Thursday, May 31, 2012

எஜமானனுடைய கைகளின் தொடுதல்

ஒரு இடத்தில், ஏலம் விடுபவர் ஒரு பழைய வயலினை (Violin) எடுத்து, ஏலம் விட ஆரம்பித்தார். அந்த வயலின் மிகவும் பழையதாக, தூசி படிந்ததாக, அதனுடைய நரம்புகள் எல்லாம் தொய்ந்துப் போனதாக, அநேக நாட்களாக உபயோகிக்கப்படாததாக இருந்தது. ஏலம் விடுபவர் நினைத்தார், இதைப் போய் நான் ஏலம் விடுகிறேனே, யார் வாங்கப் போகிறார்கள்? என் நேரம் இதற்காக வீணாகப் போவதுதான் மிச்சம் என்று நினைத்தவராக, அதை ஏலம் விடுவதற்க்கு, ஒரு டாலர், இரண்டு டாலர் என்று ஆரம்பித்தார். ஓருவர் மூன்று டாலர் என்றுக் கூறவும், மூன்று டாலர் ஒரு தரம், மூன்று டாலர் இரண்டு தரம், மூன்று டாலர் மூன்று தரம் என்று கூறி முடிப்பதற்குள், ஒரு சத்தம், ‘பொறுங்கள்’ என்றுக் கேட்டது. ஒரு உயரமான மனிதர், முன்பாக வந்துக் கொண்டிருந்தார், அவர் வந்து, அந்த வயலினைக் (Violin) கையில் எடுத்து, அதைத் துடைத்து, தொய்ந்துப போயிருந்த அதன் நரம்புகளை சரியாக டியூன் பண்ணி, அதை மெருகேற்றினார். இப்போது அந்த வயலின் (Violin) புதுப் பொலிவோடு ஜொலித்தது. அதிலே அழகான ஒருப் பாடலை இசைக்க ஆரம்பித்தார்.


பாடல் நின்றவுடன், ஏலம் விடுபவர், மெதுவான சத்தத்தில், அந்த வயலினின் (Violin) அருமையை உணர்ந்தவராக, இப்போது, இந்த வயலின் (Violin) 1000 டாலர் ஒரு தரம் என்று கூற ஆரம்பித்தார். ஒருவர் 2000 என்றுக் கூற, இன்னொருவர், 3000 என்று போட்டியிட  ஆரம்பித்தனர். கடைசியாக 4000த்தில் அதன் ஏலம் முடிந்தது.  கூடியிருந்த மற்றவர்களுக்கு ஒன்றும புரியவில்லை, ‘2 டாலருக்குப் விலைப் போன அந்த வயலின் இப்போது 4000 டாலருக்கு எப்படி போயிற்று’ என்று அந்த ஏலம் விடுபவரை கேட்டபோது அவர் சொன்னார், ‘அதுதான் எஜமானனுடைய கைகளின் தொடுதல்’, (The Touch of the Master’s Hand) என்று.

இரக்கம் பாராட்டுதல்

ஒருவேதாகம மாநாட்டில் செய்தி கொடுக்க வந்த ஜேக் வைர்ட்ஜன்என்பவர் மிகவும் வித்தியாசமான சரீர பாதிப்புடையஒருவருடன் உணவருந்த சென்றார். அந்நபர் வாயில் வைக்கும்உணவை மெல்ல முடியாமல் கொஞ்ச கொஞ்சமாக கீழே விழுந்துகொண்டே இருக்கும். ஆகவே தன் கழுத்தில் செய்தி தாளை கட்டிவைத்து கொண்டு சாப்பிடுவார். ஆகவே யாரும் அவர் அருகில்அமர்ந்து சாப்பிட விரும்ப மாட்டார்கள். இவ்வாறு தனித்துவிடப்பட்ட அவருடன் ஜேக் உணவருந்தி ஆறுதல் அளித்தார். இதுஒரு தனி நபர் மீது இரக்கம் காட்டும் ஒரு செயலாகும்.

