கடல் வழிகளை உலகுக்கு காட்டிய சங்கீத புத்தகம்
"நவீன கால கடல் வழிகளின் தந்தை" என அழைக்கப்படும் மேத்யூ மவுரிக்கே
(Matthew Fontaine Maury (1806 – 1873)) அவர் சமுத்திரத்தின் வழிகளை
கண்டுபிடிக்க ஒரு உந்துகோலாக அமைந்தது வேதபுத்தகம் என்றால் உங்களால்
நம்பமுடிகிறதா? வேதாகமத்தை மிகவும் நேசித்த ஒரு நபர் அவர். ஆரம்ப காலத்தில்
அமெரிக்க கடற்படையில் பணிபுரிந்த போது அவர் ஒரு விபத்தில் அகப்பட்டு தன்
இடது காலை இழந்துவிட படுக்கையியேலே
வெகுகாலம் கழித்தார். மேத்யூ மவுரி அவ்வாறு படுக்கையில் இருந்த போது
வேதபுத்தகத்தை படித்துக் கொண்டிருந்தார். அப்போது சங்கீத புத்தகம் 8ம்
அதிகாரத்தில் "Paths of the Seas" என இருப்பதை அவர் படிக்க நேரிட்டது.
("The fowl of the air, and the fish of the sea, and whatsoever passeth
through the paths of the seas" Psalms 8:8 ).
அப்படியானால்
சமுத்திரங்களிலும் வழிகள் இருக்க வேண்டும் என்பதை அவர் உணர்ந்தார். அவர்
முற்றிலும் குணமடைந்த பின்பு கடல் வழிகளை பற்றி பல ஆய்வுகள் செய்து அதில்
மிகப்பெரிய வல்லுனர் ஆனார். அதனால் அவரை "Pathfinder of the Seas" என்றும்
"Father of Modern Oceanography and Naval Meteorology" என்றும் ,
"Scientist of the Seas" என்றும் அழைப்பர். The Physical Geography of the
Sea (1855) எனும் புகழ்பெற்ற நூலை எழுதினார். இன்றைக்கும் விர்ஜீனியாவில்
உள்ள அவரது நினைவிடத்தில் அவர் வடிவ சிலையை ஒரு வேதாகமத்தின் கூடவே
சேர்த்து வடிவமைத்துள்ளனர். அவ்வளவாய் அவர் வேதாகமத்தை
நேசித்தார்.உலகத்துக்கும் ஆசீர்வாதமாய் அமைந்தார்.
தேவனுடைய நாமத்துக்கு
என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரமுண்டாவதாக; ஞானமும்
வல்லமையும் அவருக்கே உரியது... ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு
அறிவையும் கொடுக்கிறவர். அவரே ஆழமும் மறைபொருளுமானதை வெளிப்படுத்துகிறவர்;
இருளிலிருக்கிறதை அவர் அறிவார்; வெளிச்சம் அவரிடத்தில் தங்கும். தானியேல்
2:20-22
எங்கள் தளத்தில் உங்களுக்கு பிடித்த கதைகளை பதிவு செய்துள்ளோம். உங்கள் சொந்த வாழ்க்கைக்கும், குடும்ப வாழ்க்கைக்கும், குழந்தைகளோடு பகிர்ந்துகொள்வதற்கும், ஊழியத்தின் பாதையில் பகிர்ந்து கொள்வதற்கும் எனக்கு பிடித்த கதைகளை இனைத்துள்ளோம். படியுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
-
பல ஆண்டுகளுக்கு முன் செல்வந்தர் ஒருவர் வேலைக்கு ஆள் வேண்டி விளம்பரம் செயதிருந்தார்; விளம்பரத்தை பார்த்து இளைஞர்கள் பலர் வந்தனர்....
-
ஒருமுறை ஒரு போதகர் தன் மக்களுக்கு இந்த வசனத்த குறித்து பாதித்து கொண்டிருந்தேபாது, அதில் பங்கெடுத்த சில சேகாதரிகளுக்கு எப்படி தட்டான் வெள்ள...
No comments:
Post a Comment