Showing posts with label UESI TN. Show all posts
Showing posts with label UESI TN. Show all posts

Tuesday, July 10, 2012

Hendry ford - The creator

Henry Ford and the Quadricycle, 1896.
கர்த்தரை நம்பியே ஜீவிப்போம் 
மேலை நாடுகளில் அதிவேகமாக கார்களை ஓட்டி செல்லக்கூடிய பெருவழிச்சாலைகள் உண்டு. வாகனம் பழுதாகி விட்டால், ரோடை அடைத்து கொண்டு இராமல், ரோட்டில் பழுதுசெய்யும் பகுதியில் வாகனத்தை நிறுத்தி பழுது செய்து கொள்ள வேண்டும். இவ்விதமாக சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று இயந்திர கோளாறினால் நின்று விட்டது. ஓட்டுனர் காரை சரி செய்ய பல முயற்சிகளை எடுத்து கொண்டிருந்தார்.
.
சற்று நேரத்தில் அந்த வழியே வந்த வயது முதிர்ந்த ஒருவர், தன் காரை நிறுத்தி, 'ஏதாவது பிரச்சனையா? என்று கேட்டார். அதற்கு ஓட்டுனர் 'ஆமாம்,
என்னவென்று தெரியவில்லை, நடுரோட்டில் காலை வாரி விட்டது' என்றார். முதியவர், 'நான் ஏதாவது உதவி செய்யலாமா?' என்று கேட்டார். ஏற்கனவே எரிச்சலிலிருந்த ஓட்டுனர், 'உங்கள் வேலையை பார்த்து கொண்டு போங்கள்' என்று கூறிவிட்டு, காரை இயக்குவதில் மும்முரமாய் ஈடுபட்டார். ஆனால் கார் இம்மியளவும் அசையவில்லை.
.
அவைகளையெல்லாம் கவனித்து கொண்டிருந்த அம்முதியவர், 'நான் உங்களுக்கு உதவாவிட்டாலும் நான் சொல்வதையாவது கேளுங்கள்' என்று கூறி, ஒரு சில பழுது நீக்கும் முறைகளை சொல்லி கொடுத்தார். அதன்படி செய்தபின் கார் ஸ்டார்ட் ஆனது. உடனே, அம்முதியவரை பார்த்து 'நீங்கள் யார்' என்று ஓட்டுனர் கேட்டார். 'நான்தான் இந்த காரை உருவாக்கிய போர்ட் (
Ford). வயதாகி விட்டதால் ஓய்வெடுத்து கொண்டிருக்கிறேன்' என்றார். தனது அலட்சியமான பேச்சிற்கு மன்னிப்பு கேட்டு சென்றார் ஓட்டுனர்.

Monday, July 2, 2012

அறிந்த முகம் ,அறியாத செய்தி

சாது சுந்தர் சிங் 1889-ம் ஆண்டு நாட்டில் உள்ள பஞ்சாப் மாகணத்தில் ஷேர்சிங் என்பவருக்கும் அவரது துணைவியாருக்கும் மகனாய் பிறந்தார்.

அவர் சிறுவனாக இருக்கும்போதே அவரது தாய் சீக்கிய மதத்தின் கிரந்தங்களை அவருக்கு நன்கு போதித்து சீக்கிய மதத்தில் பக்தி வைரகியமுள்ள ஒரு வாலிபனாய் வளர்த்தார். அவருடயை ஊரில் உள்ள ஒரு கிறிஸ்தவ பள்ளியில் அவர் கல்வி பயின்ற காலத்தில் ஏனோ கிறிஸ்துவ மார்கத்தின் மீது வெறுபுள்ளவராக காணப்பட்டார். அவருடைய 12வது வயதில் தாய் மரித்த பின்பு அவருடைய நல்ல குணங்கள் மாறி வெறுபுள்ளவராய்.

ஒரு நாள் பரிசுத்த வேதாகமத்தின் ஒரு பகுதியான புதிய ஏற்பாட்டை விலை கொடுத்து வாங்கி ,நண்பர்களுடன் கூடி புத்தகத்தை கிழித்து தீயிலிட்டு கொளுத்தி மகிழ்ந்தனர் ,இன்னொரு நாள் கிறிஸ்தவர்கள் ஆலயத்தில் தொழுது கொண்டிருக்கும் பொது மாட்டு சாணத்தை சன்னல் வழியாக உள்ளே எறிந்துவிட்டு ஓடிவிட்டார். இவைஅனைத்தும் செய்த போதும் மனதில் நிம்மதி அற்றவராகவே காணப்பட்டார் .

ஒரு நாள் இரவில் கடவுள் ஒருவர் உண்டானால் அவர் தம்மை எனக்கு காண்பிக்கட்டும்.அப்படி இல்லாவிட்டால் அதிகாலையில் என் உயிரை மாய்த்து கொள்வேன் என்று தீர்மானம் எடுத்துகொண்டார் . அந்த இரவில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தன்னை அவருக்கு காண்பித்தார் ,அன்று முதல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தன்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு அவரை எங்கும் சாட்சியாக கூறி வந்தார் .


அவர் இயேசுவை ஏற்றுகொண்டதின் நிமித்தம் ஒரு நாள் அவருடைய குடும்பத்தினர் அவருக்கு கொடிய விஷத்தை உணவில் கலந்து கொடுத்து வீட்டை விட்டு துரத்தி விட்டனர் ,அவரோ தன்னுடைய கிறிஸ்தவ நண்பன் வீட்டின் வாசலில் போய் மயங்கி விழுந்து விட்டார் ,அவருடய நண்பன் அவரை மருத்துவரிடம் அழைத்து சென்றார் .அந்த கொடிய விஷத்தை உண்டவர் பின்பும் உயிரோடு இருப்பதை கண்ட மருத்துவர் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார்.


இந்திய மட்டுமல்லாமல் இங்கிலாந்து,அமெரிக்க,ஐரோப்பா போன்ற பல வெளிநாடுகளுக்கும் சென்று இயேசு பற்றி பிரசங்கம் செய்து இந்தியாவின் மதிப்பை வெளிநாடுகளில் உயர்த்தினார். உறைபனி மிகுந்த மலைகளிலும்,கரடுமுரடான காடுகளிலும் செருப்பு எதுவும் அணியாமல் வெறும் கால்களுடன் நடந்து சென்று ரத்தம் வடிந்து கொண்டிருக்கும் நிலையிலும் இயேசுவுக்கு ஊழியம் செய்ததால்,ரத்தம் வடியும் கால்களுடைய இயேசுவின் சீடன்என்று மக்கள் அவருக்கு பெயரை சூடினர்.


