Showing posts with label forgive. Show all posts
Showing posts with label forgive. Show all posts

Tuesday, February 26, 2013

மன்னிப்பு

சிறுவன் ஜானியும், அவனது சகோதரி மேரியும் விடுமுறைக்கு பாட்டி வீட்டிற்கு சென்றிருந்தனர். ஓய்வுநேரத்தில் விளையாட ஜானிக்கு 'சுண்டுவில்' ஒன்றை பாட்டி கொடுத்தார்.

அடுத்த நாளே, பாட்டியின் வீட்டை சுற்றி இருக்கும் அடர்ந்த வனத்திற்கு ஜானி சென்றான். 'சுண்டுவில்லை' கொண்டு பறவை பூச்சி ஆகியவற்றை அடிக்க முயற்சி செய்தான். ஆனால் அவனால் சரியாக இலக்கை குறி பார்த்து அடிக்க முடியவில்லை.

மிகவும் சோர்வடைந்து வீட்டிற்கு திரும்பினான். அப்போது பாட்டி வளர்க்கும் வாத்து அவனது அறையில் நின்றுகொண்டிருந்தது. இதையாவது அடிக்க முயற்சிப்போமே என சுண்டுவில்லால் அதை குறி வைத்தான். இம்முறை துரதிர்ஷ்டவசமாக குறி தவறவில்லை. வாத்தினுடைய தலை நசுங்கி இறந்தது.

பெரிய தவறு செய்துவிட்டோமே என பயந்த ஜானி, யாருக்கும் தெரியாமல் வாத்தை புதைத்து விட்டான். இவை எல்லாவற்றையும் அவன் சகோதரி மேரி பார்த்துக் கொண்டிருந்தாள். அவனிடன், "நீ வாத்தை கொன்றது எனக்கு தெரியும். நான் சொல்லும்படியெல்லாம் கேட்காவிட்டால் பாட்டியிடம் எல்லாவற்றையும் சொல்லிவிடுவேன்" என்று மிரட்டினாள்.

ஜானியும் பயத்தில் ஒப்புக்கொண்டான். பாட்டி மேரியை மாட்டுக்கு தீவணம் போட்டுவிட்டு வா என்று சொன்னார். ஜானி எனக்காக இந்த வேலையை செய்வான் என்று சொன்னாள். அப்பாவி ஜானி "நான் ஏன் செய்ய வேண்டும். உன்னை தானே சொன்னார்கள்?" என்றான். மேரி ஜானியிடம் "வாத்து ஞாபகம் இருக்கிறதா?" என்று கேட்டாள். வேறு வழியின்றி ஜானி வேலையை செய்தான்.

இப்படி மேரி ஜானியை "வாத்து ஞாபகம் இருக்கிறதா?" "வாத்து ஞாபகம் இருக்கிறதா?" என்ற கேள்வியை கேட்டே எல்லா வேலைகளையும் செய்ய வைத்துவிடுவாள். ஜானியின் விடுமுறை மிகவும் கொடூரமாக போய்க் கொண்டிருந்தது.

ஜானியால் மேரியின் அச்சுறுத்தலை தாங்க முடியவில்லை. ஒருநாள் காலை, தனது பாட்டியிடம் சென்று தன் குற்றத்தை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டான். மேரி தனக்கு செய்த கொடுமைகளை சொல்லி அழுதான்.

பாட்டி அவனிடம் "அழாதே ஜானி, நீ அந்த வாத்தை தவறுதலாக கொன்றுவிட்டதை நான் பார்த்துக் கொண்டு தான் இருந்தேன். நான் உன்னை அன்றே மன்னித்துவிட்டேன். அதனால் தான் அதை பற்றி உன்னிடம் கேட்கவில்லை. இனிமேல் மேரிக்கு நீ பயப்பட வேண்டாம். " என்று ஆறுதல் சொல்லி அணைத்துக் கொண்டார்.

ஜானி, குற்ற மனப்பான்மை நீங்கி விடுமுறையை சந்தோஷமாக கழித்தான்.

_-__-__-__-__-__-__-__-__-__-__-__-__-__-__-__-__-__-__

நண்பர்களே! இதுபோலவே குற்ற உணன்ர்வினால் சிக்கி தவிக்கும் உங்களை விடுவிக்கவே கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உங்கள் துக்கங்களை அவர் ஏற்றுக் கொண்டார். அவரிடம் மட்டுமே பாவத்துக்கான மன்னிப்ப் உண்டு. உண்மையாய் மனந்திரும்புவோரை அவர் மன்னித்து அனைத்துக் கொள்கிறார். மகனாய், மகளாய் ஏற்றுக் கொள்கிறார்.

