் அவரிடத்தில் தங்கும். தானியேல் 2:20-22
Saturday, February 23, 2013
ஆனி ஆஸ்கவித் - நெல்லை பார்வையற்றோர் பள்ளி
ஆனி ஆஸ்கவித் என்னும் ஆசிரியர் 1887ம் ஆண்டு நெல்லை மாவட்டத்தின்
கல்லூரி ஒன்றில் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தபோது பிச்சை
எடுப்பதற்காக வந்தான் பார்வையற்ற சிறுவன் ஒருவன்.
ஆனி அவனிடம், “தம்பி இது கல்வி வழங்கும் இடம். உணவு வழங்கும் இடமல்ல. எனவே நீ வேறு இடத்திற்குச் சென்று பிச்சையெடு” என்றார்கள்.
பையன் மறுமொழியாக, அப்படியெனில் எனக்குக் கல்வி கொடுங்கள். என்றான்.
அந்த கேள்வி ஆனியின் உள்ளத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த கேள்வியின் தாக்கத்தால் அவனுக்கு கல்வி புகட்ட ஆரம்பித்தார். அது பள்ளியாக வளர்ந்தது. பிற்காலத்தில் மிகப்பெரிய பார்வையற்றோர் பள்ளியாக உருவெடுத்தது.
சிறுவன் கேட்டான். பெற்றுக் கொண்டான்.
அழுகின்ற குழந்தைக்குத் தான் பால் கிடைக்கும் என்ற பழமொழி நம் ஊரில் உண்டு. அதற்காக அழாமல் இருக்கும் குழந்தை பட்டினியையே உண்டு வாழும் என்பதில்லை. பசியாற தாமதம் நேரிடலாம்.
“நீங்கள் கேட்பதற்கு முன்பாகவே உங்களுக்கு என்ன தேவை என்பது வானகத் தந்தைக்குத் தெரியும்” என்று சொல்லும் இயேசு “கேளுங்கள் தரப்படும்” என்றும் சொல்வதில் உள்ள அர்த்தத்தைக் கண்டுணர வேண்டும்.
ஆனி அவனிடம், “தம்பி இது கல்வி வழங்கும் இடம். உணவு வழங்கும் இடமல்ல. எனவே நீ வேறு இடத்திற்குச் சென்று பிச்சையெடு” என்றார்கள்.பையன் மறுமொழியாக, அப்படியெனில் எனக்குக் கல்வி கொடுங்கள். என்றான்.
அந்த கேள்வி ஆனியின் உள்ளத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த கேள்வியின் தாக்கத்தால் அவனுக்கு கல்வி புகட்ட ஆரம்பித்தார். அது பள்ளியாக வளர்ந்தது. பிற்காலத்தில் மிகப்பெரிய பார்வையற்றோர் பள்ளியாக உருவெடுத்தது.
சிறுவன் கேட்டான். பெற்றுக் கொண்டான்.
அழுகின்ற குழந்தைக்குத் தான் பால் கிடைக்கும் என்ற பழமொழி நம் ஊரில் உண்டு. அதற்காக அழாமல் இருக்கும் குழந்தை பட்டினியையே உண்டு வாழும் என்பதில்லை. பசியாற தாமதம் நேரிடலாம்.
“நீங்கள் கேட்பதற்கு முன்பாகவே உங்களுக்கு என்ன தேவை என்பது வானகத் தந்தைக்குத் தெரியும்” என்று சொல்லும் இயேசு “கேளுங்கள் தரப்படும்” என்றும் சொல்வதில் உள்ள அர்த்தத்தைக் கண்டுணர வேண்டும்.
Saturday, January 26, 2013
"எனக்கு பெருமையாக இருக்கிறது" - ஒபாமா
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அவர்கள் சமீபத்தில் அதிபராக பதவி ஏற்று கொண்டார். அப்பொழுது அங்கே நடந்த சில நிகழ்வுகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ஒபாமா அவர்கள் பரிசுத்த வேதாகமம் மீது தன் கைகளை வைத்து உறுதிமொழி எடுத்து கொண்டார்.