இவர் 1929-ஆம் ஆண்டு திபெதில் வைத்து இயேசுவின் திருவடி சேர்ந்தார் இவரை பற்றி என்னுடய கருத்து என்னவென்றால் ---- யோவான்,பவுல் இவர்களுக்கு பிறகு இயேசுவின் முழுமையான அன்பை இந்த உலகத்திற்கு பிரதிபலித்தவர் சாது சுந்தர் சிங் ஐயா மட்டுமே.

Sunday, July 1, 2012

என்ன கொடுப்பேன் என் இயேசுவுக்கு

யூத சிறுமி ஒருத்தி, ஒரு கிறிஸ்தவ கூட்டத்திற்குச் சென்று இரட்சிக்கப்பட்டாள். தான் பெற்ற இரட்சிப்பின் சந்தோஷத்தை அடக்கமுடியாமல் தன் பெற்றோருக்கும் வந்து சொன்னாள். தகப்பனின் முகம் கொடூரமானது. கோபத்தை கொப்பளித்து, கிறிஸ்துவை மறுதலிக்கக் கட்டாயப்படுத்தப்பட்டாள். அவளோ தனது விசுவாசத்தில் உறுதியாயிருந்தாள். இதைக்கண்டு சகிக்க முடியாத அவ்வைராக்கியமான யூத தகப்பன் தன் மகளை இரத்தம் வடியுமளவிற்கு அடித்தான். அவள் ஆடைகள் இரத்தத்தால் கறையானது. காயத்தின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டாள். ஒரு நாள் தன் தாயை அழைத்தாள். தான் அடிபட்டபோது அணிந்திருந்த ஆடையையும் ஒரு கத்தரிக்கோலையும் எடுத்து தரும்படி கேட்டுக்கொண்டாள். 'இது எதற்கு மகளே' என்று தாய் கேட்டபோது, ' அம்மா என் ஆடையில்  இரத்த கறைபட்ட இடத்தை வெட்டிஎடுத்துக்கொண்டு அதை  ஆண்டவரிடம் கொடுத்து, நானும் உமக்காக இரத்தம் சிந்தினேன்' என்பேன் என்று புன்னகையோடு சொல்லி தன் கண்களை மூடினாள்.

தியாகமற்ற ஒரு சாதாரணமான கிறிஸ்தவ வாழ்வை நாம் வாழ்ந்து முடிக்கவேண்டாம். கிறிஸ்துவின் மேலுள்ள ன்பினால் நம்மை சுட்டெரிக்கப்படவும் ஒப்புக்கொடுக்கும் ஒரு அசாதாரண வாழ்வுக்கு நம்மை ஒப்புக்கொடுப்போம். ஆமென்.

மறக்க முடியாத மாமனிதர்கள் - Bro.N.Emil Jebasingh (Founder, Vishwavani)

சகோதரர் எமில் ஜெபசிங் 10.01.1941 அன்று, மறைத்திரு Y.C. நவமணி ஐயரவர்களுக்கும்,கிரேஸ் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். தனது வாலிப நாட்களிலே, சகோதரர் P.சாம், மற்றும் சகோதரர் N. ஜீவானந்தம் என்ற தேவ வல்லமை நிறைந்த ஊழியர்களின் வழிநடத்துதலால், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பண்ணைவிளையில், (Now in Tuticorin District) தனது 17-வது வயதில் ஆண்டவரின் அன்புக்கு அடிமையானார். ஏமி கார்மைக்கேல், தாமஸ் உவாக்கர், ஈசாக்கு ஐயர் போன்ற பரிசுத்த தேவ ஊழியர்கள் பணிபுரிந்த அவ்வூரிலே, கிறிஸ்துவின் ரத்தத்தால் இதயக்கறை நீங்கித் தூய்மை பெற்று, மிஷனரி தரிசனத்தையும் பெற்றதால், பண்ணைவிளையைப் பரிசுத்த பூமிஎன, இன்றும் எமில் நன்றியோடு நினைவு கூறுகிறார்.
பண்ணைவிளையில் நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு ஆரம்பிப்பதில் இவர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. பின்னாட்களில் விஷ்வவாணி என்று மிகப்பெரிய சுவிசேஷ வானொலியினையும் இவர்கள் தோற்றுவித்து இன்றளவும் கர்த்தரின் நாமத்தை பறைசாற்றுகின்றது.

Monday, June 25, 2012

சாது சுந்தர்சிங் - நற்பலன்

தமது பரம எஜமானனுக்குத் தொண்டு செய்துவந்த சாது சுந்தர் சிங் பட்ட கஷ்டங்கள். பல தரம் உண்ணத் தகுந்த உணவு கிடடாததால் காட்டில் விளையும் கனி கிழங்குகளையே புசித்து தன் பசியின் அகோரத்தைத் தணித்துக்கொண்டார். கல் நெஞ்சரான ஊரார் இராத்தங்க இடங்கொடாமல் அவரை விரட்டினதால் அடிக்கடி மரத்தடியிலேயோ இருண்ட கெபியிலேயோ படுத்து நித்திரை செய்தேன் என்றும் சாது சுந்தர் சிங் கூறியிருக்கிறார். இக்கஷ்டங்களை அனுபவிக்க நேர்ந்த நாடுகளில் விசேஷ அபாயங்கள் நிறைந்திருந்தன. 

ஆகையால் சாது சுந்தர் சிங் இரவில் இளைப்பாறச் சென்ற இடங்களில் ஒரு காட்டு மிருகமோ, பாம்போ தம்மோடு தங்கியிருந்ததைக் கண்டு திடுக்கிட்ட சமயங்கள் அநேகம். தோரியோ என்ற தாலுக்காவின் ஒரு கிராமத்தில் சுந்தர் கழித்த காலமெல்லாம் பக்கத்திலிருந்த காடுதான் அவர் உறங்குமிடமாயிற்று. அக்கிராமத்தார் அவரை அவ்வளவு கொடுமைப்படுத்தினார்கள்.

