ஒரு வைத்தியர்
தன்னுடைய நோயாளி ஒருவரை தொடர்பு கொள்ள முயன்று
கிடைக்காமல், மிகவும் கஷ்டப்பட்டு கடைசியில் ஒருவகையாக
டெலிபோன் மூலமாக அவரை தொடர்பு கொண்டு, 'நீங்கள் செய்த
பரிசோதனைகளின் ரிசல்ட் வந்து விட்டது. உங்களுக்கு கெட்ட
செய்தி முதலில் தெரிய வேண்டுமா? அல்லது அதைவிட மிக மோசமான
செய்தி தெரிய வேண்டுமா?' என்று கேட்டார். அப்போது நோயாளி,
'முதலில் எனக்கு கெட்ட செய்தியை சொல்லுங்கள்' என்று
கூறவும், டாக்டர், 'நீங்கள் இன்னும் ஒரு நாள் தான் உயிரோடு
இருப்பீர்கள்' என்று கூறினார். அதற்கு நோயாளி, ஐயோ, இதைவிட
கெட்ட செய்தி ஒன்றுமில்லை, ஆனால் நீங்கள் சொன்னீர்களே,
இதை விட மோசமான செய்தி என்று, அது என்ன? என்று கேட்டபோது,
டாக்டர், 'இந்த ரிசல்டை சொல்ல நான் நேற்றிலிருந்து
முயற்சி செய்திருக்கிறேன்' என்று கூறினார்.
.
நம்முடைய
வாழ்க்கை கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற
புகையைப்போலிருக்கிறது என்று வேதம் சொல்கிறது. நம்முடைய
வாழ்க்கை அத்தனை குறைவானது. நாளை நமக்கு என்ன நடக்கும்
என்று நமக்கு தெரியாது. மனிதனுக்கு தான் இன்று தான்
மரிக்கபோகிறோம் என்று தெரிந்தால் கடைசி நிமிடம் வரை
பாவம் செய்து, கடைசி நிமிடத்தில் மனம் திரும்பி
கொள்ளலாம் என்று பாவத்திற்கு மேல் பாவம் செய்து கொண்டே
இருப்பான். அதனால்தான் கர்த்தர் அதை இரகசியமாகவே
வைத்திருக்கிறார்.
நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள்
ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு
தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே. -
(யாக்கோபு 4:14).
No comments:
Post a Comment