.
இப்போது
சந்தோஷமாய் தன் கடனெல்லாம் அடைக்கப்பட்டு விட்டதே, என
மனைவி பிள்ளைகளோடு நான் சந்தோஷமாய் இருப்பேனே என்று
எண்ணி கொண்டே வந்து கொண்டிருந்த அவனுக்கு எதிரே, அவனிடம்
நூறு ரூபாய் கடன்பட்டிருந்த தன்னுடன் வேலை செய்யும்
ஒருவன் வந்து கொண்டிருப்பதை பார்த்தான். அவனிடம், இவன்
சென்று, 'நீ என்ன என் கடனை இன்னும் அடைக்காமலிருக்கிறாய்,
உடனே கொடுத்து முடி' என்று அவன் கழுத்தை நெரிக்க
பார்த்தான். கடன் வாங்கியவனோ, 'ஐயா எப்படியாவது நான்
கொடுத்து விடுகிறேன்' என்று அவன் கால்களை பற்றி கதறினான்.
ஆனால், இவனோ, 'உன்னை விட்டால் என் பணத்தை நீ கொடுக்கவே
மாட்டாய்' என்று கூறி அவனை போலீஸில் பிடித்து கொடுத்து,
'இவன் என் பணத்தை கொடுத்து முடிக்குமட்டும், அவனை
சிறையிலேயே வையுங்கள்' என்று அந்த போலீஸிடம்
ஒப்படைத்தான்.
.
அதை நேரில்
பார்த்த சிலர், அந்த செல்வந்தரிடம் போய், ' நீர் இந்த
மனிதனுக்கு 10,000 இலட்சம் ரூபாய்களை மன்னித்தீரே, ஆனால்
இவனோ போய் தனக்கு 100 ரூபாய் கொடுக்க முடியாத ஒரு மனிதனை
அடிக்கவும், போலீஸில் பிடித்து கொடுக்கவும் செய்தான்'
என்று கூறினர். அதை கேட்ட செல்வந்தருக்கு மிகவும் கோபம்
உண்டாகி, அந்த மனிதனை பிடித்து கொண்டு வர சொல்லி, 'நீ என்னை
வேண்டிக்கொண்டபடியினால் அந்தக் கடன் முழுவதையும்
உனக்கு மன்னித்துவிட்டேன். நான் உனக்கு இரங்கினதுபோல,
நீயும் உன் உடன் வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று
சொல்லி, அவனை போலீசிடம் 'இவனை அடித்து, எனக்கு என் பணம்
கிடைக்கும் வரைக்கும் இவனை சிறையில் வைத்து, எப்படியாவது
பணத்தை திரும்ப பெற்று கொடுங்கள்' என்று அவர்களிடம்
ஒப்படைத்தார்.
.
இந்த உவமையை
தான் நாம் மத்தேயு 18ம் அதிகாரம் 23-34
வரையுள்ள வசனங்களில் பார்க்கிறோம். இதை
படிக்கும்போதே, நமக்கு அந்த பத்து இலட்சம்
கடன்பட்டிருந்த மனிதன் மேல் கோபம் வருகிறதல்லவா? நம்மில்
அநேகரும் அவனை போலத்தான் இருக்கிறோம்.
No comments:
Post a Comment