ஓர் இரவு மனஞ்சோர்ந்து தேகம் களைப்புற்றவராய் சுந்தர் இருண்ட கெபிக்குள் நுழைந்து தன்னுடைய போர்வையை விரித்தபோது தன் பக்கத்தில் அயர்ந்து தூங்கின பெரிய சிவிங்கியொன்றைக் கண்டார். திகில் கொண்டெழுந்து அம்மிருகத்தின் வாயினின்று தப்புவித்த இயேசுவின் திருவடிகளைப் போற்றிக்கொண்டு சென்றார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அவரோடு இருந்தததினால் துஷ்டமிருகமொன்றும் அவருக்குத் தீங்கு செய்ததில்லை.மற்றொரு தரம் ஊராரால் துரத்துண்டு தனியே தியானம் பண்ணும்படி ஒரு பாறையின்மேல் உட்கார்ந்தார். பாறையின் அருகிலிருந்த குகைக்குள்ளிருந்து தம்மைக் கவனமாய்ப் பார்த்துக் கொண்டிருந்த கருஞ்சிறுத்தையைப் நித்திரையில் ஆழ்ந்திருந்த சுந்தர் கவனிக்கவில்லை. பிறகு தாமிருந்த அபாய நிலைமையையறிந்து பயங்கொண்டபோதிலும் இதுவரை தம்மைக் காத்துவந்த தெய்வத்தின் துணையில் சார்ந்து அமைதலாய் எழுந்து கிராமத்திற்குச் சென்றார்.
இந்த அதிசயக் தகவலைக் கேட்ட ஊரார். தம்மில் பலரைக்கொன்று தின்ற இந்த துஷ்டமிருகத்திற்கு இரையாகாது தப்பின இவர் ஒரு புண்ணிய புருஷர்போலும்! இவர் சொல்லும் நன்மொழியை நாம் கேட்பதும் தகுதியே என்று நினைத்து, சுந்தரை நயந்து அவருக்குச் செவிகொடுத்தார்கள். இதைக்கண்ட சுந்தர் தேவனைத் துதித்து மனத்திடன் கொண்டார்.

Thursday, June 21, 2012

உண்மையுள்ள ஊழியக்காரன்

வருகையின் தூதன் என்னும் பத்திரிக்கையை நம்மில் அநேகர் படித்ததுண்டு. அதன் ஆசிரியரான போதகர் தேவதாசனையும் நாம் அறிவோம். வருகையின் தூதன் மொத்தம் ஏழு மொழிகளில் வெளிவந்தது.

போதகர் தேவதாசன் அவர்கள் மெல்லிய சரீரத்தை உடையவர், மேடையில் ஒரு நிமிடம் கூட நிற்காமல், ஓடியாடி இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையை குறித்து எப்போதும் பிரசங்கிப்பார். அவர் 'நீங்கள் மட்டும் ஆயத்தமாவது போதாது, மற்றவர்களையும் ஆயத்தப்படுத்த வேண்டும்' என்று போதிப்பார். அவர் ஒரு நிகழ்ச்சியை சொல்லி, எப்படி நாம் கர்த்தருக்காக உழைக்க வேண்டும் என்று சொல்வார். ஒரு முறை அவர் நாகர்கோவிலில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு இடத்தில் கூட்டமான மக்கள் கூடியிருந்தனர். அவர் எட்டி பார்த்தபோது, அங்கு ஒரு மாடு மாட்டு வண்டியின் பக்கத்தில் படுத்து கிடந்தது. அதன் சொந்தகாரரும் மற்ற மக்களும் அந்த மாட்டை எழுப்ப முயற்சித்தும் அது அசையவேயில்லை. அது சாகும் தருவாயில் இருந்தது. போதகர் தேவதாசன் அவர்கள், அந்த மாட்டின் கண்களை பார்த்தபோது, அந்த மாடு, 'மாட்டுகாரனே, மாட்டுக்காரனே, இத்தனை வருடங்கள் நான் உமக்கு பாரத்தை சுமந்து என்னால் இயன்றதை உமக்கு செய்து முடித்து விட்டேன். இப்போது நான் மரிக்கும் நேரம் வந்து விட்டது' என்று சொல்வதாக கண்டார். அந்த இடத்திலேதானே அவர் ஒரு தீர்மானத்தை எடுத்தவராக ஒரு ஜெபத்தை செய்தார். 'என்னுடைய கடைசி மூச்சி நிற்கும்வரை இந்த மாட்டை போல நான் உமக்கு உண்மையாக உழைக்க எனக்கு உதவி செய்யும்' என்று ஜெபித்தார்.

அதன்படியே அவர் தன் இறுதி மூச்சுவரை கர்த்தருக்காக வைராக்கியமாக உழைத்து, 2005ம் ஆண்டு, நவம்பர் மாதம் 13ம் தேதி கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார். அவர் மரிக்கும்போது, அவருக்கு வயது 100க்கும் மேல். நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று என்று வேதம் நமக்கு அறிவுறுத்துகிறது. தீங்கநுபவித்தும், மனத்தெளிவுள்ளவனாக, கர்த்தருடைய  ஊழியத்தை நிறைவேற்ற வேண்டும். இந்த கடைசி நாட்களில் தேவனுடைய சுவிசேஷத்தின் நற்செய்தியை உண்மையாக எடுத்து கூறவேண்டும். போலி தீர்க்கதரிசிகளாக அல்ல, கள்ள தீர்க்கதரிசிகளாக அல்ல! தேவனுடைய சமுகத்தில் காத்திருந்து அவரிடமிருந்து பெற்று கொண்ட வார்த்தைகளை போதிக்கிற போதகர்கள் இந்த நாட்களில் பார்ப்பது எவ்வளவு கடினம்!

சனிக்கிழமை இரவு வரை உலக காரியங்களில் மூழ்கியிருந்து விட்டு, கடைசி நிமிஷத்தில் உட்கார்ந்து, இன்டர்நெட்டிலிருந்தும், கையில் இருக்கிற எத்தனை ரெபரன்ஸ் வேதாகமங்களையும் உருட்டி, ஏதோ ஒரு செய்தியை எடுத்து மக்களுக்கு போதித்தால் நிச்சயமாக மக்களுக்கு அது ஒரு செய்தியாக இருக்கவே முடியாது. ஏதோ வேதாகமத்தை வாசித்தது போல தான் இருக்கும். நம் தேவன் பேசுகின்ற ஆண்டவர். தமது சமுகத்தில் காலையில் ஆவலோடு மக்கள் வந்து தம்முடைய செய்திக்காக காத்திருப்பார்கள் என்று அவருக்கு தெரியும், அந்த மக்கள் எந்த சூழ்நிலையிலிருந்தும், கஷ்டத்திலுமிருந்து வந்திருக்கிறார்கள் என்பதையும் அவர் அறிவார். அவர் தம்முடைய ஊழியக்காரர் மூலம் அவர்களை ஆறுதல் படுத்த வேண்டும் என்று நினைக்கும்போது, அந்த ஊழியக்காரர்கள் அவருடைய வார்த்தையை கேட்காமல், அவருடைய சமுகத்தில் காத்திருக்காமல், தாங்களாக எதையாவது சொல்லும்போது, அவருடைய மனம் எத்தனை வேதனைப்படும்?

