ஒரு வீட்டின் சொந்தக்காரர் தன் வீட்டை
ஒரு இலட்சத்திற்கு விற்க விரும்பினார். அதை மற்ற ஒருவர்
எப்படியாவது வாங்க வேண்டும் என முயற்சித்தார். ஆனால்
அவரிடம் அந்த அளவு பணம் இல்லாததால் அந்த வீட்டு
சொந்தக்காரரிடம், பேசி, கடைசியில் அரை லட்சத்திற்கு அந்த
வீட்டு சொந்தக்காரர் ஒரு நிபந்தனையின் பேரில் அதை விற்க
ஒப்பு கொண்டார். அதன்படி, வீட்டின் சொந்தக்காரர் வீட்டு
முன் கதவின் உட்புறம் ஒரே ஒரு ஆணியை மட்டும் அடிக்கவும்
அந்த வீட்டை வாங்கினவர் ஒப்புக்கொண்டார். அதன்படி, ஒரு
ஆணி மாத்திரம் அந்த வீட்டின் கதவில் அடிக்கப்பட்டது.
.
சில வருடங்கள்
கழித்து, அந்த வீட்டின் சொந்தக்காரர் அந்த வீட்டை
திரும்ப பெற விரும்பினார். ஆனால் வீட்டை வாங்கினவரோ அதை
திரும்ப கொடுக்க மறுத்து விட்டார். அதனால் அந்த வீட்டின்
சொந்தக்காரர், போய் ஒரு மரித்த நாயின் உடலை கொண்டுவந்து,
தான் அடித்திருந்த ஆணியின் மேல் மாட்டி விட்டார். ஒரு
செத்த நாய் வீட்டின் உள் இருந்தால், அந்த வீட்டில்
குடியிருக்க முடியுமா? உடனே அந்த வீட்டை
காலிபண்ணினார்கள், அந்த வீட்டை
வாங்கியிருந்தவர்கள்.
.
நாம் கர்த்தரை
ஏற்று கொண்டபின் ஒரு சிறு பகுதியை நமக்கு என்று நம்
இருதயத்தில் வைத்திருந்தாலும், சத்துரு அதை சொந்தம்
கொண்டாட வருவான். திருடன் திருடவும் கொல்லவும்
அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வாரன் என்று
வசனம் நமக்கு கூறுகிறது. சாத்தானாகிய திருடன் வரும்போது,
கொல்லவும் அழிக்கவும், திருடவும் தான் வருவான். அவனால்,
எந்த நல்ல காரியத்தையும் செய்ய முடியாது. அப்படி அவன்
வரும்போது, நம்முடைய ஆவிக்குரிய வாழ்கையை சூறையாடவும்,
கர்த்தருக்கும் நமக்கும் இடையே உள்ள உறவை அழிக்கவும்
தான் வருவானேயன்றி, வேறொன்றுக்கும் வருவதில்லை.
திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும்
வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு
ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.
- (யோவான் 10:20).
No comments:
Post a Comment