எலியட் என்பவர் காலைதோறும் வேதத்தை தியானிக்கும்பழக்கமுடையவர். அந்நேரத்தில் குப்பையை அகற்றும் நபரைபார்க்க நேரிட்டால், தனது தியானத்தை நிறுத்தி விட்டு,வெளியே சென்று, இன்முகத்தோடு அவரை விசாரித்து,உற்சாகப்படுத்துவார். அந்த குப்பை அகற்றும்தொழிலாளிக்குத்தான் எத்தனை மகிழ்ச்சி. இதுவும்இரக்கத்தின் விளைவுதானே! பால் என்பவர் ஹோட்டல் ஒனறிற்குசென்றிருந்தபோது, அருகில் அமர்ந்திருந்த ஃபிரட்டிஎன்பவருக்கு நற்செய்தியை அறிவித்தார். அவர் விரைவிலேயேகிறிஸ்துவை ஏற்றுகொண்டார். சில காலம் கழித்து, ஃபிரட்டிபுற்று நோயால் பாதிக்கப்பட்டவராக ஒரு சிறுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பால் அவரைநாள்தோறும் சென்று சந்திப்பார். அவரது தேவைகள்அனைத்தையும் செய்து முடிப்பார். அவர் மரணமடையப்போகும்இரவில் அவரருகே வேத வசனங்களை கூறிக்கொண்டே இருந்தார்.இதுவல்லவா இரக்கம் பாராட்டுதல்!

Wednesday, May 30, 2012

இயன்றதை செய்

பீத்தோவன் ( Beethoven ) என்னும் புகழ்பெற்ற இசை நிபுணர் தன்னுடைய
செவிட்டு குறையினால் மற்றவர்களோடு அதிகமாக பேச மாட்டார். காது
கேளாதததினால் அவருக்கு பேசுவதும் கடினம். ஓரு முறை தன் நண்பனின்
மகன் இறந்த செய்தியை கேட்டு அவர் மிகவும் வருத்தப்பட்டவராய்,
நண்பனின் வீட்டிற்கு சென்றார். அவருக்கு எந்த வார்த்தைகள் சொல்லி
ஆறுதல் படுத்துவது என்று தெரியவில்லை. ஏனெனில் அவருக்கு பேசுவது
கடினமானதினால். அப்போது அவர் அங்கு மூலையில் இருந்த ஒரு
பியானோவை பார்த்தார். உடனே அங்கு சென்று அமர்ந்து, ஒரு அரை
மணிநேரம் தன் இருதயத்தின் வியாகுலங்களையெல்லாம்,
துயரத்தையெல்லாம் அதில் கொட்டி வாசித்து முடித்தார். அதை வாசித்து
முடித்து. அவர் அந்த இடத்தை விட்டு சென்றார். பின் அவரது நண்பர், மற்ற
யாரை பார்க்கிலும் பீத்தோவனின் வருகை தனக்கு மிகுந்த ஆறுதலாக
இருந்தது என்று கூறினார்.

பீத்தோவன் தன்னால் இயன்றதை தன் நண்பனுக்கு செய்து, அவருக்கு
ஆறுதலை கொடுத்ததை போல நாமும் நம்மால் இயன்றதை செய்து,
தேவனுடைய ராஜ்யத்தை கட்ட வேண்டும். அதற்கென்றே தேவன் நம்
ஒவ்வொருவருக்கும் கிருபாவரங்களை கொடுத்திருக்கிறார்.

Tuesday, May 29, 2012

நினையாத நாழிகையிலே

ஒரு வீட்டில் இரண்டு சகோதரிகள் இருந்தார்கள். அவர்கள்
ஒருவரையொருவர் அதிகமாய் நேசித்து வாழ்ந்தார்கள். அவர்களில் ஒருவள்
இயேசுகிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவள். மற்றவள் ஏற்றுக்
கொள்ளாதவள். கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவள், எப்போதும்,
மற்றவளிடம், இயேசுகிறிஸ்துவைப்பற்றிக் கூறி, அவளும் எப்படியாவது
ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஜெபித்துக் கொண்டிருந்தாள். ஒருநாள்
தன்னோடு ஆலயத்திற்கு வரும்படி வருந்திக் கேட்டுக் கொண்டாள். அவளும்
ஒத்துக் கொண்டு, இருவரும் அன்று இரவில் ஆலயத்திற்குச் சென்றார்கள்.
அன்று சபை போதகர், மத்தேயு 24ம் அதிகாரத்திலிருந்து,
இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்தும், அவர் திடீரென்று
ஒருநாள் மத்திய ஆகாயத்தில் வந்து, தம்முடையவர்களை தம்மோடு
சேர்த்துக் கொள்வார் என்றும் இரகசிய வருகையைக் குறித்து மிகவும்
ஊக்கத்தோடு பகிர்ந்துக் கொண்டார். கிறிஸ்தவளான சகோதரி, இவளை
எப்படியும் வசனம் தொட்டிருக்கும், இவள் இரட்சிப்படைந்து விடுவாள்
என்று மிகுந்த எதிர்ப்பார்ப்போடு அவளை பார்த்தபோது, அவள் எதுவுமே
நடக்காததுப் போல இருந்தததைக் கண்டு மிகவும் சோர்வடைந்தாள்.
இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். இருவரும் ஒன்றாக படுக்கைக்குச்
சென்றனர்.

