டாக்டர். ஜான் ஸ்கட்டர் (சீனியர்) உலகத்தின் பல மூலைகளுக்கும்
கிறிச்த்துவின் அன்பை எடுத்து சென்றவராவர். இவரது மரபு வழியில் வந்த அடுத்த
நான்கு தலைமுறையில் 42 மிஷனரிகள் எழும்பி அணைவரும் சேர்ந்து 1100 க்கும்
அதிகமான வருடங்கள் இறைப்பணியும் மருத்துவப்பணியும் செய்து இயேசுவின் அன்பை
உலகத்திற்கு காண்பித்துள்ளனர்.
டாக்டர்.ஜான் ஸ்கட்டரின் (சீனியர்) ஏழாவது மகனாகிய “ஜான் ஸ்கட்டர்
II” –க்கு பிறந்தவர் தான் வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மெடிக்கல் காலேஜ் – ஐ
நிறுவிய டாக்டர். ஐடா ஸ்கட்டர். தமிழ் மக்களுக்கு டாக்டர்.ஜான் ஸ்கட்டரின்
குடும்பத்தினர் ஆற்றிய அருட்பணியால் திண்டிவனம், வேலூர், இராணிப்பேட்டை,
குடியாத்தம் ஆகிய இடங்களில் அநேக மக்கள் கிறிஸ்த்துவை ஏற்றுக்கொண்டனர்.
காலரா, பிளேக். மஞ்சள் காமாலை போன்ற உயரி கொல்லி நோயினால் மரணத்தை நோக்கி
ஓடிகொண்டிருந்த தமிழ் மக்களுக்கு ஸ்கட்டர் குடும்பத்தினர் செய்த
மருத்துவப்பணிகள் இன்றளவும் தமிழ்நாட்டின் வேலூரில் தொடர்ந்து வருகிறது.
டாக்டர்.ஜான் ஸ்கட்டர் (1793-1855)
டாக்டர்.ஜான் ஸ்கட்டர் அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் உள்ள
ப்ரீஹோல்ட் (FREEHOLD) என்ற ஊரில் ஜோசப் (வக்கீல்) – மரியா ஸ்கட்டர் என்ற
தம்பதியினருக்கு 1793-ம் வருடம் செப்டம்பர் 3 தேதி செல்வ மகனாகய்
பிறந்தார். New York College of Physicians and Surgeons கல்லூரியில்
1813-ம் வருடம் தமது மருத்துவ படிப்பை முடித்து தனது மருத்துவ வாழ்க்கைப்
பயணத்தை தொடங்கினார். 1813-ம் வருடம் ஹாரியட் என்ற பெண்ணை திருமணம்
செய்தார். அந்த நாட்களில் அதிகளவு மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால்
மருத்துவர்களுக்கு நல்ல வரவேற்ப்பு இருந்தது. அதுமட்டுமில்லாமல் ஜான்
ஸ்கட்டரின் திறமையும் கனிவோடு நோயாளிகளை கவனிக்கும் திறமையும் அநேகரை
கவர்ந்ததால் வருடத்திற்கு 2000$ சம்பாதிக்கும் அளவுக்கு மிகப்பெரிய
மருத்துவரானார். ஐந்து வருடங்கள் அமெரிக்காவிலேயே மருத்துவராக பணி
செய்ததால் செல்வமும் புகழும் டாக்டர்.ஜான் ஸ்கட்டருக்கு குவிய தொடங்கியது.
ஆயினும் கடவுள் பக்தி மிகுந்தவராய் Reformed Church க்கு சென்று
கொண்டிருந்தார். அந்த நாட்களில் அநேகரை மனம் திரும்பதலுக்கு நேராய்
நடத்தினார்.
1819-ம் வருடத்தில் ஒருநாள் நோயாளியை சந்திக்க
ஒருவரின் வீட்டிற்கு அவர் சென்றிருந்த பொழுது, அங்கு வரவேற்ப்பறையிலிருந்த
ஒரு துண்டு தாளின் (Pamphlet) செய்தியாகிய "அறுபது கோடி மக்களின்
மனமாற்றத்திற்கு சபைகள் என்ன செய்ய வேண்டும்" என்பதை கண்டார். அதன்மூலம்
இந்தியா மற்றும் சிலோனின் மக்களுக்கு தேவைப்பட்ட மருத்துவ பணியை குறித்து
அறிந்தார். அந்த கணமே நமது அருமை இரட்சகர் இயேசுவின் குரலையும் கேட்டார்:
அது என்னவெனில் “என் பிதா அனுப்பினதைப்போல நான் உன்னை அனுப்புகிறேன்”.
