என் நண்பர் ஒருவர்,
மிகவும் கஷ்டமான வேலையில் இருந்தார். அவர் குடும்பமாக
ஜெபித்து வந்தார். 'தேவனே எனக்கு ஒரு நல்ல வேலையை தாரும்,
நானும் குடும்பமாக ஆலயத்திற்கு உம்மை தொழுது கொள்ள
வேண்டும்' என்று. கர்த்தரும் அதிசயவிதமாக நல்ல வேலையை
கொடுத்தார். கொஞ்ச நாள் ஆனதும், அவர் வேலை செய்வதை போன்ற
மற்ற கம்பெனிகளில், அவருடைய அனுபவத்திற்கு நல்ல சம்பளம்
தருகிறார்கள் என்று கேள்விபட்டு, மனைவி 'நீங்கள் அதிலே
அப்ளை பண்ணுங்கள், உங்களுக்கு நிச்சயமாக கிடைக்கும்'
என்று கூறினார்கள். ஆனால் நண்பரோ, 'தேவன் எனக்கு கொடுத்த
வேலை இது, இதை விட்டு நான் எங்கும் செல்ல மாட்டேன்,
எவ்வளவு உயர்வான சம்பளம் கொடுத்தாலும் சரி' என்று
உறுதியாக இருந்து விட்டார். தற்போது வந்த பொருளாதார
நெருக்கடியில் அநேகர் வேலை இழந்தனர். புதிதாக
சேர்ந்தவர்களை அவர்கள் வேலையிலிருந்து எடுத்தனர். ஆனால்,
நண்பர் உறுதியாக இருந்தபடியால், அந்த பழைய வேலையிலேயே
தேவன் அவரை வைத்து காத்து கொண்டார்.
தேவன் நமக்கு கொடுத்த ஆசீர்வாதங்களில் நிச்சயமாக திருப்தியோடு இருந்தோமானால், தேவன் இன்னும் நம்மை அதிகமாய் ஆசீர்வதிப்பார்.
தேவன் நமக்கு கொடுத்த ஆசீர்வாதங்களில் நிச்சயமாக திருப்தியோடு இருந்தோமானால், தேவன் இன்னும் நம்மை அதிகமாய் ஆசீர்வதிப்பார்.
No comments:
Post a Comment