Thursday, May 9, 2013

டிக்கெட், டிக்கெட்!

இரவு பத்துமணி திருநெல்வேலியில் எட்டுமணிக்குப் புறப்பட்ட சென்னை ரயில் விருதுநகரை நெருங்கிக் கொண்டிருந்தது. அலுத்துச் சலித்தவர்களும் மனநிம்மதி உடையவர்களும் நிம்மதியாகப் படுத்து ஒன்பது மணிக்கெல்லாம் தூங்கத் தொடங்கி விட்டனர்.

விருதுநகரில் வண்டி வந்து நின்றது. பழம், பிஸ்கட், பத்திரிகைகள் விற்பவர்களின் குரல் காதைப் பிளந்தது. அவசர, அவசரமாக அகப்பட்டதை வாங்கி அரை குறையாக சிலர் மென்று வயிற்றை நிரப்பிக் கொண்டிருந்தனர்.

வண்டி புறப்பட்டது. டிக்கெட் பரிசோதகர் ஏறாதவண்டியாகப் பார்த்து பிச்சைக்காரர்களும் இப்படியே ரயில்பயணம் செய்து பழக்கப்பட்ட ஏமாற்றுப் பேர்வழிகளும் ஏறிக்கொண்டனர்.

ஒரு கேரேசுக்குள் டிக்கெட் பரிசோதகர் ஏறினார். அவரது வரவறிந்து டிக்கெட் எடுக்காத சிலர் பெஞ்சுக்கடியில் பதுங்கினர். ஒன்றிரண்டு பேர் பாத் ரூமிற்குள் போய் மறைந்தனர். 

டிக்கெட் வைத்திருந்தவர்கள் அதைப் பரிசோதகரிடம் காட்டினர். இல்லாதவர்களில் பலர், என்ன நேருமே என்று பதறினர். சிலர் டி.டி. ஆரிடம் மன்னிப்புக் கேட்டனர். உரிய அபதாரத் தொகையையும் கட்டினர்.

தனபால் ரயிலில் ஓர் ஓரமாக உட்கார்ந்து கொளுந்து வெற்றிலையை எடுத்து காம்பு கிள்ளி, முனை முறித்து, நரம்பு உரித்து சுண்ணாம்பு தடவி, சுருட்டி, மடக்கி வாயில் திமித்து ரசித்து மென்று கொண்டிருந்தான். அவ்வப்போது துண்டின் முனையால் முகத்தைத் துடைத்துக் கொண்டான். துண்டில் வெற்றிலைக் கறை: வாழைக்காய்க் கறை, வாழைக்காய் வெட்டுவதும் வாழை இலை அறுப்பதும் அவனது பிரதான வேலை!

டிக்கெட் பரிசோதகர் தனபாலிடம் டிக்கெட், டிக்கெட்?” என்று கேட்டார்.

தனபால் மடிக்குள் கையைவிட்டு டிக்கெட்டை எடுத்து நீட்டினான்.

டிக்கெட் பரிசோதகர் டிக்கெட்டைப் பார்த்துவிட்டு, “இதென்னய்யா, டிக்கெட்? நீர் எங்கே போகிறீர்?” என்று கேட்டார். தனபால், “திருச்சிக்கு போகிறேன். அங்கே தான் என் மகன் பெல் கம்பெனியில் வேலை பார்க்கிறான். ஆள் ரொம்ப நல்லா இருப்பானுங்க. அவனுக்கு பெண் பார்த்துக்கிட்டிருக்கேன். தை மாதம் கலியாணம் வச்சிடலாமுன்னு நினைக்கிறேன்” என்று கதையைத் தொடங்கினான்.

டி.டி.ஆருக்கு எரிச்சல்!” உன் மகனுக்கு நீ கலியாணம் எப்போ வச்சால் எனக்கென்ன? எந்த ஊரில் ஏறினீர்?”
கோவில்பட்டியிலிருந்து திருச்சிக்கு டிக்கெட் எடுக்காமல் வெறுமனே பிளாட்பாரம் டிக்கெட் எடுத்துட்டு ரயிலில் ஏறியிருக்கிறீரே, என்ன மனுஷன் நீர்?”
தனபால் நிதானமாக, “ஏன், திருச்சி ஊரிலே பிளாட்பாரம் இல்லீங்களா? என்று கேட்டான். டி.டி.ஆர் பொத்துக்கொண்டு வந்த கோபத்தையும் புறம்பே தள்ளிவிட்டு குபுக்கென்று சிரித்துவிட்டார்