அதற்க்கு ஜான் ஸ்கட்டர், “அனுப்பும் ஆண்டவரே நான் போகிறேன்’ என்றார்.
இதற்கு ஜான் ஸ்கட்டரின் தகப்பனார் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார். செல்வ
மைந்தன் உலக பெருவாழ்வை நீத்துவிட்டு, வறுமையை உவந்தேற்றுகொண்டு, கடல்
கடந்து கண் கானா நாட்டுக்கு சென்று, பசியால் வாடி வதக்கி, கொடிய வெயிலின்
கோரப்பிடியில் நலிந்தும் மெலிந்தும் மிஷனரியாக பணியாற்றுவதா? கூடவே கூடாது
என ஜான் ஸ்கட்டரின் கையை பிடித்து கெஞ்சி மன்றாடினார் தகப்பன். ஆனால் ஜான்
ஸ்கட்டரோ தமது தப்பனின் கைகளை உதறிவிட்டு ஆண்டவர் இயேசுவின் கரங்களை
பற்றிக்கொண்டார்.
தம் கனவரின் தீர்மானத்தை மனமகிழ்ச்சியுடன்
ஏற்றுக்கொண்டு தமது இரண்டு வயது பாலகனுடன் இலங்கையை நோக்கி புறப்பட்டார்
ஜான் ஸ்கட்டரின் மனைவி ஹாரியட் ஸ்கட்டர். ஜுன் 8, 1819-ம் வருடம், 26 வயது
நிரம்பிய ஜான் ஸ்கட்டர் தனது மனைவி ஹாரியட் ஸ்கட்டர் மற்றும் தனது இரண்டு
வயது மகள் மரியாளுடன் இந்துஸ் கப்பலில் ஏறினார். 1819-ம் வருடம்
கல்கத்தாவில் வந்து சேர்ந்தனர் ஸ்கட்டர் தம்பதியினர். ஆறுமாத கால நெடும்
கடல் பயணத்தில் கப்பலில் பணி செய்தவர்களுக்கு நற்செய்தியை அறிவித்தார் ஜான்
ஸ்கட்டர். பின்னர் கல்கத்தாவில் மிஷனரியாக ஊழியம் செய்துகொண்டிருந்த
வேதமொழிபெயர்ப்பாளரும் மிஷனரிகளின் தந்தை எனவும் அழைக்கப்பட்ட “வில்லியம்
கேரி-யை” செராம்பூரில் சந்தித்தார். அதன் பின்னர் அவர் வாழ்வில் வேதனைகள்
சூலத்தொடங்கியது. தனது இரண்டு வயது மகள் மரியா கேத்தரின் வயற்று போக்கினால்
அக்டோபர் 25-ம் தேதி மரித்தாள். இந்த சூழ்நிலையில் ஜான் ஸ்கட்டர் இவ்வாறு
எழுதினார், “கடினமான சோதனை தான் என்றாலும் முறுமுறுப்பதில்லை. இயற்கையான
சோகங்கள் வர வேண்டும். ஒருவேளை நாங்கள் திரும்பி சென்றால் எனது
பெற்றோர்கள் எம்மை மன்னித்தது ஏற்றுக்கொள்ளலாம். இல்லை. திருச்சபையின்
தலையாகிய கிறிஸ்து என்னை அமெரிக்காவிலிருந்து அழைத்து இந்த மக்கள்
மத்தியில் வாழ வைப்பதற்காக நன்றி சொல்கிறேன். அழிந்து போகும் ஆத்துமாவை
ஆண்டவர் இயேசுவிடம் சேர்க்கும் பணியை தகுதியற்ற அடியவனிடம் இறைவன்
தந்துள்ளார்” என்றார். பின்னர் அதே வருடம் டிசம்பர் மாதம் ஸ்கட்டர்
தம்பதியினர் சிலோன் வந்து சேர்ந்தனர். யாழ்ப்பாணம் பகுதியில் மருத்துவப்பணி
செய்ய மிஷன் மூலம் நியமிக்கப்பட்டனர் .