கிறிஸ்தவளான சகோதரிக்கு இரவு தூக்கம் வரவில்லை. தன் சகோதரி
இன்னும் இரட்சிக்கப்படவில்லையே என்று மிகுந்த பாரத்தோடு, பக்கத்து
அறைக்கு ஜெபிக்க எழுந்துச் சென்றாள். மற்ற சகோதரி, திடீரென்று கண்
விழித்துப் பார்த்தபோது, தன் சகோதரியை பக்கத்தில் இல்லாததைக் கண்டு,
எங்கே போயிருப்பாள் என்று யோசித்துக் கொண்டிருந்தாள். அப்போது
போதகர் சொன்ன வார்த்தைகள் ஞாபகம் வரவே, திடுக்கிட்டு, தன் சகோதரி
கிறிஸ்துவின் வருகையில் எடுத்துக் கொள்ளப் பட்டாளோ என்று எண்ணி,
தூக்கிவாரிப்போட்டு, கதறி, ‘இயேசுவே என்னை இரட்சியும், என்னையும்
எடுத்துக் கொள்ளும்’ என்று கண்ணீh விட்டு கதற ஆரம்பித்தாள்.
சத்தம்கேட்டு, மற்ற சகோதரி ஓடிவந்து, இருவரும் ஒருவரையொருவர்
கட்டியணைத்து, அந்நேரமே, அவிசுவாசியான சகோதரி கர்த்தரை ஏற்றுக்
கொண்டாள். ஆம்! ஒரு நாள் இப்படிதான் நடக்கப் போகிறது. நீங்கள்
நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும்
ஆயத்தமாயிருங்கள் என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. புலி வருகிறது புலி
வருகிறது என்று சொல்லி சொல்லி ஒரு நாள் புலி வந்துவிட்டதைப் போல,
இயேசு வருகிறார் என்று அநேக இடங்களில் சொல்லி சொல்லி ஒரு நாள்
அவர் வரத்தான் போகிறார்.

Monday, May 28, 2012

சோர்ந்து போகாதே

அது ஒரு தற்காலிகமாக அமைக்கப்பட்ட இராணுவ மருத்துவமனை.
யுத்தகளத்தில் காயப்பட்ட இராணுவ வீரர்களுக்கு தீவிர சிகிச்சை
அளிக்கப்பட்டு வந்தது. இங்கு மரணத்தருவாயில் இருந்த இராணுவ வீரன்
ஒருவரது அருகில் சிற்றாலய போதகர் ஜெபித்து கொண்டிருந்தார். கண்
விழித்த வீரன் போதகரிடம் தனக்கொரு உதவி செய்யும்படி கேட்டு
கொணடான். போதகரும் மிகுந்த ஆர்வத்துடன் கட்டாயம் செய்கிறேன்
என்றார். மெதுவாக தனது பேண்ட் பையிலிருந்து ஒரு சிறு விசாச
புத்தகத்தை எடுத்து அதில் ஒரு விலாசத்தை சுட்டிகாட்டி 'இது என் ஞாயிறு
பள்ளிஆசிரியருடையது இவருக்கு நீங்கள் ஒரு கடிதம் எழுத வேண்டும்.
அதில்ஞாயிறு பள்ளியில் நீங்கள் கற்று கொடுத்த வேத வசனத்தின்படி
நான் ஒருநல்ல கிறிஸ்தவனாக வாழ்ந்து மரணத்தை சந்திக்கிறேன்.
என்னை இரட்சகர் இயேசுகிறிஸ்துவிடம் வழிநடத்திய உங்கள் பணிக்காக
நன்றி கூறுகிறேன் என்ற செய்தியை அவர்களுக்கு அனுப்ப வேண்டும்'
என்றான். போதகரும் உடனே கடிதம் எழுதினார்.