கண்ணீரோடு விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடு அறுப்பார்கள்

திருச்சபைச் சரித்திரத்தின் குறிப்புக்களை ஆராயும்போது, தேவனால் அதிகம் பயன்படுத்தப்பட்டவர்கள் ஜெபவீரர்களே என்று கண்டுகொள்ளலாம். அவர்கள் அந்தரங்கத்தில் ஜெபத்தில் தரித்திருந்து, தேவன் தம்முடைய இருதயத்தைத் தங்களோடு பகிர்ந்துகொள்ளக் கற்றிருக்கிறார்கள். தேவன் எவைகளைக்குறித்துக் கரிசனைகொண்டிருக்கிறாரோ அவைகளைக்குறித்தே அவர்களுடைய இருதயமும் கரிசனைகொள்ளுகிறது.


ஜார்ஜ் முல்லர் பிரிஸ்ற்றலில் 1891-களில் அநாதைஇல்லங்களை ஆரம்பித்தார். தங்களது எல்லாத் தேவைகளையும் சந்திக்க அவர் தேவனையே நம்பினார். அவர் ஒருபோதும் யாரிடமும் பணம் கேட்டதில்லை; ஆனால், அநேகமாயிரம் குழந்தைகளுக்கு ஆடையும் ஆகாரமும் உறைவிடமும் இலவசமாகக் கொடுத்தார். அவருடைய வாழ்க்கையின் இறுதியில் அவர் யார்யாருடைய இரட்சிப்புக்காக ஜெபித்தாரோ அவர்கள் யாவரும் (இரண்டுபேர் தவிர) கிறிஸ்துவைத் தங்கள் இரட்சகராக ஏற்றுக்கொண்டார்கள். இந்த இரண்டுபேருங்கூட முல்லர் மரித்தபின் இரட்சிக்கப்பட்டார்கள்.
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வடகிழக்கு பாகத்தில் வாழ்ந்துவந்த செவ்விந்தியர்கள் மத்தியில் 1700-களில் டேவிட் பிரெய்னார்டு ஊழியஞ்செய்தார். அவர் அந்த மக்களுக்காக அதிக நேரம் ஜெபித்ததால் அவருக்குக்கீழிருந்த பனிக்கட்டி உருகிப்போயிற்று என்று அவரைக்குறித்துச் சொல்லப்பட்டது. அநேகர் இரட்சகரை ஏற்றுக்கொள்ள அவர் தேவனுடைய கருவியாயிருந்தார்.
நம்முடைய இருதயத்துடிப்பு தேவனுடைய இருதயத்துடிப்புக்கு இசைந்து காணப்படும்போது, நாம் பரிந்துபேசியவைகளாகிய நம்புவதற்கரிய காரியங்களையும் அவர் செயல்படுத்துவார். அழிந்துபோகிற உலகத்துக்காக தேவனுடைய இருதயம் வேதனைப்படுகிறது. அத்தகைய பாரம் நம்மில் வரும்போது நாம் அவரை நோக்கிக் கூப்பிடுவோம்; அவர் கேட்டு அதற்குப் பதில் கொடுப்பார். கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள். அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான் (சங்.126:5,6) என்று சங்கீதக்காரன் சொல்லுகிறார்.

வழிதவறிப்போன தன் மகனுக்காக அழுகிற தாயாரின் கண்ணீர் தேவனுடைய இருதயத்தைத் தொடுகிறது. கேட்டுப்போன தன் பிள்ளைகளுக்காக ஒரு தகப்பன் விடுகிற கண்ணீர் பரலோகத்தை அசைக்கிறது. தங்களோடு கல்விகற்கிறவர்களுடைய இரட்சிப்புக்காக இளைஞர்கள் இருதயம் நொறுங்கும்போது, அந்தப் பள்ளியையே கிறிஸ்துவுக்குச் சொந்தமாக்கத்தக்கதாக தேவனுடைய ஆவியானவர் பரலோகத்திலிருந்து இறங்கிவருகிறார். தம்முடைய மக்களின் கண்ணீர் தேவனுக்கு அருமையானது.
என் அலைச்சல்களைத் தேவரீர் எண்ணியிருக்கிறீர்; என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது? (சங்.56:8) என்று சங்கீதக்காரன் சொன்னதை வேதத்தில் வாசிக்கிறோம். நம்முடைய கண்ணீரைச் சேர்த்துவைக்கும் ஒரு துருத்தி அல்லது குப்பி தேவனிடத்திலிருக்கிறது; நம்முடைய இருதய வேதனைகளையெல்லாம் பதிவுசெய்யும் ஒரு புத்தகமும் அவரிடமுண்டு