Wednesday, June 20, 2012

"i loved you before you loved me"

From her bedroom window, Rebecca eyed the children playing in the snow enviously. How she longed to play with them!
“Now, Rebecca,” she remembered her father telling her that morning. “You can’t play in the snow today.”
“Why not, Father?” Rebecca had asked. Every day, the neighborhood children gathered at a park just behind Rebecca’s house.
“Just trust me, Rebecca. It’s not what’s best for you today,” her father had replied.
At the time, Rebecca had responded by kissing her father on his cheek and assuring him that she would stay inside and read. But now she was having second thoughts.
It is beautiful outside, she thought to herself. It was true: the sun was shining brilliantly. Why wouldn’t her father let her go play? Why should she have to miss out on all the fun?
When a snowball exploded just outside her window, Rebecca decided she couldn’t stand it any longer. She simply had to go join the others!
Leaving her book on the table, Rebecca slipped outside. She tried to tell herself she was having a good time, but all the while her heart felt uncomfortable. She kept looking this way and that, fearful least her father see her.
After a few hours, Rebecca finally said her goodbyes and headed back towards the house. She wanted to be safely lodged in her room before her father came home.
Intent on getting to her room as quickly as possible, Rebecca didn’t see the mitten someone had left on the stairs until her foot slipped on it. Next thing she knew, she had fallen several stairs. To her horror, she noticed that she had hit her father’s favorite picture when she fell! A huge gash ran along the front of the picture.
Normally, Rebecca would have hurried immediately to her father after such a fall so he could doctor her up and make her feel better. But not this time. How could she face her father right now? She had disobeyed him and ruined his favorite picture! Biting her lips to keep from crying out, Rebecca grabbed the ruined picture and hobbled to her room.
For the remainder of the day, she lay in agony. Her body ached from the bruises she received on her fall. But her heart—ah, that ached worse of all! She felt certain that her father would no longer love her. She had messed up in the past, but surely this time she had gone too far! He would probably never want to speak to her again. How could he still love her?
She sobbed uncontrollably on her pillow. She had always been close to her father. They had played and studied together. They had laughed and cried together. But not now. No, she felt certain that all those wonderful times were over.
Who knows how long she would have lain thus had not her nanny come in to check on her. Rebecca’s nanny had a way about her of finding out exactly what was wrong and offering solid, wise counsel. Tonight was no exception.
“Rebecca, dear,” she said firmly, but gently. “You’ve been very wrong. But you must not continue in your wrongness by sitting here. You must go to your father with the broken picture in your hand and tell him everything.”
“Oh, but I can’t! I’m not worthy of His love!” Rebecca sobbed.
Her nanny sighed patiently. “You were no more worthy of it yesterday than today, child. Your father loves you because you’re his daughter, not because of anything you do or don’t do. Hasn’t he told you everyday since you were a little girl, ‘I love you’? Do you doubt his word? Do you really think his love is dependent on you?”
Doubt his word—that was an angle Rebecca had never thought of before. Maybe she should go see her father…yes, she must go see him, for if she didn’t, she’d never be able to rest.
So, still shaking and trembling with fear, Rebecca limped down the hall to the living room. She paused at the doorway. Her father was sitting in his favorite chair, just like he did every night. He looked up when she entered, and a smile radiating with love illuminated his face.
“Ah, you’ve come at last! I’ve been waiting. Come, sit here on my lap.” As he spoke, he opened his arms widely.
Rebecca couldn’t stand it. “Oh, you don’t understand, Father! You can’t love me anymore. I’ve been terribly wicked and-” Rebecca held up the picture frame for her father to see.
“I know, Rebecca—more than you think. I watched you go outside. I watched you fall and hit the picture frame. I saw it all.”
“You did?” Rebecca was flabbergasted. “But-but weren’t you at work?”
Her father shook his head. “I took the day off to spend some special time with you. That’s why I told you not to go outside to play. Ever since I saw you fall, I’ve been longing for you to come to me so I could bandage your wounds and help you. Won’t you come now?”
Rebecca could hardly believe her ears. Her father had planned to spend the afternoon with her…and she had missed it. Oh, what foolishness! Yet her father knew it all…and loved her anyway. Could it be? “But, Father, how can you love me now?”
Rebecca’s father smiled a smile she would never forget. “Rebecca, dear, I loved you before you were born. You’re my daughter. And I will always love you. Although sometimes your actions will result in consequences you could have avoided, nothing can ever separate you from my love. Now won’t you come and let me help you with those bruises?”
“Who shall separate us from the love of Christ? shall tribulation, or distress, or persecution, or famine, or nakedness, or peril, or sword? As it is written, For thy sake we are killed all the day long; we are accounted as sheep for the slaughter. Nay, in all these things we are more than conquerors through him that loved us.” Romans 8:35-37

Tuesday, June 19, 2012

God's protection

 
"God is our refuge and strength, an ever-present help in trouble. Therefore we will not fear, though the earth give way and the mountains fall into the heart of the sea, though its waters roar and foam and the mountains quake with their surging." - Psalm 46:1-3 (NIV).

"Have mercy on me, O God, have mercy! I look to you for protection. I will hide beneath the shadow of your wings until this violent storm is past". - Psalm 57:1-2 (NLT).

Picture tells its story

Couldn't come out from sin? dont worry. God's grace still available for us. Today is the day to turn back to God the Lord Jesus Christ. Call Him Up and Let Him Heal Your Broken Heart..

Picture story


Monday, June 18, 2012

ஜாக்கிரதையுள்ள வேலைக்காரன்

ஒரு முறை ஒரு பெரிய கம்பெனியின் வாசலில், அங்கு வேலை செய்ய வருபவர்கள் காணும்படியாக ஒரு அறிவிப்பு தொங்க விடப்பட்டிருந்தது. அதில், 'உங்கள் வளர்ச்சியை தடை செய்து கொண்டிருந்த மனிதன் இன்று இறந்து விட்டான். அவனுக்கு கீழே இருக்கும் அறையில் இறுதி கடன்கள் செலுத்தப்படும். அதில் அனைவரும் வந்து சேர்ந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகிறீர்கள்' என்று அழைப்பு விடப்பட்டிருந்தது. அதை பார்த்த அனைவருக்கும், தங்களோடு வேலை பார்த்த ஒருவர் மரித்தது துயரமாக இருந்தாலும், யார் தங்களுடைய வளர்ச்சியை தடை செய்தது என்றும், அவனை காண வேண்டும் என்ற ஆச்சரியமும், வியப்பும் உடையவர்களாக காத்திருந்தனர். கடைசியாக அந்த அறை திறக்கப்பட்டபோது, ஒவ்வொருவராக அந்த சவப்பெட்டியை காண விரைந்தனர். சென்று பார்த்தபோது, திடுக்கிட்டனர். ஒரு நிமிடம் அவர்களால் ஒன்றுமே பேச முடியவில்லை. அவர்களின் இருதயத்திற்குள் ஒரு தொடுதலை உணர்ந்தார்கள்.