ஓய்வு நாள் பள்ளி ஆசிரியரிடமிருந்து தாமதியாமல் பதிலும் வந்தது. அவரது
கடிதத்தில் 'மகனே, போனமாதம் என் ஞாயிறு பள்ளி ஆசிரியர் பணியை
விட்டு விட்டேன். ஏனெனில் நான் கற்பித்து கொடுத்ததில் எந்த
பலனுமில்லை என்பதாக உணர்ந்தேன். ஆனால் உன்னுடைய கடிதம்
என்னை உயிர்ப்பித்தது, என்னுடைய பொறுமையின்மைக்காகவும், விசுவாச
குறைவிற்காகவும் தேவனிடம் மன்னிப்பு கேட்டேன். மீண்டும்
இவ்வூழியத்தை செய்ய திட்டமிட்டுள்ளேன். எனது சோர்வை நீக்கி
உற்சாகமூட்டிய உனது கடிதத்திற்காக நன்றி செலுத்துகிறேன்' என
எழுதியிருந்தார். ஆனால் இக்கடிதத்ததை படிக்க இராணுவ வீரன் உயிருடன்
இல்லை. இதை வாசித்த போதகரின் கண்களிலிருந்து கண்ணீர்
பெருக்கெடுத்தது. தேவனுடைய கிரியை எத்தனை மகத்துவமானது!
ஆசிரியரை கொண்டு நல்ல கிறிஸ்தவர்களை உருவாக்கினார். அந்த
ஆசிரியர் சோர்ந்த நேரத்தில் பழைய மாணவர்களை கொண்டு
உயிர்ப்பிக்கிறார்.

Sunday, May 27, 2012

சுவிசேஷம் அறிவித்தனர்

ஒரு காவல் அதிகாரியின் கையில் 'தவறவிட்ட குழந்தை' என்ற சுவிசேஷ கைப்பிரதி ஒன்று கிடைத்தது. அதில் தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை உலகிற்கு கொடுத்த அந்த அற்புத செய்தி சொல்லப்பட்டிருந்தது. அதை ஏளனமாக பார்த்த அவர், வழக்கம்போல கசக்கி அதை குப்பை கூடையில் எறிந்து விட்டார். அன்று மாலை அவருடைய வீட்டின் இரண்டாவது மாடியில் தன்னுடைய ஒன்றரை வயது குழந்தையுடன் கொஞ்சி விளையாடி கொண்டிருந்தார். மாடியின் முகப்பில் நின்ற அவர் கையிலிருந்த குழந்தை திடீரென துள்ளியது. அவரது இறுக்கமான கையிலிருந்து எப்படியோ நழுவி, கீழே விழ ஆரம்பித்தது, உடனே அவரும் கீழே குதித்தார். காவல் துறையின் பயிற்சியினால், குழந்தையை லாவகமாக பிடித்தார். தன்னை கீழே கிடத்தி தன் குழந்தையை மார்பில் ஏந்தினார். குழந்தை எந்த காயமுமின்றி காப்பாற்றப்பட்டது. ஆனால் அவருக்கோ இடது கை, காலில் முறிவு ஏற்பட்டு, மருத்தவமனையில் சேர்க்கப்பட்டார்;. .
மறுநாள் கண்விழித்து, தன் குழந்தையை தேடினார். குழந்தை அவரை பார்த்து சிரித்தது. குழந்தையை காப்பாற்றி திருப்தியில் வலியையும் மறந்து, அவரும் புன்னகைத்தார். அன்று மாலை சில சகோதரிகள் மருத்துவமனை ஊழியம் செய்ய வந்தனர். அந்த அதிகாரியின் கையில், 'தவற விட்ட குழந்தை' என்ற அதே கைப்பிரதியை கொடுத்து, சுவிசேஷம் அறிவித்தனர். இப்பொழுது அவரால் இந்த கைப்பிரதியின் உண்மையை உணர முடிந்தது. 'பொல்லாதவனாகிய நானே என் பிள்ளைக்காக இதை செய்யும்போது, பரிசுத்தமுள்ள தேவன் பாவிகளாகிய நமக்காக மனுஷனாய் இப்புவிக்கு வந்து தன் உயிரை கொடுத்தது நிச்சயம் உண்மையே' என மனதிற்குள் எண்ணினார். அன்றே இரட்சிக்கப்பட்டார்.