கிறிஸ்துவற்றவர்களுக்காக நாம் கண்ணீர் விடும்போது, தேவன் அதை மறக்கவில்லையென்பதை நாம் நினைவிற்கொள்ளவேண்டும். அவருடைய காலம் வரும்போது, ஒருநாள் அவர் வானத்தைத் திறந்து நம்முடைய கற்பனைக்கு அதிகமான ஆசீர்வாதங்களை நம்மீது ஊற்றுவார்.

ஒரு ஆலயத்தின் ஜெபஅறையில் புதிய கம்பளம் விரிக்கப்பட்டபோது, அச்சபையின் போதகர் தேவனிடம் ஒரு சிறப்பான வேண்டுகோள் விடுத்ததாக அவர் என்னிடம் கூறினார். ஆண்டவரே, இந்தக் கம்பளம் உம்முடைய மக்களின் கண்ணீரினால் உமக்கு அர்ப்பணிக்கப்படட்டும் என்று நான் ஜெபிக்கிறேன் என்பதே அவர் வேண்டுதல். வெகு சீக்கிரத்தில் அவருடைய ஜெபம் கேட்கப்பட்டது. அத்திருச்சபையில் எழுப்புதல் கூட்டங்கள் ஒழுங்குசெய்யப்பட்டன. தேவன் வல்லமையாய் அசைவாடினார்; இருதய உடைவோடும் பாவ உணர்வோடும் கண்ணீர் வடித்த மக்களால் அந்த அறை நிரம்பியது.

கண்ணீர் தேவனுடைய இருதயத்தைத் தொடுகிறது. மனுக்குலத்தின் வேதனை அவருக்குத் தெரிந்ததால், தங்களுடைய பாவங்களால் காயப்பட்ட மக்களுக்காகத் தம்முடைய சொந்தக் குமாரனை அனுப்பித் தந்தார். வேதபுத்தகத்தில் மிகவும் குறுகியதும் கூடுதல் வல்லமையுள்ளதுமான வசனம், இயேசு கண்ணீர் விட்டார் என்பதுவே. மனிதனாய் அவதரித்த தேவன் கண்ணீர் விட்டாரேயாகில், அவருடைய இருதயத்தை நாம் உணரும்போது, நாமும் கண்ணீர் விடுவோம். ஆத்துமாக்களுக்காக நீங்கள் கண்ணீர் சிந்தினால், தேவன் உங்கள் கண்ணீரைக் குப்பியில் பத்திரப்படுத்துவார் என்பதை மறந்துபோகவேண்டாம். ஒரு நாள் அவர் அந்தக் குப்பியைத் திறப்பார்; அப்போது அதிலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்

Thursday, May 2, 2013

நோபல் பரிசு - "ஆல்பர்ட் நோபல்"

நூறாண்டுகளுக்கு முன் ஒரு நாள் செய்தித்தாளை பார்த்த ஒருவர் தன்னுடைய மரண செய்தியை காண நேரிட்டது. தவறுதலாக வேறு யாருக்கோ பதிலாக அவருடைய பெயரும், புகைப்படமும் வெளியிடப்பட்டிருந்தது. அவருடைய புகைப்படத்தின் கீழ் டைனமெட் உண்டாக்கிய இராஜா என்றும், மரணத்தின் வியாபாரி என்றும் எழுதப்பட்டிருந்தது.
.
அதை பார்த்தவுடன் அந்த மனிதர் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை.

மரணத்தின் வியாபாரி என்றா என்னை மக்கள் நினைவு கூருவார்கள் என்று
திடுக்கிட்டது. அது அவருடைய வாழ்க்கையையே மாற்றி அமைத்தது.
தன்னை யாரும் அப்படி அழைப்பதை அவர் விரும்பவில்லை. உடனே
அந்நாளில் இருந்துதானே அவர் சமாதானத்திற்கான காரியங்களில் ஈடுபட
ஆரம்பித்தார். அவர் வேறு யாருமில்லை ஆல்பர்ட் நோபல் ஆவார். அவர்
பேரில் இன்றும் ஒவ்வொரு வருடமும் சமாதானத்திற்கும், மற்ற அறிவியல்
ஆராய்ச்சிகளை கண்டுபிடித்தவர்களுக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