அந்த பெட்டியில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி வைக்கப்பட்டிருந்தது. அவர்கள் பார்த்தபோது, அவர்களுடைய உருவமே அந்த பெட்டியில் தெரிந்தது. அதன் அருகில் 'உங்கள் வளர்ச்சியை கட்டுப்படுத்த யாராலும் முடியாது, உங்களை தவிர' என்று எழுதப்பட்டிருந்தது

Friday, June 15, 2012

ஸ்மித் விகிள்ஸ்வொர்த் (Smith Wigglesworth)

1927-ம் வருடம் ஸ்மித் விகிள்ஸ்வொர்த் (Smith Wigglesworth) என்னும் தேவ ஊழியர், ஒரு திறந்த சந்தைப் பகுதியில் பிரசங்கித்துக் கொண்டிருந்தார். அங்கு ஒரு மனிதன் அங்கு இருந்த விளக்கு கம்பத்தின்மேல் சாய்ந்துக் கொண்டு அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தான். ஸ்மித் தன் பிரசங்கத்தை முடித்து விட்டு, அந்த மனிதனிடம் நேரடியாகச் சென்று, ‘என்ன, உங்களுக்கு உடம்பு சரியில்லையா’ என்றுக் கேட்டார். அதற்கு அந்த மனிதன் தன்கைகளைக் காட்டினான். அதில் ஒரு கத்தி பளபளத்தது. 

அவன் சொனனான், தனக்கு துரோகம் செய்த மனைவியை கொல்வதற்காக தான் போய்க் கொண்டிருந்ததாகவும், அப்போது ஸ்மித் அவர்கள் பேசிக் கொண்டிருந்தததைக் கேட்டதாகவும், அவர் இயேசுவின் நாமத்திலுள்ள வல்லமையைக்குறித்து கேட்டபோது அவருக்கு அந்த இடத்திலிருந்து அசைய முடியாதபடி போனதாகவும் கூறினார். அங்குதானே, இருவரும் முழங்கால்படியிட்டு, போவோர் வருவோர் நடுவே அந்த மனிதன் இயேசுவை ஏற்றுக் கொண்டார். 

பின் ஸ்மித் அவரை தன் வீட்டிற்கு அழைத்து சென்று, அவருக்கு வேறு ஆடைகளை கொடுத்து, கொஞ்சம் பணத்தையும் கொடுத்து, அந்த மனிதன் ஒரு வீடு வாங்க உதவி செய்து, அந்த மனிதனை விட்டு வேறு ஒருவனுடன் வாழ்ந்துக் கொண்டிருந்த அவருடைய மனைவியை மன்னித்து, தன்னோடு இருக்க அழைத்தபோது அவளும் வந்து, இருவரும் ஒன்றாக இணைந்ததாகவும், அந்த மனிதர் கர்த்தருடைய ஊழியத்தை வல்லமையாக நிறைவேற்றவும் தேவன் கிருபைச் செய்தார் என்றும் ஸ்மித் தன்னுடைய புத்தகத்தில் எழுதியிருந்தார். ஆம் இயேசுவின் நாமத்தில் வல்லமை உண்டு.

வேதனை இல்லாத ஐசுவரியம்

ஜான் டி. ராக்பெல்லர் சீனியர் (John D. Rockefeller Sr.) என்பவர் எப்படியாகிலும் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று முடிவெடுத்தவராய் அதற்காக கடுமையாக உழைக்க ஆரம்பித்தார். அவரது 33ஆவது வயதில் முதலாவது மில்லியன் டாலர்களை சம்பாதித்தார். பிறகு 43ஆவது வயதில் உலகத்திலேயே பெரிய கம்பெனிக்கு உரிமையாளர் ஆனார். 53ஆவது வயதில் அவரே உலகின் பெரிய பணக்காரரானார். அவரது விடாமுயற்சி அவரை அந்த நிலைக்குக் கொண்டு வந்தது.
.
ஆனால் அந்த நேரத்தில் அவருக்கு அலோபீசியா (Alopecia) என்னும் வியாதி வந்தது. அதன்படி அவருக்கு எல்லா முடியும் கொட்டிப்போகும், ஏன், கண்களின மேல் இருக்கும் முடிக் கூட கொட்டி போகும். ஆனால் அது பரவாயில்லையே, அவரால் ஒன்றும் சாப்பிட முடியாது. அப்படி ஒரு வியாதி அவரைத் தாக்கியது. எத்தனையோ மில்லியனுக்கு சொந்தக்காரர், ஆனால் அவரால் பாலையும், சில பிஸ்கெட்டுகளையும் தான் சாப்பிட முடியுமேத் தவிர வேறு ஒன்றும் சாப்பிட முடியாது! என்ன ஒரு பரிதாபமான நிலைமை! அது மட்டுமல்ல, அவர் பணக்காரராய் இருந்தபடியால் அவருக்கு அநேக எதிரிகள் இருந்தார்கள். அவரைச் சுற்றிலும், எப்போதும் பாதுகாப்புபடையினர் அவரைக் காவல் காத்தனர். ஏனென்றால் யார், எப்போது, அவரை கொலை செய்வார்கள் என்று அறியாததால். இப்படிபட்ட பணம் தேவைதானா?
.
.
அவருக்கு வைத்தியம் செய்த வைத்தியர்கள் அவர் இன்னும் ஒரு வருடம் தான் உயிரோடு இருப்பார் என்று சொல்லி விட்டார்கள். அதைக் கேள்விப்பட்ட செய்திதாள்கள், அவர் உயிர் அப்போதே போய்விட்டதுப் போல செய்திகளை
வெளியிட்டனர். அவருக்கு தூக்கம் என்பது பறந்துப் போயிற்று. அவர் ஒரே யோசனை செய்ய ஆரம்பித்தார். இன்று மரித்தால் ஒரு பைசாவையும் தன்னோடு எடுத்துக் கொண்டு போக முடியாது என்கிற ஞானம் அவருக்கு உதித்தது. பணமே எல்லாவற்றிற்கும் முடிவல்ல என்பதை உணர்ந்தார். பணத்தால் தன் உடல்நிலையை சரியாக்க முடியாது, பணத்தால் நிம்மதி கொடுக்க முடியாது என்றெல்லாம் உணர ஆரம்பித்தார்..
.
ஒருநாள் காலை புதுத்தெம்போடு எழுந்தார். தன்னுடைய அளவற்ற செல்வத்தை எடுத்து, ஆலயக் கட்டுமானத்திற்கும், மிஷனரி ஊழியங்களுக்கும் கொடுக்க ஆரம்பித்தார். ஏழைகளுக்கும், தேவையுள்ளவர்களுக்கும் உதவி கரம் நீட்டி, வாரி வழங்க ஆரம்பித்தார். Rockefeller foundation என்று ஒரு ஸ்தாபனத்தை ஆரம்பித்து, அதன் மூலம் மருத்துவ ஆய்வுகளுக்கு தேவையான பணத்தைக் கொடுக்க ஆரம்பித்தார். அவர் அப்படிக் கொடுத்ததன் மூலம், பென்சிலின் மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. மற்றும் அநேக வியாதிகளுக்கு அந்த  ஸ்தாபனத்தின் உதவியினால் மாற்று மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. ராக்பெல்லர் உறங்க ஆரம்பித்தார். அவருடைய தூக்கம் இன்பமாக மாறியது. டாக்டர்கள் அவர் ஒரு வருடம் தான் அதாவது 54 வயது வரைதான் உயிரோடு இருப்பார் என்றுக் கூறினர், ஆனால் அதற்கு பிறகு, 98 வயது வரை சுகமாய் வாழ்ந்து, கிறிஸ்துவுக்குள் மரித்தார். அல்லேலூயா!

