18-ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் வாழ்ந்த SABBATH SCHOOL- ஐ சேர்ந்த சிறு
குழந்தைகள், வெளி தேசங்களில் திருப்பணியாற்றிய மிஷனரிகளுக்கு தங்களால்
இயன்ற அளவு உதவி செய்தனர். இந்த SABBATH SCHOOL-ஆனது JAMES WHITE என்பவரால்
1852-ம் வருடம் SEVENTH DAY ADVENTIST சபையினரால் துவங்கப்பட்டது.
சனிகிழமை ஆராதனைக்கு முன்னதாக நடைபெறும் SABBATH
SCHOOL-ல் அநேக பெரியவர்கள், வாலிபர்கள், சிறுவர்கள் பங்கு பெறுவார்கள்.
அந்த வகுப்புகளில் மிஷனரிகளின் சாட்சிகளையும் அவர்களது ஊழிய தேவைகளையும்
அறிவிப்பது அந்நாட்களில் வழக்கம். இப்படியாக ஒரு நாள் Mr.HUTCHINGS
(1835-ம் வருடம் சிலோன் தேசத்திற்கு மிஷனரியாக சென்று பின்னாட்களில்
இந்தியாவில் மிஷனரி ஊழியம் செய்தவர்) என்பவரைக் குறித்து அறிவிக்கையில்,
அதைக்கேட்ட சிறுவர்கள் தங்களுக்கு கிடைக்கும் சிறு தொகையை சேமித்து அந்த
பணத்தை மிஷனரிகளுக்கு அனுப்ப தொடங்கினார்கள். அதிலே குறிப்பிட்ட ஏழு
சிறுவர்கள் , தாங்கள் எப்படி மிஷனரிகளுக்கு உதவுகின்றோம் என்பதை,
இந்தியாவில் மிஷனரியாக பணியாற்றிய Mr.HUTCHINGS கடிதம் மூலமாக
தெரிவித்தார்கள்.
முதலாம் சிறுவனின் கடிதம்
Mr.HUTCHINGS
அவர்களே, நீங்கள் சிலோனுக்கும், இந்தியாவுக்கும் சென்று கிறிஸ்துவை அறியா
பாமர மக்களுக்கு நற்செய்தியை அறிவிக்கிறீர்கள் என்பதை கேட்டு
மகிழ்கின்றேன். ஒரு வாரத்தில் ஆறு செண்டுகளை என்னால் அனுப்ப முடியும்.
எப்படியெனில் நான் டீ, பால், காபி போன்றவற்றை குடிப்பதை தவிர்த்து அதினால்
சேமிக்கப்படும் பணத்தை உங்கள் மிஷனரி ஊழியத்திற்கு அனுப்புகிறேன்.
இரண்டாவது சிறுவனின் கடிதம்
Mr.HUTCHINGS அவர்களே, மிஷனரி பணி என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்.
சிறு பைகளை தைத்து அதை விற்பதால் எனக்கு சிறிதளவு பணம் கிடைக்கின்றது.
இன்னும் அநேக பைகளை தைத்து அதிலிருந்து வரும் பணத்தை உங்கள் மிஷனரி
ஊழியத்திற்கு அனுப்பபி வருகிறேன்.
மூன்றாவது சிறுவனின் கடிதம்
Mr.HUTCHINGS அவர்களே, நான் எனது நண்பர்களும் பல தோட்டங்களை பராமரிப்பு
செய்தும், நாங்களே வீட்டில் சிறய தோட்டம் அமைத்து, அங்கு விளையும் காய்
கறிகளை விற்றும் பணத்தை சேமிகின்றோம். அந்த பணத்தை முழுவதும் உங்கள் மிஷனரி
பணிக்காக கொடுக்கின்றோம். எங்களால் முடிந்தவரை உழைத்து அதிலிருந்து வரும்
பணத்தில் மிஷனரிகளை தாங்குகிறோம்.