டேவிட் பிரனாய்ட் (1718 -1747)

ஒருதங்கள் கிராமத்தின் மத்தியில் ஒரு வெள்ளை மனிதர் வந்து தங்கி, கூடாரம் போட்டிருக்கிறார் என்று அந்த கிராமத்தில் வாழும் செவ்விந்தியர்களுக்கு தெரிய வந்தது. அவரை எப்படியாவது கொன்று விட வேண்டும் என்ற எண்ணத்தோடு, ஒரு கூட்ட மக்கள் அவர் இருந்த கூடாரத்திற்கு வந்தார்கள். அந்த மனிதர் ஒருவேளை துப்பாக்கியோ மற்ற ஆயுதங்களோ வைத்திருக்கலாம் என்று எண்ணி, சத்தமில்லாமல் மெதுவாக அவர் இருந்த கூடாரத்தை சுற்றி வளைத்தார்கள்.
அவர்கள் எட்டிப்பார்த்தபோது, அந்த வெள்ளை மனிதர் முழங்கால் படியிட்டு,
கண்கள் மூடியிருப்பதையும், தலை உயர்த்தப்பட்டு, ஏதோ முணுமுணுத்துக்
கொண்டிருப்பதையும் கண்டார்கள். என்ன செய்கிறார் என்று நினைத்துக்
கொண்டிருந்தபோதே, அவருக்கு முன்னால், ஒரு நல்ல பாம்பு படமெடுத்து
ஆடிக்கொண்டிருப்பதை கண்டார்கள். அந்த பாம்பு அவரை கொத்தி,
இப்பொழுது அவர் மரித்து விழுவார் என்று அவர்கள் பார்த்துக்
கொண்டிருந்தபோதே, அந்த பாம்பு கொஞ்ச நோரம் அப்படியே
இருந்துவிட்டு, பின் தான் வந்தவழியே போய் விட்டது. நடந்த ஒன்றும் அந்த
மனிதருக்கு தெரியாது. ஆனால் அதை கவனித்து கொண்டிருந்த
செவ்விந்தியர்கள் ஒன்றும் பேசாமல் தங்கள் இருப்பிடத்திற்கு திரும்பி போய்
விட்டார்கள்.
அடுத்த நாள் வெள்ளை மனிதராகிய டேவிட் பிரனாய்ட் செவ்விந்தியர்களை

பேசும்படி அணுகியபோது, அவர் மேல் அவர்களுக்கு இருந்த கோபம்
தணிந்திருந்தது. முற்றும், பாம்பு சம்பவத்தை அவர்கள் தங்கள் கிராமத்தில்
அனைவருக்கும் அதற்குள் தெரிவித்திருந்தனர். அவர்கள் இந்த வெள்ளை
மனிதனுக்குள் இருக்கும் ஆவி மிகவும் வல்லமையுள்ளது என்றும் பேசிக்
கொண்டார்கள்.
.

.
1743 ஆம் ஆண்டு, டேவிட் பிரெனாய்ட் அவர்கள் தனது 25ஆவது வயதில்

ஸ்காட்லாந்து மிஷனெரி சங்கத்தால் அமெரிக்காவிற்கு மிஷனெரியாக
அனுப்பப்பட்டார். அவர் டிபி வியாதியால் தாக்கப்பட்டிருந்ததால், அடிக்கடி
இரத்த வாந்தி எடுத்து, மிகவும் பெலவீனமாயிருந்த போதிலும், அவர்
தனக்குள்ளிருந்த வல்லமையான பரிசுத்த ஆவியானவரால், அநேக
செவ்விந்தியர்களை கர்த்தருடைய அன்பிற்குள் கொண்டு வந்த பாத்திரமாக
செயல்பட்டார்./
அவருடைய ஊழியம் நான்கு வருடங்களே ஆனபோதிலும், அவருடைய
ஜெப வாழ்க்கையினாலும், தன்னுடைய தியாகமான வாழ்வினாலும்,
கர்த்தருடைய ஆவியானவர் அவருக்குள் இருந்து செயல்பட்டதினாலும்,
அநேகரை கர்த்தருடைய இரட்சிப்புக்குள் வழிநடத்த முடிந்தது. அவர் தனது
29ஆவது வயதில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தாலும், அவருடைய
ஊழியத்தைக் குறித்து இன்றும் அநேகர் சொல்லும்படியாக அவருடைய
வாழ்க்கை அமைந்திருந்தது.