யாழ்ப்பாணத்தில் ஸ்கட்டர் தம்பதியினர், 1819-1836
சிலோனில் புத்தர்கள் அதிகமாக இருந்தாலும் யாழ்பானத்தில் அதிக அளவு இந்து
மக்கள் காணப்பட்டனர். உற்சாகமாக மக்களுக்கு மருத்துவ பணியை துவங்கிய
ஸ்கட்டர் தம்பதியினருக்கு மீண்டும் ஒரு சோதனை காத்திருந்தது. 1820-ம்
வருடம் பிப்ரவரி மாதம் ஸ்கட்டர் தம்பதியினருக்கு இரண்டாவது ஒரு ஆண் குழந்தை
பிறந்து ஒரு வாரத்திற்குள்ளாகவே பிப்ரவரி 25 ல் மரித்துப்போனது. ஆனாலும்
ஸ்கட்டர் தம்பதியினர் தங்களுடைய மிஷனரி அழைப்பில் உறுதியாய் நின்றனர்.
அதற்கு பின்னர் இத்தம்பதியினருக்கு எட்டு ஆண் குழந்தைகளும் இரண்டு பெண்
குழந்தைகளும் பிறந்தனர். எட்டு ஆண்களில் ஒருவரான சாமுவேல் ஸ்கட்டர்
இறையியல் காலூரியில் படிக்கும் பொழுது நீரில் மூழ்கி இறந்துவிட்டார். மற்ற
ஏழு மகன்களும், இரண்டு மகள்களும் தங்களது படிப்பை அமெரிக்காவில் முடித்து
பின்னர் தென்இந்தியாவில் மருத்துவ மிஷனரிகளாக இறைப்பணியாற்றினர்.
1820-ம் வருடம் யாழ்ப்பாணத்தில் உள்ள பண்டத்தரிப்பு என்னுமிடத்தில் மிஷன்
ஸ்டேஷன், மருத்துவனை மற்றும் பள்ளியை நிறுவினார். பண்டத்தரிப்பு
என்னுமிடத்தில் அவைகள் தங்குவதற்கு ஓலையால் வேயப்பட்ட வீடு
கொடுக்கப்பட்டது. அமெரிக்காவின் மிகப்பெரிய மருத்துவர் ஜான் ஸ்கட்டர்
என்பதை மறந்து கிறிஸ்துவிற்க்காக பாடுகளை சகித்து ஊழியத்தை அனுதினமுமும்
செய்து வந்தார். ஜான் ஸ்கட்டர் தான் அமெரிக்காவில் இருந்து வெளிதேசத்திற்கு
முதல் மருத்தவ மிஷனரியாக வந்தவர். அவரது கொள்ள்கை என்னவென்றால்,
மருந்துகள் மூலம் ஒருவரது உடலைக் காப்பாற்றி பின்னர் ஆத்துமாவை காக்க வல்ல
இரட்சகரை அறிவிப்பது தான்”. பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் காலரா,
மலேரியா, பிளேக், மஞ்சள் காமாலை போன்ற உயிர் கொல்லி நோய்கள் அதிகமாய்
பரவின. அந்த நோய்களிலிருந்து அநேகரை காப்பாற்றி இரட்சகரை அறிவித்தனர்
ஸ்கட்டர் தம்பதியினர். மருத்துவமனையும் பள்ளியும் மட்டுமின்றி
திருச்சபைகளையும் நிறுவினார் ஜான் ஸ்கட்டர். தொடர்ந்து 19 வருடங்கள்
யாழ்ப்பாணத்தில் மருத்துவ மிஷனரியாக பணியாற்றி இயேசுவின் நற்செய்தியை அநேக
மாக்களுக்கு அறிவித்தனர்.
1821-ம் ஜான் ஸ்கட்டர் தமிழ் மொழியை
நன்கு கற்று அநேகருக்கு தமிழில் நற்செய்தியை அறிவிக்க தொடங்கினார்.
அனுதினமும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளையும் கவனித்து வந்தார்.