இது தனக்கு மிகவும் பெருமையாக இருந்ததாக ஒபாமா குறிப்பிட்டு உள்ளார்.
அவர் போதகர் மார்டின் லூதர் கிங் ஜூனியர் அவர்கள் பயன்படித்திய வேதாகமத்தின் மீது தன் கைகளை வைத்து உறுதிமொழி எடுத்து கொண்டார்.
ஜேசன் மற்றும் ஜார்ஜ் புஷ் சபை ஆராதனையில் அதிபர் ஒபாவோடு கலந்து கொண்டார்கள்.
தேவனே அமெரிக்காவை ஆசிர்வதியும்
தேவனே எனக்கு உதவி செய்யும்
இது ஒபாமா கூறிய வார்த்தைகள். தேவன் எவ்வளவு முக்கியமானவர் என்பதை இவர்கள் புரிந்து கொண்டால் சரி.
Sunday, January 13, 2013
வேதாகம சங்கம் எப்படி ஆரம்பிக்கப்பட்டது?
.
மேரி ஜோன்ஸ்
என்னும் சிறுமி 1784ஆம் ஆண்டு, இங்கிலாந்திலுள்ள ஒரு ஏழை
குடும்பத்தில் பிறந்தாள். அவளுடைய தகப்பன் நெசவு தொழில்
செய்பவராயிருந்தார். மேரி தன் 8ஆவது வயதில் கிறிஸ்துவை
ஏற்று கொண்டாள்.
.
அவளுடைய
கிராமத்திற்கு தாமஸ் சார்லஸ் என்பவர் ஏழை குடும்பத்தை
சேர்ந்த பிள்ளைகளுக்கு எழுத்துக்களை கற்று கொடுக்க
வருவார். அங்கு படிக்க கற்று கொண்ட மேரி, இரண்டு கிலோ
மீட்டர் தொலைவில் இருந்த ஒரு பண்ணைக்கு சென்று
அங்கிருந்த வேதாகமத்தை எடுத்து படிப்பது வழக்கம்.
வேதாகமத்தை படிக்க படிக்க, தனக்கென்று சொந்தமாக ஒரு
வேதாகமம் வேண்டும் என்கிற ஆவலும் எண்ணமும் மேரிக்கு
உருவாக ஆரம்பித்தது.
.
ஆனால் அந்த
எண்ணம் ஈடேறாத காலம். ஏனென்றால் பணம் கிடைப்பது என்பது
மிகவும் கடினமான காலமது. அப்படி பணம் இருந்தாலும்,
எந்தவித உதவியுமின்றி, வாகன வசதிகளுமின்றி, 25 மைல்
தூரத்தில் இருந்த பாலா என்னுமிடத்தில் மட்டுமே வேதாகமம்
கிடைத்தது. அப்படி போனாலும், போகும் நேரத்தில் வேதாகமம்
இருக்கும் என்று சொல்ல முடியாது.
.
ஆனால் மேரி
மனம் தளரவில்லை, கொஞ்சம் கொஞ்சமாய் பணத்தை சேர்க்க
ஆரம்பித்தாள். காய்களை விற்பது, வீடுகளில் சென்று
வேலைகளை செய்வது இப்படி சிறுசிறு வேலைகளை செய்து, அதில்
வரும் சிறு வருமானத்தை சேர்த்து வைத்து, கடைசியில்
அவளுக்கு வேதாகமம் வாங்க தேவையான பணம் ஆறு ஆண்டுகளுக்கு
பின் கிடைத்தது.
.
