பாலத்தில் நடந்து கொண்டிருந்தார்கள் தந்தையும், மழலை மகளும். கீழே ஆறு ஓடிக்கொண்டிருந்தது. தந்தை மகளிடம் சொன்னார்
“மகளே.. எனது கையைப் பிடித்துக் கொள். அப்போது விழமாட்டாய்”
மகள் சொன்னாள் ,’ இல்லை அப்பா.. நீங்கள் என் கையைப் பிடித்துக் கொள்ளுங்கள்”
தந்தைக்கு ஆச்சரியம். “இதில் என்ன வித்தியாசம் இருக்கிறது ? நீ பிடித்தால்
என்ன ? நான் பிடித்தால் என்ன ” ஆச்சரியப்பட்ட தந்தை கேட்டார்.
“நான் உங்கள் கையைப் பிடித்தால், ஒரு வேளை நான் கையை விட்டு விடும்
வாய்ப்பு உண்டு. பாதை வழுக்கினால் கூட நான் கையை விட்டு விடுவேன். ஆனால்
நீங்கள் என் கையைப் பிடித்தால், என்ன தான் நடந்தாலும் நீங்கள் என் கையை
விடமாட்டீர்கள் எனும் நம்பிக்கை எனக்குண்டு” மகள் சொன்னாள்.
தந்தை நெகிழ்ந்தார். மகளை தூக்கி மார்போடணைத்துக் கொண்டு நடந்தார்.
இறைவன் சொல்கிறார்
“நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை. உன்னைக் கை விடுவதும் இல்லை”
இயேசு நமது கைகளை இறுகப் பிடித்து நடக்கிறார். நாமோ அவருடைய கையை உதறிவிட்டு பல வேளைகளில் ஓடி விடுகிறோம்.
எதையும் தனியாய் செய்யும் துணிச்சலும், வீராப்பும் இருக்கும் வரை இறைவனின் கையை விட்டு உதறித் தள்ளுவதையே அனைவரும் விரும்புகிறோம்.
எங்கள் தளத்தில் உங்களுக்கு பிடித்த கதைகளை பதிவு செய்துள்ளோம். உங்கள் சொந்த வாழ்க்கைக்கும், குடும்ப வாழ்க்கைக்கும், குழந்தைகளோடு பகிர்ந்துகொள்வதற்கும், ஊழியத்தின் பாதையில் பகிர்ந்து கொள்வதற்கும் எனக்கு பிடித்த கதைகளை இனைத்துள்ளோம். படியுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
-
பல ஆண்டுகளுக்கு முன் செல்வந்தர் ஒருவர் வேலைக்கு ஆள் வேண்டி விளம்பரம் செயதிருந்தார்; விளம்பரத்தை பார்த்து இளைஞர்கள் பலர் வந்தனர்....
-
ஒருமுறை ஒரு போதகர் தன் மக்களுக்கு இந்த வசனத்த குறித்து பாதித்து கொண்டிருந்தேபாது, அதில் பங்கெடுத்த சில சேகாதரிகளுக்கு எப்படி தட்டான் வெள்ள...
No comments:
Post a Comment