அந்நாட்களில் அச்சு இயந்திரம் அதிகளவு இல்லாத காரணத்தினால் பனை ஓலையில்
மைகொண்டு இயேசுவின் அன்பை எளிதி அநேக பகுதிகளுக்கு சென்று கொடுத்து
வருவார். அனுதினமும் காலையில் குறையாது 60 நோயாளிகள் அவரது மருத்துவமனைக்கு
வருவார்கள். அவர்களுக்கு சிகிச்சை அளித்த பின்பு கைகளால் ஓலையில் எழுதிய
சுவிஷேச நற்செதியை அநேக மக்களுக்கு கொடுப்பார். அவரது மருத்துவ மற்றும்
ஊழியத்தின் மத்தியில் 23 பள்ளிகளை யாழ்பாணம் பகுதியில் நிறுவினார்.
அதுமட்டுமில்லாமல் 16 ஆண் குழந்தைகளையும் 3 பெண் குழந்தைகளையும்
தத்தெடுத்து வளர்த்து வந்தார்.
இந்தியாவில் ஸ்கட்டர் தம்பதியினர்
1836-ம் வருடம் மெட்ராஸுக்கு இடம் மாற்றப்பட்ட ஜான் ஸ்கட்டர் தமது நண்பர்
வின்ஸ்லோ உடன் இணைந்து பிரிண்டிங் பிரஸ் ஒன்றை நிறுவி சுவிஷேச துண்டு
பிரதிகளை (Pamphlet) தமிழில் அச்சிட்டு வெளியிடும் ஊழியத்தை தொடங்கினார்.
தான் எப்படி ஒரு சிறிய துண்டுபிரதி மூலமாய் இரட்சிப்பின் அனுபவத்தை
பெற்றோமோ அதேபோல அநேக மக்களுக்கு துண்டு பிரதி மூலம் சுவிசேஷம்
அறிவிக்கப்பட வேண்டுமென விரும்பினார். துண்டு பிரதிகள் மூலம் சுவிசேஷம்
அறிவிக்கும் முறையை ஆசியா கண்டத்திற்குள் அறிமுக படுத்தி அதன் மூலம் அநேக
ஆத்துமாக்களை கிறிஸ்த்துவுக்குள் அழைத்து வந்தார். சென்னையில் உள்ள
சிந்தாதிரிப்பேட்டையில் தங்கி ஆறு வருடம் மருத்துவ ஊழியத்தொடு துண்டு பிரதி
ஊழியத்தையும் செய்தார். இந்தியா முழுவதிலும் துண்டு சுவிஷேச துண்டு
பிரதிகளை மக்களிடம் கொடுக்க வேண்டுமென்று சொல்லி அநேக மொழிகளில் அநேக
தலைப்புகளில் சுவிஷேச பிரதியை அச்சிட்டார் ஜான் ஸ்கட்டர். மெட்ராஸில்
இருந்து காஞ்சிபுரம் மற்றும் வாலஜாவிற்கு அடிக்கடி பயணம் செய்து ஊழியம்
செய்து வந்தார். 11 மணி நேரம் வெயிலில் நின்று பிரசங்கம் செய்து துண்டு
பிரதிகளை கொடுத்து ஊழியம் செய்ததால் டாக்டர். ஜான் ஸ்கட்டரின் உடல்நிலை
பாதிக்கப்பட்டது. 1842-ம் வருடம் உடல் சுகவீனம் காரணமாக அமெரிக்கா சென்று
குணமடைந்த பின்பு 1846-ம் வருடம் மீண்டும் இந்தியா வந்து மதுரையில் தங்கி
இரண்டு வருடம் மருத்துவ பணியோடு சுவிஷேச பணியையும் செய்தார். சபைகளில்
நிலவி வந்த ஜாதி பார்க்கும் முறைக்கு எதிராக போரிட்டு கிறிஸ்த்துவின்
சபையில் அணைவரும் சமம் என்ற கொள்கையை நிலை நாட்டினார் ஜான் ஸ்கட்டர்.