திருப்தியான வாழ்க்கை

என் நண்பர் ஒருவர், மிகவும் கஷ்டமான வேலையில் இருந்தார். அவர் குடும்பமாக ஜெபித்து வந்தார். 'தேவனே எனக்கு ஒரு நல்ல வேலையை தாரும், நானும் குடும்பமாக ஆலயத்திற்கு உம்மை தொழுது கொள்ள வேண்டும்' என்று. கர்த்தரும் அதிசயவிதமாக நல்ல வேலையை கொடுத்தார். கொஞ்ச நாள் ஆனதும், அவர் வேலை செய்வதை போன்ற மற்ற கம்பெனிகளில், அவருடைய அனுபவத்திற்கு நல்ல சம்பளம் தருகிறார்கள் என்று கேள்விபட்டு, மனைவி 'நீங்கள் அதிலே அப்ளை பண்ணுங்கள், உங்களுக்கு நிச்சயமாக கிடைக்கும்' என்று கூறினார்கள். ஆனால் நண்பரோ, 'தேவன் எனக்கு கொடுத்த வேலை இது, இதை விட்டு நான் எங்கும் செல்ல மாட்டேன், எவ்வளவு உயர்வான சம்பளம் கொடுத்தாலும் சரி' என்று உறுதியாக இருந்து விட்டார். தற்போது வந்த பொருளாதார நெருக்கடியில் அநேகர் வேலை இழந்தனர். புதிதாக சேர்ந்தவர்களை அவர்கள் வேலையிலிருந்து எடுத்தனர். ஆனால், நண்பர் உறுதியாக இருந்தபடியால், அந்த பழைய வேலையிலேயே தேவன் அவரை வைத்து காத்து கொண்டார்.

தேவன் நமக்கு கொடுத்த ஆசீர்வாதங்களில் நிச்சயமாக திருப்தியோடு இருந்தோமானால், தேவன் இன்னும் நம்மை அதிகமாய் ஆசீர்வதிப்பார்.

உபத்திரவத்திலும் பொருமை

ஒரு சிறுவன் தன் தோட்டத்தில் பட்டு பூச்சி புழுவை வளர்த்து வந்தான். அது
தன்னை சுற்றிலும் பட்டு நூலால் கடினமான கூட்டை கட்டி உள்ளே
இருந்தது. சில நாட்களுக்கு பின் அது பட்டு பூச்சியாக மாறி வெளியே வர
முயற்சி எடுத்தது. கூட்டிலிருந்து வெளிவருவது அவ்வளவு எளிதாக இல்லை.
பல மணி நேரங்கள் பொறுமையோடு போராடி தான் வெளியே வர
வேண்டும். ஆனால் அந்த சிறுவனுக்கோ பொறுமையில்லை. பட்டாம் பூச்சி
படும் கஷ்டத்தையும் அவனால் தாங்க முடியவில்லை. ஆகவே ஒரு கூரிய
பிளேடினால் மெதுவாக கூட்டை வெட்டி, பட்டு பூச்சியை சுலபமாக வெளியே
எடுத்து விட்டான். ஆனால் அந்த பட்டு பூச்சியினால பற்க்க முடியவில்லை.
அதனுடைய சரீரம் பெரிதாக இருந்தபடியால் கீழே விழுந்து விட்டது. முடிவில்
அதை எறும்புகள் இழுத்து சென்றன.
.
அச்சிறுவனின் தகப்பன் சொன்னார், 'மகனே அந்த பூச்சி கூட்டிலிருந்து
வெளிவர பொறுமையோடு எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அதன் தசை
நார்களையும், நரம்புகளையும் பெலப்படுத்தும். பல மணி நேரங்கள் அது
வெளிவர பாடுபடுவதால் அதன் உடல் வற்றி எடை குறைந்து பறந்து செல்ல
வசதியாக இருக்கும். அது சகல முயற்சியும் செய்து தானாகவே வெளியே
வந்திருந்தால் பரிபூரண வளர்ச்சியடைந்திருக்குமே! நீயோ அதன்
வாழ்க்கையையே கெடுத்து விட்டாயே' என்றார்.