என்னுடைய பெயர் கோயில் துரை. நெல்லை மாவட்டம் நான்குநேரி தாலுக்கா
விஜயாச்சம்பாடு என்ற கிராமத்தில் வாழ்ந்து வந்தேன். என்னுடன் பிறந்தவர்கள்
ஆறு பேர். அதில் நான் இரண்டாவது மகன். என் சிறுவயதில் தினமும் சர்ச்க்கு
செல்வேன். ஆனால் தேவனுக்கு பயப்படும் பயம் என்னில் இல்லாது இருந்தது.
நான் +2 வரை படித்து இருக்கிறேன் பள்ளியில் படிக்கும் போது தவறான நண்பர்கள்
மூலமாக குடிப்பழக்கம் எனக்கு இருந்தது.
இந்த நிலையிலும் எனக்கு திருமணமு
நல்ல முறைகள் இருந்த இன்ச்டால்மென்ட் பிசினஸ் அடியோடு நாசமாகி போனது.
எனக்கு இருந்த எல்லா இடத்தை விற்று மறுபடியும் குடிக்க சென்றேன். இந்த
இடைப்பட்ட காலத்தில் என் பிள்ளைகள் உபவாசம் இருந்து எனக்காக
ஜெபித்திருகிறார்கள். என் பிள்ளைகளை பார்க்கும்படி வீட்டிற்க்கு சென்ற
நான் என் பிள்ளைகளின் நிலைமையை கண்டு மிகவும் வருத்தப்பட்டேன். பின்
நாட்களில் தேவன் என் குடிப்பழக்கத்தை முழுவதுமாக மாற்றினார்.
குடும்பத்தோடு சந்தோஷமாக இருக்கும் பாக்கியத்தை எனக்கு தந்தார்
ம் நடந்தது. மூன்று பிள்ளைகளும்
பிறந்தார்கள். சில நாள் தெரிந்தும் பல தெரியாமலும் குடித்ததால் மிகவும்
பெலவீனப்பட்டு 45 நாள்கள் ஆஸ்ப்பத்திரி சேர்க்கப்பட்டேன். பின்னர் சில
நாட்கள் கழித்து மீண்டும் குடிப்பழக்கம் மிக அதிகம் ஆனதே தவிர குறையவில்லை.
இப்படியாக இருக்கும் போது குடும்பத்தில் பிரச்சனை வர ஆரம்பித்தது. சின்ன
சின்ன பிரச்சனை வந்து இரண்டரை ஆண்டுகள் குடும்பத்தை விட்டு பிரிந்து
இருந்தேன். இன்னும் அதிகமாக குடித்து விட்டு சாப்பிடாமல் இருப்பேன். மன
அழுத்தம் காரணமாக இன்னும் நிறையே குடிக்க ஆரம்பித்தேன்.
எங்கள் தளத்தில் உங்களுக்கு பிடித்த கதைகளை பதிவு செய்துள்ளோம். உங்கள் சொந்த வாழ்க்கைக்கும், குடும்ப வாழ்க்கைக்கும், குழந்தைகளோடு பகிர்ந்துகொள்வதற்கும், ஊழியத்தின் பாதையில் பகிர்ந்து கொள்வதற்கும் எனக்கு பிடித்த கதைகளை இனைத்துள்ளோம். படியுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள்
Showing posts with label ஜெபவீரன். Show all posts
Showing posts with label ஜெபவீரன். Show all posts
Tuesday, July 9, 2013
Monday, April 22, 2013
ஜெபத்திற்கு பதில் கொடுக்கும் தேவன்
ஜெபசீலன் தன் பெயருக்கேற்ப ஒரு ஜெப
வீரர். தன் குடும்பத்தோடு மலையடிவார கிராமம் ஒன்றில்
குடியிருந்தார். ஞாயிறு தவிர தினமும் மலையில் ஏறி,
விறகுகளை வெட்டி, தனது இரட்டை மாட்டு வண்டியில் ஏற்றி
வந்து பக்கத்து கிராமங்களில் விற்று வந்து குடும்பத்தை
நடத்தி வந்தார். அவர் பக்தி வைராக்கியம் நிறைந்த
கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர். ஆனால் முழுமையான
இரட்சிப்பின் அனுபவத்தில் வாழாதவர்.
.
வழக்கம் போல
அன்றும் விறகுகளை வெட்டி தன் வண்டியில் ஏற்றி கொண்டு
புறப்பட்டார். பலத்த மழை பெய்தது. சற்று நேரம் மழைக்கு
ஒதுங்கி விட்டு வண்டியை ஓட்டி வந்தார். வழியில் சக்கரம்
சேறு நிறைந்த ஒரு குழியில் மாட்டி கொண்டது. வண்டியை
வெளியே கொண்டு வர மாடுகளை முடுக்கி விட்டார். வண்டி
நகரவில்லை. கண்ணீரோடு ஜெபித்தார். ஜெபித்து விட்டு
வண்டியை ஓட்டி விடலாம் என்ற நம்பிக்கையில் மாடுகளை
அதட்டினார். வண்டி ஒரு அடி கூட நகரவில்லை. மீண்டும் ஒரு
முறை ஜெபித்தார். பலனில்லை. மூன்றாவது முறை, 'என்ன ஆண்டவரே,
நான் உம் பிள்ளையல்லவா? ஜெபத்தில் எதை கேட்டாலும்
செய்வேன் என்று சொல்லியிருக்கிறீரே, நான் இரண்டு முறை
ஜெபித்தேன். நீங்கள் வண்டியை வெளியே வர செய்யவில்லையே'
என்றார். ஆண்டவர் சொன்னார், ' ஜெபசீலன், நீ ஒரு ஜெபவீரன்
என்பது உண்மை. நான் ஜெபத்திற்கு பதில் கொடுக்கும் தேவன்
என்பதும் உண்மை. அதே நேரத்தில் உன்னுடைய முயற்சியும்
வேண்டும். நீ இப்பொழுதே போய் குழியில் மாட்டியிருக்கும்
சக்கரத்தை இழு, நான் உனக்கு உதவியாய் இருப்பேன்' என்றார்.
அப்படியே ஜெபசீலன் சக்கரத்தை இழுக்க முயற்சித்த போது
ஆண்டவருடைய கரமும் இணைந்து செயல்பட்டது. வண்டி குழியை
விட்டு வெளியே வந்தது. ஆண்டவருக்கு நன்றி கூறி வண்டியை
ஓட்டினார்.
Subscribe to:
Posts (Atom)
-
ஒரு தாயற்ற பெண் பிள்ளையை அவளுடைய தகப்பன் பரிவோடு வளர்த்து வந்தார். அவளுடைய தேவைகளை எல்லாவற்றையும் சந்தித்து தாய்க்கு தாயாகவும், ...
-
பல ஆண்டுகளுக்கு முன் செல்வந்தர் ஒருவர் வேலைக்கு ஆள் வேண்டி விளம்பரம் செயதிருந்தார்; விளம்பரத்தை பார்த்து இளைஞர்கள் பலர் வந்தனர்....