ஸ்கட்டர் தம்பதியினரின் இறுதி நாட்கள்
1849-ம் வருடம் மீண்டும் மெட்ராஸில் மருத்துவ பணியோடு ஊழியம் செய்ய
நியமிக்கப்பட்டார். அந்நாட்களில் ஹாரியட் ஸ்கட்டரின் உடல் நிலை
பாதிக்கப்பட்டு 1849-ம் வருடம் நவம்பர் 29-ம் தேதி தமது 54-ம் வயதில்
இறைவனிடம் சேர்ந்தார். மரிப்பத்தர்க்கு முன்னமாக ஹாரியட் அம்மையார் கண்களை
துறந்து “மகிமையான பரலோகம், மகிமையான இரட்சிப்பு” என்று சொல்லி கண்களை
மூடியுள்ளார். ஜான் ஸ்கட்டரை இது மிகவும் பாதித்தாலும் தமக்கு
நியமிக்கப்பட்ட மருத்துவ பணியை செய்து, சுவிஷேச துண்டு பிரதிகளை மக்களிடம்
கொடுத்து 1854-ம் வருடம் வரை இறைப்பணி செய்து வந்தார். ஒரு நாளைக்கு இரண்டு
பிரசங்கள் செய்து வந்த ஜான் ஸ்கட்டர், மனைவி இறந்த பிறகு வேதனையின்
மத்தியிலும் ஒரு நாளைக்கு மூன்று பிரசங்கள் வரை செய்து வந்தார். 1855-ம்
வருடம் தென்அமெரிக்காவிற்கு மருத்துவ மிஷனரியாக சென்றார். உற்சாகமாய்
ஊழியம் செய்த ஜான் ஸ்கட்டர், 1855-ம் வருடம் ஜனவரி மாதம் 13-ம் தேதி இரவு
நித்திரையில் இறைவனடியில் சேர்ந்தார். அவரது உடல் மெட்ராஸுக்கு
கொண்டுவரப்பட்டு தமது மனைவியின் கல்லறை அருகிலே புதைத்து பின்னர்
ராணிபேட்டையில் அவர்களது உடல் கோதுமை மணியாய் விதைக்கப்பட்டது.
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்
எங்கள் தளத்தில் உங்களுக்கு பிடித்த கதைகளை பதிவு செய்துள்ளோம். உங்கள் சொந்த வாழ்க்கைக்கும், குடும்ப வாழ்க்கைக்கும், குழந்தைகளோடு பகிர்ந்துகொள்வதற்கும், ஊழியத்தின் பாதையில் பகிர்ந்து கொள்வதற்கும் எனக்கு பிடித்த கதைகளை இனைத்துள்ளோம். படியுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள்
Showing posts with label ஐடா ஸ்கடர். Show all posts
Showing posts with label ஐடா ஸ்கடர். Show all posts
Wednesday, December 18, 2013
ஐடா ஸ்கடர் - வாழ்க்கை குறிப்பு
நெரிசலிலும்,
வெப்பத்திலும் சிக்கித் தவிக்கும் இந்தியாவை விட்டு வெளியேறுவதே
நல்வாழ்வின் தொடக்காமென கருதினார் ஐடா ஸ்கடர். ஐடாவிடம் நல்வாழ்க்கையின்
உதாரணம் கேட்போருக்கு அவரது மாறாத பதில், "அமெரிக்காவும், கோடீஸ்வரருடன்
திருமணமும்" என்பது தான். இந்தியாவில் நிலவிய பஞ்சமும், தெருவோரம்
கிடக்கும் பிணங்களும் தான் இந்தியாவை குறித்து ஐடாவின் நினைவில் நின்ற
பின்பங்கள். ‘இந்தியா’ ஒருபோதும் தனக்கு ஏற்ற நாடல்ல என்பது ஐடாவின் கணிப்பு. அவளது கணிப்புகள் எல்லாம் பரமனின் அழைப்பில் மங்கி பின் மறைந்தது.
