Tuesday, June 25, 2013

ஆண்டவர் என் சிநேகிதர்


ஒரு பணக்காரனுக்கு ஏழை நண்பன் ஒருவன் இருந்தான். ஒரு சமயம் பணக்கார நண்பனுக்கு கொஞ்சம் பணத்தட்டுபாடு நிலவியது.

அந்நேரம் அங்கு வந்த ஏழை நண்பன் அவன் எரிச்சலும், கவலையோடும் இருக்கும் தன் நண்பனை பார்த்து “எப்பிடி டா இருக்கே?” என்று வழக்கம் போல கேட்டான்.

“சும்மா இரு, எனக்கு உடனே இருபது லட்சம் ரூபாய் தேவை. உன்னால் முடியுமா?” என்று கோபமாக கேட்டு விட்டு தன் அறைக்குள் சென்றான் .

அவன் பின்னால் சென்ற ஏழை நண்பன் “அரை மணி நேரத்தில் பணம் கிடைத்தால் பரவாயில்லையா?” என்று ஏழை நண்பன் நிதானமாக கேட்டான்.

பணக்கார நண்பனுக்கு ஒரே அதிர்ச்சி.
ஏழை நண்பனை ஏளனமாக பார்த்தான்.
அரைமணி நேரத்தில் பணம் வந்தது.

பணக்கார நண்பனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

பணத்தை குடுத்தவாறு ஏழை நண்பன் சொன்னான்.
“நீ எப்போ பார்த்தாலும் அதிகமா பணத்தை தான் சேர்த்தாய் நண்பா..
நல்ல நண்பர்களை சேர்க்க மறந்திட்டாய். நான் அவைகளை சம்பாதித்து
கொண்டேன் டா” என்றான்.

இருவரும் ஆரத்தழுவி கட்டி கொண்டார்கள்.
இந்த உலகத்திலே எதை சேர்ப்பதை பார்க்கிலும் உண்மை பலமும், உயிருள்ள பலமும் கண்டிப்பாக நண்பர்களை சேர்ப்பது தான்..

எனக்கு அருமையானவர்களே! நல்ல நண்பர்களை சேர்த்து வைப்பது எவ்வளவு நன்மையானது பார்த்தீர்களா? ஆனால், இந்த உலகையே உண்டாக்கிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களுக்கு நண்பர் ஆவாரானால் நீங்கள் பெரும் அதிர்ஷ்டசாலி தானே?

இது நடக்குமா? ஆண்டவர் என் சிநேகிதர் ஆக முடியுமா? என்று ஐயம் கொள்ள வேண்டாம். அவர் சொல்வதை நீங்களே கவனியுங்களேன்..

"நான் உங்களுக்குக் கட்டளையிட்டதெல்லாம் நீங்கள் செய்தால், நீங்கள் என் நண்பர்கள்." - யோவான் 15:14

தேவனுடைய கட்டளைகளை கைக் கொண்டு நடந்தால் நீங்களும் தேவனை உங்கள் நண்பராக்கிக் கொள்ள முடியும்.

தேவனே நமது நண்பர் ஆகிவிட்டால் வாழ்வில் துன்பம் எது? எல்லாமே வெற்றி தான் !

கதம்பம் [இ-இதழ்]

No comments:

Post a Comment