கிருபையால் நிலைநிற்கிறோம்

ஒரு மனிதன் மரித்து பரலோகத்திற்கு சென்றார். அங்கு பரிசுத்த பேதுருவை வாசலில் கண்டார். அப்போது பேதுரு அவரை பார்த்து, “பரலோகத்திற்கு செல்ல வேண்டுமென்றால் 100 மதிப்பெண்கள் பெற வேண்டும். நீ செய்த எல்லா நன்மையான காரியங்களை குறித்தும் சொல். நான் ஒவ்வொன்றிற்கும் ஒரு குறிப்பிட்ட மதிப்பெண்களை கொடுப்பேன். அப்படி மதிப்பெண்கள் போடப்பட்டு, 100 மதிப்பெண்கள் ஆனவுடன் நீ பரலோகம் செல்லலாம்” என்று கூறினார்.
,
அந்த மனிதன், தான் செய்த நன்மைகளை செய்ய தொடங்கினார். “நான் ஒரே மனைவியை உடையவன். அவளோடு 50 வருடம் குடித்தனம் நடத்தினேன். அவளுக்கு மனதளவில் கூட நான் துரோகம் செய்ததில்லை” என்று கூறினார். அதற்கு பேதுரு, “ஓ, மிகவும் நல்லது. அதற்கு 3 மதிப்பெண்கள”; என்று கூறினார். “என்னது 3 மதிப்பெண்தானா?” என்று கேட்டுவிட்டு, “நான், ஒவ்வொரு வாரமும் தவறாமல், ஆலயத்திற்கு சென்றேன். என்னுடைய தசமபாகத்தை தவறாமல் சபைக்கு கொடுத்து வந்தேன்” என்று கூறினார். அப்போது பேதுரு, “வாவ், நல்ல காரியம், நிச்சயமாக அதற்கு ஒரு மதிப்பெண் தரலாம்” என்று கூறினார். “என்னது! ஒரு மதிப்பெண்தானா? சரி இதற்காகவாவது நீங்கள் அதிக மதிப்பெண்கள் தருவீர்கள் என்று எதிர்ப்பார்க்கிறேன், நான் வயதானவர்களுக்கென்று, முதியோர் இல்லம் வைத்து, அவர்களை இலவசமாக பராமரித்தேன்” என்று கூறினார். அதற்கு பேதுரு, “நல்ல காரியம் செய்தீர்கள், சரி அதற்கு இரண்டு மதிப்பெண்கள் தரலாம்” என்று கூறியபோது, அந்த மனிதர், மிகவும் சத்தமிட்டு, “ஐயோ, நான் செய்த நன்மையான காரியங்களுக்கு இவ்வளவு மதிப்பெண்கள் தான் கிடைக்கும் என்றால், நான் பரலோகத்திற்கு செல்லவே முடியாது, யார் தான் செல்ல முடியும்? கர்த்தருடைய கிருபையினால் மாத்திரமே நான் பரலோகம் செல்ல முடியும்!” என்று கூறினார். அதை கேட்ட பேதுரு, “நீ இப்போது உள்ளே செல்லலாம்” என்று கூறினார்.

போராயுதம் தரிப்பேன்

டெரி தன் கணவருக்கு பிறந்த நாளில் ஒரு அருமையான பரிசு கொடுக்க விரும்பினாள். அதற்காக அவள் அநேக கடைகளில் ஏறி இறங்கி, கடைசியில் ஒரு இடத்தில் அவள் தன் கணவருக்கு வாங்கி கொடுக்க வேண்டும் என்று விரும்பிய பொருள் கிடைத்தது. ஆனால் அதன் விலை அவள் எதிர்ப்பார்த்ததை விட அதிகமாக இருந்தபடியால், என்ன செய்வது என்று நினைத்தவளாக இருந்தபோது, கடைக்காரர், 'பரவாயில்லை, நீ இப்போது இதை எடுத்து கொண்டு போ, ஐந்து மாதங்களுக்குள்ளாய் இதன் விலையை கொடுத்து முடித்து விடு' என்று கூறினார். ஆகவே டெரியும் கடைக்காரருக்கு நன்றி சொல்லி விட்டு, அந்த பொருளை எடுத்து கொண்டு வீட்டிற்கு வந்தாள்.
.
கணவரின் பிறந்த நாளுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருந்தது. அவளுக்கு அதுவரை பொறுத்திருக்க முடியவில்லை. ஒரு நாள் கணவர் வேலைக்கு போகாமல் இருந்த நாளன்று அதை எடுத்து கணவருக்கு பரிசாக கொடுத்தாள். அதை வாங்கி கொண்ட கணவர் மிகவும் சந்தோஷப்பட்டார். அவர் ஒரு போலீசாக இருந்தபடியால், அடுத்த நாள் அவருடைய போலீஸ் போனில் அடுத்த தெருவில் இருந்த பேங்கில் கொள்ளை நடப்பதாகவும், உடனடியாக போக வேண்டும் என்ற செய்தி வரவும், அவர் உடனே அந்த இடத்திற்கு போனபோது, அந்த கொள்ளைகாரன் காரில் ஏறி வேகமாக செல்வதை கண்டார். அவனை துரத்தி கொண்டு போகும்போது, ஒரு இடத்தில் அவன் காரை நிறுத்திவிட்டு, அமைதியாக இருந்தான். இவர் அவனிடத்தில் செல்வதற்கு மெதுவாக போகும்போது அவன் தன் கையில் இருந்த துப்பாக்கியால் அவரை சுட்டான். அவரை அருகில் இருந்து சுட்டதினால் அவர் அந்த இடத்திலேயே கீழே விழுந்தார்..
அடுத்த நாள் காலையில் டெரிக்கு அதிர்ச்சியான செய்தி காத்திருந்தது. அதை கொண்டு வந்த போலீஸ் 'ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி' என்று கூறினார். கெட்ட செய்தி டெரியின் கணவர் துப்பாக்கியால் சுடப்பட்டார் என்பது, அதை கேட்டவுடன், டெரி நல்ல வேளை நாம் முன்பாகவே அவருக்கு பரிசை கொடுத்துவிட்டோம் என்று நினைத்து கொண்டிருந்த போது, போலீஸ் நல்ல செய்தி, அவர் ஆபத்தான நிலையில் இல்லாதபடி தப்பி விட்டார் என்பதாகும்.
.
டெரி தன் கணவருக்கு கொடுத்திருந்த பரிசு குண்டு துளைக்காத உடையாகும். அவருக்கு அவள் ஏற்கனவே கொடுத்து விட்டிருந்தபடியால் பக்கத்திலிருந்து துப்பாக்கியால் சுட்டபோதும் அவர் அந்த உடையை அணிந்திருந்தபடியால் அவர் உயிர் தப்பித்தார்.

