எங்கள் தளத்தில் உங்களுக்கு பிடித்த கதைகளை பதிவு செய்துள்ளோம். உங்கள் சொந்த வாழ்க்கைக்கும், குடும்ப வாழ்க்கைக்கும், குழந்தைகளோடு பகிர்ந்துகொள்வதற்கும், ஊழியத்தின் பாதையில் பகிர்ந்து கொள்வதற்கும் எனக்கு பிடித்த கதைகளை இனைத்துள்ளோம். படியுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள்
Tuesday, June 25, 2013
மோட்ச பிரயாணம் கதை
‘#மோட்சபிரயாணம்’ எனப்படும் உலகக் கிறிஸ்தவ இலக்கியத்தின் மூல ஆசிரியர் #ஜான்பனியன் - தம் வாழ்க்கையில் பல பயங்கர ஆபத்துகளிலிருந்து தப்பியது அதி அற்புத செயல்களாகும்.
ஒரு முறை ஊஸ் ஆற்றிலும், பிரிதொரு முறை கடலிலும் விழுந்து மூழ்கும்போது கடவுள் ஆச்சரியமாகத் தம் தூதனைக்கொண்டு அவரைக் காத்து பராமரித்திருக்கிறார்.
மோட்ச பிரயாணத்தில்வரும் முக்தி வழிப்பயணி ‘நம்பிக்கை இழப்பு’என்னும் உளையைப் பல இடங்களில் கடந்து இறுதியாக மரண ஆற்றை வென்று முக்திநகர் அடைவது போல பனியனின் வாழ்விலும் பயங்கர நிகழ்ச்சி ஒன்று நடந்தது.
#1645 -ம் ஆண்டு. அப்பொழுது அவருக்குப் பதினேழு வயது. யுத்த சேவையில் ஈடுபட்டிருந்தார். #லீசெஸ்றர் என்ற பட்டணத்தை முற்றுகை போட்டிருந்தனர்.
பாசறையைச் சுற்றிப் பாதுகாப்புக்கு நின்ற காவலர்களில் பனியனும் ஒருவன். ஒரு மணித்துளிக்கு முன்னால் பிரிதொரு காவலன் வந்து பனியனின் இடத்தில் நின்றுகொண்டு அவன் இடத்திற்கு இவனைப் போகச் செய்தான்.
இடம் மாறிக்கொண்ட மறு கணம் ஒரு குண்டு வந்து பணியனுக்குப் பதில் நின்ற போர்ச் சேவகனின் தலையில் விழுந்து அவன் மரணமானான்.
அன்று உயிர் தப்பிய பனியன் தீவிர பக்திமானாக மாறினார். மிகக் #கண்டிப்புடன் போதித்தார்.
அதன் விளைவு என்ன?
‘ #திருச்சபையின் சட்டத்திற்கு மாறாகப் போதனை செய்தார்’ என்ற குற்றச்சாட்டின் பேரில் பெரி போர்ட் சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டார். ஆனால் அவர் உள்ளத்தை சிறைப்படுத்த யாராலும் முடியவில்லை.
கனவு உலகில் சஞ்சரித்தார். கனக்கச்சிதக் கனவுக்கதை ஒன்றைப் படைத்தார். உலகக் கிறிஸ்தவ இலக்கியங்களில் முன்னணியில் நிற்கும் #PILGRIMS #PROGRESS எனப்படும் மோட்சபிரயாணத்தின் முதற் பாகம் 1678ல் வெளி வந்தது. 1793ல் தமிழாக்கம் பெற்றது.
ஒரு நூற்றாண்டிற்கு முன்பு கனம் சாமுவேல் பவுல் ஐயரவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்ட மோட்ச பிரயாணம் என்னும் மகா உன்னத உருவக இலக்கியத்தை தமிழில் படித்த நெல்லை நாட்டு இரு புலவர்களின் உள்ளம் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.
மோட்ச பிரயாணம் கதையைக் கருவாகக் கொண்டு இரு பெரும் இலக்கியங்கள் படைத்தனர்.
1. #ஆழ்வார்தோப்பை சேர்ந்த கவி சுவிகரன் பாடிய முக்தி வழி அம்மான்(1887).
2. #பாளையங்கோட்டை புலவர் கிருஷ்ணர் பாடிய இரட்சண்ய யாத்திரிகம்(1891).
ஜான் பனியனை போன்றே இன்றளவும் உலகின் பல கோடி மக்களை பல ஆபத்துக்களிலிருந்து பாதுகாக்கும் இறைமகன் இயேசுவை நெஞ்சத்தில் வைத்துத் துதிக்கிறோம்.
#kadambam #தமிழ்
Subscribe to:
Post Comments (Atom)
-
பல ஆண்டுகளுக்கு முன் செல்வந்தர் ஒருவர் வேலைக்கு ஆள் வேண்டி விளம்பரம் செயதிருந்தார்; விளம்பரத்தை பார்த்து இளைஞர்கள் பலர் வந்தனர்....
-
ஒருமுறை ஒரு போதகர் தன் மக்களுக்கு இந்த வசனத்த குறித்து பாதித்து கொண்டிருந்தேபாது, அதில் பங்கெடுத்த சில சேகாதரிகளுக்கு எப்படி தட்டான் வெள்ள...
No comments:
Post a Comment