நான்காவது சிறுவனின் கடிதம்
Mr.HUTCHINGS அவர்களே, அநேக குழந்தைகள் இயேசுவைப் பற்றி தெரியாமலும்,
பரிசுத்த வேதாகமம் இல்லாமலும் இருகின்றர்களே. அவர்களுக்கு வேதாகமம்
சென்றடைய நாங்கள் எங்கள் பணத்தை சேமித்து அனுப்புகிறோம்.
ஐந்தாவது சிறுவனின் கடிதம்
Mr.HUTCHINGS அவர்களே, மிஷனரி ஊழியத்திற்கு பணத்தை அனுப்புவது எனது
கடமையும் இன்றியமையாததுமாகும். என்னால் சேமிக்ககூடிய ஒரு சென்ட் பணத்தையும்
கூட சேமித்து அதைநான் மிஷனரி ஊழியத்திற்காக அனுப்பி வருகிறேன்.
ஆறாவது சிறுவனின் கடிதம்
Mr.HUTCHINGS அவர்களே, நான் சாக்லேட் வாங்கும் பழக்கத்தை நிறுத்தி அதினால்
சேமிக்கப்படும் பணத்தை உங்கள் மிஷனரி ஊழியத்திற்கு அனுப்பி வருகிறேன.
இன்னும் என்னால் இயன்ற அளவு சேமித்து அனுப்புகிறேன்.
ஏழாவது சிறுவனின் கடிதம்
Mr.HUTCHINGS அவர்களே, நான் அங்கிருந்து அந்த மக்களுக்கு இயேசுவைக்
குறித்து அறிவித்து அவர்களை பரலோகத்திற்கு நேராய் நடத்தவேண்டும்.
இல்லையென்றால் அவ்வாறு நடத்தும் உங்களைப்போன்ற மிஷனரிகளுக்கு உதவி செய்து
அவர்கள் பரலோகம் செல்வதற்கு நானும் ஒரு வகையில் உதவ வேண்டும். எனவே என்னால்
முடிந்த அளவு பணத்தை சேர்த்து அனுப்பி வருகிறேன்.
மேலே
எழுதப்பட்டிருக்கும் கடிதகள் 18 வயதிற்குட்பட்ட சிறுவர் மற்றும்
வாலிபர்களால் எழுதப்பட்டுள்ளது. இந்த சிறுவர்களுக்கு ஒரே வாஞ்சை
எப்படியாவது, மிஷனரிகளை தாங்கி கிறிஸ்த்துவை அறியாத பாமர மக்களுக்கு
நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும் என்பது தான். இந்த சிறுவர்களை பலவிதமான
வேலைகளை செய்தும், தங்களுடைய பழக்க வழக்கங்களை வெறுத்தும் பணத்தை சேர்த்து
மிஷனரிகளை தாங்கினார்கள் என்பதை இந்த கடிதங்களிலிருந்து நம்மால் அறிந்து
கொள்ளமுடிகின்றது.
தேசத்திலே எளியவர்கள் இல்லாதிருப்பதில்லை;
ஆகையால் உன் தேசத்திலே சிறுமைப்பட்டவனும் எளியவனுமாகிய உன் சகோதரனுக்கு உன்
கையைத் தாராளமாய்த் திறக்கவேண்டும் என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்
(உபாகமம் 15:11). மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு
நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே
உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத்தேயு 25:40). அவனவன் விசனமாயுமல்ல,
கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க்
கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார் (2 கொரிந்தியர் 9:7).
நாமும் இயன்ற அளவு மிஷனரி ஊழியங்களை, நமது காணிக்கைகள் மூலம் தாங்க
வேண்டும் என்பதையே அந்த சிறுவர்களின் கடிதங்கள் நமக்கு தெரிவின்கின்றது.