சோர்வடையா ஜெபம்

ஒரு பெண் ஒரு குருவானவரிடம் வந்து, 'ஐயா, நான் ஒவ்வொரு நாளும் ஒரு காரியத்திற்காக ஜெபித்து கொண்டிருக்கிறேன். 'கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்ளூ தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்' என்று வேதம் கூறுகிறதே, நானும் எத்தனையோ முறை ஜெபத்தில் தேவனிடத்தில் தட்டி தட்டி பார்த்து விட்டேன், ஆனால் எனக்கோ கதவு திறக்கப்படவே இல்லையே, ஏன் ஐயா' என்று கேட்டாள்.
.
அதற்கு குருவானவர், 'அம்மா, சில நேரங்களில் நீங்கள் வீட்டில் இருக்கும்போது, உங்கள் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டு, நீங்கள் போய் கதவை திறந்து பார்த்தால், யாரும் இல்லாமல் இருப்பதை பார்த்திருப்பீர்கள், பின் உங்களுக்கு தெரிய வந்திருக்கும், சில குறும்பு பிள்ளைகள் கதவை தட்டி விட்டு, ஓடி போயிருப்பதை குறித்து. அதுப்போல நாமும், கர்த்தரை நோக்கி கதவை தட்டுகிறோம், ஆனால் அவர் வந்து கதவை திறக்கும் வரை காத்திருப்பதில்லை, அதற்கு முன் அந்த குறும்பு பிள்ளைகளை போல ஓடி வந்து விடுகிறோம். நம் ஜெபத்தை தேவன் கேட்க மாட்டார், அவர் கொடுத்த வாக்குதத்தங்கள் எனக்கு அல்ல என்று நாமே தீர்மானித்து போய் விடுகிறோம். அதனால் தான் நம் ஜெபங்களுக்கு பதில் இல்லை என்று கூறினார்.
.
அதை கேட்ட அந்த பெண், 'ஆம் ஐயா, கதவை தட்டி விட்டு ஓடுகிறவர்களின் ஜெபத்தை கேட்பதாக தேவன் வாக்குதத்தம் பண்ணவில்லை, 'தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?' (லூக்கா 18:7) என்று வேதத்தில் கூறவில்லையா? நானும் அப்படி அவர் வந்து கதவை திறக்கும்வரை காத்திருந்து ஜெபிக்கபோகிறேன்' என்று கூறினாள்

பொறுமையாய்

ஒரு சிறுவன் தன் தோட்டத்தில் பட்டு பூச்சி புழுவை வளர்த்து வந்தான். அது தன்னை சுற்றிலும் பட்டு நூலால் கடினமான கூட்டை கட்டி உள்ளே இருந்தது. சில நாட்களுக்கு பின் அது பட்டு பூச்சியாக மாறி வெளியே வர முயற்சி எடுத்தது. கூட்டிலிருந்து வெளிவருவது அவ்வளவு எளிதாக இல்லை. பல மணி நேரங்கள் பொறுமையோடு போராடி தான் வெளியே வர வேண்டும். ஆனால் அந்த சிறுவனுக்கோ பொறுமையில்லை. பட்டாம் பூச்சி படும் கஷ்டத்தையும் அவனால் தாங்க முடியவில்லை. ஆகவே ஒரு கூரிய பிளேடினால் மெதுவாக கூட்டை வெட்டி, பட்டு பூச்சியை சுலபமாக வெளியே எடுத்து விட்டான். ஆனால் அந்த பட்டு பூச்சியினால பற்க்க முடியவில்லை. அதனுடைய சரீரம் பெரிதாக இருந்தபடியால் கீழே விழுந்து விட்டது. முடிவில் அதை எறும்புகள் இழுத்து சென்றன.

அச்சிறுவனின் தகப்பன் சொன்னார், 'மகனே அந்த பூச்சி கூட்டிலிருந்து வெளிவர பொறுமையோடு எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அதன் தசை நார்களையும், நரம்புகளையும் பெலப்படுத்தும். பல மணி நேரங்கள் அது வெளிவர பாடுபடுவதால் அதன் உடல் வற்றி எடை குறைந்து பறந்து செல்ல வசதியாக இருக்கும். அது சகல முயற்சியும் செய்து தானாகவே வெளியே வந்திருந்தால் பரிபூரண வளர்ச்சியடைந்திருக்குமே! நீயோ அதன் வாழ்க்கையையே கெடுத்து விட்டாயே' என்றார்.

சீர்திருத்தும் வேத வசனம்

ஜான் தன்னிடமிருந்த அந்த மெஷினோடு போராடி கொண்டிருந்தான். அவனுக்கு அதை எப்படி வேலை செய்ய வைக்க முடியும் என்று தெரியவில்லை. யாராவது வந்து உதவினால் நன்றாக இருக்குமே என்று நினைத்தான். எப்படித்தான் இதை வேலை செய்ய வைப்பதோ என்று அவன் போராடி கொண்டு இருந்தபோது, அவனது அண்ணன், 'ஏன் இப்படி கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறாய்? நம் அப்பா இந்த மெஷினை உருவாக்கினபோது, இதை எப்படி ஆபரேட் செய்ய வேண்டும் என்று ஒரு புத்தகத்தில் எழுதி இருந்தார் அல்லவா? அதை படித்தாயா?' என்று கேட்டான்.
.
ஜான் அதற்கு ஏன் இவன் இந்த மாதிரியான கஷ்டமான கேள்விகளை கேட்கிறான்? அந்த புத்தகத்தில் என்னுடைய பிரச்சனையை குறித்து எதுவும் எழுதப்படவில்லையே என்று நினைத்தவனாக 'ஏதோ கொஞ்சம் படித்தேன்' என்று கூறினான். அதற்கு அவனுடைய அண்ணன், 'இதை உருவாக்கினவருக்கு எப்படி என்ன செய்ய வேண்டும் என்று தெரியும். ஆகவே உட்கார்;நது சரியாக அதைப் படி, அப்போது உனக்கு புரியும்' என்று கூறினான்.