அப்போது அவள் இந்தியாவில் தொண்டாற்றி வரும் தன் தந்தையோடு விடுமுறையை கழிக்க வந்திருந்தாள். அகல்கள் ஒளியை வீசிக்கொண்டிருக்கும் அறையில் புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்த ஐடாவின் காதுகளில் சிலரது காலடியோசை வெளித் திண்ணையில் இருந்து வந்தெட்டியது. புத்தக பார்வையை கலைத்துவிட்டு கதவருகே வந்து எட்டிப் பார்த்தாள். அங்கு பிராமணர் ஒருவர் பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருக்கும் தன் 14 வயது மனைவியை காப்பாற்ற வரும்படி வேண்டினார். “அம்மா! மருத்துவச்சிகள் கை விரித்து விட்டனர். எப்படியாவது என் மனைவியையும், பிள்ளையையும் காப்பாற்றுங்கள்” என்று கதறினார். ஐடா மகப்பேறுவில் அகரம் கூடா அரியாதவள், எனவே “என் தந்தை ஒரு சிறந்த மருத்துவர். அவர் வீட்டிற்கு வந்ததும் அவரை அழைத்து வருகிறேன்” என்றாள். “ஒரு அந்நியஆண் என் இல்லத்திற்குள் நுழைவதைக் காட்டிலும், அவள் இறப்பதே மேல்” என்று மறுத்து வெளியேறினார் பிராமணர். அந்த ஏழைப்பெண்ணுக்காக வருந்தினார் ஐடா. அவளால் வேறு என்ன செய்ய முடியும். கனத்த மனதுடன் புத்தகத்திற்குத் திரும்பினாள் ஐடா.
சிறிது நேரத்தில் ஐடாவின் தந்தை வீடு திரும்பினார். நடந்ததை சொல்லி வருத்தமடைந்தாள் ஐடா. மீண்டும் காலடியோசை கேட்டது. பிராமணர் மறுபடியும் வந்திருப்பார் என்று நினைத்த ஐடா வாசலருகே ஓடோடி வந்தாள். ஆனால் அங்கோ ஒரு இஸ்லாமியர் பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருக்கும் தன் மனைவிக்கு உதவி செய்ய வருமாறு ஐடாவை அழைத்தார். ஐடா ஒரு தேர்ச்சி பெற்ற மருத்துவரல்லாததால் ஐடாவின் தந்தை வந்து உதவுவதாக கூறினார். இதை கேட்ட இஸ்லாமியர் “என் மனைவியின் முகத்தை எனது குடும்பத்தாரைத் தவிர வேறு எந்த ஆணும் கண்டதில்லை. அப்படி இருக்க அயல்நாட்டவரான உங்களை என்னால் அனுமதிக்க முடியாது” சொல்லி மறுத்துவிட்டார். அவரது மனதை மாற்ற முயன்ற ஐடாவிற்கும் அவள் தந்தைக்கும் தோல்வியே மிஞ்சியது.
வேறுவழியின்றி மறுபடியும் புத்தகத்தை தொடர்ந்த ஐடாவிற்கு மீண்டும் காலடியோசை கேட்கவே, திகிலோடும் குழப்பத்தோடும் சென்று பார்த்தாள். மூன்றாவதாக ஒரு உயர் குல இந்து மனிதர் தன் மனைவியின் பிரசவத்திற்கு ஐடாவை அழைத்தார். ஐடாவுக்கு அனுபவம் இல்லாததால் அவரது தந்தை வருவதாக தெரிவித்தார். “வேண்டாம்; என் மனைவி சாகட்டும்” என்ற அதே பதில் தான் இந்த முறையும் வந்தது.
“அந்த இரவு என்னால் தூங்க முடியவில்லை... அது ஒரு பயங்கரமான இரவு. ஒரு பெண் உதவிக்கு இல்லாததால் இங்கே மூன்று பெண்களின் உயிர் பிரிந்து கொண்டிருக்கிறது. ஆனால் எனது அமெரிக்க தோழிகள் உல்லாச வாழ்விற்கு தொடர் அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தனர். என்னால் அவர்களின் அழைப்பை நிராகரிக்க முடியவில்லை. அந்த இரவு வேண்டுதலிலும் வேதனையிலும் மட்டுமே நகர்ந்தது. அடுத்த நாள் காலை எனது எதிர்காலம் குறித்து தேவனுடைய விருப்பதை அறிந்து கொள்ள ஜெபத்தில் அமர்ந்தேன். என் வாழ்வில் முதல் முறையாக தேவனின் சத்தத்தை தெளிவாக உணர்ந்தேன். அந்த நேரமெல்லாம் தேவன் தமது ஊழியத்திற்கு என்னை அழைக்கிறார் என்பதை புரிந்துகொண்டேன்
ஜெபத்தை முடித்து எழுந்த போது, தாரை தப்பட்டை சத்தம் கேட்க தொடங்கியது. உடனே எனது உள்ளத்தை திகில் தொற்றிக் கொண்டது. அது நிச்சயமாக யாரோ ஒருவருடைய மரண செய்தி என்பது எனக்கு தெரியும். வேலைக்காரர்களில் ஒருவனை கிராமத்திற்குள் அனுப்பி அந்த மூன்று பெண்களின் நிலையை விசாரித்து வருமாறு அனுப்பினேன். மூவருமே இறந்துவிட்டதாக விசாரித்து வந்தவன் கூறினான். எனது அறையை மறுமடியும் மூடிவிட்டு அழுதேன், இந்திய பெண்களின் நிலையை குறித்த பாரம் என் உள்ளத்தை ஆக்கிரமித்தது. நீண்ட நேர ஜெபத்திற்கு பின்னர் “நான் அமெரிக்கா செல்லவே தீர்மானித்தேன். ஆம்! அமெரிக்கா சென்று மருத்துவம் படித்து மீண்டும் இந்தியாவுக்கே வந்து அவல நிலையில் இருக்கும் பெண்களுக்கு தொண்டாற்றுவதே இறைவனின் நோக்கம் என்பதை புரிந்துகொண்டேன்..