(யோவான் 3:16) தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்

Wednesday, July 4, 2012

அன்பின் தியாகத்தை உணர்ந்தவர்


தென் ஆப்பிரிக்காவில் இருந்த ஒரு கோர்ட் அறையில் 70 வயதிற்கும் மேலான கறுப்பு நிறத்தவரான ஒரு வயதான மூதாட்டி தட்டு தடுமாறி எழுந்து நின்றார்கள். அவருக்கு எதிராக இரண்டு மூன்று போலீஸ் அதிகாரிகள் அந்த மூதாட்டியின் கணவரையும், ஒரே மகனையும் கொன்றதன் காரணமாக, குற்றம் சாட்டப்பட்டு, குற்றவாளிகளாக தீர்க்கப்பட்டு, அவருக்கு முன் நின்றார்கள். அவர்களில் வேன் டெர் பிரோக் (Van Der Broek) என்பவனும் ஒருவன்.
.
அந்த மூதாட்டி கடந்த காலத்தை நினைத்து பார்த்தார்கள். அவர்கள் இருந்த வீட்டிற்கு இந்த மனிதன் வந்து, இளைஞனாக இருந்த அவரது மகனை அந்த தாயாரின் எதிரிலேயே துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு, மரித்த சடலத்தை எடுத்து கொண்டு போய், அவர்கள் குடித்து கும்மாளம் போட்ட இடத்தில் நெருப்பினால் கொளுத்தி போட்டான். அதோடு அவனுடைய ஆத்திரம் தீரவில்லை.
.
வயதான அவருடைய கணவரை பிடித்து கொண்டு போனான். இரண்டு வருடத்திற்கு மேலாக அவருடைய கணவரிடம் இருந்து எந்த செய்தியும் வரவில்லை. ஒரு நாள் அந்த மனிதன் திரும்ப வந்து, இந்த தாயாரையும் பிடித்து கொண்டு போய், அவர் கணவர் இருந்த இடத்திற்கு கொண்டு போய் காண்பித்தான்.
.
அங்கு அவர் கைகளும் கால்களும் கட்டப்பட்டு, அங்கிருந்த மரத்தில் கட்டப்பட்டவராய், அடிக்கப்பட்டவராக இருந்தார். இந்த தாயார் பதறி போய், அவரிடம் ஓடிப்போய் அவர்களை விடுவிக்க முற்பட்டபோது, அவர்களுடைய கண்களுக்கு முன்பாகவே, அவர் மேல் மண்ணெண்னையை ஊற்றி, நெருப்பு பற்ற வைத்தான் அந்த ஈவிரக்கிமில்லாத அரக்கன். அவர் பற்றி எரியும்போது, அவர் வாயிலிருந்து, 'பிதாவே இவர்களுக்கு மன்னியும்' என்று கூறியவாறே துடிதுடித்து மரித்து போனார்.
.
எத்தனையோ காலங்கள் ஆனப்பிறகு, அவர்களை கொன்ற அந்த மனிதர்கள் பிடிக்கப்பட்டு, குற்றவாளிகள் என்று தீர்க்கப்பட்டு, தண்டனை கூறப்பட காத்திருந்தார்கள். அப்பொழுது, அந்த தாயாரிடம், நீதிபதி, 'அம்மா, உங்கள் கண்களுக்கு முன் உங்கள் மகனையும், கணவரையும், இரக்கமில்லாமல் கொன்று போட்ட இவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்' என்று கேட்டார்.
.
அப்போது அந்த தாய், 'ஐயா எனக்கு மூன்று காரியங்கள் வேண்டும். முதலாவது, என் கணவர் எரிந்து சாம்பலாய் போன இடத்திற்கு நான் போய், அந்த சாம்பலை அள்ளி கொண்டு வந்து, அவருக்கு முறையாக அடக்க ஆராதனை செய்ய வேண்டும். இரண்டாவதாக, எனக்கிருந்த ஒரே உறவு முறையான என் கணவரும் என் மகனும் இறந்து விட்டதால், நான் இந்த மனிதனை என்னுடைய சுவீகாரத்து மகனாக ஏற்று கொள்கிறேன். அதனால் அவன் மாதம் இரண்டு முறை என் வீட்டிற்கு வந்து, என்னோடு தங்கி, என்னிடத்தில் மீதமிருக்கிற அன்பை நான் கொடுக்கும்படியாக வர வேண்டும்.
.
மூன்றாவதாக, என்னை அவனிடம் கொண்டு போங்கள், நான் அவன் கையை பிடித்து, நான் உன்னை மனதார மன்னித்து விட்டேன் என்று கூற வேண்டும். ஏனென்றால் நம் பாவத்தை மன்னிக்கும்படியாக இயேசுகிறிஸ்து நமக்காக மரித்தார். என் கணவரின் ஆசையும் அதுவே' என்று கூறினபோது, அந்த
கோர்ட் அறையில் கண்ணீர் வராதவர்கள் யாருமே இல்லை. மெதுவாக அவர்களை அந்த மனிதனிடம் கூட்டி வந்த போது, அங்கு கூடியிருந்த அவர்களுடைய பக்கத்து வீட்டார், போலீசார், நீதிபதி யாவரும், மெதுவாக “Amazing grace. How sweet the sound that saved a wretch like me”'என பாட ஆரம்பித்தார்கள்.

http://alovelylittleworld.blogspot.com/2010/12/real-life-women-superheroes-name.html