அதன்படி ஜான் அதை உட்கார்ந்து படிக்க ஆரம்பித்தபோது, அவனுக்கு த்ன பிரச்சனையின் காரியங்களை குறித்தும், தன் தகப்பன் அதை உருவாக்கினதன் நோக்கமும் புரிய ஆரம்பித்தது. அந்த மெஷினை நல்லபடியாக ஆரம்பித்து வேலை செய்ய வைத்தான்.

பிரியமானவர்களே, தேவனும் நம்மிடம் நம் வாழ்க்கையை சந்தோஷமாய் நடத்துவதற்கான வழிமுறைகளை வேதத்தில் எழுதி வைத்துள்ளார். ஆனால் நாமோ அவற்றை படிக்காமல், எப்படி நாம் நம் வாழ்வை நடத்த வேண்டும் என்பதை அறியாதவர்களாக, நாமே நம் வாழ்வை கையில் எடுத்து கொண்டு, எப்படி நடத்துவது என்று தெரியாமல் புரியாமல் தடுமாறி கொண்டிருக்கிறோம்

Thursday, June 14, 2012

ஆறுதலின் தேவன்


சமீப காலத்தில் ஜெம்ஸ் ஸ்தாபனத்தில் இருந்து ஜார்கண்ட் மாநிலத்தில் ஊழியம் செய்து கொண்டிருந்த மிக இளமையான 28 வயதே நிரம்பிய ஷரவண் குமார் என்னும் ஊழியர் மதவாதிகளால் கொலை செய்யப்பட்டு, கிணற்றில் வீசி யெறிப்பட்டிருக்கிறார். அவர் இந்து குடும்பத்திலிருந்து இரட்சிக்கப்பட்டு, கர்த்தருக்கென்று வைராக்கியமாய் ஊழியம் செய்து வந்த சகோதரனாவார். ஒரு கைக்குழந்தையோடு அநாதையாக்கப்பட்ட அவரது இளவயதின் மனைவியின் இருதயத்தில் என்னென்ன நினைவுகள் ஓடியிருக்கும்? இப்படி கொல்லப்படுவதற்காகத்தானா தாங்கள் கர்த்தருக்கு ஊழியம் செய்ய ஆரம்பித்தோம் என்று. ஆனால், கர்த்தருக்கு ஒரு திட்டம் உண்டல்லவா? அவருடைய சித்தமில்லாமல் நம் தலையிலிருந்து ஒரு முடியும் கீழே விழாதல்லவா?

Wednesday, June 13, 2012

வாலிபம் இயேசுவுக்கே!

ஒரு முறை காசி நகரில் கல்வியில் சிற்நத ஒரு சந்நியாசியுடன் சாது சுந்தர் சிங் உரையாடி கொண்டிருந்தார். அப்போது சந்நியாசி கூறினார், 'சாதுக்களின் ஒழுக்க முறைகளை குறித்துள்ள எங்களுடைய சட்டதிட்டங்க்ள போற்றத்தக்கவை. ஏனென்றால் முதலாவது, மாணாக்க நிலை, பின்னால் குடும்பஸ்தன், வாழ்க்கையின் பின் பாகத்தில குடும்ப கவலையிலிருந்து நீங்கி காட்டுக்கு செல்லுதல், பின் வயதான காலத்தில் சந்நியாசித்தல், அதாவது வெறுத்து விடுதல் என்பவை. ஆனால் நீங்கள் எடுத்து கொண்ட முறையோ விபரீதமானது. உங்கள் வாலிப பிராயத்திலே சந்நியாசியாகி விட்டீர்களே' என்றார்.
அதற்கு சுந்தர்சிங் 'நான் சாதுவானதன் நோக்கம் உங்கள் நோக்கத்திற்கு முற்றிலும் வித்தியாசமானது. கண்ணியம் கிடைக்குமென்று நான் சாதுவாகவில்லை. உலகத்தில் இடையூறுகளின்றி சாதுவாக எளிய வாழ்க்கை நடத்தி கிருபையாய் என்னை இரட்சித்தவருக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்பதே என் நோக்கம். எனக்காக தம் உயிரை தந்தவருக்கு பலம் நிறைந்த என் வாலிப காலத்தில் சிறந்த ஊழியம் செய்ய வேண்டியது நியாயமல்லவா?' என்றார். இதை ஏற்க மறுத்த சந்நியாசியிடம், 'உமது சீடரில் ஒருவன், உமக்கு நன்றாய் பழுத்த மாம்பழத்தை கொடுப்பதற்கு பதிலாக சுவைமிக்க சதைப்பகுதியை உரித்து எடுத்து விட்டு, தோலும் கொட்டையுமானதை உங்களுக்கு கொடுத்தால் என்ன சொல்வீர்கள்?' என்றார். உடனே அவர், அப்படிபட்ட செய்கை மன்னிக்கப்படதக்கதல்ல, அது அவமானத்தின் உச்சநிலை' என்றார். அதற்கு சாது சுந்தர்சிங் ' நமது வாலிப பிரயாத்தை சிற்றின்பங்களில் கழித்து, பெலவீனமான கிழட்டு பிராயத்தில் எலும்புகளையும், தோலையும் கடவுளின் ஊழியத்திற்காக கொடுப்பது முட்டாள்தனமும், கடவுளை கேவலப்படுத்தும் செயலுமல்லவா?' என்றார்.

நம்முடைய இந்திய கலாச்சாரத்தில் மதம் அல்லது இறைவனை தேடுதல் என்பதற்கு எந்த இடம் கொடுக்கப்படுகிறது என்று கவனித்தீர்களா? ஒருவன் வாலிப வயதில் இஷ்டம் போல் வாழ்ந்து பின்பு தோய்ந்து போன வயதான நாட்களை இறைவனுக்கென்று ஒதுக்கி வைக்கிறான். இந்த எண்ண ஓட்டத்தின் தாகத்தை நம்முடைய கிறிஸ்தவ ஐக்கியத்திலும் காணலாம். வாலிபனொருவன் தன்னை ஊழியம் செய்ய அர்ப்பணிக்கும்போது, அநேகர் அதை வினோதமான காரியமாகவே பார்கின்றனர். ஆனால் கிறிஸ்துவின் இரட்சிப்பை அனுபவித்த அந்த வாலிபனுக்கு தெரியும், வாலிபத்தின் முழு நிறைவையும் படைத்த தேவனால் மட்டுமே தரமுடியும் என்று. அதிலும் அவருக்கு ஊழியம் செய்வது போல உன்னத திருப்தி தரக்கூடியது இவ்வுலகில் ஒன்றுமில்லை.