ஒரு மனிதன்
லண்டனில் ஒரு இடத்திற்கு போவதற்காக இரயிலில் ஏறினான்.
அவனுக்கு முன்பாக இரண்டு வாலிபர்கள்
அமர்ந்திருந்தார்கள். இரயில் புறப்பட்டு 20 நிமிடம்
இருக்கும். அந்த இரண்டு வாலிபர்களில் ஒருவனுக்கு
திடீரென்று வலிப்பு வந்து, இழுக்க ஆரம்பித்தது. உடனே
பக்கத்தில் இருந்த மற்ற வாலிபன், தன் மேல் உடையை கழற்றி,
வலிப்பு வந்த வாலிபனின் தலைக்கு அடியில் வைத்து, வாயில்
வந்த நுரையை துடைத்து, அந்த வலிப்பு நிற்கும் வரை
காத்திருந்து, வேர்வையை துடைத்து, அந்த வாலிபனை மீண்டும்
அவன் இடத்தில் அமர பண்ணினான். அதை ஆச்சரியத்தோடு
பார்த்து கொண்டிருந்த மற்ற பிரயாணியிடம் திரும்பி, 'ஐயா,
ஒரு நாளில் இவனுக்கு மூன்று அல்லது நான்கு முறை இந்த
வலிப்பு வருகிறது. நானும் இவனும் நண்பர்கள். நாங்கள்
இரண்டு பேரும், வியட்நாம் போரில் ஈடுபட்டவர்கள். அந்த
போரில் இரண்டு பேரும் அடிபட்டோம். ஏன் இரண்டு
கால்களிலும் குண்டு பாய்ந்து, நான் நடக்க முடியாமல்
போனது, இவனது தோளில் ஒரு குண்டு பாய்ந்தது. எங்களை
காப்பாற்ற வர வேண்டிய ஹெலிகாப்டர் ஏதோ காரணத்தினால்
வரவேயில்லை.
.
இந்த என் நண்பன்,
நடக்க முடியாத என்னை தன் தோளில் சுமந்து கொண்டு, மூன்றறை
நாட்கள் நடந்து ஒரு பெரிய காட்டை கடந்தோம். வழியில்
வியட்நாம் போர் வீரர்கள் எங்களை குறி வைத்து, குண்டுகளை
வீசி கொண்டே இருந்தார்கள். நான் இவனிடம், 'என்னை கீழே
போட்டு விட்டு நீ தப்பித்து கொள்' என்று எத்தனையோ முறை
சொன்னேன். ஆனால் இவனோ என்னை கீழே விடவே யில்லை. அந்த
பயங்கர காட்டிலிருந்து தப்பி எப்படியோ வெளியே வந்தோம்.
என் உயிரை இவன் காப்பாற்றினான். எதற்கு காப்பாற்றினான்,
எப்படி காப்பாற்றினான் என்பதை நான் அறியேன். நான்கு
வருடங்களுக்கு முன்பு இவனுக்கு இந்த வியாதி இருப்பதை
கண்டேன். நான் நியூயார்க் நகரத்தில் இருந்த வீட்டை
விற்று விட்டு, இவனை கவனித்து கொள்ள இவனோடு கூட நான்
இருக்கிறேன். இவன் எனக்கு செய்தததற்காக நான் என்ன
வேண்டுமானாலும் இவனுக்காக செய்ய தயார்!' என கண்களில் நீர்
மல்க கூறினான்.
அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு,
திரும்பிவந்து, உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி,
அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு
ஸ்தோத்திரஞ்செலுத்தினான்; அவன் சமாரியனாயிருந்தான்.
அப்பொழுது இயேசு: சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா,
மற்ற ஒன்பதுபேர் எங்கே? தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு,
இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே
என்று சொல்லி, அவனை நோக்கி: நீ எழுந்துபோ, உன் விசுவாசம்
உன்னை இரட்சித்தது என்றார். - (லூக்கா 17:15-19).
No comments:
Post a Comment