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்
எங்கள் தளத்தில் உங்களுக்கு பிடித்த கதைகளை பதிவு செய்துள்ளோம். உங்கள் சொந்த வாழ்க்கைக்கும், குடும்ப வாழ்க்கைக்கும், குழந்தைகளோடு பகிர்ந்துகொள்வதற்கும், ஊழியத்தின் பாதையில் பகிர்ந்து கொள்வதற்கும் எனக்கு பிடித்த கதைகளை இனைத்துள்ளோம். படியுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள்
Showing posts with label காணிக்கை. Show all posts
Showing posts with label காணிக்கை. Show all posts
Wednesday, December 18, 2013
Thursday, June 20, 2013
உற்சாகமாய் கொடுப்போம்
ஹேட்டி வயாட் என்ற ஒன்பது வயது சிறுமி
ஞாயிறு பள்ளிக்கு மிக ஆவலோடு சென்றாள். அங்கு அவள்
உட்காருவதற்கு இடம் இல்லாதபடியால் சோர்வுடன்
வீட்டிற்கு சென்று விட்டாள். பின்பு இரண்டு ஆண்டுகளில்
அவளுடைய சரீரத்தில் ஏற்பட்ட கொடிய வியாதியின் காரணமாக
சுகவீனமாகி, படுத்த படுக்கையாகி, இறுதியில் மரித்து
போனாள். சில நாட்களுக்கு பின் அவள் தலையணையின் அடியில்
ஒரு கவருக்குள் 57 சென்ட் பணம் பத்திரப்படுத்தி
வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனுடன்
ஒரு கடிதமும் இருந்தது. அதில் 'இந்த பணத்தை ஞாயிறு பள்ளி
சிறுவர்கள் அதிக அளவில் உட்கார வசதியாக, நமது ஆலயத்தை
பெரியதாக கட்ட இந்த காணிக்கையை உபயோகப்படுத்துங்கள்'
என்று எழுதியிருந்தது.
.
சிறுமியின்
இச்செயலை சபை ஆராதனையில் போதகர் கூறியபோது சபையார்
மனதுருகினர். அதை தொடர்ந்து தேவனுக்கு கொடுக்க
வேண்டுமென்ற தீவிர வாஞ்சை ஒவ்வொருவர் இருதயத்திலும்
உண்டானது. அனைவரும் மனஉற்சாகமாய் காணிக்கை
கொடுத்தார்கள். அந்த காணிக்கையை கொண்டு, பிலதெல்பியா
என்னும் இடத்தில் 3,300 பேர் அமர்ந்து தேவனை ஆராதிக்கும்
சபையும், அதனுடன் 1400 மாணவர்கள வேதாகம கல்வி பயிலும் பெரிய
கல்லூரியும் கட்டப்பட்டது. அந்த சிறுபெண் கொடுத்த 57
சென்ட் பணம் எவ்வளவு மாற்றத்தை கொண்டு வந்துள்ளது
பார்த்தீர்களா?
.
அதுபோல
வேதத்தில் ஒரு சிறுபையன் கொடுத்த 5 அப்பமும், இரண்டு
மீனும் 5000 பேருக்கு அதிகமானோர் திருப்தியாய் சாப்பிட
போதுமானதாய் இருந்தது. நாம் காணிக்கை கொடுப்பது எப்படி
இருக்கிறது?
.
வருமானத்தில்
பத்தில் ஒன்றை தசமபாகமாக கொடுக்க வேண்டியது வேதத்தின்
சட்டம். அதை ஒழுங்காக கொடுக்கிறோமா? சிலர் இது பழைய
ஏற்பாட்டு கட்டளை என்று கூறினாலும், இயேசுகிறிஸ்து
'மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ,
நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தையத்திலும் சீரகத்திலும்
தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில்
கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும்
இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள்,
இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும்
விடாதிருக்கவேண்டுமே' (மத்தேயு 23:23) என்று கூறுகிறார். தசம பாகம்
கொடுக்க வேண்டுமென்பது கட்டாயமாயிருந்தாலும், புதிய
ஏற்பாட்டு விசுவாசிகள் அதை விட அதிகமாய் கொடுக்கும்படி
அழைக்கப்பட்டிருக்கிறோம்.
Sunday, April 7, 2013
காணிக்கை
ஒரு
ஊரில் ரூபன் என்ற செல்வந்தன் வாழ்ந்து வந்தான். கப்பலில் சென்று வணிகம்
செய்வது அவன் வழக்கம். ஒரு முறை கப்பலில் சென்று கொண்டிருந்த பொழுது.
