Showing posts with label faith. Show all posts
Showing posts with label faith. Show all posts

Sunday, October 5, 2014

ஓர் வீரனின் சாட்சி - உலக கோப்பை இறுதி போட்டி

அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய் அற்புத நாதா உம கரத்தில்

தேவனே, இப்போது உம்மிடம் எதையும் கேட்டவில்லை ஆனால் கொடுத்திருக்கிற எல்லாவற்றிற்காகவும் உமக்கு நன்றி சொல்கிறேன்.

இது ஓர் வீரனின் சாட்சியுள்ள பதிவு. ஜெர்மனி உலக கோப்பை இறுதி போட்டியில் அர்ஜென்டீனாவை வென்று உலக கோப்பையை கைப்பற்றியது. இரண்டு அணி வீரர்களும் திறமையாக விளையாடினர். ஆனால் கூடுதல் நேர விளையாட்டில் ஜெர்மனி வீரர் மரியோ அவர்கள் கோல் அடித்து வெற்றியை தன் நாட்டு வசமாக்கினார்.

இவர் தன்னுடைய முகபுத்தக பகுதியில் தேவனுக்கு நன்றி செலுத்தி பதிவிட்டு இருக்கிறார். இது ஓர் பெரிய சாட்சி ஆகும். அனைத்தையும் தேவனுடைய பாதத்தில் தாழ்மையாக அர்ப்பணித்து அமைதியாக காட்சி தரும் இவர் ஓர் தீவிர விசுவாசியாவார். அதிகமாக கடவுளை நேசிக்கும் இவர் தான் உலக வலாற்றில் இடம் பிடித்த போதும் "தேவனே உம்மிடம் நாம் எதையும் கேட்கவில்லை, ஆனால் நீர் கொடுத்திருக்கிற அனைத்திற்காகவும் நன்றி சொல்கிறேன்" என்று தாழ்மையாக கூறியிருப்பது ஆச்சரியமே..

நாமும் தாழ்மையாக வெற்றிகளை குவித்து தேவனின் பாதத்தில் அர்ப்பணித்து சாட்சியாய் வாழ்வோம்.தேவன் உங்களை பெலப்படுத்துவாராக. ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

https://www.facebook.com/photo.php?fbid=481524808617714&set=a.422864394483756.1073741827.422861481150714&type=1&theater

Tuesday, July 9, 2013

உங்கள் துக்கம் சந்தோசமாய் மாறும்

பலர் பரிசுத்த வேதாகமத்தை படிப்பதில்லை மாறாக
கிறிஸ்தவர்களின் வாழ்க்கையை வாசித்துக்கொண்டிருக்கிறார்கள்

மத்தேயு 10: 28. ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.

முதல் கிறிஸ்தவர் கொல்லப்பட்ட, ஒரிசா கந்ரஹம் பகுதியில் கிறிஸ்தவர்கள் தங்கள் இடிந்து போன வீடுகள் முன்பாக இயேசு கிறிஸ்துவை ஆடி பாடி கொண்டாடுகின்றனர். இப்பகுதி கலவரத்தில், கொல்லப்பட்டார்.

இக்கலவரத்தில் முதன் முதலாக எரிக்கப்பட்டவர் சகோதரர் ரசனந்த் பிரதான். இவருடைய சகோதரர் இரபின்றா பிரதான் - ஐ வீட்டோடு வைத்து எரித்து விட்டார்கள். தேவனின் அநாதி தீர்மானத்தினால் உயிர் பிழைத்த இவர் கிறிஸ்துவின் மேல் உள்ள விசுவாசத்தை அறிக்கையிட தன் கிராமத்து மக்களோடு தயாராகி வருகிறார்கள்.

"என் சகோதிரர் தன் உயிரை இழந்தது வீணாய் போய்விடவில்லை. புதிதாக இந்து மதத்தை சேர்ந்தவர்கள் எங்கள் சபை ஆராதனையில் கலந்து கொண்டுள்ளனர்" என்று கூறுகிறார்.

இந்த பகுதியில் பல கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டார்கள். வீடுகள் தீக்கிரையக்கபட்டன.. ஆனாலும் உயிர் பிழைத்த கிறிஸ்தவர்களின் விசுவாசத்தை யாரும் ஒன்றும் செய்ய முடியவில்லை. சொந்த குடும்பத்தில் பலரை இழந்தாலும் கிறிஸ்துவை இழந்து விடவில்லை. மறுதலிக்கவும் இல்லை. தொடர்ந்து தேவனை ஆராதித்து வருகின்றனர்.

இவர்களின் விசுவாசத்தை, தைரியத்தை, கொன்றவர்களை மன்னிக்கும் தேவ அன்பை கண்ட பல இந்து குடும்பங்கள் இன்று இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்று கொண்டுள்ளனர். சிலுவையின் அன்பு இன்றும் பல கலவரக்காரர்களை மாற்றி வருகிறது.