ஐடா உயர்ந்த கல்லூரிகளில் பயிலும் வாய்ப்பை பெற்றார். நன்கு பயிற்சிபெற்ற மருத்துவராக ஐடா இந்தியா திரும்பினார். பெண்களுக்கான மருத்துவமனை ஒன்றை வேலூரில் நிறுவ வேண்டுமென விரும்பினார். எதிர்பாராத விதமாக ஐடாவிற்கு மருத்துவர் லூயிசா ஹர்ட்டிடமிருந்து கடிதம் வந்தது. அதில் வேலூரில் மருத்துவமனை அமைக்கப் பணம் தேவைப்படுகிறதா? பதில் எதிர்பார்த்துக் காத்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஐடாவிற்கு அந்த மூன்று பெண்களின் நினைவு வந்தது, இந்தியாவில் சுவர்களுக்கு பின்னால் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பெண்களின் அவலத்தை நினைத்தார். ஆம் பெண்களுக்கான மருத்துவமனை இங்கு உடனடி தேவை, நல்ல மருத்துவமனை கட்டுவதற்கு $50,000 தேவைப்படும் என்று பதில் எழுதினார்.
$50,000மா!! என்று பலரும் வாயைப் பிளந்தனர். அத்தொகையின் தற்போதைய மதிப்பு $500,000. $8000 திரட்டுவது சாத்தியமானது. ஆனால் உங்களால் அதில் பாதி பணத்தை கூட திரட்ட முடியுமா என்பது சந்தேகம் தான் இருந்தாலும் முயற்சி செய்யுங்கள் என்றனர். பலரும் தன்னை தாழ்வாக நினைப்பதை புரிந்து கொண்டார் ஐடா. அவர்களது எண்ணம் தவறு என்றும் பணம் தேவைப்பட்டால் அதைத் தர தேவனால் இயலும் என்றும் பதில் எழுதினார்.
ஐடா தானே நிதி திரட்ட முற்பட்டார். "யானை பசிக்கு சோழ பொறி" என்பதைப்போன்று சிறு துளியாய் டாலர்கள் வந்து சேர்ந்தன. இந்தியாவின் தேவை அதிகரித்துக்கொண்டே போனது. 10,000 மக்களுக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதம் தான் நிலவியது. பாரம்பரிய மருத்துவர்களிடம் சிறந்த மருந்துகள் இருந்தாலும் அதில் பெரும்பாலானவை பக்க விளைவை ஏற்படுத்தக் கூடியவை. இந்தியாவில் மருத்துவத்திற்கான அவசர தேவையை உணர்ந்தார். ஆனால மருத்துவமனை கட்டி முடிக்க குறைந்தது இரண்டாண்டுகள் பிடிக்கும். ஆகவே ஒரு சிறு அறையை தற்காலிக மருத்துவனை ஆக்கினார். திண்ணை காத்திருக்கும் அறையாக பயன்பட்டது. அவள் நோயாளிகளை நன்றாக கவனித்த போதிலும் சந்தேகம் தமிழ் இந்தியர்களை ஐடாவிடம் சிகிச்சை பெறுவதற்கு தடை செய்தது. அவளது முதல் சிகிச்சை தோல்வி அடைந்தது. ஐடாவிடம் சென்ற நோயாளி இறந்திவிட்டார் என்ற செய்தி வேகமாக பரவியது. பலரது சந்தேகம் வலுத்தது.