அதை
சந்தோஷமாய் எடுத்து கொண்டு, மேரி வெறுங்கால்களோடு,
(செருப்பு வாங்க பணம் இல்லை) 25 மைல் தூரத்தில் இருந்த
பாலாவிற்கு செல்ல ஆரம்பித்தாள். வழியில் இருந்த
கற்களையும் முட்களையும் பொருட்படுத்தாது, ஆறுகளையும்,
குன்றுகளையும் கடந்து, கடைசியில் பாலாவை நோக்கி
சென்றடைந்தாள். பாலாவில் தாமஸ் சார்லஸ் என்பவரிடம்
மாத்திரமே வேதாகமம் விற்கும் கடை இருந்தது. ஆனால் என்ன
ஒரு கஷ்டம், அங்கிருந்த வேதாகமங்கள் எல்லாம் விற்று
போயிருந்தன, அல்லது யாராவது வேதாகமம் வேண்டும் என்று
ஆர்டர் கொடுத்து போயிருந்தனர். அதை கேட்ட மேரி அழ
ஆரம்பித்தாள். தன் இருதயம் வெடித்து விடுவது போல அவள்
அழுவதை கண்ட சார்லஸ், வேறு ஒருவர் ஆர்டர் பண்ணியிருந்த
வேதாகமத்தை அவளுக்கு கொடுத்தார். அதை பெற்று கொண்ட
அவளுடைய ஆனந்தத்திற்கு அளவேயில்லை. சந்தோஷமாய்
வீட்டிற்கு திரும்பினாள்.
.
மேரி இப்படி 25
மைல் தூரம் வேதாகமத்தை வேண்டி வந்தது, தாமஸ் சார்லஸின்
இருதயத்தை தொட்டது. மேரியை போல எத்தனையோ பேர் வேதாகமம்
வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் வாங்க முடியாதவர் உண்டு
என்பதை உணர்ந்து, அவர் Council of the Religious Tract Society க்கு கடிதம்
எழுதினார். அதன்படி 1804ஆம் ஆண்டு British and Foreign Bible Society
ஆரம்பிக்கப்பட்டது. அதன் மூலம் இங்கிலாந்து தேசம்
முழுவதற்கும் வேதாகமம் கிடைக்கும்படியாக முயற்சிகள்
எடுக்கப்பட்டது.
.
அதன்பின்
மற்ற நாடுகளுக்கும் வேதாகமம் கிடைக்கும் முயற்சியில்
வேதாகம சங்கம் ஈடுபட்டது. அநேக ஆண்டுகளுக்குப்பின்
இப்போது எல்லா நாடுகளிலும் வேதாகம சங்கம்
ஏற்படுத்தப்பட்டுள்ளது. முழு வேதாகமோ, அல்லது
வேதாகமத்தின் பாகங்களோ, மொழி பெயர்ப்பு செய்யும் வேலையை
இந்த சங்கம் செய்கிறது. இதுவரை மொத்தம் 2,500க்கும் மேலான
மொழிகளில் வேதாகமம் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
அதிலே நாம் திருப்தி அடைந்து நின்று விடக்கூடாது.
கர்த்தரின் வருகைக்குள்ளாக மொழி தெரிந்த ஒவ்வொரு
மனிதனின் கைகளிலும், அவனுடைய மொழியில் வேதாகமம்
கிடைக்கும் வரைக்கும் நாம் ஜெபிப்பதிலும், அதற்கு
ஒத்துழைப்பதிலும் ஓய்ந்திருக்க கூடாது.
.
உலகில்
எத்தனையோ மேரி ஜோன்கள் தங்களுக்கென்று ஒரு வேதாகமம் கூட
இல்லாத நிலையில் இருக்கலாம். ஒரு வேளை வேதாகமம்
இருந்தாலும் அவர்களுக்கு தெரிந்த மொழியில் வேதாகமம்
இல்லாதிருக்கலாம்... அவர்களுக்காக ஜெபிப்போமா?
