.
ஒரு நாள்
மூத்த சகோதரனுடைய வீட்டுக்கதவை யாரோ தட்டினார்கள். கதவை
திறந்த போது, ஒரு தச்சன் நின்று கொண்டிருந்தார். அவர் அந்த
சகோதரனிடம், 'எனக்கு இங்கு ஏதாவது வேலை கிடைக்குமா?' என்று
கேட்டார். சகோதரன் அவரிடம், 'இப்போது எதுவும் வேலை இல்லை,
ஆனால் என் சகோதரன் பக்கத்தில் இருக்கிறானே, அவன், என்னோடு
சண்டையிட்டு, எங்கள் இருவருக்கும் இடையில் இருந்த
பசும்புல்வெளியை புல்டோசர் கொண்டு வந்து இடித்து,
இடையில் தண்ணீரை விட்டு, இப்போது எங்கள் இருவருக்கும்
இடையில் தண்ணீர் ஒரு ஆறு மாதிரி ஓடிக்கொண்டிருக்கிறது.
அவன் எனக்கு இளையவன், அவனே அப்படி செய்வானானால், அவனுக்கு
மேலாக நான் செய்ய வேண்டும். ஆகவே நீங்கள் ஒரு பெரிய எட்டு
அடி உயரமுள்ள வேலியை கட்டுங்கள். அப்போது நான் அவனை
எட்டிக்கூட பார்க்க முடியாதபடி இருக்கும். அதுதான்
இப்போதைய முதல் வேலை' என்று கூறினார்.
.
அந்த
தச்சனும், சரி என்று சொல்லிவிட்டு வேலையை ஆரம்பித்தார்.
வேலை செய்ய சொல்லிவிட்டு, அந்த மூத்த சகோதரனும் வயலில்
வேலை செய்ய போய்விட்டார். சாயங்காலத்தில் வீட்டிற்கு
வந்தபோது, அப்படியே அவர் வாயடைத்து போய் விட்டார்.
ஏனெனில், அங்கு வேலிக்கு பதிலாக அழகிய பாலம் இடையில் ஓடின
ஆற்றுக்கு மேலாக கட்டப்பட்டு, அதன் வழியாக இளைய சகோதரன்
வருவதை கண்டார். வந்த இளைய சகோதரன், 'நான் உங்களை மோசமாய்
பேசி, இடையில் ஆற்றை விட்டிருந்தாலும், நீர் எவ்வளவாய்
என்னை நேசித்து நம் இருவருக்கும் இடையில் பாலத்தை
கட்டினீர், அண்ணா என்னை மன்னித்து விடுங்கள்' அவருடைய
கரத்தை பிடித்து கண்ணீர் விட்டான். அதை கண்ட தச்சன்,
திரும்பி செல்ல ஆரம்பித்தபோது, மூத்த சகோதரன்,
'நில்லுங்கள், இன்னும் அதிகமான வேலை உங்களுக்கு உண்டு'
என்று கூற, அவரோ 'நான் இன்னும் எத்தனையோ பாலங்களை கட்ட
வேண்டியிருக்கிறது' என்று சொல்லிவிட்டு செல்ல
ஆரம்பித்தார்.
No comments:
Post a Comment