இறுதியாக ஒரு உயர்ந்த ஜாதி இந்துப்பெண் கண் சிகிச்சைக்காக வந்திருந்தார். இம்முறை ஐடா வெற்றிகரமாக சிகிச்சை செய்து குணமாக்கினார். அதன்பின் அவளது சேவையின் தேவை அதிகரித்தது. சலொமி என்ற அவளது வீட்டு சமையல் பணிப்பெண் தான் ஐடா பயிற்சியளித்த முதல் செவிலியர். நாளொன்றுக்கு 100, 200, 300, 400, 500 என்று ஐடாவிடம் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது.
அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் உள்ள மொத்த மருத்துவர்களையும் கொண்டு வந்து சேவை செய்தாலும் “சமுத்திரத்தை காயத்தால் உரசியது” போலதான் இருந்தது அன்றைய தேவை. இந்தியப் பெண்களுக்கு சேவை செய்ய இந்திய பெண்களுக்கே பயிற்சி அளிக்கவேண்டுமென்று தீர்மானித்த ஐடா வேலூர் செவிலியர் பாடசாலையை உருவாக்கினார். செவிலியருக்கு பயிற்சியளிக்கத் தன்னால் கூடுமானால் மருத்துவருக்கும் பயிற்சி அளிக்கக் கூடுமென்று நம்பினார் ஐடா. மீண்டும் நம்பிக்கை ஜெயித்தது. வேலூர் மருத்துவக் கல்லூரி உருவானது. அது சுலபமாக நடக்கவில்லை. காலம் செல்லச் செல்ல நெருக்கடியின் விளிம்பிற்கு வந்தார் ஐடா. ஆனால் கடவுள் எப்பொழுதும் போலக் காப்பாற்றினார். இக்கட்டான நிலை ஒன்றில் ஐடா எழுதினார் “முதலில் நன்கு சிந்தனை செய்; பின்பு துணிந்து செய்; உண்மைகளை தெரிந்துகொள்; செலவை மதிப்பிடு; பணம் முக்கியம் அல்ல; நீ கட்டிக்கொண்டிருப்பது மருத்துவக் கல்லூரியல்ல; அது கடவுளின் ராஜாங்கம்” இது கடவுளின் விருப்பமென்றால் கடவுளே கல்லூரியைத் திறந்து வைப்பார் என்ற நம்பிக்கையின் பலனாய் கல்லூரி தொடங்கியது.
தன் பாதத்தில் படிந்த இந்தியாவின் தூசியை தட்ட விரும்பிய அந்த பெண் பின்னாளில் இந்தியர்களின் இதய சிம்மாசனத்தில் இடம்பிடித்தார். பிரிட்டிஷ் மற்றும் இந்திய அரசாங்கம் அவருக்கு உயர்ந்த விருதுகளை வழங்கியது. காந்தியடிகள் அவரை தேடி சந்தித்தார். ஐடா சர்வதேச புகழ் பெற்றார். ஐடாவின் கடவுள் நம்பிக்கை அழிவில்லாதது. அதுவே அந்த மருத்துவச்சியின் மதிப்பிற்குரிய சான்றாக இன்றளவும் காலங்களை கடந்து நிலைநிற்கிறது, அவளது இறை நம்பிக்கையே அவளை விசித்திர மருத்துவச்சியாக்கி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
நன்றி
கதம்பம் [இ-இதழ்]

Subscribe to:
Posts (Atom)
-
ஒரு தாயற்ற பெண் பிள்ளையை அவளுடைய தகப்பன் பரிவோடு வளர்த்து வந்தார். அவளுடைய தேவைகளை எல்லாவற்றையும் சந்தித்து தாய்க்கு தாயாகவும், ...
-
பல ஆண்டுகளுக்கு முன் செல்வந்தர் ஒருவர் வேலைக்கு ஆள் வேண்டி விளம்பரம் செயதிருந்தார்; விளம்பரத்தை பார்த்து இளைஞர்கள் பலர் வந்தனர்....