தேவனுக்கே நன்றி. அவரால் கூடாத காரியம் ஒன்றும் இல்லை. கிறிஸ்துவுக்கு பின் இதுவரை பல கோடிகணக்கான பேர் கொல்லப்பட்டும் கிறிஸ்தவம் இன்றும் மேலோங்கி நிற்ப்பதற்கு காரணம் சிலுவையின் அன்பை ஒவ்வொரு கிறிஸ்தவனும் உலகுக்கு வெளிபடுத்தி கொண்டிருக்கிறான். இந்த தேவ அன்பு தான் இன்று பல புறமதத்தை சேர்ந்தவர்களை கிறிஸ்துவின் மந்தையில் இணைத்து வருகிறது.

இந்த அன்பிற்கு நீங்களே சாட்சி. இந்த தெய்வத்திற்கு நம் வாழ்க்கை சாட்சி. பலர் பரிசுத்த வேதாகமத்தை படிப்பதில்லை. ஆனால் அவர்கள் கிறிஸ்தவர்களை, அவர்களின் வாழ்க்கையை படித்து வருகின்றனர். சாட்சியாக வாழ்வோம். தேவனின் நாமத்தை உயர்த்துவோம். ஆமென்.

தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

Saturday, February 23, 2013

கடவுளுடைய கரத்தில் அர்ப்பணிப்போம்

ஒரு தோட்டக்காரனிடம் இரண்டு அழகான புஷ்டியான பப்பாளி மரக்கன்றுகள் இருந்தன. அவைகளை தன் தோட்டத்தில் நடப்போவதாக கூறினான் அந்த தோட்டக்காரன்.

அந்த இரண்டு பப்பாளி கன்றுகளில் ஒன்று அதை விரும்பவில்லை. ஐயோ அந்த தோட்டத்திலா நான் நிற்க வேண்டும்? அழுக்கான அந்த சேற்று நிலம்! அங்கு நிற்கும் அழகற்ற மரங்கள்!... இவற்றை நினைக்கும் போது அந்த பப்பாளிக் கன்றுக்கு குமட்டிக்கொண்டு வந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக அந்த நடு வெயிலில் காலகாலம் வாழ வேண்டுமே என்பதை நினைத்து வேதனைப்பட்டது. எனவே தோட்டக்காரரிடம் கெஞ்சியது, ''ஐயா என்னால் அந்த வெயிலையும், அந்த உபத்திரவம் நிறைந்த தோட்டத்து சூழலையும் தாங்க முடியாது. தயவு செய்து என்னை வீட்டுக்குள் ஓர் தொட்டியில் நட்டு விடுங்கள்'' என்று அடம் பிடித்தது.


மற்றைய பப்பாளிக் கன்றோ தோட்டக்காரரின் விருப்பத்துக்கு இணங்கியது தோட்டக்காரனும் அடம் பிடித்த கன்றை வீட்டினுள் ஒரு தொட்டியிலும் மற்றைய கன்றை அழுக்கு நிலமான அந்த தோட்டத்திலும் நட்டுவிட்டார்.

நாட்கள் சென்றன தோட்டத்தில் வைத்த கன்று அழுக்கையும் வெயிலையும் சகித்துக்கொண்டு நன்கு புஷ்டியாக வளர்ந்தது. மற்ற கன்றோ வெயிலும், சேறும் இல்லாததைக்குறித்து சந்தோஷ ப்பட்டாலும் வெயில், பசளை என்பன போதியளவு இன்மையால் நன்கு வளர முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டது. அதன் இலைகள் சுருண்டன, அதன் உடல் மெலிந்தது. கனி கொடுக்கும் காலமும் வந்தது. தோட்டத்தில் இருந்த பப்பாளி மரம் மிகவும் பெரிதும் இனியதுமான கனிகளைக் கொடுத்தது. வீட்டுக்குள் நின்ற பப்பாளி மரத்தால் கனி கொடுக்க முடியவில்லை. குட்டிக்குட்டி கனிகளையே கொடுக்க முடிந்தது. தன்னுடைய நிலமையையும் தன்னுடைய கனிகளையும் பார்த்து தானே வெட்கப்பட்டுக் கொண்டது.

''வெயிலை வெறுத்தவன் வாழ்க்கை'' என்பது இதுதான் பிரியமானவர்களே. மரத்தின் வாழ்வில் வெயிலும் சேறும் தேவை யானது போலவே மனிதனின் வாழ்வில் உபத்திரவமும் வலியும் அவசியமானது.