Saturday, December 22, 2012
யோனத்தானோடு இருந்த வாலிபன் - Bro. Augustin Jebakumar
யோனத்தான் தன் ஆயுததாரியாகிய வாலிபனை நோக்கி,
'விருத்தசேதனம் இல்லாதவர்களுடைய அந்த தாணைத்ததுக்கு
போவோம் வா' என்று சொன்னபோது, 'இதோ உம்முடைய மனதுக்கு
ஏற்றபடி நானும் உம்மோடே கூட வருகிறேன' என அந்த வாலிபன்
ஆயத்தமாயிருந்தான். தேவனோடு கூட
இணைக்கப்பட்டிருக்கின்ற நாம் ஒரு சாதாரண
குடும்பத்திலிருந்து வந்தவர்களாக இருக்கலாம். திறமைகள்
இல்லாதவர்களாயிருக்கலாம். நாம் பெரிய குடுமப்ததை
சேர்ந்தவர்கள் என்பது முக்கியமல்ல, தேவனுக்கு நம்மை
கையளித்திருக்கின்றோமா என்பதே முக்கியம். 'யுத்தநான்
வந்தபோது, சவுலுக்கும் அவன் குமாரனாகிய
யோனத்தானுக்குமேயன்றி, சவுலோடும், யோனத்தானோடும்
இருக்கிற ஜனங்களில் ஒருவர் கையிலும் பட்டயமும்
ஈட்டியும் இல்லாதிருந்தது'. - (1சாமுவேல்
13:22).
பெலிஸ்தியரோடு யுத்தம் செய்ய ஜனங்கள்
வந்திருந்தார்கள் என்ற போதிலும், அவர்களது கைகளில்
ஆயுதங்கள் இல்லை, இந்த சூழ்நிலையினை அந்த வாலிபன்
பொருட்படுத்தவில்லை. மற்றவர்களிடத்தில் என்ன
இருக்கின்றது என்பதையும் கவனிக்கவில்லை. 'கர்த்தர்
நமக்காக ஒரு காரியம் செயவார். அநேகம் பேரை கொண்டாகிலும்,
கொஞ்சம் பேரை கொண்டாகிலும், ரட்சிக்க கர்த்தருக்கு
தடையில்லை' என்று யோனத்தான் சொன்ன வார்த்தைகள் இந்த
வாலிபனது உள்ளத்தில் விசுவாசத்தை வர்த்திக்க பண்ணியது.
'நாம் சுற்றிலுமுள்ள நிலையினை பாராமல், கர்த்தரையே
நோக்கி பார்த்தால் நம்மால் எல்லாம் கூடும். நமக்காக
கர்த்தர் காரியத்தினை செய்வார்' என்ற விசுவாசத்துடனே
யோனத்தானுடன் அவன் புறப்பட்டு சென்றான். எந்தவித
பாதுகாப்பும் இல்லாமலிருந்தாலும் ஜனங்களுக்காக யுத்த
களத்தில் நிற்பதற்கு அந்த வாலிபன்
ஆயத்தமாயிருந்தான்.
ஒருவரது கையிலும் ஒன்றுமில்லாதிருக்கும்போதும்,
பாளையத்திற்குள், தாணையத்திற்குள் பயங்கரமாயிருக்கும்
இடத்திற்கு கூப்பிடுகின்றீரே என அவன் சொல்லாமல், இதோ
ஆயத்தம் என யோனத்தானுடன் புறப்பட்டான். விசுவாசம் ஒரு
போதும் கையையும், பையையும் பார்க்காது. தன்னோடு தேவன்
இருக்கிறாரா என்பதை மாத்திரமே அது சோதித்தறியும்.
அன்றன்றுள்ள அப்பத்தை நமக்கு தருவதற்கு தேவன் நல்லவர்
என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். விசுவாசிக்கிறவன்
பதறான்.
யோனத்தானின் கையில் பட்டயமிருக்கிறது, யோனத்தான்
வெட்டி கொண்டே போவான். 'என்னை யாராவது நெருங்கினால் நான்
என்ன செய்வேன், என்னை காப்பாற்றக்கூட என்னிடத்தில்
பட்டயம் இல்லையே' என்ற பயம் அவனிடத்தில் இல்லை. நமது
கண்கள் நமது பெலவீனத்தை பார்ப்பதை நிறுத்திவிட்டு, அவரது
பெலத்தை பார்க்கட்டும். இரண்டு நாட்கள் ந்னறாக ஜெபம்
செய்கின்றோம்; ஆனால் தொடர்ச்சியாக அவைகளில்
நிலைத்திருக்க முடியவில்லையே, சூழ்நிலைகள் என்னை
வீழ்த்திவிடுகின்றதே என்று நினைக்கிறீர்களோ, நமது
சுற்றுப்புறத்தையோ, நமது பெலவீனங்களையோ நாம் பாராமல்,
பெலமுள்ள அவரையே நாம் நோக்கி பார்த்தால், நாம் வீழ்ந்து
போவதில்லை. உலகத்தின் இச்சைகளுக்கும்
பெலவீனங்களுக்கும் நம்மை விடுதலையாக்கி, தமது ஆயுதமாக
நம்மை பயன்படுத்த தேவன் போதுமானவர்.