பெரும் புயல் ஒன்று கப்பலை திடீரென தாக்கியது. கப்பலில் இருந்த அனைவரும் ஐயோ !!!!! எங்களை காப்பாற்ற யாரும் இல்லையே!. கடவுளே எங்களைக் காப்பாற்றும் என்று கதறினார்.
கடவுளை அதிகம் தேடாத ரூபனும் வேறு வழியின்றி கடவுளிடம் மன்றாடி பார்ப்போம் என்று நினைத்தான். கடவுளே என் உயிரைக் காப்பாற்றும். என்னைக் காப்பாற்றினால் என் சொகுசு பங்களாவை விற்று அதில் வரும் பணத்தை உமக்கு காணிக்கையாக்குகிறேன் என்று பொருத்தனை செய்தான். பெரிய போராட்டதிற்குப் பின்பு ரூபனும் கப்பலில் இருந்த சிலரும் பிழைத்தனர் .
பத்திரமாக வீட்டை அடைந்த ரூபன், தன் ஆசை பங்களாவை விற்று வீதிக்கு வர விரும்பவில்லை. ஆகவே, தந்திர யோசனை செய்தான். தினசரிகளில், ஒரு கோடிரூபாய் மதிப்புள்ள பங்களாவை ஒரு லட்சத்திற்கு விற்பதாக அதிரடி அறிவிப்பு விடுத்தான். அடிமாட்டு விலைக்கு பங்களா கிடைக்கப் போகிறது என்ற அசையில் முண்டி அடித்துக் கொண்டு அநேகர் ரூபனின் வீட்டை முற்றுகையிட்டனர். அவர்கள் முன் நிபந்தனை ஒன்றை ரூபன் வைத்தான் !.
தனது பங்களாவை 1 லட்சத்திற்கு வாங்குவோர் தனது நாய்குட்டியை 95 இலட்சத்திற்கு வாங்க வேண்டுமென அதிரடியாக அறிவித்தான். இதை சற்றும் எதிர்பாராத பலர் தங்கள் ஆசையில் மண் விழுந்து விட்டது என வருந்தி முகத்தை தொங்கவிட்டுக் கொண்டு வந்த வழியே ஓட்டம் பிடித்தனர்.
ஆனால், ஒரு செல்வந்தன் நாயை 95 லட்சத்திற்கும் பங்களாவை 1 லட்சத்திற்கும் வாங்கினான்.
மகிழ்ச்சி அடைந்த ரூபன் வேகமாக ஆலயம் சென்று, “கடவுளே! நான் சொன்னதை நிறைவேற்றிவிட்டேன். இதோ எனது பங்களா விற்ற பணம் 1 லட்சத்தை காணிக்கையாக கொடுத்துவிடுகிறேன். நாய் விற்ற பணம் 95 லட்சம் எனக்கு!” என்று சொல்லி நடையை கட்டினான்.
ரூபனின் காணிக்கையில் கடவுள் பிரியப்படிருப்பாரா? யாருடைய காணிக்கையில் கடவுள் பிரியப்படுவார் என வேதமே சொல்கிறது,
(2 கொரி 9:7) அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.
ஒரு நாள் ஆலயத்தில் தன்னிடமிருந்த கடைசி இரண்டு காசுகளை காணிக்கையாக கொடுத்து விட்டு, கடவுளே இனி எனது வாழ்விற்கு நீரே ஆதாரம் என்று தாழ்த்தி நின்ற விதவையை கிறிஸ்து சீஷர்களிடம் மெச்சினார். இதுவே சிறந்த காணிக்கையின் முன் உதாரணம்.
Subscribe to:
Posts (Atom)
-
ஒரு தாயற்ற பெண் பிள்ளையை அவளுடைய தகப்பன் பரிவோடு வளர்த்து வந்தார். அவளுடைய தேவைகளை எல்லாவற்றையும் சந்தித்து தாய்க்கு தாயாகவும், ...
-
பல ஆண்டுகளுக்கு முன் செல்வந்தர் ஒருவர் வேலைக்கு ஆள் வேண்டி விளம்பரம் செயதிருந்தார்; விளம்பரத்தை பார்த்து இளைஞர்கள் பலர் வந்தனர்....