அழகான ஒரு கவிதையில் நான் ரசித்த வரிகள் இவை "முள்முடி இல்லாமல் பொன்முடி இல்லை, சிலுவை இல்லாமல் சிங்காசனம் இல்லை"

தேவ பிள்ளையே உன் வாழ்க்கையில் தொடர் உபத்திரவமா, கலங்காதே. உபத்திரவத்தின் குகையை நீ கடந்து வரும் போது , அந்த குகையை கடந்ததற்கான பரிசுடன் இயேசப்பா உன்னை வரவேற்பார் உபத்திரவத்தின் முடிவில் ஏதோவொரு மிகப்பெரிய ஆசீர்வாதம் உனக்கு உண்டு.

இயேசுகிறிஸ்துவின் அன்பு

பாலத்தில் நடந்து கொண்டிருந்தார்கள் தந்தையும், மழலை மகளும். கீழே ஆறு ஓடிக்கொண்டிருந்தது. தந்தை மகளிடம் சொன்னார்

“மகளே.. எனது கையைப் பிடித்துக் கொள். அப்போது விழமாட்டாய்”

மகள் சொன்னாள் ,’ இல்லை அப்பா.. நீங்கள் என் கையைப் பிடித்துக் கொள்ளுங்கள்”

தந்தைக்கு ஆச்சரியம். “இதில் என்ன வித்தியாசம் இருக்கிறது ? நீ பிடித்தால் என்ன ? நான் பிடித்தால் என்ன ” ஆச்சரியப்பட்ட தந்தை கேட்டார்.

“நான் உங்கள் கையைப் பிடித்தால், ஒரு வேளை நான் கையை விட்டு விடும் வாய்ப்பு உண்டு. பாதை வழுக்கினால் கூட நான் கையை விட்டு விடுவேன். ஆனால் நீங்கள் என் கையைப் பிடித்தால், என்ன தான் நடந்தாலும் நீங்கள் என் கையை விடமாட்டீர்கள் எனும் நம்பிக்கை எனக்குண்டு” மகள் சொன்னாள்.

தந்தை நெகிழ்ந்தார். மகளை தூக்கி மார்போடணைத்துக் கொண்டு நடந்தார்.

இறைவன் சொல்கிறார்

“நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை. உன்னைக் கை விடுவதும் இல்லை”

இயேசு நமது கைகளை இறுகப் பிடித்து நடக்கிறார். நாமோ அவருடைய கையை உதறிவிட்டு பல வேளைகளில் ஓடி விடுகிறோம்.

எதையும் தனியாய் செய்யும் துணிச்சலும், வீராப்பும் இருக்கும் வரை இறைவனின் கையை விட்டு உதறித் தள்ளுவதையே அனைவரும் விரும்புகிறோம்.

யாராவது சூரியனை நிரூபிக்க முடியுமா?

ஒரு பாலத்தின் அருகே அவளுடைய பழக்கடை இருந்தது. தன்னிடம் பழங்கள் வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் வராத சமயங்களில் அவள் தனது பைபிளை எடுத்து வாசிப்பது வழக்கம். அவளது விலை மதிக்க முடியாத செல்வம் அது ஒன்றே!

ஒருமுறை ஒரு வாடிக்கையாளர் கேட்டார்."எப்பொழுது பார்த்தாலும் எதை அம்மா வாசித்து கொண்டிருக்கிறீர்கள்?"

"ஐயா,இது கடவுளுடைய வார்த்தைகள் அடங்கிய வேதாகமம். அதைத்தான் நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன்"என்றாள் அவள்.

"ஏனம்மா,இது கடவுளுடைய வார்த்தைகள்தான் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? யாராவது அப்படிச் சொன்னார்களா?" என்று வாடிக்கையாளர் வியப்போடு கேட்டார்.

"அவரே அப்படிக் கூறியிருக்கிறார் ஐயா" என்றாள் அவள்.

"கடவுள் உங்களோடு தனிப்பட்ட முறையில் பேசி அப்படிச் சொன்னாரா?"

சற்று நேரம் அவள் நிலை தடுமாறினாள்.வேதாகமம் கடவுளுடைய வார்த்தைதான் என நிரூபிக்க வேண்டுமே!

அவள் திடீரென்று வானத்தை அண்ணாந்து பார்த்து சூரியனைச் சுட்டிக்காட்டி, "ஏனய்யா அது சூரியன்தான் என்று உங்களால் நிரூபிக்க முடியுமா?"என்று கேட்டாள்.

"அது சூரியன்தான் என்று நிரூபிப்பது எளிதான காரியம். அது ஒளியையும் வெப்பத்தையும் அளிக்கிறதே!"என்றார் அவர்.

"உண்மைதான், பைபிள் கடவுளுடைய வார்த்தை என்பதற்கான நிரூபணமும் இதுதான். அது என் உள்ளத்திற்கு அனலையும், வெளிச்சத்தையும் அளிக்கிறது"என மகிழ்ச்சியோடு பதிலளித்தாள்.

நல்லவோர் நிரூபணம் அன்றோ!!