யோனத்தான் தன் ஆயுததாரியாகிய வாலிபனை நோக்கி,
'விருத்தசேதனம் இல்லாதவர்களுடைய அந்த தாணைத்ததுக்கு
போவோம் வா' என்று சொன்னபோது, 'இதோ உம்முடைய மனதுக்கு
ஏற்றபடி நானும் உம்மோடே கூட வருகிறேன' என அந்த வாலிபன்
ஆயத்தமாயிருந்தான். தேவனோடு கூட
இணைக்கப்பட்டிருக்கின்ற நாம் ஒரு சாதாரண
குடும்பத்திலிருந்து வந்தவர்களாக இருக்கலாம். திறமைகள்
இல்லாதவர்களாயிருக்கலாம். நாம் பெரிய குடுமப்ததை
சேர்ந்தவர்கள் என்பது முக்கியமல்ல, தேவனுக்கு நம்மை
கையளித்திருக்கின்றோமா என்பதே முக்கியம். 'யுத்தநான்
வந்தபோது, சவுலுக்கும் அவன் குமாரனாகிய
யோனத்தானுக்குமேயன்றி, சவுலோடும், யோனத்தானோடும்
இருக்கிற ஜனங்களில் ஒருவர் கையிலும் பட்டயமும்
ஈட்டியும் இல்லாதிருந்தது'. - (1சாமுவேல்
13:22).
பெலிஸ்தியரோடு யுத்தம் செய்ய ஜனங்கள்
வந்திருந்தார்கள் என்ற போதிலும், அவர்களது கைகளில்
ஆயுதங்கள் இல்லை, இந்த சூழ்நிலையினை அந்த வாலிபன்
பொருட்படுத்தவில்லை. மற்றவர்களிடத்தில் என்ன
இருக்கின்றது என்பதையும் கவனிக்கவில்லை. 'கர்த்தர்
நமக்காக ஒரு காரியம் செயவார். அநேகம் பேரை கொண்டாகிலும்,
கொஞ்சம் பேரை கொண்டாகிலும், ரட்சிக்க கர்த்தருக்கு
தடையில்லை' என்று யோனத்தான் சொன்ன வார்த்தைகள் இந்த
வாலிபனது உள்ளத்தில் விசுவாசத்தை வர்த்திக்க பண்ணியது.
'நாம் சுற்றிலுமுள்ள நிலையினை பாராமல், கர்த்தரையே
நோக்கி பார்த்தால் நம்மால் எல்லாம் கூடும். நமக்காக
கர்த்தர் காரியத்தினை செய்வார்' என்ற விசுவாசத்துடனே
யோனத்தானுடன் அவன் புறப்பட்டு சென்றான். எந்தவித
பாதுகாப்பும் இல்லாமலிருந்தாலும் ஜனங்களுக்காக யுத்த
களத்தில் நிற்பதற்கு அந்த வாலிபன்
ஆயத்தமாயிருந்தான்.
ஒருவரது கையிலும் ஒன்றுமில்லாதிருக்கும்போதும்,
பாளையத்திற்குள், தாணையத்திற்குள் பயங்கரமாயிருக்கும்
இடத்திற்கு கூப்பிடுகின்றீரே என அவன் சொல்லாமல், இதோ
ஆயத்தம் என யோனத்தானுடன் புறப்பட்டான். விசுவாசம் ஒரு
போதும் கையையும், பையையும் பார்க்காது. தன்னோடு தேவன்
இருக்கிறாரா என்பதை மாத்திரமே அது சோதித்தறியும்.
அன்றன்றுள்ள அப்பத்தை நமக்கு தருவதற்கு தேவன் நல்லவர்
என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். விசுவாசிக்கிறவன்
பதறான்.
யோனத்தானின் கையில் பட்டயமிருக்கிறது, யோனத்தான்
வெட்டி கொண்டே போவான். 'என்னை யாராவது நெருங்கினால் நான்
என்ன செய்வேன், என்னை காப்பாற்றக்கூட என்னிடத்தில்
பட்டயம் இல்லையே' என்ற பயம் அவனிடத்தில் இல்லை. நமது
கண்கள் நமது பெலவீனத்தை பார்ப்பதை நிறுத்திவிட்டு, அவரது
பெலத்தை பார்க்கட்டும். இரண்டு நாட்கள் ந்னறாக ஜெபம்
செய்கின்றோம்; ஆனால் தொடர்ச்சியாக அவைகளில்
நிலைத்திருக்க முடியவில்லையே, சூழ்நிலைகள் என்னை
வீழ்த்திவிடுகின்றதே என்று நினைக்கிறீர்களோ, நமது
சுற்றுப்புறத்தையோ, நமது பெலவீனங்களையோ நாம் பாராமல்,
பெலமுள்ள அவரையே நாம் நோக்கி பார்த்தால், நாம் வீழ்ந்து
போவதில்லை. உலகத்தின் இச்சைகளுக்கும்
பெலவீனங்களுக்கும் நம்மை விடுதலையாக்கி, தமது ஆயுதமாக
நம்மை பயன்படுத்த தேவன் போதுமானவர்.
கர்த்தருக்கென்று தன்னை ஒப்புகொடுத்தபடியால், எந்த
ஆபத்தான வழியில் செல்லவும் இந்த வாலிபன் பயப்படவில்லை.
இவர்களை பொறுத்தே தேவ ஜனத்திற்கு வெற்றி, விடுதலை,
சத்துருவின் கையிலிருந்து விடுதலையாக்க முடியும்
என்பதை அறிந்த இந்த வாலிபன் ஆபத்தான் வழியில் செல்லவும்,
தலைவனாகிய யோனத்தானுக்கு பின்னாக ஏறி செல்வதற்கும் அவன்
அஞ்சவில்லை. என்னிடத்தில் திறமைகள் இல்லையே, நான்
தேவனுக்கு எப்படி பயன்பட முடியும் என்று நினைத்து
கொண்டிருக்கினறோமோ? தேவன் உங்களை கொண்டே நமது தேசத்தில்
பெரிய காரியங்களை செய்ய முடியும் என்பதை மறந்து
விடக்கூடாது. நாம் அவருக்காக அடியெடுத்து வைத்தால்
நம்மூலம் தேசத்தை அசைப்பதற்கு அவர்
ஆயத்தமாயிருக்கின்றார். ஆமென் அல்லேலூயா! - Bro. Augustin Jebakumar
No comments:
Post a Comment