கர்த்தருக்கென்று தன்னை ஒப்புகொடுத்தபடியால், எந்த
ஆபத்தான வழியில் செல்லவும் இந்த வாலிபன் பயப்படவில்லை.
இவர்களை பொறுத்தே தேவ ஜனத்திற்கு வெற்றி, விடுதலை,
சத்துருவின் கையிலிருந்து விடுதலையாக்க முடியும்
என்பதை அறிந்த இந்த வாலிபன் ஆபத்தான் வழியில் செல்லவும்,
தலைவனாகிய யோனத்தானுக்கு பின்னாக ஏறி செல்வதற்கும் அவன்
அஞ்சவில்லை. என்னிடத்தில் திறமைகள் இல்லையே, நான்
தேவனுக்கு எப்படி பயன்பட முடியும் என்று நினைத்து
கொண்டிருக்கினறோமோ? தேவன் உங்களை கொண்டே நமது தேசத்தில்
பெரிய காரியங்களை செய்ய முடியும் என்பதை மறந்து
விடக்கூடாது. நாம் அவருக்காக அடியெடுத்து வைத்தால்
நம்மூலம் தேசத்தை அசைப்பதற்கு அவர்
ஆயத்தமாயிருக்கின்றார். ஆமென் அல்லேலூயா! - Bro. Augustin Jebakumar
Friday, August 31, 2012
அதிசய வேதாகமம்
பழைய வேதாகமத்தில் உள்ள அதிகாரங்கள் -- 929.
புதிய வேதாகமத்தில் உள்ள அதிகாரங்கள் -- 260.
அதிக வ்சனங்கள் உள்ள அதிகாரம் -- சங்கீதம் 119.
குறைவான வசனங்கள் உள்ள அதிகாரம் -- சங்கீதம் 117.
மத்திய அதிகாரம் -- சங்கீதம் 118.
சங்கீதம் 118 க்கு முன்புள்ள அதிகாரங்கள் -- 594 .
சங்கீதம் 118 க்கு பின்புள்ள அதிகாரங்கள்-- 594 .
மொத்த அதிகாரங்கள் 1188 (594+594)+1(மத்திய அதிகாரம்)=1189.
மத்திய வசனம் -- சங்கீதம் 118:8.
சங்கீதம் 118:8 -- கர்த்தர் மேல் பற்றுததலாய் இருப்பதே நலம்
சிறிய வசனம் யோவான் 11:35
பெரிய வசனம் -- எஸ்தர் 8:9.
வேதத்தில் உள்ள அதிகாரங்கள் பிரிக்கப்பட்ட வருடம் 1227 A.D
பெரிய வார்த்தை - Maher-shalal-hash-baz (ஏசாயா 8:1).
Subscribe to:
Posts (Atom)
-
ஒரு தாயற்ற பெண் பிள்ளையை அவளுடைய தகப்பன் பரிவோடு வளர்த்து வந்தார். அவளுடைய தேவைகளை எல்லாவற்றையும் சந்தித்து தாய்க்கு தாயாகவும், ...
-
பல ஆண்டுகளுக்கு முன் செல்வந்தர் ஒருவர் வேலைக்கு ஆள் வேண்டி விளம்பரம் செயதிருந்தார்; விளம்பரத்தை பார்த்து இளைஞர்கள் பலர் வந்தனர்....

