.
நீங்கள்
காலையில் எழுந்தரிக்கும்போது, முழு சுகத்தோடும்
பெலத்தோடும் எழுந்திருந்தால் நீங்கள் உண்மையிலேயே
ஆசீர்வதிக்கப்பட்டவர். ஏனெனில் மில்லியன் மக்கள் இந்த
வார இறுதி வரைகூட ஜீவிக்க மாட்டார்கள்.
.
நீங்கள்
உங்கள் வாழ்க்கையில் போரில் ஈடுபடாதிருந்தால்,
சிறைச்சாலையின் தனிமையை அனுபவிக்காதிருந்தால், பசியின்
கொடூரத்தை அனுபவியாதிருந்தால் நீங்கள் 500 மில்லியன்
மக்களை காட்டிலும் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்.
.
நீங்கள் சபை
ஆராதனைக்கு விடுதலையோடு எந்தவித பயமுமில்லாமல், எந்தவித
பயமுறுத்தலும் இல்லாமல் கர்த்தரை தொழுது கொள்ள
செல்வீர்கள் என்றால், மூன்று பில்லியன் மக்களைவிட
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்.
.
உங்களுக்கென்று ஒரு பிரிஜ் இருந்து, நீங்கள் தலை
சாய்க்க ஒரு வீடு இருந்து, நீங்கள் அணிந்து கொள்ள நல்ல உடை
இருந்தால் நீங்கள் உலகத்திலுள்ள 75 சதவிகித மக்களை விட
பணக்காரர்.
.
உங்கள் மணி
பர்சிலும், உங்கள் பேங்கிலும் உங்களுக்கென்று பணம்
இருந்தால், நீங்கள் எட்டு சதவிகித பணக்காரர்களில்
ஒருவர்.
.
உங்கள்
பெற்றோர் உயிரோடும், இன்னும் இணைந்து இருந்தால், நீங்கள்
மிகவும் அபூர்வமானவர்.
.
நீங்கள்
உங்கள் தலையை உயர்த்தி, புன்னகைத்து தேவனுக்கு
நன்றியுள்ளவர்களாயிருந்தால் நீங்கள் மிகவும்
ஆசீர்வதிக்கப்பட்டவர். அநேகர் அந்த நன்றியுணர்வு
இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.
.
நீங்கள்
ஒருவரின் கரத்தை பிடித்தோ, அணைத்தோ அல்லது அவர்களது
தோள்களை தொட்டு ஆறுதல் படுத்துவீர்களானால் நீங்கள்
ஆசீர்வதிக்கப்பட்டவர். ஏனெனில் நீங்கள் கர்த்தரின்
அன்பை வெளிப்படுத்துகிறீர்கள்.
.
நீங்கள்
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்று
கொண்ட விசுவாசியாக இருந்தால் உலகத்திலுள்ள சிறுபான்மை
மக்களை சேர்ந்தவராவீர்கள்.
.
நீங்கள் இதை
வாசிப்பீர்களானால், உலகில் உள்ள 3 பில்லியன் மக்களை விட
ஆசீர்வதிக்கப்பட்டவர். ஏனெனில் அவர்களுக்கு வாசிக்கவே
தெரியாது.
.
உலகில்
எத்தனையோ பில்லியன் மக்கள் இருந்தும் தேவன் நம்மை
அவருக்கு சொந்தமாக தெரிந்து கொண்டாரே, நாம் எத்தனை
பாக்கியவான்கள்! வானத்தையும் பூமியையும் படைத்த
சர்வவல்லமையுள்ள தேவனுக்கு நாம் பிள்ளைகளாகும்
பாக்கியத்தை கொடுத்திருக்கிறாரே நாம் எத்தனை
பாக்கியமுள்ளவர்கள்! நீங்கள் என்னை தெரிந்து
கொள்ளவில்லை, நான் உங்களை தெரிந்து கொண்டேன் என்று நம்மை
தெரிந்து கொண்டாரே அவர் எத்தனை நல்லவர்!
Great to visit ur blog. Indeed we are blessed coz of all the said reason. But I ve reservaions to call me blessed coz I ve a favour juxtapose with one who does not. We are blessed coz v ve something not juxtaposed with the one who does not. Indeed u brought good thoughts.
ReplyDeleteMany thanks brother. God bless you with His riches and love. Visited your blog. Good to see your thoughts. Be blessed for many.
ReplyDelete